Untitled Document
April 25, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
பிரான்சில் இடம்பெற்ற மூதூர் படுகொலையின் 11 ஆவது ஆண்டு நினைவேந்தல்! Top News
[Saturday 2017-08-05 21:00]

சிறீலங்கா படைகளால் 04.08.2006 அன்று மூதூரில் படுகொலை செய்யப்பட்ட பட்டினிக்கு எதிரான அமைப்பைச் சேர்ந்த 17 பணியாளர்களின் 11 ஆவது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு நேற்று (04.08.2017) வெள்ளிக்கிழமை காலை 11.00 மணிக்கு, பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, பிரான்சு கிளிச்சி பிராங்கோ தமிழ்சங்கத்தின் ஏற்பாட்டில் கிளிச்சிப்பகுதியில் குறித்த பணியாளர்கள் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபிக்கு முன்பாக இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பொதுச்சுடரை கிளிச்சி பிராங்கோ தமிழ்ச் சங்கப் பொறுப்பாளர் திரு.குமணன் அவர்கள் ஏற்றிவைக்க ஈகைச்சுடரை பட்டினிக்கு எதிரான அமைப்பின் மூதூரில் குறித்த 17 பணியாளர்களுடன் பணியாற்றிய முன்னாள் பணியாளர் திரு.ஜெயகாந் அவர்கள் ஏற்றிவைத்தார். மலர்வணக்கத்தை Mairie de Clichy உதவி நகர பிதா Mme Viviane DIECO அவர்கள் செலுத்தினார். தொடர்ந்து நிகழ்வில் கலந்தகொண்ட அனைவரும் மலர்வணக்கம் செலுத்தினர்.

தொடர்ந்து குறித்த 17 பணியாளர்கள் தொடர்பான நினைவுரைகள் இடம்பெற்றன. நினைவுரைகளை செல்வன் மீராஜ், திரு.ஜெயகாந் (முன்னாள் பணியாளர் ACF MOOTHUR) மற்றும் ACF France இல் பணியாற்றும் உத்தியோக பூர்வ வழக்குரைஞர் ஒருவர், Mme Viviane DIECO (Mairie de Clichy), கிளிச்சி பிராங்கோ தமிழ்ச் சங்க செயலாளர் திரு. சச்சி கந்தையா, பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகப் பொறுப்பாளர் திரு. பாலசுந்தரம் ஆகியோர் ஆற்றியிருந்தனர். இவர்களுடன் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டு தமது நினைவு வணக்கத்தைச் செலுத்தியிருந்தனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா