Untitled Document
March 28, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
சூர்யாவின் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தம்!
[Wednesday 2017-10-11 17:00]

தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரிக்கரையில் உள்ள புஷ்ப மண்டப படித்துறையில் இன்று அதிகாலை முதல் இங்கு 50க்கும் மேற்பட்ட புரோகிதர்கள் சடங்குகள் நடத்திக்கொண்டிருந்தனர். 6 மணி அளவில்

அவர்கள் மத்தியில் நடிகர் சூர்யா பாட்டுப்பாடி நடனமாடினார். அவர் ஜீன்ஸ் பேண்ட், வெள்ளை நிற டீ சர்ட் அணிந்திருந்தார். டைரக்டர் விக்னேஷ் சிவன் காட்சிகளை இயக்க, காமிரா மேன் தினேஷ் கிருஷ்ணன் காட்சிகளை படமாக்கிக்கொண்டிருந்தார். இந்த நிலையில் படப்பிடிப்பை பார்க்க மக்கள் கூட்டம் திரண்டு வந்தது.அந்த வீதியில் கார், வேன் உள்பட 100 வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்தது. படப்பிடிப்பு நடப்பதால் யாரும் இங்கு வரக்கூடாது என பொதுமக்களையும் திதி கொடுக்க வந்தவர்களையும், புரோகிதர்களையும் படப்பிடிப்பு குழுவை சேர்ந்த 50 பேர்அப்புறப்படுத்தினர். இதற்கு புரோகிதர்களும், சடங்குகள் செய்ய வந்த மக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் தென்னிந்திய புரோகிதர் சங்க திருவையாறு கிளை தலைவர் சீனிவாசன், முன்னாள் தலைவர் அம்பி, செயலாளர் சீனு உள்பட 20 புரோகிதர்கள் திருவையாறு போலீஸ் நிலையம் சென்று எங்கள் தொழிலுக்கும், பொதுமக்களின் புண்ணிய காரியங்களுக்கும் இடையூறாக படப்பிடிப்பு நடக்கிறது.

எங்களை ஆற்றில் இருந்து எப்படி அவர்கள் வெளியேற்ற முடியும். எங்களுக்கு அனுமதி கொடுக்காவிட்டால் மறியல் செய்வோம் என்றனர். இன்ஸ்பெக்டர் சிவராஜ், எஸ்.ஐ. சுரேஷ், திருவையாறு பெரிய கோயில் கிளார்க் ஆனந்தன் ஆகியோர் அங்கு வந்து படப்பிடிப்பு குழு மேலாளரை அணுகி, பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் 12 மணிக்கு மேல் படிப்பிடிப்பு நடத்துங்கள் என்றனர். அதைத்தொடர்ந்து நடன காட்சி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. டைரக்டர் பேக்அப் சொன்னதை தொடர்ந்து அனைவரும் அங்குள்ள ஒரு திருமண மண்டபத்துக்கு சென்றனர். பின்னர் பொதுமக்கள் வழக்கம் போல ஆற்றுக்கு சென்று குளித்தனர். புரோகிதர்களும் சடங்குகளை செய்தனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
Mahesan-Remax-169515-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா