Untitled Document
April 20, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
இருதய நோயினால் உயிருக்கு போராடிய முல்லைத்தீவு சிறுமி யதுமினா கமலதாசன் காப்பாற்றப்பட்டார்: Top News Top News
[Friday 2017-08-25 08:00]

முல்லைத்தீவு குமிழமுனை கமலதாசன்,தர்சினி தம்பதிகளின் புதல்வி யதுமினாவுக்கு இருதயத்தில் ஓட்டை இருப்பதாகவும் அதற்கு உடனடி அறுவை சிகிச்சை அவசியம் என்றும் வைத்திய அதிகாரி தெரிவிருத்திருந்த நிலையில் கூலித்தொழில் செய்து அன்றாட வாழ்க்கையை ஓட்டி வந்த இவர்கள் செய்வதறியாது தவித்த நிலையில் கனடாவை சேர்ந்த நிவாரணம் செந்தில் குமரன் ஊடாக முழு செலவும் பொறுப்பேற்கப்பட்டு சத்திரசிகிச்சை கடந்த வாரம் கொழும்பு ஆசிரி மருத்துவமனையில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. 7 வயது சிறுமி யதுமினாவும் அவரது தாயார் தர்சினி அவர்களும் இவ் உயிர்காப்பு சத்திரசிகிச்சைக்கு உதவிய கனேடிய தமிழ் சமூகத்திற்கு தமது நன்றியை தெரிவித்துள்ளனர்.

இறுதியாக இடம்பெற்ற அவசர சத்திரசிகிச்சை பற்றிய காணொளி (காணொளி படங்கள் இணைப்பு )

(அவர்களுடைய மருத்துவ சான்றிதழ்,படங்கள் மற்றும் செலவு போன்றவற்றின் ஆதாரங்கள் பற்றுசீட்டுகள் இணைப்பு)

"காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது" என்பது வள்ளுவன் வாக்கு அவ்வாறு காலம் தவறினால் உயிரை பறிகொடுக்க கூடிய பல நோயாளர்கள் தமிழர் தாயக பிரதேசங்களில் தமது இருதய அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கிறார்கள் என மருத்துவ நிபுணர்களின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

காத்திருப்பு நேரம் அதிகரித்து அதனால் உயிரைமாய்த் துகொண்டோர் பட்டியல் நீள்கிறது. குறிப்பிட்ட சில மருத்துவர்கள் மனம் இருந்தும் பொருளாதாரம் வேண்டி செய்வதறியாது திண்டாடும் நிலை தமிழர் தாயக பிரதேசங்களில் காணப்படுகிறது. இவற்றுக்கு தீர்வு தான் என்ன ?

இது அரசியல் பேசும் நேரம் அல்ல செயல்பாடெதுவும் இன்றி வெற்று கதைகள் பேசி விமர்சனம் செய்யும் சிலர் பரப்பும் வதந்திகள் உண்மை இலக்கை அடைய ஒருபோதும் தடையாகாது.

ஆம் வெளிப்படைத்தன்மையோடு கடந்த 2004 ஆண்டு சுனாமிக்கு வழங்கிய நிவாரணம் முதல் இன்றுவரை செயல்திறன் மிக்க செயல்பாடுகளால் தாயக மக்களின் உயிர்காப்பு திட்டத்தில் நிவாரணம் அமைப்பு இயங்கி வருகிறது

"முழு நிதி சேகரிப்பு செலவும் தனதே,முழு நிதி வரவும் நிவாரண பணிகளுக்கே "என்று இயங்கும் செந்தில் குமரனின் பாணி வித்தியாசமானது, பல அமைப்புகளுக்கும் முன்னுதாரணமானது .

"வரவு எட்டணா செலவு பத்தணா என்று இயங்கும் சில அமைப்புக்களின் மத்தியில் நிவாரணம் அமைப்பின் செயல்திறன் மிக்க அணுகு முறை பலராலும் வரவேற்கப்படுகிறது .

நிவாரணம் செந்தில் குமரனின் இவ் திட்டத்தினூடாக இதுவரை 24 சத்திரசிகிச்சைகள் நடைபெற்று 24 உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.இதற்காக பல நிகழ்வுகள் ,வேல் வேல் பாடல் வெளியீடு ,பொது இடங்களில் நிதி சேகரிப்பு என இரவு பகல் பாராமல் செந்தில்குமரனோடு அவரது நண்பர்கள் பலரும் இணைந்து சேவையாற்றிவருகின்றனர் .

திரு திருமதி கமலதாசனின் பிள்ளைக்கு மறுவாழ்வு கொடுத்த ஆண்டவன் கனேடிய தமிழ் சமூகத்தின் மூலமாக உதவியிருக்கிறார் எனலாம்.

இதுபோன்று ஒவ்வொரு உயிரையும் காப்போம்

பரமேஸ்வரன் என்பவர் சில மாதங்களுக்கு முன் உதவி கோரிய நிலையில் உரியநேரத்தில் சத்திர சிகிச்சை செய்ய பணம் இல்லாத நிலையில் அவர் இவ் உலகை விட்டு விடைபெற்றதை நாம் மறக்கமுடியாது.அதனை ஒரு பாடமாக எடுத்து ஒளிமயமான பாதையில் தொடர்ந்து பயணிப்போம்.

நீங்கள் உங்கள் நிதி பங்களிப்பை பல வழிகளிலும் வழங்கலாம்

விபரங்களுக்கு - click here for details ..www.heartsforhumanity.ca

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Remax-169515-Seithy
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா