Untitled Document
April 18, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
சல்லிக்கட்டுக்கு ஆதரவான திருச்சி போராட்டத்தில் மூன்றாவது நாளாக ஈழத் தமிழ் இளைஞர்கள்! Top News
[Sunday 2017-01-22 08:00]

சல்லிக்கட்டு போட்டிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வலியுறுத்தி தமிழகமெங்கும் பெருந்திரள் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்ற நிலையில் திருச்சியிலும் ஆயிரக்கணக்கான இளையோர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். திருச்சி மாவட்ட நீதிமன்ற வளாகத்திற்கு அருகாமையில் உள்ள எம்.ஜி.ஆர். சிலையடியில் ஒன்றுகூடிய மாணவர்கள், மாணவிகள் மற்றும் இளையோர் உள்ளிட்டவர்களது போராட்டம் மூன்றாவது நாளாக இன்றும் தொடர்ந்து வருகின்றது.

வாடிவசல்கள் திறக்கும் வரை வீட்டு வாசல்களை மிதியோம் என்ற உறுதியுடன் போராடிவரும் தமிழக இளையோரின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் திருச்சி வாழ் ஈழத் தமிழ் இளைஞர்கள் இன்றும் பங்கேற்றிருந்தார்கள். தடை அதை உடை! புது சரித்திரம் படை!

அடிமைகளாய் நாம்! அடிமாடுகளாய் நம் காளைகள்! இப் படை தோற்கின் எப் படை வெல்லும்! வேண்டும் வேண்டும் சல்லிக்கட்டு வேண்டும்! தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா! உணர்வால் ஒன்றிணையும் தமிழர் தாயகம்! எனும் வாசகங்கள் எழுதிய பதாகைகள் ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்ட ஈழத் தமிழ் இளையோர் முழக்கங்களை எழுப்பியிருந்தார்கள்.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Rajeef sebarasha 2023/04/19
NKS-Ketha-04-11-2021
Airlinktravel-2020-01-01
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா