Untitled Document
March 29, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
நட்சத்திரங்களை விட வெப்பமான புதிய கிரகம் கண்டுபிடிப்பு
[Wednesday 2017-06-14 20:00]

மேற்பரப்பில் தோராயமாக 4,000 டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலையை கொண்ட வித்தியாசமான உலகம் கொண்ட கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். அது கிட்டத்தட்ட நமது சூரியனைப் போன்றே வெப்பமானது. KELT-9b சுற்றிவரும் நட்சத்திரம் மிகவும் வெப்பமானதாக இருப்பது ஒரு பகுதிக் காரணம்தான்; இந்த வேற்றுலகம் அந்த நட்சத்திரத்திற்கு மிக அருகிலேயே இருப்பதும் தான் அதன் அதிவெப்பத்திற்கு காரணம்.

KELT-9b கிரகம், தனது நட்சத்திரத்தை சுற்றி வர வெறும் இரண்டே நாட்கள்தான் ஆகின்றன. நட்சத்திரத்திற்கு மிகவும் நெருக்கமாக இருப்பதால், KELT-9b கிரகம் நீண்ட காலம் நீடித்திருக்க முடியாது என்பதை உணர்த்துகிறது. அதன் வளிமண்டலத்தில் உள்ள வாயுக்கள் கதிர்வீச்சுடன் வெடித்து, விண்வெளியில் கலக்கின்றன. நட்சத்திரத்தை, துருவத்திலிருந்து துருவம் வரை சுற்றி வருவதால், வால்மீன் என்று இதனை ஓரளவுக்கு சொல்லலாம் என்பது இந்த கண்டுபிடிப்பின் மற்றொரு பிரத்யேக அம்சம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். KELT-9b குறித்த செய்தி, 'நேச்சர்' பத்திரிகையில் வெளிவந்துள்ளது. திங்கட்கிழமையன்று டெக்சாஸில் ஆஸ்டின் நகரில் நடைபெற்ற அமெரிக்க வானியல் சங்கத்தின் கூட்டத்தில், இதன் தனித்துவமிக்க பண்புகள் பற்றிய தகவல்கள் முன்வைக்கப்பட்டன. "2014 ஆம் ஆண்டிலேயே KELT-9b ஐ கண்டுபிடித்துவிட்டோம். ஆனால், உண்மையிலேயே இது வினோதமான, தனித்தன்மைமிக்க உலகம் என்றும், மற்றொரு நட்சத்திரத்தை சுற்றிவருகிறது என்றையும் உறுதி செய்ய இத்தனை காலம் ஆனது," என்று ஓஹியோ ஸ்டேட் பல்கலைக்கழக பேராசிரியர் ஸ்காட் கெளடி, தெரிவித்தார். "இந்த கிரகத்தின் பிரம்மாண்டம் மற்றும் மகத்துவம் பற்றி நாங்கள் நன்றாகவே தெரிந்துக் கொண்டோம். வியாழன் கிரகத்தை ஒப்பிடும்போது, அதை விட மூன்று மடங்கு எடையும், அளவில் இரண்டு மடங்கும் பெரியது; அதிவிரைவாக சுற்றுவதால், பார்ப்பதற்கு மிகவும் தட்டையாக இருப்பதுபோல் தோன்றும். ஈர்ப்பு விசைப் பூட்டல் (gravitational locking) வகையில், இந்த கிரகம் தன்னுடைய நட்சத்திரத்துடன் இணைந்திருக்கிறது. எனவே, நம்முடைய சந்திரன், பூமியுடனான தனது தூரத்தை எப்போதுமே காட்டாமல் இருப்பதைப்போன்றே, KELT-9bயும் எப்போதும் ஒரேவிதமான தோற்றத்தை அளிக்கிறது. இதனால், KELT-9b இன் "பகல் பக்க" வெப்பநிலை 4,300

  
  
   Bookmark and Share Seithy.com


Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா