Untitled Document
January 22, 2018 [GMT]
  • Welcome
  • Welcome
கணனியில் இனி இதயமே பாஸ்வேர்டு!
[Monday 2017-10-09 08:00]

கம்ப்யூட்டர், லேப்-டாப், ஸ்மார்ட் போன் என்று அனைத்துக்கும் இதயத்தை ஸ்கேன் செய்து அதன் மூலம் உள்ளே செல்லும் நவீன முறையை அமெரிக்க பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஒருவரின் இதயத்தை மிகச்சிறிய அளவிலான டாப்லர் ராடார் ஸ்கேன் கருவி மூலம் ஸ்கேன் எடுக்கப்படுகிறது. சில நொடிகள் இதயத்தின் இயக்கம் கண்காணித்ததும், அதையே பாஸ்வேர்டாக பயன்படுத்தி கம்ப்யூட்டருக்குள் நுழைய முடியும். இப்படி உங்கள் இதயத்தை பாஸ்வேர்டாக வைத்துக் கொண்டால், வேறுயாரும் உங்கள் கம்ப்யூட்டரை பயன்படுத்தவே முடியாது.

இது மிகவும் பாதுகாப்பானது. ஏனெனில் ஒவ்வொருவரின் இதயமும் வேறுபட்டு அமைந்துள்ளது. இந்த நவீன முறையை நியூயார்க்கில் உள்ள யு.பி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பயோமெட்ரிக் மற்றும் பிற பாதுகாப்பு முறையைவிட இது மிகவும் சிறந்தது, துல்லியமானது என அவர்கள் தெரிவிக்கின்றனர். இதயத்தை பாஸ்வேர்டாக பயன்படுத்தும் முறை, இப்போதைக்கு கம்ப்யூட்டருக்கு மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும், எதிர்காலத்தில் ஸ்மார்ட்போன்கள், விமான நிலையங்களில் நடத்தப்படும் சோதனைகளில் பயன்படுத்த முடியும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

“நாங்கள், ஒவ்வொரு கம்ப்யூட்டரிலும் இந்த பாதுகாப்பு முறையை பயன்படுத்த உள்ளோம். ஏனெனில், ஒவ்வொருவரும் தங்களது ரகசியத்தை பாதுகாக்கவே விரும்புகின்றனர்” என்று இந்த பல்கலைக்கழக பேராசிரியர் வான்யோவ் ஜியு தெரிவித்தார். இந்த நவீன முறையில், பயன்படுத்தப்படும் ஸ்கேன் கருவி வெளியிடும் கதிர்வீச்சு அளவு, வைபையில் பயன்படுத்தப்படுவதைவிட மிகவும் குறைவானது. ஆகையால், இதனால் நமது உடல் நலத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. இது குறித்து அச்சமடைய தேவையில்லை என்றும் அவர் கூறினார். “நாம், தினமும் வைபை சுற்றுப்புற சூழலில்தான் வாழ்கிறோம். வைபை முறையை போல் இந்த நவீன முறையும் மிகவும் பாதுகாப்பானதுதான். ஸ்மார்ட்போன்களில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சு அளவில், ஒரு சதவீதத்திற்கும் குறைவான அளவே இதில் வெளிப்படும் என்பதால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது’’ என்றார்.

ஒருவரின் இதயத்தை முதல் முறையாக ஸ்கேன் செய்ய சுமார் 8 வினாடிகள் தேவைப்படுகிறது. அதன் பின்னர் தொடர்ந்து இதயத்தை கண்காணித்து கம்ப்யூட்டர் தனது நினைவாற்றலில் பதிவு செய்து கொண்டுவிடும். பிறகு எப்போது வந்து கம்ப்யூட்டர் முன் அமர்ந்தாலும் உடனே ஸ்கேன் செய்து அடையாளத்தை சரிபார்த்து அடுத்த நொடியே நுழைய அனுமதித்து விடும்.

இத்தகைய பாஸ்வேர்டு மூலம் ஒருவர் கம்ப்யூட்டரை பயன்படுத்தும்போது, அதன் பாதுகாப்பு குறித்து கவலைப்படத் தேவையில்லை. ஏனெனில் வேறு ஒருவர் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து அதை இயக்க நினைத்தால் முடியவே முடியாது. மேலும் தனது பாஸ்வேர்டை எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டிய கட்டாயமும் இல்லை. இந்த நவீன முறையை மிகவும் சிறிய அளவிலான கம்ப்யூட்டர் கீபோர்டுகளில் பயன்படுத்தவும் செல்போன்களில் பயன்படுத்தவும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விமான நிலையங்களில் ஒருவரை சுமார் 30 மீட்டர் அளவு இடைவெளியில் இருந்து அடையாளம் கண்டுபிடிக்கும் வகையில் இந்த கருவியை பயன்படுத்தலாம் என்றும் ஆய்வாளர்கள்

  
  
   Bookmark and Share Seithy.com



கண்களுக்கு சொட்டு மருந்தா?... கவனம்
[Monday 2018-01-22 13:00]

கண்களில் சொட்டு மருந்துகளைப் பயன்படுத்தும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். கண்களில் பாதிப்பு ஏற்படும்போது அதைச் சரிசெய்வதற்கு திரவ நிலையில் உள்ள சொட்டு மருந்துகளைப் பயன்படுத்துவது வழக்கமாக உள்ளது.



தனியாக இருக்கும்போது நெஞ்சுவலி ஏற்பட்டால் நீங்கள் செய்ய வேண்டியது?
[Saturday 2018-01-20 19:00]

ஒவ்வொரு முறை இருமுவதற்கு முன்னரும் மூச்சை இழுத்து விட வேண்டும். இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும்.இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையிலோ அல்லது வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இருமிக்கொண்டே இருக்க வேண்டும்.



அரிப்பு ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள்
[Saturday 2018-01-20 18:00]

அரிப்பு என்பது ஒவ்வாமையின் வெளிப்பாடு. பெரும்பாலான நேரம் அரிப்பை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. பொது இடம் என்றுகூடப் பார்க்காமல் சொறியத் தொடங்கிவிடுவோம். அரிப்பு ஏற்படுவதற்குக் காரணங்கள் அநேகம். என்றாலும், இவற்றை இரண்டே இரண்டு பிரிவுகளில் அடக்கி வைத்திருக்கிறது, மருத்துவம். உடலின் வெளியிலிருந்து வருவது ஒரு வகை. உடலுக்குள்ளேயே இருப்பது அடுத்த வகை.



முகத்தை அழகாக்கிக் காட்டும் Beauty App அறிமுகம்
[Saturday 2018-01-20 18:00]

முகத்தை அழகாக்கிக் காட்டும் கைபேசி செயலிகள் உலகம் முழுவதும் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், வட கொரியாவில் முதன்முறையாக போம்ஹயங்கி 1.0 என்ற Beauty App திறன்பேசி பயன்பாட்டாளர்களுக்காக வெளியிடப்படுகிறது.



இரவில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?
[Friday 2018-01-19 19:00]

பிறந்த நேரம் என்பது நம் எல்லோருக்குமே மிகவும் அவசியமானது. ஏனெனில் ஒருவரின் பிறந்த நேரத்தை வைத்து தான் அவர்களின் எதிர்காலத்தின் நன்மைகள் மற்றும் பாதிப்புகளை பற்றி சரியாக தெரிந்துக் கொள்ள முடியும்.



வேலைக்கு போகும் பெண்கள் திருமணம் செய்ய மறுப்பதற்கு காரணம்
[Friday 2018-01-19 17:00]

பெண்கள் பலர் இப்போது ஆண்களைப் போல தாமதமாக திருமணம் செய்வதையே விரும்புகின்றனர். 35 வயதிற்கு மேல் திருமணமாகாமல் இருப்பதால் வரும் பிரச்சனைகளை பார்க்கலாம்.



சருமத்தை பொலிவடையச்செய்யும் பாதாம் பேஷியல்
[Friday 2018-01-19 17:00]

சருமத்தை மென்மையாகவும், பொலிவடையச்செய்யவும் பாதாம் ஃபேஸியலை வாரம் ஒருமுறை செய்து வந்தால் படிப்படிபாக பலனை காணலாம்.



வயிற்றுக்கொழுப்பை குறைக்கும் எளிய வழிமுறைகள்
[Friday 2018-01-19 12:00]

எளிய வழிகளை பின்பற்றினால் வயிற்றுக் கொழுப்பை மட்டுமல்ல, முழு உடல் எடையையும் குறைத்து ஆரோக்கிய வாழ்வு வாழ முடியும்.சரியான முறையில் சாப்பிட்டால் 80 சதவீத கொழுப்பை நிச்சயம் குறைக்க முடியும். ஆரோக்கியமான மற்றும் சீரான உணவு முறையை பின்பற்றும் போது இதை நாம் சாதிக்க முடியும். தேவையான அளவு ஊட்டச்சத்துகளை சாப்பிட்டால் கொழுப்பை குறைக்கலாம்.



நெற்றியில் ஏன் குங்குமம் வைக்க வேண்டும் தெரியுமா?
[Thursday 2018-01-18 17:00]

உடற்கூறு மற்றும் அறிவியல் பூர்வமான உண்மையை பெண்கள் சந்தனம் மற்றும் குங்குமம் நெற்றியில் இடுவதற்கான காரணங்கள் அறியப்பட்டுள்ளது.



கழுத்து, முதுகு வலி பிரச்சனையில் இருந்து விடுபட வேண்டுமா? உங்களுக்கான டிப்ஸ்
[Thursday 2018-01-18 16:00]

நாள் முழுவதும் கம்ப்யூட்டர் அல்லது மொபைலையே பார்த்துக் கொண்டிருப்பதால் நரம்புகள் மற்றும் தசைகள் பாதிக்கப்பட்டு கழுத்து, முதுகு வலி உண்டாகிறது. ஆரம்பத்தில் சாதாரணமாக வலித்தாலும் அதனை கவனிக்காமல் விடும்போது கழுத்தையே திருப்பமுடியாத அளவிற்கு பிரச்சனைகளை கொடுத்துவிடுகிறது. இந்த வலியை குறைக்க வலி மருந்துகளை சாப்பிடுவது நல்லதல்ல. இதற்கு இயற்கையான முறையில் தீர்வளிக்க யோகாவினால் முடியும்.



இரவில் நித்திரைக்கு முன் பற்களைத் துலக்கினால் கிடைக்கும் நன்மைகள்!
[Thursday 2018-01-18 15:00]

இரவில் படுக்கும் முன் பற்களைத் துலக்குவதால், வாயில் பாக்டீரியாக்களின் பெருக்கம் தடுக்கப்படுவதோடு, பற்கள் சொத்தையாகும் அபாயமும் குறையும்.



ரத்த நாளங்களில் கொழுப்பு படிவதைத் தடுக்கும் சப்போட்டா
[Thursday 2018-01-18 10:00]

சப்போட்டா பழத்திலுள்ள சில சத்துப்பொருட்களும், வைட்டமின்களும், ரத்த நாளங்களில் கொழுப்பு படிவதைத் தடுக்கும் சிறப்பு செயல்பாடு உடையன ஆகும்.



தீக்காயம் ஏற்பட்டால் உடனடியாக செய்யவேண்டியவை
[Wednesday 2018-01-17 19:00]

தீப்புண் மிகவும் பயங்கராமனது அதே சமயம் வலி மிக்கது. தீப்புண் உண்டான பிறகு தரப்படுகிற சிகிச்சைகளை விட, முதலில் தருகின்ற முதலுதவி தான் மிகவும் முக்கியமானது. வீட்டில் கவனக்குறைவாக ஏதேனும் சூடான பாத்திரத்தை தொட்டதாலோ அல்லது சூடான பதார்த்தங்கள் கொட்டியதாலோ தீப்புண் உண்டானால் உடனடியாக என்ன செய்ய வேண்டும் என்று அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.



கற்றாழையை ஆண்கள் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?
[Tuesday 2018-01-16 19:00]

இயற்கையாகவே அளவுக்கு அதிக நன்மைகளை தருவது கற்றாழை. அதிக மருத்துவ குணங்களும், ஆண்டி வைரல், பூஞ்சை எதிர்ப்பு பொருள், அழற்சி எதிர்ப்பு பொருள் என அனைத்தும் இதில் கிடைக்கின்றன.



இதய நோய் வராமல் பாதுகாக்க வாரம் 5 நாட்கள் உடற்பயிற்சி அவசியம்
[Tuesday 2018-01-16 11:00]

குறிப்பாக நடைப்பயிற்சி (Walking), மெல்லோட்டம் (jogging), சைக்கிள் பயிற்சி (Cycling), நீச்சல் பயிற்சி (Swimming) போன்ற பயிற்சியின் மூலம் நமது இதயத்தை வலுவாக்க முடியும். முறைப்படி மேற்கொள்ளப்படும் உடற்பயிற்சிகள் நம்மை பலவித நோய்களில் இருந்து பாதுகாக்கின்றன. தினமும் 30 நிமிடங்களில் தவறாமல் செய்யும் உடற்பயிற்சி உடல் ஆரோக்கியத்திற்கு பயன் அளிக்கும். வாரத்திற்கு குறைந்த பட்சம் ஐந்து முறை, முறையான உடற்பயிற்சி செய்தால் கீழ்காணும் நன்மைகளைப் பெறலாம்.


Tharsi-home-15-10-2016
Easankulasekaram-Remax-300716
SELVI-HOMES-09-02-17
Mahesan-Remax-169515-Seithy
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா