Untitled Document
December 18, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
யார் டோனி? - லட்சுமிராய் பதிலால் பரபரப்பு
[Tuesday 2017-09-19 15:00]

இந்திய கிரிக்கெட் அணியின் மாஜி கேப்டன் டோனி உலக அளவில் பிரபலமாகி பல சாதனைகளை படைத்திருக்கிறார். அவரது வாழ்க்கை வரலாறு திரைப்படமானது. முன்னதாக கடந்த 2008ம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்தார் டோனி. அப்போது அந்த அணியின் தூதராக இருந்தார் நடிகை லட்சுமி ராய். அப்போது இருவருக்கும் நட்பு ஏற்பட்டது. சில இடங்களில் அவர்களை ஜோடியாக பார்க்க முடிந்தது. டோனி, லட்சுமிராய் காதலிப்பதாகவும் தகவல் பரவியது. திடீரென்று அவர்கள் பிரிந்தனர். அதற்கான காரணம் தெரியவில்லை.

டோனியின் வாழ்க்கை வரலாறு படம் உருவாகி திரைக்கு வந்தபோது, அப்படத்தில் தன்னுடைய கதாபாத்திரம் படத்தில் இடம்பெறவில்லையே என்று அங்கலாய்த்தார் லட்சுமிராய். தற்போது இந்தியில், ‘ஜூலி 2’ம் பாகத்தில் நடித்துள்ளார். மும்பையில் நடந்த அதன் புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற லட்சுமிராயிடம் ஒரு நிருபர்,’டோனியுடன் உங்கள் உறவு பற்றி கூறுங்கள்’ என்றார். அதற்கு லட்சுமி ராய், ‘ஹு இஸ் ஹீ’ (யார் அவர்) என்றார். அவரது பதிலை கேட்டதும் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பிறகு பதிலை தொடர்ந்த லட்சுமிராய்,’கடந்த காலத்தில் நடந்த சிலவற்றை நிகழ்காலத்தில் எண்ணாமல் விட்டுவிடுவதுதான் நல்லது. என்னைப் பொறுத்தவரை அதெல்லாம் முடிந்த கதை. அதற்குள் விரிவாக செல்ல விரும்பவில்லை. அவர் (டோனி) மீது எனக்கு நல்ல மரியாதை இருக்கிறது’ என்றார்.

  
  
   Bookmark and Share Seithy.com



தனது வருங்கால மனைவி எப்படி இருக்க வேண்டும்: - மனம்திறந்த பிரபாஸ்
[Saturday 2017-12-16 18:00]

பாகுபலி படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமாகி இருக்கும் பிரபாஸ் தனது வருங்கால மனைவி எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து மனம் திறந்திருக்கிறார். பாகுபலி நாயகன் பிரபாசும் உடன் நடித்த அனுஷ்காவும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று பேசப்பட்டது. ஆனால் அதை இருவரும் மறுத்தனர். என்றாலும் அந்த எதிர்பார்ப்பு நீடிக்கிறது.



அன்பும் விளையாட்டும் நிறைந்தவர் ஆர்யா: - சாயிஷா
[Saturday 2017-12-16 18:00]

ஸ்டூடியோகிரீன் ஞானவேல்ராஜா தயாரிப்பில் ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘கஜினிகாந்த்’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் - சாயிஷா, ஆர்யாவை விளையாட்டும், அன்பும் நிறைந்தவர் என்று கூறியிருக்கிறார்.ஸ்டூடியோகிரீன் ஞானவேல்ராஜா தயாரிப்பில் ஆர்யா நடிக்கும் படம் ‘கஜினிகாந்த்’. ‘ஹரிஹர மகாதேவி’ படத்தை இயக்கிய சந்தோஷ் பி.ஜெயக்குமார் இதை இயக்குகிறார்.



நடிகை சன்னிலியோன் நடனத்துக்கு தடை விதித்த கர்நாடக அரசு!
[Saturday 2017-12-16 18:00]

பெங்களூருவில் நடைபெற இருந்த நடிகை சன்னிலியோன் நடனத்துக்கு கர்நாடக அரசு தடை விதித்துள்ளது.ஆபாச பட நடிகையான சன்னிலியோன் இந்தி படங்களில் நடித்து வருகிறார். ‘வடகறி’ என்ற தமிழ் படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடினார். தற்போது இன்னொரு தமிழ் படத்தில் கதாநாயகியாக நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார்.



உடல் எடையை கூட்ட சொன்ன இயக்குனருக்கு மறுப்பு தெரிவித்த நடிகை கீர்த்தி சுரேஷ்!
[Saturday 2017-12-16 18:00]

‘மகாநதி’ படத்துக்காக உடல் எடையை கூட்ட சொன்ன இயக்குனரிடம் மறுப்பு தெரிவித்திருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழ் திரையுலகில் 1960 மற்றும் 1970-களில் புகழின் உச்சத்தில் இருந்தவர், ‘நடிகையர் திலகம்’ சாவித்ரி. இவருடைய வாழ்க்கை வரலாறு ‘மகாநதி’ என்ற பெயரில், தமிழ்-தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி வருகிறது. இதில், சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.



நான் இருந்திருந்தால் அவரது காலை உடைத்திருப்பேன்: - கங்கனா ரணாவத்
[Friday 2017-12-15 19:00]

‘சாயிரா வாசிம் இடத்தில் நான் இருந்திருந்தால், பாலியல் தொல்லை கொடுத்த நபரின் காலை உடைத்திருப்பேன்” என்று நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.நடிகர் அமீர்கானின் ‘தங்கல்’ படத்தில் அவரது மகளாக நடித்து பிரபலம் அடைந்தவர், சாயிரா வாசிம். இவர் கடந்த சனிக்கிழமை டெல்லியில் இருந்து மும்பைக்கு விமானத்தில் வந்த போது, பின் இருக்கையில் அமர்ந்திருந்த தொழில் அதிபரால் பாலியல் தொல்லைக்கு ஆளானார்.



பொங்கல் பண்டிகைக்கு வீரவிளையாட்டாக மதுரைவீரன் படம் ரிலீசாகும்: - விஜயகாந்த்
[Friday 2017-12-15 12:00]

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு வீரவிளையாட்டாக `மதுரைவீரன்' படம் ரிலீசாகும் என்று நடிகர் விஜயகாந்த் ரிலீஸ் தேதியை வெளியிட்டுள்ளார்.பொங்கல் பண்டிகைக்கு சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம், விக்ரமின் ஸ்கெட்ச் பிரபுதேவாவின் குலேபகாவலி ரிலீசாக இருப்பது உறுதியாகி இருக்கிறது. விஷால் நடிப்பில் உருவாகி வரும் இரும்புத்திரை பொங்கல் ரேசில் இருந்து விலகி குடியரசு தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



அரசியலில் குதிக்கிறாரா வரலட்சுமி சரத்குமார்?
[Friday 2017-12-15 12:00]

அரசியலில் குதிக்க போகிறதாக வந்த செய்திக்கு வரலட்சுமி சரத்குமார் விளக்கம் அளித்துள்ளார்.வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் இந்த வருடம் ‘விக்ரம் வேதா’ மற்றும் ‘சத்யா’ திரைப்படம் வெளியானது. இந்த இரண்டு படமும் வெற்றி படமாக அமைந்திருக்கிறது. இதில் சத்யா படத்தின் வெற்றி விழா பத்திரிகையாளர் சந்திப்பில் வரலட்சுமி பேசும்போது, ‘சத்யா திரைப்படத்துக்கு நல்ல விமர்சனங்களை கொடுத்த அனைத்து பத்திரிகையாளர், தொலைக்காட்சி மற்றும் இணையதள நண்பர்களுக்கு நன்றி.



விக்ரம் வேதா படத்தால் மக்களின் அன்பையும் நன்மதிப்பையும் சம்பாதித்திருக்கிறேன்: - விஜய் சேதுபதி நெகிழ்ச்சி
[Friday 2017-12-15 08:00]

புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் மாதவன் - விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி 100 நாட்களை கடந்து ஓடிக் கொண்டிருக்கும் `விக்ரம் வேதா' படம் எனது வரலாறில் முக்கிய இடத்தில் இருக்கும் என்று விஜய் சேதுபதி கூறினார்.புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் கடந்த ஜுலை 21-ஆம் தேதி வெளியாகியது.



எப்போதும் இளைஞர்களை ஊக்குவிக்க தவறுவதில்லை: - இளைய தளபதியை புகழ்ந்த சிபிராஜ்
[Friday 2017-12-15 08:00]

மிகப்பெரிய ஹீரோவாக இருந்தாலும் விஜய் அண்ணா இளைஞர்களை ஊக்குவிக்க தவறுவது இல்லை என்று நடிகர் சிபிராஜ் கூறியுள்ளார்.சிபிராஜின் சத்யா திரைப்படத்தின் வெற்றி விழா பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் நாயகன் மற்றும் தயாரிப்பாளர் சிபிராஜ், நாயகிகள் ரம்யா நம்பீசன், வரலட்சுமி சரத்குமார், இயக்குநர் பிரதீப் கிருஷ்ண மூர்த்தி, இசையமைப்பாளர் சைமன் கே கிங் மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர். சிறப்பு விருந்தினராக தயாரிப்பாளர் தனஞ்ஜெயன், இயக்குநர் அறிவழகன், ஷணம் (தெலுங்கு) திரைப்படத்தின் கதாநாயகன் அதிவிசேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.



சினிமாவில் 15 ஆண்டுகளை நிறைவு செய்த த்ரிஷா!
[Thursday 2017-12-14 15:00]

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை த்ரிஷா திரையுலகில் 15 ஆண்டுகளை தாண்டி முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.அமீர் இயக்கத்தில் கடந்த 2002-ம் ஆண்டு டிசம்பர் 13-ந் தேதி வெளியான படம் ‘மவுனம் பேசியதே’. சூர்யா நாயகனாக நடித்த இந்த படத்தில், திரிஷா நாயகியாக அறிமுகம் ஆனார்.



அடங்க மறுக்கிறாரா ஜெயம் ரவி?
[Thursday 2017-12-14 15:00]

`சங்கமித்ரா' படத்திற்கு முன்னதாக கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கவிருக்கும் புதிய படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.`டிக் டிக் டிக்' படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி அடுத்ததாக கார்த்திக் தங்வேல் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜயகுமார் தயாரிக்கும் இந்த படத்திற்கு அடங்கமறு என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.



ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்!
[Thursday 2017-12-14 08:00]

`வேலைக்காரன்', `சீமராஜா' படங்களைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக உருவாக இருக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.சிவகார்த்திகேயன் நடிப்பில் `வேலைக்காரன்' படம் வருகிற கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. மோகன் ராஜா இயக்கத்தில் சமூக பிரச்சனையை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்த படத்தில் நயன்தாரா, பகத் பாஷில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.



நாப்கினுக்கு எதிராக பிரசாரம் செய்து வரும் தியா மிர்ஸா!
[Thursday 2017-12-14 08:00]

பெண்களுக்கு மிகவும் அவசியமான விஷயம் நாப்கின். பல நடிகைகள் இதற்காக விதவிதமான விளம்பரங்களில் நடிக்கின்றனர். பல அரசு பள்ளிகளிலும் இவை மாணவிகளுக்கு இலவசமாக தரப்படுகின்றன. ஆனால் நாப்கினுக்கு எதிராக பிரசாரம் செய்து வருகிறார் தியா மிர்ஸா. ஹம் தும் அவுர் கோஸ்ட், லவ் பிரேக்அப்ஸ் ஜிந்தகி, பாபி ஜோஸ் போன்ற பல இந்தி படங்களில் நடித்ததுடன் தற்போது சஞ்சய் தத் வாழ்க்கை வரலாறு படத்திலும் நடித்து வருகிறார்.



நடிகை சுரபியின் திடீர் சோகம்!
[Thursday 2017-12-14 08:00]

கடந்த ஆண்டின் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை ‘மின்னாமினுங்குனு’ மலையாள படத்தில் நடித்த சுரபி பெற்றார். அவருக்கு சில அமைப்புகள் பாராட்டு விழா நடத்தின. கேரளாவில் சர்வதேச திரைப்பட விழா நடக்கிறது. இதில் பங்கேற்க தனக்கு அழைப்பிதழ் வரவில்லை. தர முடியுமா என மலையாள பட இயக்குனர் கமலிடம் கேட்டார். அழைப்பிதழை வீட்டுக்கு அனுப்பி வைப்பதாக அவர் பதில் அளித்தார். ஆனால் அழைப்பிதழ் வந்து சேரவில்லை. வருத்தம் அடைந்தார் சுரபி.



சம்பளத்தை குறைக்க முடிவு செய்த ஹன்சிகா!
[Wednesday 2017-12-13 16:00]

ஹன்சிகாவுக்கு கடந்த சில காலமாகவே பெரிய அளவில் படங்கள் இல்லாத சூழல் உள்ளது. இந்த இடைவெளியை பயன்படுத்தி தனது உடல் எடையை குறைக்க முடிவு செய்தவர் அதற்காக கடுமையாக உடற்பயிற்சி செய்து ஒல்லியான தோற்றத்துக்கு மாறினார். இந்நிலையில் அதர்வா நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார் ஹன்சிகா. இப்படத்தை டார்லிங் படத்தை இயக்கிய சாம் ஆண்டன் இயக்குகிறார். ஹன்சிகா தமிழில் ‘குலேபகாவலி’ படத்தில் மட்டுமே நடித்து வருகிறார்.


Tharsi-home-15-10-2016
Mahesan-Remax-169515-Seithy
SELVI-HOMES-09-02-17
Easankulasekaram-Remax-300716
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா