Untitled Document
February 19, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
சிறிலங்கா தூதரகத்தின் எச்சரிக்கை கடிதம் வரலாம் ! - நாடுகடந்த தமிழீழ அரசாங்க அமர்வின் எதிரொலி ! Top News
[Friday 2016-12-02 09:00]

நாடுகடந்த தமிழிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வினை நடாத்த Le Blanc Menil (93) நகரசபை அனுமதிதித்ததற்கு சிறிலங்கா தூரதரகத்தின் எச்சரிக்கை கடிதம் வரலாம் என நகரபிதா அவர்கள் தெரிவித்துள்ளார். பாரிசின் புறநகர் பகுதியான நகரசபையின் முறையான அங்கீகாரத்துடன் நகரசபை மண்டபத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நேரடி அரசவை அமர்வு வெள்ளியன்று பிரான்சில் தொடங்கியுள்ளது. இந்த அமர்வின் அங்குராப்பண நிகழ்வில் உரையாற்றும் பொழுதே நகரபிதா Thierry Meignen அவர்கள் இக்கருத்தினை தெரிவித்துள்ளார்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வினை நகரசபையில் நடாத்துவதற்கு தாங்கள் அனுமதித்திருப்பது தொடர்பில், பிரென்சு மத்திய அரசாங்கம் மாற்றுக்கருத்தொன்றினையும் தெரிவிக்கவில்லை என்றும் நகரபிதா அவர்கள் தெரிவித்தார். இதேவேளை, இவ்விடயத்தில் கடந்தமுறை போல் இம்முறையும், சிறிலங்காவின் பிரான்ஸ் தூதரகத்தின் கடிதம் வரலாம் எனவும் நகரபிதா மேலும் தெரிவித்தார்.

மூன்று நாள் கூட்டத் தொடராக இடம்பெறுகின்ற இந்த அரசவை அமர்வில்கலாநிதி சுதா நடராஜா( University of London), தகைநிலைப் பேராசிரியர் பீற்றர் சால்க்( Uppsala University - Sweden), திரு.கென்டல் நெசான் (குருதீஸ் மக்கள் நிறுவனம் - பிரான்ஸ் ) , திரு. பீற்றர் குஜோ (சுடான் மக்கள் விடுதலைய இயக்கம்) ஆகியோர் வளப்பிரதிநிதிகள் பங்கெடுத்துள்ளனர்.

புலோ மினில் நகரபிதா தியோ மெயினன், நகரசபை உறுப்பினர் செல்வி சுரேந்திரன் ஸ்ரெபனி ஆகியோர் வாழ்த்துரைகளை வழங்குகின்றனர்.

புலம்பெயர் தேங்களில் இருந்து நா.தமிழீழ அரசாங்கத்தின் அரசவை உறுப்பினர்கள், மேற்சபைப் பிரதிநிதிகள் இந்த அமர்வில் கூடியுள்ளனர்.

தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை என ஈழத்தமிழ் மக்களின் அரசியற் பெருவிருப்பின் சனநாயக வடிவமாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் திகழ்கின்றமை இங்கு குறிப்பிடதக்கது. நாதம் ஊடகசேவை

  
  
   Bookmark and Share Seithy.comகோப்பாய் நாவலர் தமிழ் வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப் போட்டி

Top News
[Sunday 2017-02-19 11:00]

யாழ். கோப்பாய் நாவலர் தமிழ் வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப் போட்டி வித்தியாலயத்தின் அதிபர் கி.தர்மசீலன் அவர்களின் தலைமையில் 16.02.2017 வியாழக்கிழமை நடைபெற்றது. மேற்படி நிகழ்வின் பிரதம விருந்திரனராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினராக கோ.பாரதராஜமூர்த்தி (பிரதிக் கல்விப் பணிப்பாளர், யாழ் வலயம்) அவர்களும், கௌரவ விருந்திரனாக முருகையா சுரேந்திரராஜா (பழைய மாணவர்) அவர்களும் கலந்துகொண்டிருந்தனர். ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்கள் கௌரவித்து அழைத்துவரப்பட்டதைத் தொடர்ந்து மங்கல விளக்கேற்றலுடன் போட்டி நிகழ்வுகள் ஆரம்பமாகின.யாழ். மாவட்ட இளைஞர் சேவைகள் மன்றத்தால் தேசிய மட்டத்தில் சாதித்த வீர, வீராங்கனைகள் கௌரவிப்பு Top News
[Sunday 2017-02-19 11:00]

கடந்த வருடம் நடைபெற்ற இளைஞர் கழக அணிகளுக்கிடையிலான தேசிய மட்டப் பேட்டிகளில் வெற்றிபெற்ற யாழ்ப்பாண மாவட்ட இளைஞர் அணிகள் மற்றும் வீர, வீராங்கனைகளைக் கௌரவிக்கும நிகழ்வு யாழ் மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் திருநெல்வேலி லக்ஸ்மி திருமண மண்டபத்தில் நேற்று 17.02.2017 மாலை நடைபெற்றது.புதிதாக நியமிக்கப்பட்ட அதிபரை மாற்றக்கோரி வடலியடைப்பு சைவப்பிரகாச வித்தியாலயம் முன்பாக போராட்டம்
[Saturday 2017-02-18 19:00]

யாழ். வலிகாமம் கல்வி வலயத்திற்குட்பட்ட வலியடைப்பு சைவப்பிரகாச வித்தியாலயத்தின் புதிய அதிபரை மாற்றக்கோரி பாடசாலை சமூகத்தினர் இன்றுகாலை போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இன்றுகாலை 7 மணி தொடக்கம் நண்பகல் 12 மணி வரையில் கல்லூரி வளாகத்திற்கு முன்பாக புதிய அதிபரை மாற்றி பழைய அதிபரை மீண்டும் பாடசாலையில் நியமிக்குமாறு பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி குழுவினர் இப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.வவுனியா கனகராயன்குளம் அ.த.க பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி Top News
[Saturday 2017-02-18 08:00]

வவுனியா மாவட்டம் கனகராயன்குளத்திலுள்ள குறிசுட்டகுளம் அ.த.க பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி பாடசாலை அதிபர் செல்வி ஜெயந்தினி அவர்களது தலைமையில் நேற்று (17 மாசி 2017) இடம்பெற்றது. இந்நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்தார். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொருளாளர் கனகையா ஸ்ரீகிருஸ்ணகுமார் மற்றும் மேலும் நெடுங்கேணி கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டிருந்தனர்.புதுக்குடியிருப்பில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களைச் சந்தித்து சித்தார்த்தன் ஆதரவு Top News
[Thursday 2017-02-16 22:00]

தமது நிலங்களையும் வீடுகளையும் கையகப்படுத்தியுள்ள பாதுகாப்பு தரப்பினர் அதனை விடுவிக்க வேண்டுமெனக்கோரி புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம் முன்பாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவந்த மக்கள் நேற்று முன்தினம் முதல் சுழற்சி முறையிலான உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மேற்படி சுழற்சி முறையிலான அடையாள உணவுத் தவிர்ப்பு போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்கின்றது.யாழ். கோண்டாவில் இந்துக் கல்லூரியின் இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு 2017 Top News
[Thursday 2017-02-16 08:00]

யாழ். கோண்டாவில் இந்துக் கல்லூரியின் இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி 2017-நிகழ்வு நேற்று (14.02.2017) செவ்வாய்க்கிழமை காலை கல்லூரியின் அதிபர் திரு. மோகநாதன் அவர்களின் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமகிய கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக லோ.விஸ்வநாதன் (நிர்வாக உத்தியோகத்தர் கல்வியமைச்சு, வடமாகாணம்), சுபாஸ் மஞ்சுளா கந்தவல (கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி) ஆகியோரும், கௌரவ விருந்தினர்களாக கல்லூரியின் பழைய மாணவர்களான சி.தினேசன் (வைத்தியர், யாழ் போனதா வைத்தியசாலை), திரு. க.தர்சன், திருமதி த.லீலாராணி ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.புதுக்குடியிருப்பு மாணவர்களின் போராட்டத்துக்கு அனைத்து மாணவர்களினதும் ஆதரவு வேண்டும் – சிவசக்தி ஆனந்தன் எம்.பி Top News
[Tuesday 2017-02-14 07:00]

புதுக்குடியிருப்பு மாணவர்களின் போராட்டத்துக்கு அனைத்து மாணவர்கள், கல்விச் சமுகத்தினர் ஆதரவு வழங்க வேண்டும். – சிவசக்தி ஆனந்தன் எம்.பி வேண்டுகோள். கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பைச் சேர்ந்த 84 குடும்பங்கள், விமானப்படையினர் சுவீகரித்துள்ள தமது காணிகளை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, கடந்த 15 நாட்களாக விமானப்படை முகாமுக்கு முன்பாக கடும் வெயிலிலும் பனியிலும் வீதியோரத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் அந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களும் ஈடுபட்டுள்ளதால் அவர்களின் கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.ஒருங்கிணைந்த (மாநகர) பூப்பந்தாட்ட கழகம் நடத்தும் இரண்டாம் ஆண்டு தெற்காசிய​ப்போட்டி Top News
[Tuesday 2017-02-14 07:00]

டொரொண்டொ மாநகரில் கடந்த வருடம் அனைத்து தெற்காசிய (இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் & வங்கதேசம்) பூப்பந்தாட்ட வீரர்களையும் ஒருங்கிணைத்து ஆரோக்கியமான சூழலை உருவாக்கும் எண்ணத்தோடு ஆரம்பம் செய்யப்பட்டு, இந்த இரண்டாம் ஆண்டில்நேற்றையதினம் பிப்ரவரி 11, சனிக்கிழமை PROGRESS RECREATION CENTRE 291 Progress Ave Scarborough) ராஜா முகம்மது மற்றும் உமர் செரீப் இருவராலும் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது..மலையத்திற்கான மூன்றாம் கட்ட வீடுகள் அமைப்பதற்கான அடிகள் நாட்டு விழா Top News
[Tuesday 2017-02-14 07:00]

இந்திய உதவியுடன் மலையத்தில் அமைய இருக்கும் 4000 வீடுகளில் மூன்றாம் கட்டமாக 150 வீடுகள் அமைப்பதற்கான அடிகல் நாட்டும் விழா இன்று (13) பொகவந்தலாவ செல்வகந்த தோட்டத்தில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக இலங்கைக்கான பிரதி இந்திய தூதுவர்¸ கண்டி இந்திய உதவி ஸ்தானிகர் ராதா வெங்கட்ராமன்¸ அமைச்சர்களான பழனி திகாம்பரம். மனோ கணேசன் இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன்¸ மாகாண உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துங் கொண்டனர்.கண்டித்தமிழ் சங்கத்தின் ஏற்பாட்டில் “பாரதி விழா”.. Top News
[Sunday 2017-02-12 18:00]

கண்டித்தமிழ் சங்கத்தின் ஏற்பாட்டில் “பாரதி விழா” புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரியின் கலையரங்கத்தில் தழிழ் சங்கத்தின் தலைவர் பி.எஸ். சதீஸ் தலைமையில் நடைபெற்றது. (11) இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கண்டி இந்திய உதவி உயர் ஸ்தானிகர் இராதா வெங்கட்ராமன் அவர்கள் கலந்துக் கொண்டார். சிறப்பு அதிதிகளாக மத்திய மாகாண கல்வி உதவி செயலாயர் உட்பட கல்வி அதிகாரிகள்¸ கல்வி பணிப்பாளர்கள்¸ அதிபர்கள்¸ ஆசிரியர்கள்¸ பெரும் திறலான மாணவர்கள்¸ பெற்றோர்கள்¸ சங்கத்தின் உறுப்பினர்கள்¸ கலந்துக் கொண்டர்கள்.மட்டக்களப்பில் எழுக தமிழ் பேரணி - பல்லாயிரக்கணக்கானோர் திரண்டனர்! Top News
[Friday 2017-02-10 19:00]

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் இன்று நடத்தப்பட்ட எழுக தமிழ் நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்கள் எழுச்சியுடன் பங்கேற்றனர். மட்டக்களப்பில் இன்று காலை நடைபெற்ற இந்த எழுக தமிழ் நிகழ்வில் "சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை திணி க்க வேண்டாம், அரசியல் கைதிகளை விடுதலை செய், பயங்கரவாத தடை சட்டத்தை நிறுத்து" போன்ற கோசங்களை எழுப்பியவாறு மக்கள் கலந்து கொண்டனர்.4000 ரூபா கொடுப்பனவு அதிகரிக்க மீண்டும் ஆசிரியர்களை சேவையில் இணைக்க அமைச்சரவை அங்கிகாரம் Top News
[Tuesday 2017-02-07 21:00]

மலையக பெருந்தோட்ட ஆசிரியர் உதவியாளர்களுக்கு 4000 ரூபா கொடுப்பனவு அதிகரிப்பதற்கும் பாடசாலைகளில் குறைபாடக இருக்கும் கணித¸ விஞ்ஞான ஆசிரியர் குறைபாட்டை தீர்க்க ஓய்வு பெற்ற ஆசிரியர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கவும் அமைச்சரவை அங்கிகாரம் கிடைத்துள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் அவர்கள் தெரிவிக்கின்றார்.'மனிதனும் மாற்றங்களும்' ஜோதிட நூல் வெளியீடு Top News
[Tuesday 2017-02-07 21:00]

பண்டிதர் வெளியீட்டக வெளியீடான வேதியன் அவர்கள் எழுதிய மனிதனும் மாற்றங்களும் எனும் ஜோதிட நூ ல் வெளியீடு வவுனியா நகர சபை மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை 04.02.2017 சர்வதேச இந்து இளைஞர் பேரவையின் இலங்கை கிளையின் தலைவர் சிவ.கஜேந்திரகுமார் தலைமையில் நடைபெற்றது இடம்பெற்றது இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வடக்கு மாகாண பிரதி பிரதம செயலர் அம்பலவாணர் சிவபாத சுந்தரமும் சிறப்பு விருந்தினர்களாக வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பரந்தாமன் வவுனியா நகர சபைச் செயலாளர் ஆர்.தயாபரன், மற்றும் தமிழருவி த. சிவகுமாரன் அவர்களும் கலந்து கொண்டனர்.சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் இருபதாவது ஆண்டு விழாவும், வேரும்விழுதும் விழாமலர் வெளியீடும்... Top News
[Saturday 2017-02-04 20:00]

சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் இருபதாவது ஆண்டு விழாவும் மற்றும் அதனையொட்டி வேரும்விழுதும் விழாமலர் வெளியீட்டு நிகழ்வும் கடந்த 28.01.2017 சனிக்கிழமை நண்பகல் 01.30மணிளவில் ஆரம்பமாகி மிகவும் சிறப்பாகவும், ஆரோக்கியமான முறையிலும், மகிழ்ச்சிகரமாகவும் நடைபெற்று இரவு 11.30மணியளவில் இனிதே நிறைவுபெற்றது. மேற்படி நிகழ்வானது அன்று மதியம் 1.30 மணிக்கு மண்டப வாயிலில் ஒன்றிய நிர்வாகசபை உறுப்பினர்கள், ஒன்றிய உறுப்பினர்கள் மற்றும் நிகழ்விற்கு உதவி புரிந்தோரினால் மங்கல விளக்கேற்றல் இடம்பெற்று நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.21ம் நூற்றாண்டில் ஈழத்தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை பிரெஞ்சுப் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற கருத்தரங்கு Top News Top News
[Saturday 2017-02-04 20:00]

21ம் நூற்றாண்டில் உலக மக்கள் தம் சுயநிர்ணய உரிமையை தீர்மானிப்பவர்களாக மாறும் நிலையில் ஈழத்தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான சாத்தியப்பாடுகள், எதிர்நோக்கும் சிக்கல்கள் ஆகியவற்றை ஆராயும் கருத்தரங்கு பிரஞ்சு பாராளுமன்ற வளாகத்தில் பெப்பிரவரி 3ம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அனைத்துலக ஈழத்தமிழரரவையின் அனுசரணையுடனும், பிரஞ்சுப் பாராளுமன்றத்தில் தமிழருக்கான ஆய்வு அமைப்பின் ஆதரவுடனும் பிரான்ஸ் தமிழீழ மக்களவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கருத்தரங்கு பிற்பகல் இரண்டு மணியிலிருந்து மாலை ஆறு மணிவரை நடைபெற்றது.


Tharsi-home-15-10-2016
Mahesan-Remax-169515-Seithy
Elankeeran-debt-solution-25-06-2016
SELVI-HOMES-09-02-17
Easankulasekaram-Remax-300716
AIRCOMPLUS2014-02-10-14
<b>02-02-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற Ideal Entertainment நிறுவன அறிமுக விழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>29-01-2017 அன்று ரொரன்டோவில் தமிழ்நாடு சமூக மன்றம்  நடாத்திய தைப்பொங்கல் விழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>28-01-2017 அன்று ரொரன்டோவில்  நடைபெற்ற கனடா தமிழர் மரபு மாநாட்டு விழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா