Untitled Document
March 29, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
துளசி செடியை இந்தியர்கள் சுற்றி வருவதற்கான அறிவியல் காரணங்கள்
[Friday 2017-08-04 08:00]

நாம் இந்தியாவில் பாரம்பரியமாக செய்து வரும் சில தெய்வ சடங்குகள் அதிக நன்மைகளை தருவதாக இருக்கின்றன. இவை நமது ஒழுக்கத்தை மேம்படுத்துவதோடு மட்டுமில்லாமல், நமது ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவியாக இருக்கின்றன. இதில் நாம் காலம் காலமாக துளசி செடியை சுற்றி வந்து வணங்குவதை வழக்கமாக கொண்டிருக்கிறோம். அதற்கு என்ன காரணம் என்ன என்பது உங்களுக்கு தெரியுமா?

இந்த பகுதியில் நாம் துளசி செடியை ஏன் சுற்றி வருகிறோம் என்பதற்கான காரணங்களையும், அதன் பின் உள்ள அறிவியல் உண்மைகளையும் பற்றி தெரிந்து கொள்வோம்.

மருத்துவ குணம்:

செடியின் அனைத்துப் பாகங்களும் மருத்துவக் குணம் கொண்டவை. இது கோவில் பூசைகளில்அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. அதுவும் பெருமாள் கோயில்களில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இதனால் கோயிற் பூந்தோட்டங்களில் வழக்கமாகக் காணப்படுகிறது.

வீடுகளில் துளசி செடி

பலரது வீடுகளில் துளசி செடி வளர்க்கப்படுகிறது. துளசி செடிக்கு விளக்கேற்றி, மஞ்சள், குங்குமம் வைத்து பூஜை செய்யும் வழக்கம் உள்ளது. வீடுகள் மற்றும் கோவில்களின் முற்றங்களில் துளசி செடி வளர்க்கப்படுகிறது. அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததா என கேட்கீறீர்களா? ஆம் துளசி செடியில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன.

சக்தி வாய்ந்தது

தாவர இனங்களில் துளசி மிகவும் மருத்துவ சக்தி வாய்ந்தது. பொதுவாக தாவரங்கள் காற்றில் உள்ள கார்பன்டை ஆக்சைடை எடுத்துக்கொண்டு ஆக்ஸிஜனை வெளியிடும். இதில் துளசிச் செடி மற்ற தாவரங்களை விட மிக அதிகமாக, ஆக்ஸிஜனை வெளியிடும் தன்மை கொண்டது. சுற்றுச்சூழலில் உள்ள காற்று மண்டலத்தையே, சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது.

அதிகாலையில் சுற்றி வருதல்

இந்துக்கள் அதிகாலையில் துளசி செடியை சுற்றி வந்து வழிபடும் முறையை வைத்துள்ளனர். அதிகாலை மூன்று மணி முதல், ஐந்து மணி வரை பிரம்ம முகூர்த்தம் என்று சொல்வார்கள். இந்த வேளையில் தான், இயற்கையின் அத்தனை அம்சங்களும் மிகவும் புதிதாகச் சுத்திகரிக்கப்பட்டதைப் போல் இருக்கும்.

ஓசோன் அதிகமாக இருக்கும் நேரம்

இந்த அதிகாலை நேரத்தை தான் ஓசோன் அதிகமிருக்கும் நேரம் என அறிவியல் அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். இயற்கையாகவே, காற்றில் ஆக்ஸிஜன் அதிகமாக இருக்கும் நேரமான அதிகாலை வேளையில், துளசிச் செடியைச் சுற்றி வந்தால் பரிசுத்தமான ஆக்ஸிஜனை சுவாசிக்கலாம் என்பது இதன் சாராம்சம்.

துளசி இல்லா மருத்துவமா?

மருத்துவத்தில் துளசிக்கு மிக முக்கிய இடம் உண்டு. துளசி இல்லாத ஆயுர்வேத் மற்றும் சித்த மருத்துவமே கிடையாது. குழந்தைகளின் சளி, இருமல் பிரச்னைகளுக்கு, துளசி போல் சிறந்த மருந்து கிடையாது. துளசி இலைகளை நசுக்கி பிழிந்து, இஞ்சிச்சாறு, தேனுடன் கலந்து கொடுத்தால், நெஞ்சு கபம் காணாமல் போய் விடும்.

சம்பிரதாயம்

பல மருத்துவ குணங்களை கொண்ட அற்புதச் செடியின் பயங்களை மக்கள் அனுபவிக்க வேண்டும் என்பதற்காகவே ஒரு வாழிபாட்டு சம்பிரதாயம் கடைபிடிக்கப்படுகிறது.

எந்த திசையில் வைக்கணும்?

துளசியை கிழக்கு திசையில், தரைமட்டத்தில் வைத்தால், பெண்களின் ஆரோக்கியம் நன்கு அமையும். வடக்குப் பக்கம் தாழ்வாக இருந்து, அங்கே துளசி மாடத்தை வைத்தாலும் நற்பலனே. துளசி மாடம் வீட்டு வாசலுக்குக் குத்தலாக அமையக்கூடாது.

ஆயுள் நீடிக்கும்

ஆண்டு முழுவதும் பசுமையாக இருக்கும் மரங்களை வைத்து, வீட்டினுள் வளர்த்தால் ஆயுள் நீடிக்கும். இலை உதிர்க்கும் மரங்கள் ஓரளவுதான் நற்பலனை கொடுக்கும். சில மாதங்கள் மட்டுமே வாழக்கூடிய மரங்களை வளர்க்காமல் இருப்பது நல்லது. கூர்மையான ஊசியிலை கொண்ட காட்டு மரங்களை, வீட்டைச் சுற்றிலும் வளர்க்கக்கூடாது.

  
  
   Bookmark and Share Seithy.com



கிரீன் டீ குடிப்பதால் உடலில் ஏற்படும் பக்க விளைவுகள் என்னனு தெரியுமா?
[Wednesday 2024-03-27 18:00]

பெரும்பாலானோர் இந்த கால கட்டத்தில் கிரீன் டீ குடிப்பதை பழக்கமாக்கி வைத்துள்ளனர். இந்த டீயை குடிப்பதால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்பது ஒரு பக்கமாக இருக்க இதனால் பக்க விளைவுகளும் வருகின்றது. உலகளாவிய ரீதியில் கிரீன் டீ குடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்த டீ உடல் எடையை கட்டப்படுத்த நினைப்பவர்கள் தான் அதிகமாக குடிக்கின்றனர்.



உணவில் நல்லெண்ணெய் சேர்க்க வேண்டியதன் அவசியம் தெரியுமா?
[Tuesday 2024-03-26 18:00]

தென்னிந்திய சமையலில் நல்லெண்ணெய்க்கு முக்கிய இடம் கொடுக்கப்படுகின்றது. மற்ற எண்ணெய்களை விட, நல்லெண்ணெய் மிகவும் லேசாக இருப்பதால் இதனை உணவில் சேர்த்து சாப்பிடும் போது செரிமான அமைப்பு சீராக செயற்படுவதாக ஆய்வு ததகவல்கள் குறிப்பிடுகின்றது. அதில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. நல்லெண்ணெயில் சீசேமோல் எனும் பொருள் நிறைந்துள்ளது.இது இதய ஆரோக்கியத்தை காப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.



உடல் அலுப்பை போக்கும் ஆட்டுக்கால் பாயா!
[Sunday 2024-03-24 18:00]

தென்னிந்தியாவில் அதிகம் விரும்பப்படும் உணவுகளில் ஒன்று தான் ஆட்டுக்கால் பாயா. இது பெரும்பாலும் காலை உணவாக இடியாப்பம், அப்பம் உடன் சாப்பிடப்படுகிறது. இதை எப்படி இலகுவாகவும் சுவையாகவும் வீட்டிலேயே செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.



செட்டிநாடு ஸ்டைலில் மட்டன் குழம்பு செய்வது எப்படி?
[Saturday 2024-03-23 18:00]

பொதுவாகவே அசைவ உணவு விரும்புவோரின் பட்டயலில் மட்டம் முக்கிய இடம்பிடித்துவிடும். மட்டன் குழப்பு பிக்காதவர்களும் கூட செட்டிநாடு மட்டன் குழம்பின் மலாலா மணம் மற்றும் சுவைக்கு அடியாமையாகி விடுவார்கள். ஆனால் செட்டிநாடு மட்டன் குழம்பு செய்வது பலருக்கும் கடினமான விடயமாகவே இருக்கின்றது. காரணம் அது மிகவும் துல்லியமான செய்முறை மற்றும் பிரத்யேகமான மசாலா தூள் கொண்டது. ஆனால் அதன் சுவைக்கு வேறு எதுவும் ஈடு இணை இல்லை என்றால் மிகையாகாது.



நோன்பு திறக்க முதலில் பேரீட்சை பழங்களை சாப்பிடுவதன் ரகசியம் தெரியுமா?
[Friday 2024-03-22 18:00]

பொதுவாகவே ரமழான் மாதம் முஸ்லிம் மக்களால் மிகவும் புனிதமாக மாதமாக கருதப்படுகின்றது. இந்த மாதத்தில் செய்யும் நன்மை தீமைகளுக்கு இரட்டிப்பபு பலன் கிடைப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த மாதம் முழுவதும் சூரிய உதயத்துக்கு முன்னர் நோன்பை ஆரம்பித்து சூரிய அஸ்தமன நேரத்தில் முடித்துக் கொள்ளும் வழக்கம் பின்பற்றப்படுகின்றது. இந்த புனித மாதத்தில் ஒவ்வொரு நாளும் இறைவனை நினைத்து தினசரி சிறப்புத் தொழுகைகள் மேற்கொள்ளப்படுகின்றது.



நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நெல்லிக்காய் ஊறுகாய்!
[Thursday 2024-03-21 18:00]

நெல்லியானது நம் உடலில் இருக்கும் பல விதமான நோய்களை தீர்க்கும் பல சக்திகளைக் கொண்டுள்ளது. நெல்லிக்காயில் விட்டமின் சி, விட்டமின் ஏ, அயன், கல்சியம், மெக்னீசியம் போன்றன சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேதம் போன்ற மருத்துவ முறைகளில் நெல்லிக்காய் முக்கிய இடம் வகிக்கின்றது. அளப்பரிய மருத்துவ குணங்கள் நிறைந்த நெல்லிக்காய் ஊறுக்காய் எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.



பெண்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் என்னனு தெரியுமா?
[Tuesday 2024-03-19 15:00]

இந்த அவசரமான கால கட்டத்தில் ஆண்களை விட பெண்களே அதிக வேலை செய்பவர்களாக காணப்படுகின்றனர். வீட்டையும் பார்க்க வேண்டும் குழந்தைகளையும் பார்க்க வேண்டும் வெளியிலும் வேலை செய்ய வேண்டும். இந்த பரபரப்பான வாழ்க்கை சூழலில் பெண்கள் தங்கள் உடல்நலனில் அக்கறை செலுத்த மறந்து விடுகின்றனர்.



டாபர்மேன் நாய்களின் வால்கள் ஏன் வெட்டப்படுகிறது தெரியுமா?
[Monday 2024-03-18 18:00]

பொதுவாக நாம் நமது வீடுகளில் செல்லப்பிராணிகளை வளர்க்கிறோம். அந்த செல்லப்பிராணிகளில் அநேகமானோரின் வீட்டில் இருக்கும் பிராணி நாய் தான். நாய்களில் பல வகையான நாய்கள் உள்ளது. அந்த வகையில் டாபர்மேன் எனும் ஒரு நாய் இனம் உள்ளது. இந்த நாய் இனத்தின் வால்கள் ஏன் வெட்டப்படுகிறது என்பதை இந்த பதில் தெரிந்து கொள்ளலாம்.



மின்மினி பூச்சி ஏன் ஒளிர்கிறது தெரியுமா?
[Sunday 2024-03-17 18:00]

பொதுவாக மின்மினி பூச்சிகள் வெயில் காலங்களில் வெளிப்புற இடங்களில் நிலா ஒளியில் ஒளிர்ந்து திரிவதை எல்லோரும் பார்த்திருப்பீர்கள். அப்போது இந்த மின்மினி பூச்சிகள் ஏன் இப்படி ஒளிர்கிறது என்பதை எப்போதாவது சிந்தித்துள்ளீர்களா? இந்த மின்மினி பூச்சிகள் ஒளிர்வதற்கான காரணத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.



தொப்பையை குறைக்கும் அற்புத பானம்!
[Saturday 2024-03-16 18:00]

உடல் எடை என்பது ஒரு நோய் அல்ல இது நோய்களிலும் பார்க்க பெரும் பாதிப்பை ஏற்படுத்த கூடியதாகும். இந்த தொப்பை கெட்ட கொழுப்பு உடலில் சேர்வதால் உடலின் தசைப்பகுதிகளில் படிந்து காணப்படுகின்றது. இதனால் உடலின் பருமன் கூடுகிறது. இந்த உடல் எடை மற்றும் தொப்பை பிரச்சனையால் பல பிரச்சனைகள் வரும். எனவே இந்த பதிவில் தொப்பையை குறைக்க கூடிய அன்னாசிப்பூவை எப்படி பயன்படுத்துவது என்பதை பார்க்கலாம்.



சமையலில் தேங்காய் எண்ணெய் சேர்ப்பது நல்லதா?
[Friday 2024-03-15 18:00]

தேங்காய் எண்ணெய்யை சமையலுக்கு பயன்படுத்தினால் அவை நல்லதா என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். தேங்காய் எண்ணெய் உடல்நலத்திற்கு நல்லது என்று கூறினாலும், ஆய்வுகள் அதற்கு எதிரான முடிவுகளை வைக்கின்றது. தேங்காய் எண்ணெய்யில் கொழுப்பு அமிலங்கள் அதிகமாக உள்ள நிலையில், இவை எளிதில் ஜீரணிக்கப்பட்டு நமக்கு தேவையான ஆற்றலை வழங்குகின்றது.



திடீரென சிறுநீரகம் செயலிழப்பது ஏன்?
[Thursday 2024-03-14 18:00]

உடலில் காணப்படும் நச்சுப் பொருட்களை வெளியேற்றுகின்ற பிரதான தொழிலை சிறுநீரகம் மேற்கொள்கின்றது. நாம் உண்ணும் உணவிலும் எடுத்துக்கொள்ளும் மருந்து மாத்திரைகளிலும் உள்ள நச்சுப்பொருள்களும் சிறுநீர் மூலமாகவே உடவில் இருந்து வெளியேற்றப்படுகின்றது. சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்யாதபோது, உடலில் மற்ற உறுப்புக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், சில மருந்துகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சிறுநீரக பாதிப்பு ஏற்படலாம்.



நோன்பு திறக்கும் போது சாப்பிட வேண்டிய இப்தார் உணவுகள்!
[Wednesday 2024-03-13 18:00]

புனித ரமலான் மாதம் தொடங்கிவிட்டது, உலகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமியர்கள் நோன்பு நோற்கின்றனர். இம்மாதத்தில் செய்யும் நற்செயல்களுக்கான நன்மைகள் பல மடங்கு உண்டு, சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படும் மாதம் இதுவே. சூரிய உதயம் முதல் அஸ்தமனம் வரை பிரார்த்தனைகள், நன்மைகள் செய்யவும், நோன்பு நோற்கவும் செய்கிறார்கள். இந்த பதிவில் நோன்பு திறக்கும் போது அதாவது இப்தார் நேரத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள் பற்றி தெரிந்து கொள்வோம்.



கருஞ்சீரக எண்ணெயால் இவ்வளவு பயனா?
[Tuesday 2024-03-12 18:00]

கருஞ்சீரகத்தை பிளிந்து எடுக்கப்படும் எண்ணெய் தான் கருஞ்சீரக எண்ணெய். இந்த எண்ணெயில் ஆன்டி ஆக்ஷிடன்கள் நிறம்பி உள்ளது. இது சருமம் மற்றும் தலைமுடியின் ஆரோக்கியத்தை பேணுவதில் சிறப்பாக பங்கெடுக்கிறது. உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிப்பதில் இது சிறந்த எண்ணெயாகும். இந்த கருஞ்சீரக எண்ணெயை சருமத்தில் எந்தெந்த பிரச்சனைகளுக்கு பயன்படுத்தலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.



ஜப்பானியர்கள் 90 வயதை கடந்து உயிர் வாழ என்ன காரணம் தெரியுமா?
[Monday 2024-03-11 18:00]

நம்மில் பெரும்பாலான இனத்தவர்கள் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ விரும்பினாலும் தவறான உணவுப்பழக்கம் காரணமாக 60 வயதை எட்டும் போதே இறந்துவிடுகிறார்கள். இது உலக சுகாதார புள்ளியின் விபரப்படி நிரூப்பிக்கப்பட்டதாகும். ஆனால் மத்திய ஜப்பானியர்கள் 90 வயதை தாண்டி 112 மற்றும் 100 வயது வரை வாழ்வதற்கான காரணம் என்ன என்பதை இந்த பதிவில் பாாக்கலாம்.


Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
Mahesan-Remax-169515-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா