Untitled Document
April 23, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
மன அழுத்ததைக் குறைக்க என்னென்ன செய்யலாம்?
[Thursday 2017-03-23 21:00]

மனம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் , பிரச்சினைகளுக்கும் வெளியில் இருப்பவர்களை விடவும் நாம் தான் பெரிதும் காரணம் ஆகின்றோம். வாழ்க்கையை திட்டமிட்டு சரிவர கொண்டு சென்றால் மன அழுத்தம் மனிதர்களை அணுகாது. பதறாத காரியம் சிதறாது என்று இதனால் தான் சொன்னார்கள். ஆனால் எப்போதும் பதறுவதும், தங்கள் மன அழுத்தத்தால் மற்றவர்கள் மீது சீறிப்பாய்வதும் பலருக்கும் வாடிக்கையாகப் போய்விட்டன. இப்படியானவர்கள் மன அழுத்ததைக் குறைக்க என்னென்ன செய்யலாம்?

1.வேண்டாமே கடைசிநேர பதறியடிப்பு

கடைசி நிமிடப் பரபரப்பைத் தவிருங்கள்.இருக்கும் வரை ஆறுதலாக இருந்துவிட்டு, ஏதும் வேலையைத் தொடங்கும் போதோ அல்லது புறப்படும்போதோ தான் திடீரென்று பதறியடிப்பார்கள். அது எங்கே? இது எங்கே? என்று ஓடியலைவார்கள். தாமும் ரென்சனாகி, சுற்றி இருப்பவர்களையும் பதறவைப்பார்கள். இப்படியான நிலையைத் தவிர்க்க எங்காவது செல்ல வேண்டுமென்றால் ஓர் அரை மணி நேரம் முன்பாகவே கிளம்புவது, காலையில் ஒரு பதினைந்து நிமிடம் முன்னதாகவே எழுந்து விடுதல், பயணத்திற்குத் தேவையானவற்றை முந்தின நாளே எடுத்து வைத்துக்கொள்வது, போன்றவற்றை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

2.ஒரு நேரம் ஒரு வேலை

ஒரே சமயத்தில் ஏழெட்டு வேலைகளைப்பற்றி சிந்தித்துக்கொண்டு ஒன்பதாவது வேலையைச் செய்து கொண்டிருந்தால் உங்கள் மனஅழுத்தம் அதிகரிக்கும். மனதில் திட்டமிட்ட வேலைகளையும் சரியாகச் செய்யாமல், தற்போது செய்துகொண்டிருக்கும் காரியத்தையும் கெடுப்பதாகவே இப்படியான செயல்கள் அமையும். எனவே என்னசெய்யவேண்டும் என்பதைப்பட்டியலிடுங்கள். மிகமுக்கியமானவிஷயங்களை முதலில்செய்யுங்கள். எல்லா வேலைகளையும்செய்ய வேண்டுமென்றகட்டாயமில்லை. போதுமான ஓய்வு நேரம் உங்கள் பட்டியலில் நிச்சயம் இருக்கட்டும்.

3.தேவையற்றவற்றை பட்டியலிட்டு ஒதுக்குங்கள்

உங்களுக்கு மன அழுத்தம் தரக்கூடிய விஷயங்களை ஒதுக்குங்கள். இரைச்சல், வெளிச்சம், தாமதம், சிலவகை வாசனைகள், சில நபர்கள் இப்படி உங்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தக் கூடிய விடயங்களைக் கொண்ட பட்டியலை தயாரியுங்கள். எல்லோருக்கும் பிடித்த விடயங்கள் கட்டாயம் உங்களுக்கும் பிடிக்க வேண்டும் என்பதில்லை. எனவே மற்றவர்களுக்காக பிடிப்பதாக காட்டிக் கொள்ளும் உங்களுக்குப் பிடிக்காத விடயங்களையும் இந்தப் பட்டியலில் சேருங்கள். இந்தப்பட்டியல் எவ்வளவு பெரிதாக வேண்டுமானால் இருக்கலாம். முடிந்தவரை அந்தப்பட்டியலில் இருக்கும் அத்தனை விடயங்களையும் உங்கள் வாழ்க்கையில் இருந்து ஒதுக்குங்கள். ஒதுக்க முடியாத சூழல்களில் நீங்களே கொஞ்சம் ஒதுங்கிப் போய் விடுங்கள்.

4.உடற்பயிற்சி செய்யுங்கள்

ஆரோக்கியமான உடல், மன அழுத்தத்தின் எதிரி. உடற்பயிற்சிகள் செய்வதால் தனியே உடல் மட்டும் தான் வலிமையும், பலமும் , ஆரோக்கியமும் பெறுகின்றன என நினைப்பது தவறு. உடற்பயிற்சிகள் மனதுக்கும் பெரும் பயனை வழங்குகின்றன. உடலில் ரத்த ஓட்டமும், ஒட்சிசன் விநியோகமும் சீராக இருக்கும்போது மன அழுத்தம் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது. எனவே மூச்சுப் பயிற்சி போன்றவையும், வாக்கிங்,ஜாக்கிங், போன்றவையும் உங்கள் தினசரி அட்டவணையில் இடம் பெறட்டும்.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா