Untitled Document
March 28, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
ஆஸ்திரேலியாவில் பெற்றோர் விசா தயார்: - 10 ஆண்டுகள் தங்கலாம்
[Friday 2017-05-05 22:00]

பெற்றோர்களுக்கான புதிய விசா அறிமுகமாகிறது. இவ்வருட நவம்பர் மாதத்திலிருந்து இப்புதிய விசாக்கள் வழங்கப்படும். $20,000 செலுத்தினால் 10 ஆண்டுகள் இங்கே தங்கலாம். அறிமுகப்படுத்தப்படவுள்ள ஒரு புதிய விசாவின் கீழ், பெற்றோர்கள் 10 வருடங்கள் வரை ஆஸ்திரேலியாவில் தங்கலாம். ஆனால் அவர்கள் ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாகக் குடியேற அனுமதிக்கப்பட மாட்டார்கள். அத்துடன் அவர்களின் பிள்ளைகள் தமது பெற்றோர்களுக்கான தனியார் சுகாதார காப்பீடு (private health cover) எடுக்கவேண்டும்.

Turnbull அரசாங்கத்தின் சமீபத்திய குடிவரவுகள் மீதான மாற்றங்களில் ஒன்றாகப் பெற்றோர்களுக்கான இப் புதிய விசா அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அதன் படி வருடத்துக்கு சுமார் 15,000 பேர் $20,000 டொலர்கள் செலுத்தித் தமது பெற்றோர்களை இங்கு அழைத்துவந்து 10 வருடங்களுக்குத் தம்முடன் தங்கவைக்கலாம்.

புதிய விசாவின் கீழ் இங்கு அழைத்துவரப்படும் பெற்றோர்களுக்கு அவர்களது சுகாதார/ வைத்தியத் தேவைகளுக்கான சகல செலவுகளையும் அவர்களது பிள்ளைகளே சட்டப்படி கட்டாயம் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

பெற்றோர்களுக்கு சுகாதாரக் காப்பீடு எடுக்கின்ற அதே வேளை ஆஸ்திரேலியாவில் தங்கள் பெற்றோர்களுக்கு ஏற்படுகின்ற எந்தவொரு கூடுதல் சுகாதார செலவினங்களுக்கும் பிள்ளைகள் நிதி உத்தரவாதம் (financial guarantor) அளிக்கவேண்டும்.

இங்கு குடியேறிவரும் வயதான பெற்றோர்களினால், அவர்களின் சுகாதாரம் தொடர்பில் காலப்போக்கில் வரி செலுத்துவோருக்குக் கூடுதல் செலவினங்கள் ஏற்படுவதாக துணை குடிவரவு அமைச்சர் Alex Hawke SBS இக்குத் தெரிவித்துள்ளார். இப்பிரச்சனை ஆஸ்திரேலியாவுக்கு மட்டுமன்றி உலகளாவிய ரீதியில் அநேகமான நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளது.

"There's great expense to the taxpayer in relation to health costs over time with elderly parents. That's the problem that government's around the world have been wrestling with."

விண்ணப்பதாரர்கள் $ 5,000 செலுத்தி 3 ஆண்டுகளுக்கான விசாவைப் பெறலாம். அல்லது $10,000 செலுத்தி 5 ஆண்டுகளுக்கான விசாவைப் பெறலாம். அதேவேளை மேலும் அதேயளவு பணத்தைச் செலுத்தி மற்றொரு ஐந்து ஆண்டுகளுக்கு விசாவைப் புதுப்பித்தலுக்கான ஒரு வாய்ப்பும் இந்த விசா திட்டத்தில் உண்டு.

அதிக செலவு மற்றும் அவ்விசாவில் வரும் பெற்றோருக்கான நிரந்தர வதிவிடம் பெறுவதற்கான பாதை இன்மை ஆகியன மிகப்பெரும் கவலை தரும் விடயங்கள் என Australian National University migration expert Henry Sherrell இதுபற்றித் தெரிவித்துள்ளார்.

"There are some things to be concerned about. The costs look extremely high for a temporary visa. And there's also the question of whether these people will be living in Australia but sort of living apart from the community because if they're always going to be a temporary citizen, or a temporary migrant, they'll have no pathway to permanent residency and they'll be expected to leave after 10 years."

இந்த விசா தொடர்பிலான சட்டதிட்டங்கள் சுகாதார செலவினங்களை அரசு கட்டுப்படுத்த உதவுகிறது. அதேவேளை விசா கட்டணமாக மில்லியன் கணக்கிலான டொலர்கள் அரசுக்கு வருவாயாகவும் கிடைக்கும். ஒதுக்கீடு செய்யப்படும் 15,000 விசாக்களும் முதல் வருடத்தில் நிரப்பப்படுமாயின் $150 million டாலர்கள் வருமானம் கிடைக்கும். இதன்மூலம் அரசு childcare - குழந்தைகள் பராமரிப்பைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ளலாமென துணை குடிவரவு அமைச்சர் Alex Hawke கூறுகிறார்.

"With parents coming to spend more time with their children and their grandchilren, family units will be more cohesive. We expect to see reduced pressure on some childcare facilities because grandparents will be available and able to, under this visa, care for their grandchildren while the parents work."

தங்கள் பெற்றோருக்கான புதிய விசாவிற்கு நிதியளிப்பவர்கள் ஆஸ்திரேலிய குடிமக்கள் அல்லது ஆஸ்திரேலிய நிரந்தரக் குடியிருப்பாளர்கள், அல்லது தகுதியான நியூசிலாந்து குடிமக்களாக இருக்க வேண்டும்.

"I work in the healthcare industry, I know what's happening, I know the burden. There's a lot of ageing population in the whole of Australia, I can see that. It's just money, you can't afford to have the older population increasing."

இந்தப் புதிய மாற்றங்களை, அடுத்தவாரம் சமர்பிக்கவுள்ள வரவுசெலவுத் திட்டத்தில் அரசு அறிமுகப்படுத்த உத்தேசித்துள்ளது. இது பாராளுமன்றத்தில் நிறைவேறும் பட்சத்தில் இவ்வருட நவம்பர் மாதத்திலிருந்து இப்புதிய விசாக்கள் வழங்கப்படும்.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா