Untitled Document
March 29, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
திருமணத்துக்குப் பிறகு நடிப்பை நிறுத்த மாட்டேன்: - பாவனா
[Thursday 2017-10-12 07:00]

நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக துபாய் சென்றுள்ளார், பாவனா. அங்கு அவர் பேசியதாவது: சினிமா துறையில் எந்த தவறும் கிடையாது. அங்குள்ள சிலரின் எண்ணத்தில் அழுக்கு படிந்திருக்கிறது, அவ்வளவுதான். நிறைய நடிகர்களின் பிள்ளைகள் நடிக்க வருகிறார்கள். சினிமா துறை தவறானது என்றால், அவர்கள் தங்கள் பிள்ளைகளை சினிமாவிற்குள் வர அனுமதிப்பார்களா? சினிமா மீது எவ்வளவு நாள் நீங்கள் ஆர்வமாக இருக்கிறீர்களோ, அதுவரை அதில் எந்தத் தவறும் இருக்காது. எனது திருமணத்தைப் பற்றி கேட்கிறார்கள்.

திருமணத்தை விட அதற்குப் பிறகான என் வாழ்க்கை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதில்தான் அதிக கவனம் செலுத்துகிறேன். இதுவரை திருமணத்துக்காக ஆடைகளோ, வேறெந்த பொருட்களையோ வாங்க ஷாப்பிங் செல்லவில்லை. காரணம், என் திருமணத்துக்கு இன்னும் 3 மாத காலம் அவகாசம் இருக்கிறது. ஜனவரியில் என் திருமணம் நல்லமுறையில் நடக்கும்.

என் நிச்சயதார்த்த விழா 3 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், எதிர்பாராத சம்பவங்களால் குறுகியகாலத்தில் முடிந்து விட்டது. திருமணத்துக்குப் பிறகு நடிப்பை நிறுத்த மாட்டேன். இவ்வாறு அவர் பேசினார். பாவனாவும், கன்னட தயாரிப்பாளர் நவீனும் காதலிக்கின்றனர். அக்டோபர் 26ம் தேதி இவர்களின் திருமணம் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், திடீரென்று ஜனவரி மாதத்துக்கு திருமண தேதி மாற்றப்பட்டுள்ளது.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Remax-169515-Seithy
Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா