Untitled Document
March 29, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
கண்கலங்கி அழத் தொடங்கிய சமந்தா!
[Monday 2017-10-09 17:00]

சமந்தா, நாக சைதன்யா திருமணம் கோவாவில் கடந்த 6ம் தேதி ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாக நடந்தது. நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே விழாவில் பங்கேற்க அழைக்கப்பட்டனர். எந்தவித இடையூறும் இல்லாமல் விரும்பியதை உண்டும், குடித்தும் குதுாகலமாக இருக்கவே இப்படியொரு தனிப்பட்ட விழா நடத்தப்பட்டதாக திரையுலகில் கூறப்படுகிறது. பாகுபலி வில்லன் ராணாவின் தந்தை டக்குபதி சுரேஷ்பாபு ரொம்பவே அமைதியானவர். யாரிடமும் அதிகம் பேசாமல் ஜென்டிலாக வந்துபோகும் சுபாவம் கொண்டவர். அவரே சமந்தாவுடன் குத்தாட்டம் போட்டதால் திருமண அரங்கே அமர்க்களமாகிவிட்டதாம்.

வாழ்த்த வந்திருந்த நடிகர் வெங்கடேஷ் ஒரு மேடையில் ஏறி நின்று திருமணத்துக்கு பிறகு கணவன், மனைவி பந்தம் எப்படியிருக்கும் என்பதுபற்றி பாடம் எடுக்க ஆரம்பித்துவிட்டார். ஒரு சிலரை குறிப்பிட்டு அவர்கள் மனைவியிடம் எப்படி பயப்படுவார்கள் என்று சொன்னபோது சிரிப்பலை எழுந்தது. பிறகு லுங்கிகட்டி வந்து குத்து பாடலுக்கு ஆட்டம் போட்டார். மகிழ்ச்சி, சந்தோஷம் வழிய மணவறையில் வந்து அமர்ந்தார் சமந்தா. அவருக்கு சம்பிரதாய முறைப்படி சைதன்யா தாலி கட்டினார்.

அப்போது திடீரென சமந்தா கண்கலங்கி அழத் தொடங்கினார். சத்தம் வெளியில் கேட்காமலிருக்க வாயை பொத்திக் கொண்டார். அதைக்கண்டு அருகிலிருந்தவர்கள் பதறிப்போனார்கள். இவ்வளவு உறவுகளையும் ஒருசேர பார்த்ததும் அவர்கள் காட்டிய பாசமும் சமந்தாவை நெகிழச் செய்ததன் விளைவே இந்த அழுகையாம். நண்பர்கள் அவரது தோளை தட்டி ஆறுதல் கூறி தேற்றினர். சமந்தா, சைதன்யா திருமண வரவேற்பு நாளை (10ம் தேதி) ஐதராபாத்தில் நடக்க உள்ளது.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா