Untitled Document
March 28, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
கொழுப்புகளைக் குறைக்க உதவும் கார்டியோ பயிற்சிகள்!
[Sunday 2017-07-02 18:00]

உடலில் சேரும் கெட்டக் கொழுப்புகளைக் குறைக்க கார்டியோ பயிற்சிகள் பெரிதும் உதவுகிறது.அதிக எடை மற்றும் கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள், கட்டுக்கோப்பான உடலமைப்பைப் பெற விரும்புவர்கள் என்று 10-50 வயது வரை உள்ள அனைவருமே இந்த கார்டியோ பயிற்சியை பின்பற்றலாம்.

கார்டியோ பயிற்சிகளை யாரெல்லாம் செய்யக் கூடாது?- அறுவை சிகிச்சை செய்தவர்கள் மற்றும் அதிக உடல் காயம் அடைந்தவர்கள் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் இந்த கார்டியோ பயிற்சிகளை செய்யக் கூடாது.

பெல்விக் லிஃப்டிங் (Pelvic Lifting)

இந்த பயிற்சியை செய்யும் போது முதலில் மல்லாந்து படுத்து கொண்டு, இரண்டு கால்களையும் மடக்கி, கைகளை பக்கவாட்டில் வைத்து, தலை மற்றும் தோள்பட்டையில் அழுத்தம் கொடுத்து இடுப்பு, கால்கள், முதுகு ஆகிய பகுதிகளை மட்டும் உயர்த்திய நிலையில் ஒரு நிமிடம் வரை இருக்க வேண்டும்.

பலன்கள்

வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பு குறையும். தோள்பட்டை வலுவடையும். கால் தசைகள் இறுகும். முதுகுத்தண்டு நேராகும். உடல் வலுப்பெறும்.

ஹாரிஸான்ட்டல் ப்ளாங்க் (Horizontal Plank)

முழங்கை மற்றும் கால் விரல்களை ஊன்றி, முட்டிப் போடும் நிலையில், இடது முட்டியை மடக்கி, உடலை நேராக வைத்து கொண்டு அதேநேரத்தில், இரண்டு கால்களையும் பின்புறமாக நீட்டி, முழு உடலின் எடையையும் கை மற்றும் கால்கள் தாங்குவதுபோல ஊன்றிய நிலையில் ஒரு நிமிடம் வரை இருக்க வேண்டும்.

பலன்கள்

முதுகுத் தண்டுவடம் வலிமையாகும். இடுப்பு பகுதியில் உள்ள கொழுப்பு குறையும். கைகால்கள் வலுப்பெறும். உடலின் சமநிலை மேம்படும்.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
NKS-Ketha-04-11-2021
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா