Untitled Document
April 20, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
தனது சம்பளத்தை அதிரடியாக குறைத்த தமன்னா!
[Tuesday 2017-10-10 08:00]

சில வருடங்களுக்கு முன் ரஜினி, கமல் 2 வருடத்துக்கு ஒரு படம் நடித்துக்கொண்டிருந்தனர். தற்போது அந்த பாலிசியை மாற்றிக்கொண்டு வருடத்துக்கு 2 படங்கள் நடித்து விடுகின்றனர். சில முன்னணி ஹீரோக்கள் காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் பாணியில் வந்தவரை ஓ.கே என்று 2 வருடத்துக்கு குறையாமல் தங்களது கால்ஷீட் தேதியை பிரித்து தந்துவிடுகின்றனர். ஆனால் ஹீரோயின்களால் அப்படி முடிவதில்லை. அதற்காக அவர்கள் வருமானம் பெரிதாக குறைந்துவிடுவதும் இல்லை. ஏனென்றால் சினிமாவை தவிர வேறு வழியிலும் அவர்கள் வருமானம் பார்க்கின்றனர்.

விளம்பர படங்கள் நடிப்பது, மால் திறப்பு போன்றவற்றின் மூலம் கைநிறைய பணம் சம்பாதிக்கின்றனர். ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டும் பையை நிரப்புகின்றனர். ஹீரோக்களை பொறுத்தவரை இத்தகைய வருமானங் கள் அபூர்வம்தான். ஹீரோயின்களுக்கு மத்தியில் போட்டி அதிகமாகியிருக்கும் நிலையிலும் சில நடிகைகள் தங்களது சம்பளத்தை குறைக்க மறுத்து பிடிவாதமாக இருக்கின்றனர். அந்த விஷயத்தில் தமன்னா கெட்டிக்காரர்.

இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்துவிட்டது. இழந்த வாய்ப்பை மீண்டும் கைப்பற்ற தனது சம்பளத்தை அதிரடியாக குறைத்திருக்கிறார். முழு படத்துக்கு ரூ. 1 கோடி, ஒரு பாடலுக்கு மட்டும் ஆட ரூ. 60 லட்சம் வரை சம்பளம் பெற்றுவந்தவர் தற்போது குறைந்த சம்பளம் பெற்றுக்கொண்டு வாய்ப்புகளை ஈர்க்கிறார். இந்தியில் கங்கனா ரனாவத் நடித்த குயின் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் தமன்னா நடிக்கிறார். இதற்கு வழக்கத்தைவிட குறைவான சம்பளம் பெற்றிருக்கிறார். அதேபோல் சமீபத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடவும் குறைந்த சம்பளம் பெற்றுக்கொண்டாராம்.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Remax-169515-Seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா