Untitled Document
December 18, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
முதலமைச்சர் சி..வி. விக்னேஸ்வரன் பெண்கள் விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் Queens Park வளாகத்தில் சந்திப்பு: Top News
[Thursday 2017-01-12 11:00]

ஒன்ராறியோ மாகாணத்தின் பெண்கள் விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் Tracy MacCharles அவர்களை முதலமைச்சர் சி..வி. விக்னேஸ்வரன் Queens Park வளாகத்தில் சந்தித்துப் பேசினார். முதல்தடவையாக கனடாவுக்கு வருகை தந்திருக்கும் முதலமைச்சர் சி..வி. விக்னேஸ்வரன் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதுடன் பல அரசியல் சந்திப்புகளையும் நடத்தி வருகின்றார். அவ்வாறான சந்திப்புகளில் ஒன்றாக இந்தச் சந்திப்பும் அமைந்தது.

இச் சந்திப்பின் போது, “வடமாகாணத்தில் நடைபெற்ற போரின் காரணமாகப் பெண்கள் தலைமை ஏற்றிருக்கும் குடும்பங்கள் பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர். அவர்கள் எதிர்கொள்கின்ற சவால்கள் சமூக, உளவியல் தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. இவை குழந்தைகளின் எதிர்காலத்தைக் கேள்விக்குள்ளாக்குகின்றன. அங்கவீனர்களாக்கப்பட்ட பெண்களில் வாழ்வாதாரமும் சிக்கல்களைக் கொண்டுள்ளது. இந்தப் பெண்களின் வாழ்வை மேம்படுத்தவும் அவர்களின் வினைத்திறனை அதிகரித்து நம்பிக்கையூட்டவும் ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கியிருக்கும் சட்ட நியமங்கள் வாயிலாக, ஒன்ராறியோ அரசால் எமக்கு உதவ முடியுமா?” எனச் சி.வி.விக்னேஸ்வரன் அமைச்சரைக் கேட்டுக் கொண்டார்.

முதலமைச்சரோடு வேறு பல விடயங்களையும் கலந்துரையாடிய Tracy MacCharles தமிழ் மக்களின் துயரத்தின் ஆழத்தைத் தான் புரிந்து கொள்வதாகவும் இப்பாதிப்புகள் தொடர்பான புள்ளிவிபரங்களைப் பரிமாறிக் கொள்வதன் மூலம் அடையாளம் காணப்பட்ட சிக்கல்களுக்குத் தாங்கள் எவ்வாறு உதவலாம் என்பதற்கான வழிகளைக் கண்டறிவதாகவும் குறிப்பிட்டார். வடமாகாணசபையுடன் இணைந்து பணியாற்றக் கூடிய வாய்ப்புகள் இருப்பின் அவற்றை நிச்சயமாகப் பரிசீலிப்போம் என்றும் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பு நிறைவாக நடைபெற்றதாக இருதரப்பினரும் தெரிவித்தனர்.

  
  
   Bookmark and Share Seithy.com



ஒதியமலைப் படுகொலையின் 33 ஆவது ஆண்டு நினைவுதினம்! Top News
[Saturday 2017-12-02 19:00]

முல்லைத்தீவு, ஒதியமலை கிராமத்தில் 1984.12.02 திகதி இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 32 அப்பாவி தமிழ் மக்களின் 33 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று படுகொலை நடைபெற்ற இடத்தில் நடைபெற்றது. படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவுகள் தீபம் ஏற்றியும் ஒதியமலை பிள்ளையார் ஆலயத்தில் விசேட ஆராதனையில் ஈடுபட்டும் தமது உறவுகளை நினைவு கூர்ந்தனர்.



மெல்பேணில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தேசிய மாவீரர் நாள் நிகழ்வு! Top News
[Tuesday 2017-11-28 18:00]

தமிழீழ விடுதலைப்போரில் தங்கள் இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை நினைவுகூரும் தேசிய நினைவெழுச்சிநாள் நிகழ்வுகள் 27ம் திகதி திங்கட்கிழமையன்று மெல்பேணில் அமைந்துள்ள Springvale நகர மண்டபத்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது. மெல்பேண் நேரம் மாலை 6 மணிக்கு மணியொலியுடன் தொடங்கிய ஆரம்பமான இந்நிகழ்விற்கு பிரசாத் (தமிழ்மொழியில்) மற்றும் துளசி (ஆங்கிலமொழியில்) ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.



டென்மார்க்கில் மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தேசிய மாவீரர் நாள்! Top News
[Tuesday 2017-11-28 18:00]

டென்மார்க்கில் மாவீரர் நாள் பொதுச்சுடர் ஏற்றலுடன் ஆரம்பமானது . அதன் பின்பு டென்மார்க் பொறுப்பாளரால் தேசியக்கொடி ஏற்றப்பட்டு,சுடர்வணக்கம், மலர்வணக்கம்,அகவணக்கம் நடைபெற்றது . தமிழீழக்கனவுடன் தமிழ் மக்களின் விடுதலைக்காய் தங்கள் உயிர்களை ஆகுதியாக்கிய தேசப்புதல்வர்களின் கல்லறைக்கு சுடரேற்றும் போது மாவீரர் துயிலுமில்லப்பாடல் ஒலிபரப்பப்பட்டது.



வடமராட்சி கடலில் மாவீரர்களுக்கு நினைவுச் சுடர்! Top News
[Tuesday 2017-11-28 06:00]

தமிழர் தாயகம் எங்கும் உணர்வெழுச்சியுடன் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று இடம்பெற்றன. வடமராட்சி - தொண்டைமானாறு கடலிலும் கடற்கரையிலும் மாவீரர்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. அத்துடன் முல்லைத்தீவு கடற்கரையிலும் மாவீரர்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் காலத்தில் கடற்புலிகளின் தளபதி சூசையினால் நடுக்கடலில் ஈகைச்சுடர் ஏற்றப்படுவது வழக்கம். போர் முடிவுக்கு வந்த பின்னர் முதற்தடவையாக வடமராட்சி கடற்பரப்பில் மாவீரர்களுக்காக ஈகைச்சுடர் ஏற்றப்பட்டுள்ளது.



மாவடி முன்மாரி துயிலுமில்லத்தில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் நாள்! Top News
[Tuesday 2017-11-28 06:00]

மட்டக்களப்பு - மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தில் நேற்றுமாலை உணர்வெழுச்சியுடன் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில், மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் என பெருமளவிலானோர் கலந்து கொண்டுள்ளனர்.



லண்டன் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மாவீரர் வார தொடக்க நிகழ்வு! Top News
[Friday 2017-11-24 19:00]

தமிழ் இளையோர் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டு வரும் மாவீரர் வார நிகழ்வுகள் பல நாட்டின் பல்கலைக்கழகங்களில் நடந்தேறிவருகின்றன. அதேபோல லண்டன் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை மாலை தாயக மண்மீட்பு போரில் உயிர்நீத்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.



லண்டனில் மாவீரர் பெற்றோர் கெளரவிப்பு நிகழ்வு! Top News
[Monday 2017-11-20 18:00]

தாயக விடுதலை போரில் உயிர்நீத்த மாவீரர்களின் பெற்றோர்களை கெளரவிக்கும் நிகழ்வு நேற்றைய தினம் லண்டனில் நடைபெற்றது. ஐக்கிய இராச்சியத்தில் உள்ள ஒக்ஸ்போர்ட் நகரில் அமைந்துள்ள உலகத் தமிழர் வரலாற்று மையத்தில் நேற்றுக் காலை 11.00 முதல் மாலை 5.00 வரை இந்த நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் நூற்றுக்கணக்கான மாவீரர்களின் உறவுகள் மதிப்பளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் எதிர்வரும் மாவீரர் நாளினை சிறப்புற நடாத்த வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருக் கின்றன.



கனடா செந்தில் குமரனின் அறக்கட்டளை ஊடாக அக்கறைப்பற்றை சேர்ந்த சசிகலாவிற்கு வெற்றிகரமாக இருதய சத்திர சிகிச்சை நிறைவு! Top News
[Tuesday 2017-10-24 19:00]

25 வயதான சசிகலா தனது 9 வயது முதலே இதய நோயினால் பாதிக்கப்பட்டு மிகுந்த துன்பத்திற்கு உள்ளானார். இவரது தந்தையான சிவசுப்ரமணியம் தனது மகளின் உயிரை காப்பதற்கு அடிக்கடி அரசாங்கமருத்துவமனைக்குக் கூட்டிச் சென்று வைத்தியம் பார்த்தபடியே இருந்துள்ளார். ஆனால் சத்திரசிகிச்சை செய்த இந்த நோயினில் இருந்து முழுமையாக வெளிவர முடியாத நிலைமை ஏனென்றால் அரசாங்க மருத்துவமனையில் இவருக்கு முன் இவரை விட மோசமான நிலைமையில் பலர் நாட்கள் வருடங்களாக உருண்டோடி சசிகலாவுக்கு திருமணமும் ஆகி குழந்தையும் பிறக்கிறது.



யாழ்ப்பாணத்தில் நடந்த தேசிய தமிழ் மொழித்தின விழா! Top News
[Saturday 2017-10-14 19:00]

கல்வி அமைச்சின் மூலமாக ஒவ்வொரு வருடமும் நடாத்தப்படும் தேசிய தமிழ் மொழித்தினம் இந்த வருடம் கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தலைமையில் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிறப்பு அதிதியாக கலந்து கொண்டார்.



அகில இலங்கை பாடசாலை மட்டத்திலான தேசிய விளையாட்டு ஆரம்ப நிகழ்வு! Top News
[Tuesday 2017-10-03 18:00]

அகில இலங்கை பாடசாலை மட்டத்திலான தேசிய விளையாட்டு போட்டி கொழும்பு ரோயல் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகி (02) உள்ளது. தொடர்ந்து 14 நாட்கள் நடைபெறும் இந்த விளையாட்டு போட்டிகளில் 09 மாகாணங்களை சேர்ந்த பாடசாலை மாணவர்கள் கலந்துக் கொள்கின்றனர்இ ந்த விளையாட்டு போட்டிகளின் ஆரம்ப நிகழ்வு பிரதமர் ரனில் விக்கரமசிங்க தலைமையில் ஆரம்பித்து வைக்கபட்டது.



கனடிய தமிழர் தேசிய அவையின் அனுசரணையில் எமது சமூகத்தின் ஏற்பாட்டில் பாட்டாளிபுரத்தில் மருத்துவ முகாம்! Top News
[Thursday 2017-09-28 18:00]

26-9-2017 அன்று எமதுசமூகத்தின 10வது வைத்திய முகாம் திருமலைமாவட்டத்தின் பாட்டாளிபுரம் கிராமத்தை சூழவுள்ள 5 கிராமங்களை உள்ளடக்கி 750ற்கு மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டது ஒருவரலாற்று நிகழ்வாகும். திரு மகேந்திரன் மாணிக்கம் அவர்கள் கனடிய தமிழர் தேசிய அவையின் மண்வாசனத் திட்டத்தினூடாக எமது சமூகத்தின் ஏற்பாட்டில் மூதூர் பாட்டாளிபுரத்தில் இம் மருத்துவ முகாம் இடம்பெற்றுள்ளது.



நல்லூரில் தியாகதீபம் திலீபனுக்கு உணர்வெழுச்சியுடன் அஞ்சலி! Top News
[Tuesday 2017-09-26 19:00]

ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து, உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து உயிர்நீத்த தியாகதீபம் லெப்.கேணல் திலீபனின் 30 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று நல்லூரில் எழுச்சியுடன் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.



தமிழர்கள் மத்தியில் பொதுவாக்கெடுப்பு நடத்த முன்வாருங்கள்! - ஜெனிவாவில் வைகோ அழைப்பு Top News
[Tuesday 2017-09-19 07:00]

உலகம் முழுவதும் வாழும் ஈழத் தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என ஜெனிவா மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, வலியுறுத்தியுள்ளார். ஜெனிவாவில் மனித உரிமைக் கவுன்சிலின் 36-வது அமர்வு செப்டம்பர் 11-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.



“அன்னை தந்த இல்லம்”நிகழ்த்திய நிதி திரட்டும் இசை விழாவிற்;கு அள்ளி வழங்கிய வள்ளல்கள்! Top News
[Sunday 2017-09-17 18:00]

மனோ வளம் குன்றிய பிள்ளைகளை பராமரித்து வரும் “அன்னை தந்த இல்லம்” (ATI Foun dation) நிகழ்த்திய இசைக் குயில் சித்திராhவின் “சித்திரா கீதம்” நிகழ்ச்சிக்கு தமிழ் மக்கள் பெருமனதுடன் நிதியினை அள்ளி வழங்கி தமது ஆதரவினை நல்கியுள்ளனர். கடந்த 15ம் திகதி வெள்ளிக் கிழமை மாலை மார்க்கம் மெக்னிக்கல் வீதியிலுள்ள Chandini Hall மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இசைக் குயில் சித்திரா தனது இசைக் குழுவினருடன் பங்குபற்றி தனது இன்னிசையினால் பார்வையாளர்களை மகிழ்வித்தார்.



பிரித்தானிய பாராளுமன்றத்தில் ஒலித்த காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களுக்கான குரல்கள் ! Top News
[Thursday 2017-09-14 18:00]

பிரித்தானிய பாராளுமன்றத்தில் கேட்போர் கூடத்தில் இலங்கைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களுக்கான குரல்கள் ஒலித்துள்ளன. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அனைத்துலக நாளிளையொட்டி கருத்தரங்கொன்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சிறிலங்காவைக் கண்காணிக்கும் பன்னாட்டு நிபுணர் குழுவின் பிரதிநிதி அன்றூ உட்பட பிரித்தானிய பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர்கள், நா.தமிழீழ அரசாங்க அமைச்சர் மணிவண்ணன் ஆகியோர் பிரதான கருத்துரைகளை வழங்கியிருந்தனர்.


Mahesan-Remax-169515-Seithy
Tharsi-home-15-10-2016
Easankulasekaram-Remax-300716
SELVI-HOMES-09-02-17
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா