Untitled Document
April 19, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
இந்த ஆண்டு ஐபோனில் பல்வேறு புது அம்சங்கள்!
[Friday 2017-04-14 17:00]

ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு மூன்று ஐபோன்களை வெளியிடுவது ஓரளவு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் சமீபத்தில் வெளியாகியுள்ள தகவல்களில் பல்வேறு புதிய அம்சங்கள் வெளியாகியுள்ளன. ஆப்பிள் நிறுவனம் மூன்று ஐபோன்களை இந்த ஆண்டு வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் மொடல்களுக்கு இரண்டு அப்டேட்கள் வழங்கப்படும் என்றும் இதில் 5.8 இன்ச் திரை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் 2017-இல் வெளியாகும் மூன்று ஐபோன்களிலும் 3ஜி.பி ரேம் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

தற்சமயம் வெளியாகியுள்ள ஐபோன் 7-இல் 2 ஜி.பி ரேம் மற்றும் ஐபோன் 7 பிளஸ் மாடலில் 3 ஜி.பி ரேம் வழங்கப்பட்டுள்ளது. மெமரியை பொருத்த வரை 3ஜி.பி ரேம், 4.7 இன்ச் 5.5 இன்ச் திரை மற்றும் ஐபோன் 7 மற்றும் 7 பிளஸ் போன்றே 32, 128 256 ஜிபி மெமரி வழங்கப்படும் என்றும் 5.8 இன்ச் மொடல் 64 மற்றும் 256 ஜிபி மெமரி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இவை கூடுதல் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் என்றும் கூறப்படுகிறது.

முன்னதாக வெளியான தகவல்களில் ஐபோன் 8 ஸ்மார்ட்போன் 'ஐபோன் எடிஷன்' என அழைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் சாம்சங் நிறுவனத்திடம் இருந்து 70 லட்சம் டிஸ்ப்ளேக்களை வாங்க ஆப்பிள் முன்பதிவு செய்துள்ளது என தகவல்கள் வெளியானது. இத்துடன் புதிய ஐபோன் 8-இல் செல்ஃபி கெமரா எம்பெடெட் கைரேகை ஸ்கேனர் மற்றும் உயர்-ரக ஃபேஷியல் ரெகக்னீஷன் வசதிகள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. விலையை பொருத்த வரை புதிய ஐபோன் 8, 850 டாலர்கள் முதல் 900 டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 64 ஜி.பி ஐபோன் 8 தயாரிப்பு கட்டணமானது அதிகபட்சம் 70 முதல் 80 டொலர்கள் என கணிக்கப்பட்டுள்ளது.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Remax-169515-Seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா