Untitled Document
May 23, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
சுனாமி பேபி 81’ என்று அழைக்கப்படும் அபிலோஸ் இன் கல்விச் செலவினை பொறுப்பெடுத்த விருட்சம் சமூக மேம்பாட்டு அமையத்தினர். Top News
[Tuesday 2016-12-27 08:00]

ஆழிப்பேரலையின்போது ஒன்பது தாய்மார் உரிமைகோரிய சுனாமி பேபி 81’ என்று அழைக்கப்படும் அபிலோஸ் அவர்களின் கல்விச் செலவினை விருடசம் சமூக மேம்பாட்டு அமையத்தினர் 26.12.2016 இன்று பொறுப்பெடுத்துள்ளனர். குருக்கள் மடத்தில் அமைந்துள்ள ஜெயராஜ் அபிலேஸ் அவர்களின் வீட்டில் இடம்பெற்ற நிகழ்வில் ஜெயராஜ் அபிலேஸ் அவர்களுக்கான காசோலை வழங்கிவைக்கப்பட்டது. சுனாமி பேபி 81’ என்று பன்னிரெண்டு வருடங்களுக்கு முன்னர் உலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர் அபிலாஷ் என்னும் குழந்தை.

ஆழிப்பேரலை ஏற்பட்டபோது ஆழிப்பேரலையின் கோரத்தாண்டவத்தில் சிக்குண்டு உயிர் பிழைத்த இரண்டரை மாதக் குழந்தையான அபிலேஸ்க்கு ஒன்பது தம்பதியினர் உரிமைகோரியிருந்தனர். கல்முனை – பாண்டிருப்பைச் சேர்ந்த தற்போது குருக்கள்மடத்தில் வசித்துவரும் ஜெயராஜ் யுனிதா தம்பதிகளின் அயராத முயற்சியின் காரணமாக மரபணு பரிசோதனை மூலமாக நீதிமன்றத்தின் மூலம் தமது குழந்தைதான் என்பதை நிருபித்தனர்.

அன்று பரபரப்பாக பேசப்பட்ட சுனாமி பேபி 81’ இப்போது சுனாமி நினைவு தினத்தில் ஊடகங்களில் பேசப்படுகின்றது. சுனாமி பேபி 81’ என்று அன்று உலகையே திரும்பிப்பார்க்க வைத்த அபிலேஸ் அவர்களுக்கு 12 வருடங்கள் கடந்த நிலையிலும் இதுவரை யாரும் உதவ முன்வரவில்லை என்பதனை அபிலேஸ் அவர்களின் பெற்றோர் எமது விருட்சம் சமூக மேம்பாட்டு அமையத்திடம் தெரியப்படுத்தியதற்கமைய எமது விருட்சம் சமூக மேம்பாட்டு அமையத்தின் ஆலோசகர் திருமகன் ஸ்ரீ அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க அவரின் மகன் திருமகன் ஸ்ரீ சாயீஸ்வர் எனும் மாணவன் சுனாமி பேபி 81’ என்று அழைக்கப்படும் அபிலாஸ்க்கான கல்விக்கான செலவினை ஏற்றுள்ளார்.

மாதந்தோறும் 5000 ரூபாவினை வழங்க முன்வந்துள்ளார். ஒரு மாணவனாக இருந்துகொண்டு இன்னொரு மாணவனுக்கான கல்விச் செலவினை மாதந்தோறும் விருட்சம் அமைப்பினூடாக திருமகன் ஸ்ரீ சாயீஸ்வர் அவர்கள் வழங்க வந்திருப்பது பாராட்ப்படவேண்டிய விடயம் இது ஏனைய இளைஞர்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக அமையவேண்டும்.

இதன்போது சுனாமி நினைவு தூபி ஒன்றும் திறந்துவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சுனாமி பேபி 81’ அபிலேஸ் பற்றிய சில குறிப்புக்கள்க டந்த 2004 ஆம் ஆண்டு பேரழிவை ஏற்படுத்திய சுனாமிப் பேரலையில் சிக்கி அபூர்வமான முறையில் உயிர்தப்பிய அபிலாஷ், அக்காலத்தில் உலகத்தையே தனது பக்கம் ஈர்த்தவர். கடந்த 2004 ஆம் வருடம் உலகையும் இலங்கையின் கரையோரப் பகுதியையும் உலுக்கிய சுனாமி அனர்த்தம் இலங்கையில் மட்டும் 34 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தும், காணாமல் போயும் இருந்தனர்.

கல்முனையில் கடற்கரையோரம் பிறந்து இரண்டரை மாதங்களே ஆன ஒரு குழந்தையும் அடங்கியிருந்தது. தென்னைமர வட்டுக்குள் சுனாமி அலை தூக்கிச் சென்று வைத்து பின்னர் அடுத்த அலையில் குப்பை மடு ஒன்றின் அருகில் தூக்கி வீசப்பட்ட கைக் குழந்தையை அயலவர்கள் கண்டுபிடித்திருந்தனர்.

சுனாமி அனர்த்தத்தில் அல்லோல கல்லோலப்பட்டவர்கள் தமது பிள்ளைகளையும். உறவுகளையும் பிரிந்து வெவ்வேறு திசையில் ஓடிக்கொண்டிருந்தனர். அச்சமயத்தில்தான் இக் குழந்தையும் கண்டுபிடிக்கப்பட்டு கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தது.

இக் கைக்குழந்தை அனுமதிக்கப்பட்ட (வாட்) விடுதி இலக்கம் 81 ஆகையால் இக்குழந்தை ‘சுனாமி பேபி 81’ என அன்று அழைக்கப்பட்டிருந்தது. இக்குழந்தைக்கு உரிமை கோர எவருமில்லை என அறிந்த பலர் அக்குழந்தையை தம்மோடு கொண்டு செல்வதற்கு இது தனது குழந்தை தான் எனக் கூறிக்கொண்டு பல பெற்றோர்கள் வைத்தியசாலைக்கு படையெடுக்கத் தொடங்கினர். ஒரு குழந்தைக்கு ஒன்பது பெற்றோர் உரிமை கோரி வைத்தியசாலைக்கு படையெடுக்கத் தொடங்கியதையடுத்து வைத்தியசாலை நிர்வாகம் இவ்விட்யத்தை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றது.

இறுதியில் நீதிமன்றம் மரபணு பரிசோதனை மூலம் குழந்தையின் உண்மைப் பெற்றோர் யார் எனக் கண்டறிந்து குழந்தையை உரிய பெற்றோர்களிடம் அன்று கையளித்திருந்தது. கல்முனை – பாண்டிருப்பைச் சேர்ந்த் ஜெயராஜ் யுனிதா தம்பதிகளின் புதல்வன் ஜெயராஜ் அபிலாஷ் என மரபணு பரிசோதனை மூலம் நிருபிக்கப்பட்டதும் அனைவரும் அறிந்தது.

  
  
   Bookmark and Share Seithy.com



பிரான்சில் பேரெழுச்சிகொண்ட மே 18 முள்ளிவாய்க்கால் 8 ஆம் ஆண்டு நினைவேந்தல்! Top News
[Friday 2017-05-19 19:00]

பிரான்சு பாரிஸ் பகுதியில் மே 18 முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 8 ஆம் ஆண்டு நினைவேந்தல் பேரணி நிகழ்வு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை, தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் அனைத்து உபகட்டமைப்புக்களின் ஏற்பாட்டில் நேற்று 18.05.2017 வியாழக்கிழமை மிக பேரெழுச்சியுடன் இடம்பெற்றது. பிற்பகல் 15.00 மணியளவில் பேரணி பாரிஸ் La Chapelle மெட்ரோ நிலையத்தின் அருகாமையில் இருந்து ஆரம்பமாகி பல்லின சமூகத்தினரும் பார்த்திருக்க எமது நாட்டில் இடம்பெற்ற அவலங்களை ஆற்றுகை செய்தபடியும் பதாதைகள் கருத்துப்படங்களுடனும் தமிழீழத் தேசியக்கொடிகளைத் தாங்கியபடியும் பாரிஸின் முக்கிய பகுதிகளுக்கு ஊடாகச் சென்று Place de la République இனை அடைந்தது.



ஸ்ராஸ்பூர்க் ஐரோப்பிய பாராளுமன்ற முன்றலில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! Top News
[Friday 2017-05-19 19:00]

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 8ம் ஆண்டு நினைவு நாள் 18.05.2017 வியாழக்கிழமை ஸ்ராஸ்பூர்க் ஐரோப்பிய பாராளுமன்ற முன்றலில் காலை 9.00 மணி தொடக்கம் 17.00 வரை நடைபெற்றது. இந் நிகழ்வில் நூற்றுக்கணக்கான மக்கள் உணர்வுடன் கலந்து கொண்டிருந்தனர். பிரத்தியேகமாக அமைக்கப் பட்டிருந்த நினைவுக் கல்லின் முன்னிலையில் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு மலர் வணக்கமும் செய்யப்பட்டதுடன் படுகொலை நினைவு சுமந்த பதாதைகளைத் தாங்கிய வண்ணம் சிறுவர் முதல் பெரியவர் வரை மிகவும் உணர்வுடன் நின்றிருந்தனனர்.



மௌரிசியஸ் நாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் Top News
[Friday 2017-05-19 19:00]

மௌரிசியஸ் நாட்டு பிரதி அதிபர் உயர் திரு பரமசிவம் பிள்ளை வையாபுரி பங்குபற்றுதலுடன் தமிழீழ நினைவு தூபி அமைக்கப்பட்ட இடத்தில் பல அரசியல் தலைவர்கள் முன்னிலையில் மௌரிசியஸ் தமிழ் கோவில்களின் கூட்டிணைப்பு அமைப்பினரால் நடாத்தப்பட்டது, அதேநேரத்தில் தென் ஆப்பிரிக்காவிலும் டர்பன் நகரத்தில் நினைவு கூறப்பட்டது.



முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பிரதான நிகழ்வில் பொதுச்சுடர் ஏற்றினார் முதல்வர் விக்னேஸ்வரன்: Top News Top News
[Thursday 2017-05-18 11:00]

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பிரதான நிகழ்வில், வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் பொதுச் சுடர் ஏற்றிவைத்து நினைவேந்தல் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனும் பொதுச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.



லய இசையில் லயித்த மெல்பேர்ண்: Top News
[Wednesday 2017-05-17 21:00]

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரில் அண்மையில் இடம்பெற்ற மிருதங்க அரங்கேற்றத்தைக் கண்டு களிக்கும் வாய்ப்பு கிடைத்திருந்தது. அந்நிகழ்வு பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாமென எண்ணுகின்றேன். Indian Arts Academy இன் 44 ஆவது மாணவனின் மிருதங்க அரங்கேற்றம் இதுவாகும். மாலை 6:30 மணிக்கு முன்னரே Rivergum Performing Arts Centre மண்டபம் நிரம்பியிருந்தது. சரியாக 6:30 மணிக்கு நிகழ்ச்சி தொகுப்பாளரான நவரட்ணம் ரகுராமும் செல்வி கஜானு மகேஸ்வரனும் மேடையில் வந்து எல்லோரையும் வரவேற்று அரங்கேற்ற நிகழ்வை ஆரம்பித்தனர்.



வவுனியா விபுலாநந்தா கல்லூரியின் துடுப்பாட்ட, எல்லே அணிகளுக்கான வர்ண சீருடை வழங்கல்: Top News
[Tuesday 2017-05-16 19:00]

வ/விபுலாநந்தா கல்லூரியின் துடுப்பாட்ட மற்றும் எல்லே அணிகளுக்கான கல்லூரியின் வர்ண சீருடை அறிமுக விழா முதல்வர் திருவாளர் எஸ்.அமிர்தலிங்கம் தலைமையில் 16.05.2017 அன்று வெகுசிறப்பாக நடைபெற்றது. இவ் வர்ண சீருடைகளை பழைய மாணவர் சங்கத்தின் ஊடாக கல்லூரி பழைய மாணவன் பொறியியலாளர் திரு.எ.நிலின்ஸ் அவர்கள் அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.



டென்மார்கில் நடைபெற்ற் ஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு: Top News
[Sunday 2017-05-14 20:00]

அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்துடன் மாலதி தமிழ்க் கலைக்கூடம் இணைந்து நடாத்திய இசை, நடன ஆற்றுகை வெளிப்பாட்டுத்தேர்வு 13.05.2017 சனிக்கிழமை அன்று டென்மார்க்கின் கேர்ணிங் நகரில் இடம்பெற்றது. தொடக்க நிகழ்வாக பொதுச்சுடரேற்றமும் நடராஜருக்கான விளக்கேற்றமும் இடம்பெற்றதனை தொடர்ந்து தாயக மீட்புப் போரிலே தங்களை வித்தாக்கிச் சென்ற மாவீரர்களுக்கான அகவணக்கம் இடம்பெற்றது. வரவேற்பு உரையினை மாலதி தமிழ்க் கலைக்கூடத்தின் தலைமை நிர்வாகி திரு. அருளானந்தராசா அவர்கள் வழங்கினார்.



விழிப்புணர்வு ஊர்திப் பயணத்தை பேராதரவுடன் வரவேற்ற பிராங்போ ர்ட் தமிழ் மக்கள்! Top News
[Sunday 2017-05-14 09:00]

நான்காவது நாளாக யேர்மனியில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் விழிப்புணர்வு ஊர்திப் பயணம் நேற்றுக் காலை Landau நகரை ஊடறுத்து மாலை 4 மணிக்கு Frankfurt நகர மத்தியை அடைந்தது. அங்கு வாழும் தமிழ் இளையோர்களின் ஆதரவுடன் , தமிழ்த் தேசிய செயற்பாடாளர்களின் ஒருங்கிணைப்பில் பல்லின மக்கள் நடமாடும் பகுதியில் கண்காட்சி அமைத்து தமிழின அழிப்பை எடுத்துரைத்தும் , நீதி கோரியும் துண்டுப்பிரசுரங்கள் வழங்கியும், கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.



உயிர்காக்கும் உன்னத பணியில் கனடா செந்தில்குமரன்: நிவாரணம் நிதியம் மூலம் 22வது அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவு. Top News Top News
[Friday 2017-05-12 19:00]

கனடா செந்தில்குமரன் நிவாரண நிதியம் வடக்கு, கிழக்கு மாகாணத்தில் போரினாலும், நோயினாலும் பாதிக்கப்பட்ட பல மக்களுக்கு 2004 ஆம் ஆண்டு முதல் நிதியுதவிகள் மற்றும் வாழ்வாதார உதவிகளை வழங்கிவருகின்றது. இந்நிதியத்தினூடாக இருதயநோய் மற்றும் கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டு உயிருக்காக போராடிய 22 நோயாளிகளுக்கு சத்திர சிகிச்சை உட்பட மேலும் பலருக்கு ஏனைய மருத்துவ உதவிகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டு அவர் தம் உயிர்கள் பாதுகாக்கப்பட்டது.



தாயின் மடியில் இன்னிசை நிகழ்வில் கலந்துகொள்ளும் கலைஞர்கள் இன்று டொரோண்டோவை வந்தடைந்தனர். Top News
[Thursday 2017-05-11 07:00]

எதிர்வரும் 14ம் திகதி ஞாயிறன்று அன்னையர்தின நாளில் Markham Event Centerல் நடைபெறவுள்ள தாயின் மடியில் கலை நிகழ்வில் கலந்து சிறப்பிக்கவுள்ள கலைஞர்களான பிரபல பாடகர் VM-மகாலிங்கம் மற்றும் சுப்பர் சிங்கர் புகழ் பாடகி அனுஷியா ஆகியோரை நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் டொரோண்டோ விமானநிலையத்தில் வரவேற்றனர்.



வல்வெட்டித்துறையில் களை கட்டியுள்ள இந்திர விழா! Top News
[Wednesday 2017-05-10 18:00]

வர­லாற்­றுச் சிறப்பு மிக்க வல்­வெட்­டித்­துறை சிறீ முத்­து­மாரி அம்­மன் தீர்த்த உற்­ச­வத்தை முன்­னிட்டு வல்வை மக்­க­ளால் 50 ஆவது ஆண்­டாக இந்­திர விழா நடத்­தப்­ப­டுகிறது. இன்று காலை இடம்பெற்ற தீர்த்தோற்சவத்தை அடுத்து, மாலையில் இந்திரவிழா ஆரம்பமாகியுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் வல்வை நகரில் மிகப் பிரமாண்டமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஊரே விழாக் கோலம் பூண்டுள்ளது. வீதிகள் தோறும் வாழைகள், தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்துக் கடவுள்களின் பெரியளவிலான கட்அவுட்கள் செய்து வைக்கப்பட்டுள்ளன.



இந்திய ஹெலிகள் ஹட்டனில் தரையிறக்கம்! - மோடியின் வருகைக்கு முன்னாயத்தம் Top News
[Tuesday 2017-05-09 18:00]

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஹட்டனுக்கு வருகை தரவுள்ளதை முன்னிட்டு, முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்திய விமானப்படையின் ஹெலிகொப்டர்கள் இரண்டு, ஹட்டன் டன்பார் மைதானத்தில் இன்று பரீட்சார்த்தகரமாக தறையிறக்கப்பட்டன. இதன் போது, யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கைக்கான இந்திய உதவி உயர்ஸ்தானிகர் ஏ.நடராஜன் தலைமையிலான குழுவினருடன் கலந்துரையாடலும் இடம்பெற்றது.



மொன்றியல், ரொறொன்ரோ ஐலன்ட் பகுதிகளில் வெள்ளம்! Top News
[Thursday 2017-05-04 19:00]

மொன்றியல் தெற்கு பகுதியில் கடும் வெள்ளத்தினால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். நேற்றிரவு தொடக்கம் இன்று காலை வரை இந்நிலை தொடர்ந்தது. வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அத்துடன் பல நிலக்கீழ் குடியிருப்புக்களும் வெள்ள மயமாக காணப்படுகின்றன. புதன்கிழமை காலை வரையில் கிட்டத்தட்ட 100 கட்டிடங்கள் வெள்ள அபாயத்திற்குள்ளாகியுள்ளதாக மொன்றியல் நகர சபை அறிவித்துள்ளது. கியுபெக்கிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



யேர்மனியில் தமிழ் , 27 ஆண்டுகள்..! Top News
[Wednesday 2017-05-03 20:00]

யேர்மனியில் தனது நிர்வாகக் கட்டமைப்புக்குட்பட்ட 120 க்கும் மேற்பட்ட தமிழாலயங்களின் நிமிர்வின் உயர்வு மீண்டும் உறுதியாகியது... கடந்த 27 ஆண்டுகள் யேர்மனி முழுவதிலும் பரந்து விரிந்து வாழும் தமிழ்ப் பிள்ளைகளுக்கு தமிழ்மொழியையும் பண்பாடுகளையும் கற்றுக்கொடுத்த பெருமையோடு 27 வது அகவை நிறைவு விழாவைத் தமிழ்க் கல்விக் கழகம் கடந்த இருவாரங்களாக நடாத்தி வருகின்றது.



தாயக உறவுகளுக்கு கரம் கொடுத்த 10 வது ஆண்டு கலைமாருதம் :- தமிழ் பெண்கள் அமைப்பு - யேர்மனி Top News
[Wednesday 2017-05-03 20:00]

தமிழ் பெண்கள் அமைப்பு - யேர்மனி பேர்லின் நகரில் தாயக உறவுகளுக்கு கரம் கொடுக்கும் வகையில் வருடாந்தம் "கலைமாருதம்" எனும் நிகழ்வை நடாத்தி வருகின்றனர். இவ்வருடம் 10 வது ஆண்டாக கலைமாருதம் மாபெரும் ஈழத்து நட்சத்திர விழாவாக அரங்கம் நிறைந்த மக்களுடன் மெய்சிலிர்க்க வைத்த அரங்க வடிவத்துடன் எண்ணிக்கையில் அடங்கா நிறுவனங்களின், மக்களின் முழு ஆதரவுடன் நிறைவேறியது. மாபெரும் இவ் நிகழ்வை சிறப்பித்த அனைத்து ஈழத்து கலைஞர்களுக்கும் இவ் நிகழ்வுக்கு தமது முழு ஆதரவை தந்துதவிய அனைவருக்கும் தமிழ் பெண்கள் அமைப்பு -. யேர்மனி தமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றது.


Easankulasekaram-Remax-300716
Tharsi-home-15-10-2016
Elankeeran-debt-solution-25-06-2016
SELVI-HOMES-09-02-17
Mahesan-Remax-169515-Seithy
<b>14-05-2017 அன்று கனடா - ரொரன்டோவில் நடைபெற்ற தாயின்மடியில் நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b>06-05-2017 அன்று கனடா- ரொரன்டோவில் அபிநயாலயா நாடியாலயம் நடாத்திய 20வது ஆண்டுவிழா நிகழ்வின் படத்தொகுப்பு. </b> படங்கள் - குணா
<b>30-04-2017 அன்று கனடா- ரொரன்டோவில்  நடைபெற்ற சங்கீத சங்கமம் நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா