Untitled Document
July 28, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
யேர்மனியில் நூர்பேர்க் நகரில் புத்தாண்டுக்கலைவிழா: Top News
[Tuesday 2017-01-10 07:00]

யேர்மனியில் நூர்பேர்க் நகரில் கடந்த 07.01.2017 சனிக்கிழமை அன்று தமிழர்கலாச்சார ஒன்றியத்தினால்வ ருடாந்தம் நடாத்தப்படும் புத்தாண்டுக்கலைவிழா இளையோர்களால் நடாத்தப்பட்டது. இதில் விடுதலை கானங்களுடன் இசைக்கச்சேரி. விடுதலை நடனங்கள் திரையிசை நடனங்கள்.பரதக்கலை நடனங்கள் சுதந்திரம் நோக்கிய அரசியற்பார்வையுடனான சிறப்புரை- நூர்பேர்க் அரசியல் பிரமுகர்கள் பலரும் பல்லினமக்கள் கலாச்சார ஒன்றியப்பொறுப்பாளர்கள் நூர்பேர்க் நகரில் இருந்து விருந்தினர்களாக வருகைதந்து எமது இனத்தின் விடுதலை-.சுதந்திரம்- பெறவேண்டும் என்றும் இளையோர்களின்செ யற்பாட்டைக் கண்டுவியந்து வாழ்த்திச் சென்றனர்.

  
  
   Bookmark and Share Seithy.com



மரம் வளர்ப்போம் பயன் பெறுவோம்…!! - நாவல் மரத்தின் விழிப்புணர்வு. Top News
[Thursday 2017-07-27 18:00]

ஐக்கிய இராச்சியத்தில் இயங்கிவரும் நிழல்கள் அமைப்பின் நிதிஉதவியுடன் Green future world நிறுவனத்தின் ஆலோசனையுடன் Trinco aid நிறுவனத்தினூடாக little penguin பாலர் பாடசாலை சிறார்களுக்கு நாவல்மரம் மற்றும் விளிமர கன்றுகள் Trinco aid ஸ்தாபகர் இராஐக்கோண்ஹரிகரன் அவர்களின் மகள் கருண்யாவின் பிறந்ததினத்தை முன்னிட்டு இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டன.



ஈழத்து நூலகங்களுக்குத் தமிழகத்தின் நூல்கொடை: Top News
[Monday 2017-07-24 18:00]

தமிழகப் பதிப்பகங்களிடம் இருந்து ஒவ்வொரு நூலிலும் ஏறத்தாழ 1000 படிகளை விலைக்கு வாங்கித் தமிழக நூலகங்களுக்கு ஆண்டுதோறும் தமிழக அரசு வழங்குகிறது. இதற்காககத் தமிழக மக்கள் வரி கொடுக்கிறார்கள். உலகெங்கும் தமிழர் வாழும் நாடுகளில் உள்ள நூலகங்களுக்கும் 100 படிகள் சேர்த்து வாங்குக அவர்களுக்கு அனுப்புக என நான் தொடர்ச்சியாகத் தமிழக அரசைக் கேட்டுவந்துள்ளேன்.



பாரம்பரிய தமிழ் கலைகளை வெளிக்கொண்டுவந்த டார்ட்போர்ட தமிழ் அறிவியற் கழக ஆண்டு நிறைவு விழா. Top News Top News
[Sunday 2017-07-23 18:00]

கடந்த சனிக்கிழமை டார்ட்போர்ட தமிழ் அறிவியற் கழகத்தில் இடம்பெற்ற ஆண்டு நிறைவு விழாவில் ஏராளமானோர் பங்குபற்றினார்கள். லண்டன் மற்றும் கென்ற் எல்லைப்பகுதியில் கடந்த ஏழு வருடங்களாக தமிழ்ப் பிள்ளைகளுக்கு கல்வி பயிற்றுவித்து வரும் தமிழ் அறிவியற் கழகமானது தனது ஆண்டு நிறைவினையொட்டி கலைவிழாவினை ஏற்பாடு செய்திருந்தனர் . மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பித்த நிகழ்வில் முதலில் வீரமறவர்களுக்கு அகவணக்கம் செலுத்தியபின்பு பாடசாலை கீதத்துடன் கலை நிகழ்வுகளை ஆரம்பித்தார்கள்.



மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி யேர்மனி முன்சன். Top News
[Sunday 2017-07-23 18:00]

தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பினரால் மாவீரர் வெற்றிக்கிண்ண மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகள் யேர்மனியின் பல பாகங்களிலும் உள்ள தமிழாலயங்களை இணைத்து மிகச் சிறப்பாக நடாத்தப்பட்டு வருவது அனைவரும் அறிந்த விடயமே. அந்த வகையில் 22.7.2017 சனிக்கிழமை யேர்மனியில் முன்சன் நகரத்தில் யேர்மனியின் தென்மாநிலத்தில் உள்ள தமிழாலயங்களுக்கான மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.



சுவிட்சர்லாந்தின் தமிழ் இளையோர் அமைப்பினரால் வேற்றின மக்களுடன் நினைவு கூறப்பட்ட 'கறுப்பு ஜூலை'! Top News
[Sunday 2017-07-23 18:00]

'தம்மையும், தமது வரலாற்றையும், உள்ளபடி அறிந்து கொள்ளாத எந்த இனமும் காலவெள்ளத்தில் அள்ளுண்டு காணாமற் போய்விடும்'. என்பது யதார்த்த உண்மை. தமிழர் வரலாற்றில் என்றும் மறக்க முடியாத சரித்திர நிகழ்வு கறுப்பு ஜூலை. ஆண்டுகள் பல கடந்து வந்து விட்டாலும் தமிழ் தலைமுறைப் பிள்ளைகள் அறிந்து வைத்திருக்க வேண்டிய வரலாற்றுப் பாடம்.



மீசாலையில் ஜேர்மனிய வெள்ளைக்கார மாப்பிளை பழமை மாறாத திருமணம்: Top News
[Friday 2017-07-21 19:00]

யாழ்ப்பாணம், மீசாலை வெள்ளைமாவடி பிள்ளையார் ஆலயத்தில் பழமை மாறாத வகையில் இடம்பெற்ற திருமண விழா அனைவர் மனங்களிலும் நீங்கா இடம் பிடித்துள்ளது. ஜேர்மனியை சேர்ந்த இரு ஆங்கில ஆசிரியர்களாக கடமையாற்றும் இவர்கள் இன்றைய தினம் காலை 11:15 மணியளவில் மாட்டு வண்டி மூலம் மீசாலை வெள்ளைமாவடி பிள்ளையார் ஆலயத்துக்கு வந்து திருமண பந்தத்தில் இணைத்துக் கொண்டனர்.



தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு பிரித்தானியாவில் கைகூடும் வாய்ப்பு! Top News
[Tuesday 2017-07-18 18:00]

முள்ளிவாய்க்கால் பின்னடைவின் பிற்பட்ட காலப் பகுதியில் தமிழ் மக்களின் சமூக பொருளாதார அரசியல் நிகழ்ச்சி நிரலில் பல்வேறு முன் முயற்சிகளும் பரிசோதனைகளும் இடம்பெற்றன. அவை சாதகமானதும் பாதகமானதுமான வெவ்வேறு பெறுபேறுகளை பெற்றன. இக் காலகட்டப் பகுதியில் தமிழ் மக்களின் முயற்சிகளுக்கு சமாந்திரமாக அவர்களது கூட்டு முயற்சிகளை சிதைக்கும் போக்குகளும் இடம்பெற்றன. செயல்படும் அமைப்புகள் மற்றும் செயல்பாட்டாளர்களிடையே பல்வேறு முரண்பாடுகளை கண்டு வெதும்பிய புலம்பெயர்வாழ் தமிழ் மக்கள் மத்தியில் மேலோங்கிய விரக்தியின் காரணமாக எடுக்கப்படும் முயற்சிகள் அதன் பூரணத்துவத்தை அடைய முடியவில்லை. கடந்த காலங்களில் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு முயற்சிகள் தமிழ் மக்களின் ஒற்றுமை நோக்கி அடி எடுத்து வைத்தாலும் எதோ ஒரு விதமாக அவை சிதைவடையும் போக்கும் இடம்பெற்று வந்தன.



யேர்மனியின் மத்திய மாநிலம் 2 கான மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப்போட்டி-2017 Arnsberg: Top News
[Tuesday 2017-07-18 18:00]

யேர்மனியில் அமைந்துள்ள தமிழாலயங்களை இணைத்து தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பு நடாத்தும் மாவீரர் வெற்றிக்கிண்ண மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகள் 15.7.2017 சனிக்கிழமை அன்று யேர்மனி ஆன்ஸ்பேர்க் நகரத்தில் நடைபெற்றது இப்போட்டியில் யேர்மனியின் மத்திய மாநிலம் 2 இல் உள்ள பல தமிழாலயங்களின் மாணவ மாணவிகள் மிக ஆர்வத்துடன் பங்குபற்றினார்கள். இந் நிகழ்வு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு பின்பு யேர்மனியக் கொடி மற்றும் தமிழீழத் தேசியக்கொடி அத்தோடு தமிழ்க்கல்விக்கழகத்தின் கொடியும் ஏற்றப்பட்டு ஆரம்பமானது.



கனடாவின் 150வது வருட கொண்டாட்டத்தை சிறப்பிக்கும் வகையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தால் நடாத்தப்பட்ட விளையாட்டுப்போட்டி: Top News
[Thursday 2017-07-13 18:00]

கனடாவின் 150வது வருட கொண்டாட்டத்தை சிறப்பிக்கும் வகையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டுத்துறை சமூக நலன் அமைச்சு நடாத்திய 2ம் வருட தடகள விளையாட்டுப்போட்டி ஜூலை 3ந் திகதி Bill Crothers பாடசாலை விளையாட்டு மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது. இதில் 170க்கும் மேட்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.மார்க்கம் நகரசபை 7ம் வட்டார நகரசபை உறுப்பினர் திரு.லோகன் கணபதி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருந்தார்.இவர் தமிழ் சமுதாயத்தின் வளர்ச்சி சம்பந்தமான விடயங்களிட்கு முன்னுரிமை கொடுப்பவர்.



முள்ளிவாய்க்கால் பகுதியில் அமரர் கந்தையா தர்மலிங்கம் அவர்களின் நினைவாக கற்றல் உபகரணங்கள் துவிச்சக்கர வண்டிகள் வழங்கிவைப்பு: Top News
[Thursday 2017-07-13 11:00]

முள்ளிவாய்க்கால் பகுதியில் அமரர் கந்தையா தர்மலிங்கம் அவர்களின் நினைவாக கற்றல் உபகரணங்கள் துவிச்சக்கர வண்டிகள் வழங்கிவைப்பு - கிளிநொச்சியைச் சேர்ந்த அமரர் கந்தையா தர்மலிங்கம் அவர்களின் நினைவாக, லண்டனில் வதியும் அன்னாரின் புத்திரரான தர்மலிங்கம் நாகராஜா அவர்களினால் வறுமைக்கோட்டின் கீழான வாழ்க்கைத் தரத்தைக் கொண்ட சிறார்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் துவிச்சக்கர வண்டிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.



அவுஸ்திரேலியாவில் உலகை வியக்கவைத்த ஈழத்தமிழரின் சாதனை: Top News
[Thursday 2017-07-13 07:00]

அவுஸ்திரேலியா நாட்டில் ஈழத்தமிழ் பொறியியலாளர் ஒருவர் படைத்துள்ள சாதனையொன்று அந்த நாட்டில் மிகவும் பேசப்படும் விடயமாக விளங்குவதோடு ஈழத் தமிழரையும் உலகளவில் பெருமைக்குள்ளாக்கியிருக்கிறது. அவுஸ்திரேலியாவில் வசிக்கும் ஈழத் தமிழரான சண் குமார் என்பவரே தனது பொறியியல்துறையில் இந்தச் சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்.



தமிழர் விளையாட்டு விழா 2017 யேர்மனி டோட்முன்ட்: Top News
[Monday 2017-07-10 20:00]

8.7 2017 சனிக்கிழமை யேர்மனி டோட்முன்ட் நகரில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனிக் கிளையினரால் தமிழர் விளையாட்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. முதல் நிகழ்வாக தமிழீழப் போராட்டத்திலே உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களுக்கும் பொதுமக்களுக்கும் ஈகைச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டு பின்பு தமிழீழத் தேசியக் கொடி ஏற்றிவைக்கப்பட்டு அகவணக்கமும் செய்யப்பட்டது.



தாயகத்திலும் கொண்டாடப்பட்ட கனடாவின் 150து பிறந்த தினம்! Top News
[Friday 2017-07-07 09:00]

பல்லாயிரக்கணக்கான கனடியர்கள் கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் திரண்டு கனடாவின் 150வது பிறந்தநாள் விழாவை மிகக் கோலாகலமாகக் கொண்டாடினார்கள். கனடாவின் பிரதான நகரங்கள் பலவற்றிலும் குறிப்பாக ரொறன்ரோவிலும்கூட மிகப் பெரிய அளவில் கனடா தினம் கொண்டாடப்பட்டது.



கனடியத் தலைநகரை அதிர வைத்த தமிழர் கொண்டாட்டம்: Top News
[Tuesday 2017-07-04 20:00]

கனடாவின் 150வது பிறந்த தினக் கொண்டாட்டத்தினை, கனடா தினமான ஜூலை 1ந்திகதியும் அதற்கடுத்த நாளான 2ம் திகதியும் கனடியத் தமிழர்கள் தலைநகரில் வைத்துக் கோலாகலமாகக் கொண்டாடினர். ரொறன்ரோ, ஒட்டாவா, மொன்றியல், கிங்ஸ்ரன் ஆகிய நகரங்களில் வாழும் தமிழ் மக்கள் ஆயிரக் கணக்கில தலை நகரில் குழுமியிருந்தனர். 86ம் ஆண்டு கனடாவிற்கு வந்த தமிழ் அகதிப் படகும் ஒட்டாவா பாராளுமன்றத்திற்கு மிக அருகிலிருந்த Dominion-Chalmers church முன்றலில் காட்சிக்கு வைக்கப்பட்டது.



இருள் சூழ்ந்த தாயக மக்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றும் பேர்லின் அம்மா உணவகம்: Top News Top News
[Tuesday 2017-07-04 09:00]

சிங்கள பேரினவாத அரசால் தாயகத்தில் எமது உறவுகள் இழந்தவைகள் சொல்லில் அடங்காதவை. தனது இன விடுதலைக்காக தன்னுயிரையும் தியாகம் செய்த தமிழ் மக்களின் உறவுகள் இன்று தனது அவயங்களை இழந்த நிலையில் வாழ்வாதாரத்துக்காக போராடிக்கொண்டிருக்கின்றனர். தாயகத்தின் பல பகுதிகளிலும் தமது அன்றாட வாழ்க்கையை கொண்டு செல்ல முடியாத நிலையில் பல குடும்பங்கள் இருக்கின்றன. ஒரு வேளை உணவுக்கு கூட இவர்கள் பெரும் கஸ்டங்களை அனுபவித்து வருகின்றனர்.


Mahesan-Remax-169515-Seithy
Easankulasekaram-Remax-300716
SELVI-HOMES-09-02-17
Tharsi-home-15-10-2016
Elankeeran-debt-solution-25-06-2016
<b> 30-06-2017 அன்று கனடா-ரொரன்டோவில் நடைபெற்ற மின்னல் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b> 24-06-2017 அன்று கனடா-ரொரன்டோவில் பரதமைல் நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b> 10-06-2017 அன்று கனடா - ரொரன்டோவில்          இராகாலயா நுண்கலைக்கூடம் வழங்கிய கானமாருதம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா