Untitled Document
August 17, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
தமிழர்களுக்கான பிரென்சு பாராளுமன்ற ஆய்வுக்குழுவினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் சந்தித்தனர் ! Top News
[Friday 2016-12-02 22:00]

பிரென்சு பாராளுமன்ற உறுப்பினர்களது தமிழர்களுக்கான ஆய்வுக்குழுவினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் குழு சந்தித்துள்ளது. பிரென்சு பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற பல்வேறு கட்சி உறுப்பினர்களை உள்ளடக்கியதாக இந்த ஆய்வுக்குழுவின் தலைவி மரி ஜோர்ச் புவே அவர்களுடன் இச்சந்திப்பு இடம்பெற்றிருந்தது. பிரென்சு பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றிருந்த இச்சந்திப்பில் ஈழத்தமிழர்களின் நீதிக்கும் உரிமைக்குமான போhராட்டத்தின் சமகால நிலைவரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

தமிழ்மக்களுடைய இனப்பிரிச்சனை விவகாரத்தில் நீண்ட காலமாக தான் கொண்டுள்ள கரிசனையினைக் வெளிப்படுத்தியிருந்த தலைவி மரி ஜோர்ச் புவே அவர்கள், ஈழத்தமிழர் விவகாரம் தொடர்பில் பிரென்சு அரசாங்க உயர்மட்டத்துடனான தனது செயற்பரிமாற்றங்கள் தொடர்பில் எடுத்துரைத்திருந்தார். நா.தமிழீழ அரசாங்கத்தின் அவைத்தலைவர் நாகலிங்கம் பாலசந்திரன் அவர்களது தலைமையில் இடம்பெற்றிருந்த இச்சந்திப்பில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நா.தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடதக்கது.

நாதம் ஊடகசேவை

  
  
   Bookmark and Share Seithy.com


Tharsi-home-15-10-2016
Elankeeran-debt-solution-25-06-2016
Mahesan-Remax-169515-Seithy
Easankulasekaram-Remax-300716
SELVI-HOMES-09-02-17
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b> 30-06-2017 அன்று கனடா-ரொரன்டோவில் நடைபெற்ற மின்னல் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b> 24-06-2017 அன்று கனடா-ரொரன்டோவில் பரதமைல் நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா