Untitled Document
January 24, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
பொங்கல் தினத்தன்று வடமாகாண முதல்வரும் மார்க்கம் மேயரும் இரட்டை நகர் ஒப்பந்தம்! Top News
[Tuesday 2017-01-03 18:00]

கனடாவுக்கு வருகை தரவுள்ள வட மாகாண முதல்வர் திரு.விக்னேஸ்வரனும் கனடாவில் தமிழ் மக்கள் அதிகளவில் வாழும் மார்க்கம் மாநகரின் மேயர் வண.பிராங் ஸ்காபிற்றி அவர்களும் எதிர் வரும் ஜனவரி 14ம் திகதி வரும் தைப் பொங்கல் தினத்தன்று இரட்டை நகர உடன்படிக்கையில் சைக்சாத்திடும் வரலாற்று புகழ் மிக்க நிகழ்வு நடைபெறவிருக்கின்றது. ஈழத்திலுள்ள முல்லைத் தீவு நகரினை அபிவிருத்தி செய்யும் வகையிலும் அங்குள்ள மக்களுக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்தும் வகையிலும் இங்குள்ள தமிழ் தொழில் அதிபர்கள் அங்கு முதலீடுகளை செய்யும் நோக்குடன் உருவாக்கப்பட்ட திட்டமே இந்த உடன்படிக்கையாகும்.

கனடா அரசியலில் தடம் பதித்த முதலாவது ஈழத் தமிழர் என்ற பெருமைக் குரியவரும் மார்க் கம் மாநகர சபையின் ஏழாம் வட்டார உறுப்பினராக தொடர்ந்து பத்தாண்டு காலம் பணியாற்றி வருபவருமான திரு.லோகன் கணபதி இதற்கான ஏற்பாட்டினை செய்துள்ளார். இவர் லண்டன் மாநகருக்குச் சென்று அங்கு விஜயம் செய்திருந்த வடமாகாண முதல்வர் திரு.விக்னேஸ்வரனை சந்தித்து மேற்படி இரட்டை நகர உடன்படிக்கை சம்பந்தமாக விரிவாக உரையாடி இதற்கான ஒழுங்குகளை செய்திருந்தார்.

வருடா வருடம் மார்க்கம் மாநகர சபை மண்டபத்தில் பொங்கல் விழாவினை கோலாகலமாக கொண்டாட ஏற்பாடு செய்துள்ள திரு.லோகன் கணபதி அவர்கள் இம்முறை பொங்கல் விழாவன்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த இரட்டை நகர ஒப்ப ந்தத்தினை மேற்கொள்ள ஏற்பாடு செய்துள்ளார். இதுபற்றி தமிழ் ஊடகங்களுக்கு அறிவிக்கும் வகையில் நேற்று புதன்கிழமை மாலை மார்க்கம் மாநகர சபை மண்டபத்தில் ஊடகவியலாளர் மகாநாட்டினை ஏற்பாடு செய்திருந்தார்.

அதில் அவர் உரையாற்றிய போது பின்வருமாறு கூறினார்:

“நாம் வருடா வருடம் பொங்கல் விழாவினை மாநகர சபை மண்டபத்தில் கோலாகலமாகக் கொண்டாடி வருவதை நீங்கள் அறிவீர்கள். இம்முறை திரு.விக்னேஸ்வரனின் விஜயத்தினை முன்னிட்டு பொங்கல் விழாவினை இருநாள் விழாவாகக் கொண்டாட ஏற்பாடு செய்துள்ளோம். பல்லாயிரம் டொலர் செலவில் நடைபெறவிருக்கும் இவ்விழாவிற்கு நிதியுதவி வழங்க தமிழ் தொழில் நிறுவனங்களான ஐனநயட புசழரிஇ ஊயஅடிசனைபந யுஉயனநஅலஇ ஊநவெசந கழச வுயஅடை ர்நசவையபந ஆகி யன முன்வந்துள்ளன. முதல் நாள் விழாவில் மாலை ஆறு மணிக்கு மார்க்கம் மாநகர சபை மேயர் வண.பிராங் ஸ்காபிற்றியும் வடமாகாண முதல்வர் திரு.விக்னேஸ்வரனும் வரலாற்று முக்கி யத்துவம் வாய்ந்த இரட்டை நகர உடன்படிக்கையில் கைச்சாத்திடுவார்கள்.

மறுநாள் மாநகர சபை மண்டபத்துக்கு அண்மையிலுள்ள திரையரங்கில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். அதிலும் வடமாகாண முதல்வர் அவர்கள் கலந்து கொள்வார்கள். அப்போது பொங் கல் விழா மலர் வெளியீடும் அத்துடன் இந்தியாவில் வெளியிடப்பட்டு வரும் “கணையாழி” இல க்கிய சஞ்சிகையின் பொன் விழா மலரும் கனடா சிறப்பு மலராக வெளியிடப்பட இருக்கிறது. இம்மலரில் கனடாவைச் சேர்ந்த படைப்பாளிகளின் கட்டுரைகளும் உள்ளடங்கி உள்ளன.

அதன் ஆசிரியரும் மதுரைப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் வேந்தருமான முனைவர் மு.இராஜேந்தரும் இவ்வைபவத்தில் நேரில் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார். தமிழ் நாடு கலா ஷேத்திராவில் பல்லாண்டு காலம் பரத நாட்டியத்தினை பயின்ற திருமதி.கார்த்திகா பார்த்திபன் இதற்கான ஏற் பாட்டினை செய்திருந்தார். அதற்காக அவருக்கு நாம் எமது நன்றியையும்ää பாராட்டினையும் தெரி வித்துக் கொள்கின்றோம்” என்றார். திரு.பொன்னையா விவேகானந்தன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

(வீரகேசரி மூர்த்தி)

படங்கள் நன்றி - www.puthinamphotos.com

  
  
   Bookmark and Share Seithy.com


AIRCOMPLUS2014-02-10-14
Elankeeran-debt-solution-25-06-2016
Easankulasekaram-Remax-300716
NIRO-DANCE-100213
Tharsi-home-15-10-2016
Mahesan-Remax-169515-Seithy
<b> 15-01-2017 அன்று ஃபான் ஃஅம் மையத்தில்  நடைபெற்ற முதல்வர் விக்னேஸ்வரன் அவர்களது பொதுக் கூட்ட  நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b> 15-01-2017 அன்று மார்க்கம் நகரசபை மண்டபத்தில் நடைபெற்ற பொங்கல் திருவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா(Puthinamphotos.com)
<b> 14-01-2017 அன்று ரொரன்டோவில் கனேடிய தமிழர் பேரவை (CTC) நடாத்திய பொங்கல் விழா விருந்து நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா (Puthinamphotos.com)