Untitled Document
April 25, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
நீண்ட காலம் வாழ உதவும் கோப்பி: - ஆய்வில் தகவல்
[Monday 2017-07-17 08:00]

நாளொன்றுக்கு மூன்று கப் காபி அருந்துவது நீங்கள் நீண்ட காலம் வாழ உதவலாம் என்று 10 ஐரோப்பிய நாடுகளில் ஏறத்தாழ அரை மில்லியன் மக்களிடையே நடத்தப்பட்ட ஆய்வு கூறுகிறது. உள்மருந்துக்கான வருடாந்திர இதழில் பிரசுரிக்கப்பட்ட அந்த ஆய்வில், காஃபின் நீக்கப்பட்டிருந்தாலும் கூட, கூடுதலாக ஒரு கப் காபி, ஒருவரின் ஆயுளை அதிகரிக்கலாம் என யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதை காபி அருந்துபவர்கள் கடைப்பிடிக்கும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை என்று கூறலாமே தவிர, காபியில் பாதுகாப்பு விளைவு உள்ளதாகக் குறிப்பிடுவது சாத்தியமற்றது என நிச்சயமாகக் கூறலாம் என்று சந்தேகத்துடன் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.எனவே, கூடுதலாக ஒரு கப் காபிக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

புதிய ஆய்வு கூறுவது என்ன?

அதிகமாக காபி அருந்துவது, மரணம் நேருவதற்கான குறைந்த ஆபத்துடன் தொடர்புபடுத்தப்படுகிறது என்றும் குறிப்பாக இதய நோய்கள் மற்றும் குடல் நோய்களுடன் உள்ளவர்களுக்கு இது பொருந்தும் என்று புற்று நோய் ஆராய்ச்சிக்கான சர்வதேச முகமை மற்றும் லண்டன் இம்பீரியல் கல்லூரியின் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.ஐரோப்பிய யூனியனில் உள்ள பத்து நாடுகளைச் சேர்ந்த 35 வயதுக்கும் அதிகமான ஆரோக்கியமாக வாழும் மக்களிடம் நடத்தப்பட்ட ஆய்வுகளின் தரவுக்கு பிறகு, இந்த முடிவுக்கு ஆராய்ச்சியாளர்கள் வந்துள்ளனர்.

ஆய்வின் தொடக்கத்தில் எவ்வளவு காபி குடிக்கின்றனர் என்று அந்த மக்களிடம் ஆய்வாளர்கள் கேட்டனர். பிறகு, அவர்களில் சராசரியாக 16 ஆண்டுகளில் ஏற்பட்ட மரணங்களை அனுமானித்தனர்.பொதுமக்களால் உணரப்படும் ஆபத்து பற்றி ஆய்வு செய்த பிறகு, காபியால் மரணங்கள் குறைவதாக மதிப்பிட்டால், தினமும் கூடுதலாக காபி குடிப்பதால் ஒருவரின் ஆயுள் சுமார் மூன்று மாதங்களும் ஒரு பெண்ணின் ஆயுள் சராசரியாக ஒரு மாதமும் அதிகமாகலாம் என்கிறார் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக பேராசிரியர் சர் டேவிட் ஸ்பீக்ஹால்டர்.

ஆனால், இதுபோன்ற ஆய்வு அளவு கோல் இருந்தாலும், காபி கொட்டைகளை மாயாஜால மூலப்பொருள் என்பதை மிகச்சரியாக அர்த்தம் கொள்ள முடியாது. அதை நிரூபிக்கவும் இயலாது என்கிறார் அவர்.எதற்காக நீங்கள் அவசரப்பட்டு, அதிக காபியை வாங்க வேண்டும்?இந்த கண்பிடிப்புகள், அவை முதலில் தோன்றியது போல மிகத் தெளிவாக இல்லை என்பது காபி பிரியர்களை விரக்தியடையச் செய்யலாம்.

காபியின் விளைவுகள் மீது ஒருவரால் எந்த அளவுக்கு நிச்சயத்தன்மையுடன் இருக்க முடியும் போன்ற ஒவ்வொரு காரணியையும் கவனத்தில் கொள்ள ஆய்வுகளால் முடியவில்லை என்பது ஒரு காரணம்.உதாரணமாக, காபி அருந்தாதவர்களுடன் ஒப்பிடும்போது, காபி அருந்துபவர்கள் அடைந்த ஆதாயம் என்ன என்பதை அந்த ஆய்வு ஆராயவில்லை.நாளொன்றுக்கு மூன்று கப் காபி வாங்க முடிபவர் பணக்காரராக இருக்கலாம். மேலும், அந்த கூடுதல் பணம், சில வழியில் அவர்களின் சுகாதாரத்தை பாதுகாக்க உதவலாம்.

மூன்று கப் காபி அருந்துவோர், சமூக பழக்க வழக்கங்களுக்காக கூடுதல் நேரத்தை செலவிடலாம் மற்றும் அதன் பலனாக தங்கள் நலனை அவர்கள் மேம்படுத்திக் கொள்ளலாம். ஒருவேளை இதற்கு காபிதான் பொறுப்பு என்றும் அதனால் ஒவ்வொரு ஆபத்தும் மேம்படவில்லை என்றும் அவர்கள் நிச்சயமாக இருந்திருக்கலாம்.உதாரணமாக, அதிகமாக காபி அருந்துவது பெண்களிடையே கருப்பை புற்றுநோய் அதிகரிக்கும் விகிதத்துடன் தொடர்புபடுத்தப்படுவதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.இருப்பினும், ஆய்வில் ஏராளமானோர் உட்படுத்தப்பட்டிருந்தாலும், தொடக்கத்திலேயே நீரிழிவு நோயாளிகள், இதய நோயாளிகள் அல்லது மாரடைப்பு ஏற்பட்டவர்களை ஆராய்ச்சியாளர்கள் விலக்கி விட்டனர்.

எனவே, உடல் நலமில்லா மக்கள் காபி அருந்துவதால் ஏற்படும் ஆபத்துகளையும் பலன்களையும் பற்றி அந்த ஆய்வு பெரிதாகக் கூறவில்லை.அதனால் வழக்கமான பானங்களை அருந்தும்போது சில பேர் உடல் சுகவீனம் அடைந்திருக்கவும் வாய்ப்புள்ளது. காபி உங்களுக்கு நல்லதா?

முந்தைய ஆய்வுகள் முரண்பட்ட மற்றும் மாறுபட்ட முடிவுகளை தெரிவித்துள்ளன.காஃபின் கலந்த பானங்கள், தற்காலிகமாக தங்களை விழிப்புடன்உணரச் செய்வதாக பல பேருடைய அனுபவம் கூறுகிறது.ஆனால், காஃபின் பிறரை விட சில பேரை பாதிப்பதாகவும் அந்த பாதிப்பு ஒருவருக்கொருவர் வேறுபடுகிறது என்றும் ஆய்வு கூறுகிறது.தேசிய சுகாதார சேவை நிபுணர்கள், பொதுப்படையான மக்கள்தொகையில் எவ்வளவு காபி அருந்த வேண்டும் என்பதற்கான வரம்பை நிர்ணயிக்கவில்லை. ஆனால், கர்ப்பிணி பெண்கள் தினமும் 200 மில்லி கிராம் காஃபினுக்கு மேல் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும் என அவர்கள் கூறுகின்றனர்.

காபி அதிகமாக அருந்துவதால் குழந்தை சிறியதாக பிறக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது என்பதால் அவர்கள் இவ்வாறு கூறுகின்றனர்.அதிகப்படியான கேஃபைன், கருச்சிதைவுக்கான ஆபத்தை அதிகம் விளைவிக்கலாம் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர். காஃபின் என்பது காபியில் மட்டுமல்ல. இரண்டு குவளை தேநீர் மற்றும் ஒரு கேன் கோலா அல்லது உதாரணமாக, இரண்டு கப் உடனடி காபி போன்றவற்றை அருந்துவதாலும், 200 மில்லி கிராம் கேஃபைன் அளவை நாம் எட்டி விட முடியும்.

அண்மையில் அமெரிக்காவை சேர்ந்த பருவ வயதுடைய ஒருவர், அளவுக்கு அதிகமான காஃபின் கலந்த பானங்களை வேகமாக அருந்தியதால் உயிரிழந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. காபியால் உங்களால் நீண்ட காலம் உயிர் வாழ முடியும் என நம்மால் எவ்வாறு நிச்சயமாக இருக்க முடியும்? உலகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான மக்களிடையே காபி அருந்துவதை கட்டாய வழக்கமாக்கியும், மேலும் சில ஆயிரக்கணக்கான மக்களை காபி அருந்துவதில் இருந்து தவிர்க்கச் செய்தும், காபியால் நீண்ட காலம் உயிர் வாழச் செய்ய முடியுமா என மிகக் கடுமையான அறிவியல் வழியில் ஆய்வு செய்ய வேண்டும். பிறகு ஒவ்வொருவரின் வாழ்வையும் விஞ்ஞானிகள் கண்காணிக்க வேண்டும்.

உதாரணமாக அவர்கள் என்ன சாப்பிட்டனர் மற்றும் குடித்தனர், அதனால் என்ன பலன் கிடைத்தது, எவ்வளவு உடற்பயிற்சி செய்தனர் போன்றவற்றை ஆராய வேண்டும். அத்தகைய ஆய்வு நடைபெறுவதற்கான சாத்தியமே இல்லை. எனவே, தற்போதைக்கு காபி குடிப்பதால் உங்களுக்கு நல்லது ஏற்படுமா என பந்தயம் கட்டுவதற்கு பதிலாக, உங்கள் ஆயுளை நீட்டிக்க - நீங்கள் காபி குடிக்கவோ அல்லது குடிக்காமல் இருப்பதற்காகவோ, அருகே உள்ள காபி கடை வரை விறுவிறுப்பான 20 நமிட நடை பயிற்சியை மேற்கொள்ளுங்கள்

  
  
   Bookmark and Share Seithy.com


Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
Karan Remax-2010
Ambikajewellers-01-08-2021-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா