Untitled Document
April 25, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
முருங்கைகீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..
[Wednesday 2017-03-22 18:00]

முருங்கைகீரையில் கால்சியம், இரும்புச்சத்து, விட்டமின் A, B, B2, C, பீட்டா கரோட்டீன், மாங்கனீசு, புரதம் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் போன்ற சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது. எனவே வாரம் ஒருமுறை முருங்கைக் கீரை மட்டுமின்றி, அதனுடைய பூ மற்றும் காயையும் சமைத்து சாப்பிட்டால், ஏராளமான மருத்துவ நன்மைகளை பெறலாம்.

முருங்கக்கீரையை தினமும் உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால், ரத்தசோகை, சருமப்பிரச்சனை, சுவாசப்பாதை, செரிமான மண்டலம் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது. முருங்கைக் கீரை சாப்பிடுவதால், அது மாதவிடாய் சுழற்சியை சீராக்கி, பெண்கள் வயிற்றில் வளரும் குழந்தையின் உடலில் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாட்டை தடுக்கிறது. முருங்கைக்கீரையில் விட்டமின் A அதிகம் இருப்பதால், அது கண் பார்வை தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுவதை தடுத்து, கூர்மையான கண் பார்வையை ஏற்படுத்தி, கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. முருங்கைக்கீரையை வாரந்தோறும் உணவில் சேர்த்து வந்தால், அது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, எளிதில் உடலைத் தொற்றும் சளி, காய்ச்சல் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

முருங்கைக்கீரை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், அது இதயத்தை ஆரோக்கியமாக பாதுகாப்பதுடன், மாரடைப்பு போன்ற இதர இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தைத் தடுக்கிறது. முருங்கைக்கீரையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் அத்தியாவசிய அமினோ அமிலங்கள் உள்ளது. இது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து, புற்றுநோய் வராமல் தடுக்கிறது. முருங்கைக்கீரையில் உள்ள கால்சியம், எலும்புகள் மற்றும் பற்களின் வலிமையை அதிகரித்து, தாய்ப்பாலின் சுரப்பை அதிகரிக்க செய்கிறது. முருங்கைப் பூவை நன்கு வெயிலில் உலர்த்தி, பொடி செய்து, அதை பாலில் சேர்த்து கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால், சிறுநீரக மண்டலத்தை சீராக்குவதுடன், ஞாபக சத்தியை அதிகரிக்கச் செய்கிறது.

  
  
   Bookmark and Share Seithy.com


Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா