Untitled Document
April 16, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
ஈழத்து நூலகங்களுக்குத் தமிழகத்தின் நூல்கொடை: Top News
[Monday 2017-07-24 18:00]

தமிழகப் பதிப்பகங்களிடம் இருந்து ஒவ்வொரு நூலிலும் ஏறத்தாழ 1000 படிகளை விலைக்கு வாங்கித் தமிழக நூலகங்களுக்கு ஆண்டுதோறும் தமிழக அரசு வழங்குகிறது. இதற்காககத் தமிழக மக்கள் வரி கொடுக்கிறார்கள். உலகெங்கும் தமிழர் வாழும் நாடுகளில் உள்ள நூலகங்களுக்கும் 100 படிகள் சேர்த்து வாங்குக அவர்களுக்கு அனுப்புக என நான் தொடர்ச்சியாகத் தமிழக அரசைக் கேட்டுவந்துள்ளேன்.

என் அருமை நண்பர் தமிழ்க்குடிமகன் அமைச்சராக இருந்த காலத்தில் யேர்மன் நாட்டுத் தமிழ்ழக் கழகம் ஒன்றிற்கு இசைக் கருவிகள் நூல்கள் என்பன என் வேண்டுகோளை ஏற்றுக் கொடுத்தார்.

முதலமைச்சர் செயலலிதா அம்மையார் என் வேண்டுகோளை ஏற்று இணுவில் பொது நூலகத்துக்கு இலங்கை ரூபாய் 15 இலட்சம் பெறுமதியான நூல்களை நன்கொடையாகத் தந்தார். அத்துடன் பேரா. அ.ச. ஞானசம்பந்தன், பேரா. பனசை நக்கீரன், பேரா. அரங்க இராமலிங்கம், கவிஞர் ஏர்வாடி இராதாகிருட்டிணன், ஆகியோரும் பெருமளவு எண்ணிக்கையில் இணுவில் பொது நூலகத்துக்காக என்னிடம் தந்தனர். அவை யாவும் இப்பொழுது இணுவிலில்.

16.6.2017 சட்டசபையில் உலகத் தமிழர் நூல்கங்களுக்குத் தமிழக அரசு நூல்களை அனுப்பும் எனச் சட்டசபையில் பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார். இக்கருத்தை வலியுறுத்தி வந்த நான், 14.7.17 காலை கல்வி அமைச்சர் செங்கோட்டையனை நேரில் சென்று வாழ்த்தினேன். பள்ளிக் கல்விச் செயலாளர் உதயச்சந்திரனையும் நேரில் சென்று வாழ்த்தினேன். படங்கள் பார்க்க.

தமிழகத்தில் 1981 தொடக்கம் இலங்கை நூலகங்களுக்காகத்தமிழகத்தில் நூல்களைச் சேர்த்தவர்கள் பலர். பாதுகாப்பு வந்ததும் நூல்களை அனுப்புவோம் எனச் சேகரித்த நூல்களை வைத்திருந்தனர். கிளிநொச்சிக்கும் அவர்களுட் சிலர் நூல்களை அனுப்பி இருந்தனர்.

இலங்கை நூலகங்களுக்கு நூல்கள் தமிழகத்தில் இருந்து அனுப்பத் தமிழக அரசுடன் இணைந்து திரு. விஜி சந்தோசம் அண்ணாச்சி செயற்படுகிறார்.கடந்த வாரம் அவர் தமிழக முதலமைச்சரைச் சந்தித்து இது தொடர்பாகப் பாராட்டி வாழ்த்தினார்.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா