Untitled Document
March 29, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
சூர்யாவின் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தம்!
[Wednesday 2017-10-11 17:00]

தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரிக்கரையில் உள்ள புஷ்ப மண்டப படித்துறையில் இன்று அதிகாலை முதல் இங்கு 50க்கும் மேற்பட்ட புரோகிதர்கள் சடங்குகள் நடத்திக்கொண்டிருந்தனர். 6 மணி அளவில்

அவர்கள் மத்தியில் நடிகர் சூர்யா பாட்டுப்பாடி நடனமாடினார். அவர் ஜீன்ஸ் பேண்ட், வெள்ளை நிற டீ சர்ட் அணிந்திருந்தார். டைரக்டர் விக்னேஷ் சிவன் காட்சிகளை இயக்க, காமிரா மேன் தினேஷ் கிருஷ்ணன் காட்சிகளை படமாக்கிக்கொண்டிருந்தார். இந்த நிலையில் படப்பிடிப்பை பார்க்க மக்கள் கூட்டம் திரண்டு வந்தது.அந்த வீதியில் கார், வேன் உள்பட 100 வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்தது. படப்பிடிப்பு நடப்பதால் யாரும் இங்கு வரக்கூடாது என பொதுமக்களையும் திதி கொடுக்க வந்தவர்களையும், புரோகிதர்களையும் படப்பிடிப்பு குழுவை சேர்ந்த 50 பேர்அப்புறப்படுத்தினர். இதற்கு புரோகிதர்களும், சடங்குகள் செய்ய வந்த மக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் தென்னிந்திய புரோகிதர் சங்க திருவையாறு கிளை தலைவர் சீனிவாசன், முன்னாள் தலைவர் அம்பி, செயலாளர் சீனு உள்பட 20 புரோகிதர்கள் திருவையாறு போலீஸ் நிலையம் சென்று எங்கள் தொழிலுக்கும், பொதுமக்களின் புண்ணிய காரியங்களுக்கும் இடையூறாக படப்பிடிப்பு நடக்கிறது.

எங்களை ஆற்றில் இருந்து எப்படி அவர்கள் வெளியேற்ற முடியும். எங்களுக்கு அனுமதி கொடுக்காவிட்டால் மறியல் செய்வோம் என்றனர். இன்ஸ்பெக்டர் சிவராஜ், எஸ்.ஐ. சுரேஷ், திருவையாறு பெரிய கோயில் கிளார்க் ஆனந்தன் ஆகியோர் அங்கு வந்து படப்பிடிப்பு குழு மேலாளரை அணுகி, பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் 12 மணிக்கு மேல் படிப்பிடிப்பு நடத்துங்கள் என்றனர். அதைத்தொடர்ந்து நடன காட்சி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. டைரக்டர் பேக்அப் சொன்னதை தொடர்ந்து அனைவரும் அங்குள்ள ஒரு திருமண மண்டபத்துக்கு சென்றனர். பின்னர் பொதுமக்கள் வழக்கம் போல ஆற்றுக்கு சென்று குளித்தனர். புரோகிதர்களும் சடங்குகளை செய்தனர்.

  
  
   Bookmark and Share Seithy.com



சிவாங்கிக்கு திருமணமா?- அவரே போட்ட பதிவு!
[Friday 2024-03-29 16:00]

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி இன்னும் பல நிகழ்ச்சிகள் மூலம் மக்களிடம் பிரபலமாகி சினிமாவில் சாதிப்பவர்கள் பலர் உள்ளார்கள். அப்படி பாடல் மற்றும் சமையல் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் தான் சிவாங்கி. சூப்பர் சிங்கரில் முதலில் பங்குபெற்ற இவருக்கு அந்த நிகழ்ச்சி பெரிய ரீச் கொடுக்கவில்லை.



ரத்தமும், சதையுமாய் உருவாகியுள்ள ஆடுஜீவிதம்: முழு விமர்சனம்!
[Friday 2024-03-29 16:00]

பிளெஸ்ஸி இயக்கத்தில் பிருத்விராஜ், அமலா பால் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ஆடுஜீவிதம் படம் இன்று வெளியாகி இருக்கிறது. மலையாளத்தில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிடப்பட்டுள்ளது.



விஜய் இடத்தை பிடிக்க முழு வீச்சில் இறங்கிய சூர்யா!
[Friday 2024-03-29 07:00]

தமிழ்நாட்டுல ரெண்டு மாசத்துக்கு முன்னாடி வரைக்கும் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்று கேள்வி பெருசா இருந்துச்சு. இப்போ அடுத்த தளபதி யார் என்று தான் அதிக அளவில் பேசப்படுகிறது. இன்னைக்கு வந்த நண்டு, சிண்டு பெயர் எல்லாம் இதில் அடிபடுது. ஆனா உச்சத்தில் இருக்கும் சூர்யாவின் பெயர் வெளிவரவில்லை. இதற்கு முக்கிய காரணம் சமீப காலமாக அவருடைய படங்கள் எதுவும் பெரிய அளவில் பேசப்படாதது தான். இப்போதைக்கு சூர்யாவின் பெரிய நம்பிக்கையே கங்குவா படம் தான்.



முகம்சுளிக்க வைக்கும் கவர்ச்சியில் பிக்பாஸ் புகழ் மதுமிதா! Top News
[Friday 2024-03-29 07:00]

விஜய் டிவியின் பிக் பாஸ் 5ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர் மதுமிதா. அவர் ஜெர்மனி நாட்டை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மதுமிதா உச்சகட்ட கவர்ச்சி காட்டி வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி இருக்கிறது.



"ரஜினி 171" - லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட அப்டேட்!
[Thursday 2024-03-28 18:00]

ரஜினிகாந்த் தற்போது தனது 170ஆவது படமான ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிக்கும் இப்படத்தை ஜெய் பீம் பட இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கி வருகிறார். இப்படம் 2024 ஆம் ஆண்டுக்குள் வெளியாகவுள்ளது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.



கார்த்திக் சுப்புராஜுடன் கூட்டணி வைத்த சூர்யா!
[Thursday 2024-03-28 18:00]

சூர்யா தற்போது தனது 42வது படமான ‘கங்குவா’ படத்தில் நடித்து முடித்துள்ளார். சிறுத்தை சிவா இயக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 3டி முறையில் சரித்திரப் படமாக 38 மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. சமீபத்தில் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் வருகிற ஏப்ரலில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.



சித்தார்த் மற்றும் அதிதி ராவிற்கு நிச்சயதார்த்தம் முடிந்தது!
[Thursday 2024-03-28 18:00]

மணிரத்னம் இயக்கிய ஆய்த எழுத்து படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் நடிகர் சித்தார்த், அதற்கு முன்பு கண்ணத்தில் முத்தமிட்டால் போன்ற படங்களில் அவருக்கு துணை இயக்குனராக இருந்து வந்தார். அதன்பின் பாய்ஸ், உதயம் NH4, 180, அரண்மனை, தீயா வேலை செய்யணும் குமாரு போன்ற படங்களில் நாயகனாக நடித்து வந்தார்.



"சாப்பிட கூட வழி இல்லை" - மேடையில் கண்ணீர் விட்ட விஜய் டிவி மணிமேகலை!
[Thursday 2024-03-28 06:00]

சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளராக பிரபலம் ஆனவர் மணிமேகலை. அவர் ஹுசைன் என்ற டான்சரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர் வேறு மதம் என்பதால் மணிமேகலை வீட்டில் ஒப்புதல் இல்லை. வீட்டை எதிர்த்து தான் மணிமேகலை ஹுசனை திருமணம் செய்துகொண்டார். அந்த நேரத்தில் அவர்கள் மதத்தை வைத்து சமூக வலைத்தளங்களிலும் அதிகம் ட்ரோல்கள் வந்தது.



வனிதா 4வது திருமணம்: காரி துப்பும் தங்கச்சி!
[Thursday 2024-03-28 06:00]

தமிழ் திரையுலகில் வாரிசு நடிகைகளின் ஆதிக்கம் எப்போதும் உள்ளது. அந்த வகையில் விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவிற்கு பிறந்த மூத்த மகள் வனிதா விஜயகுமார் தமிழ் திரையுலகில் நடிகையாக களம் இறங்கினார். எனினும் இவர் எதிர்பார்த்த அளவு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இவரது அம்மா மஞ்சுளா மற்றும் அப்பா விஜயகுமார் போல இவரது நடிப்பு இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.



ஜெட் வேகத்தில் பறந்து வரும் சிவகார்த்திகேயன்!
[Wednesday 2024-03-27 18:00]

அசர்கிற நேரத்துல தான் ஆட்டைய போடணும் என்று ஒரு சொலவடை சொல்வார்கள். அதுபோலதான் சிவகார்த்திகேயனின் செயல்கள் இருக்கிறது. அதாவது விஜய் அரசியல், அஜித் டைம் பாஸ்க்கு படங்களில் நடிப்பது, ரஜினி வருஷத்துல ஒரு தடவை படம் பண்ணுவது, கமல் பெயர் சொல்ற மாதிரி ஒரு படத்தை பண்ண வேண்டும் என்று ஒவ்வொருவரும் ஒரு கோட்பாடு வைத்து அதன்படி நடித்து வருகிறார்கள்.



ஷாருக்கான் போல அட்லிக்கு வேற நடிகரை கோர்த்துவிட்ட விஜய்!
[Wednesday 2024-03-27 18:00]

அட்லி இயக்க கூடிய படங்கள் காபி கேட் என்று கூறினாலும் அவரிடம் இருக்கும் தனித் திறமையால் வசூல் அளவில் சாதனை படைக்கும் அளவிற்கு வெற்றி இயக்குனராக ஜொலித்து வருகிறார். எப்படி இங்கே விஜய்யை வைத்து மெர்சல், பிகில் படங்களை கொடுத்தார்.



10 வருட காதல்: ரகசிய திருமணம் செய்துகொண்ட டாப்ஸி!
[Wednesday 2024-03-27 18:00]

தனுஷின் ஆடுகளம் படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்டவர் நடிகை டாப்ஸி. இதன்பின் ஆரம்பம், காஞ்சனா 2 ஆகிய படங்களில் நடித்து வந்தார். பாலிவுட் பக்கம் அதிகம் கவனம் செலுத்தி வரும் டாப்ஸி சமீபத்தில் தான் ஷாருக்கான் உடன் இணைந்து டங்கி எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. கடந்த சில தினங்களுக்கு முன் நடிகை டாப்ஸிக்கு அவருடைய 10 வருட காதலருடன் திருமணம் என தகவல் வெளிவந்தது.



பச்சை கொடி காட்டியதால் துணிந்து விளையாடும் சங்கர்!
[Wednesday 2024-03-27 06:00]

உலகநாயகன் கமலஹாசன் மற்றும் சங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள இந்தியன் 2 மற்றும் 3 படப்பிடிப்பு நிறைவடைந்து, ரிலீசுக்கு தயாராகி வருவதால் சங்கர் தனது அடுத்த படத்தில் கவனம் செலுத்த துவங்கியுள்ளார். தெலுங்கின் முன்னணி தயாரிப்பாளர் தில்ராஜ் தயாரிப்பில் ராம்சரண் மற்றும் கியாரா அத்வானி நடிப்பில் உருவாகி வருகிறது ஷங்கரின் கேம் சேஞ்சர்.



இயக்குனர் பேரரசுக்கு பதிலடி கொடுத்த வெற்றிமாறன்!
[Wednesday 2024-03-27 06:00]

இயக்குனர் வெற்றிமாறன் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருந்து வருகிறார். அவர் பிரபல இயக்குனர் பேரரசுக்கு மேடையில் பதிலடி கொடுத்ததாக ஒரு வீடியோ வைரல் ஆகி வருகிறது. யானை கதையை வைத்து எடுக்கப்பட்டு இருக்கும் கள்வன் என்ற படத்தின் பிரெஸ் மீட்டில் பேசிய பேரரசு சொன்ன கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வெற்றிமாறன் பேசி இருக்கிறார்.



பிரபல நகைச்சுவை நடிகர் சேஷூ காலமானார்!
[Tuesday 2024-03-26 18:00]

லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த நகைச்சுவை நடிகர் சேஷூ உடல் நலக்குறைவு காரணமாக இன்று (மார்ச் 26) காலமானார். மாரடைப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த பிரபல நகைச்சுவை நடிகர் சேஷு சிகிச்சை பலனின்றி காலமானார். 2002-ம் ஆண்டு வெளியான தனுஷின் துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.


NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Mahesan-Remax-169515-Seithy
Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா