Untitled Document
April 23, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
ஜல்லிக்கட்டுக்கு இளந்தமிழக இயக்கம் ஆதரவு; டைடல் பூங்கா முன் மனித சங்கிலி Top News
[Friday 2017-01-20 10:00]

உழவர் திருநாளையொட்டி தமிழ்நாட்டில் நடைபெறும் ஜல்லிக்கட்டை நடத்த முடியாத நெருக்கடியை உச்ச நீதிமன்றமும், மத்திய அரசும் மண்ணிற்கு சம்பந்தமில்லா பீட்டாவின் (PETA) பெயரில் ஏற்படுத்தியுள்ளன. அலங்காநல்லூரிலும், பாலமேட்டிலும் நம் மக்கள், நம் இளைஞர்கள் இரவு முழுவதும் கண் விழித்து நம் மரபுரிமையான ஜல்லிக்கட்டு போட்டியை நடத்திட குரல் கொடுத்து போராடி வருகின்றனர். தமிழகத்தின் தலைநகரம் சென்னை மெரினா கடற்கரையில் நேற்று முதல் ஆயிரக்கணக்கான இளைஞர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் கூடி போராட்டத்தை தொடர்கின்றனர். தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் மக்கள் தன்னெழுச்சியாக போராடுவதை காவல்துறை தடியடி நடத்தியும், வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கைதும் செய்துள்ளனர்.

காவல்துறையினரின் அத்துமீறலைக் கண்டித்தும் ஜல்லிக்கட்டுக்கான தடையினை விலக்கி உடனடியாக ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என வலியுறுத்தியும், தமிழகத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் தற்கொலையும், அதிர்ச்சியால் மரணமடைவதையும் தடுக்க போதிய இழப்பீட்டு நிதி வழங்க வேண்டியும், ஐ.டி துறையினரான நாங்கள் இன்று (18.01.2017) டைடல் பூங்காவில் ஒன்று கூடி போராடும் அனைவருக்கும் எங்களது ஆதரவை தெரிவித்துள்ளோம்.இளந்தமிழக இயக்கம் ஒருங்கிணைத்த இந்த மனிதச் சங்கிலி ஒன்று கூடலில், கீழ்க்கண்ட கோரிக்கைகள் முழக்கங்கள் முன்வைக்கப்பட்டன.

மத்திய அரசே!

ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டு மக்களின் மரபுரிமை!

ஜல்லிக்கட்டு மீதான தடையை உடனடியாக நீக்கிடு!

உழவர்கள் தற்கொலையை தடுத்திட உடனடியாக வறட்சி நிவாரணம் வழங்கிடு!

காவிரியில் தமிழக உரிமையை மறுக்காதே! காவிரி நீர் மேலாண்மை வாரியத்தை அமைத்திடு!

தமிழக அரசே, கைது செய்யப்பட்டுள்ள இளைஞர்களை உடனே விடுதலை செய்!

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா