Untitled Document
April 23, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
யாழ்ப்பாணத்தில் நடந்த தேசிய தமிழ் மொழித்தின விழா! Top News
[Saturday 2017-10-14 19:00]

கல்வி அமைச்சின் மூலமாக ஒவ்வொரு வருடமும் நடாத்தப்படும் தேசிய தமிழ் மொழித்தினம் இந்த வருடம் கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தலைமையில் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிறப்பு அதிதியாக கலந்து கொண்டார்.

யாழ்ப்பாணம் இந்து கல்லூரி வளாகத்தில் இன்று நிகழ்வுகள் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணைத்தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் மேற்கொண்டிருந்தார். வட மாகாண கல்வி அமைச்சுடன் இணைந்து இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

காலை 9.00 மணிக்கு யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இருந்து கலாசார ஊர்வலம் ஆரம்பமாகி காலை 11.00 மணியளவில் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி வளாகத்தை வந்தடைந்ததும் நிகழ்வுகள் ஆரம்பமாகியது.ஊர்வலத்தில் தமிழ் கலை கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் ஊர்வலம் நடைபெற்றது.இதில் ஊர்திகளும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.ஊர்வலத்தை கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் ஆரம்பித்து வைத்தார்.

ஊர்வலத்தை தொடர்ந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மங்கள விளக்கேற்றி வைத்து நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார்.இதில் தேசிய மட்டத்தில் நடாத்தப்பட்ட தமிழ் மொழித் தின போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் 375 பேருக்கான சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

நிகழ்வில் விவசாயத்துறை அமைச்சர் துமிந்த திசாநாயக்க, வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே,ஊவா மாகாண ஆளுநர் சமரசிங்ஹ,யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன்,கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளர் திஸ்ஸ ஹேவாவிதான,கல்வி அமைச்சின் தமிழ் பாடசாலைகளின் அபிவிருத்திக்கு பொறுப்பாளர் சு.முரளீதரன்,கல்வி அமைச்சின் தமிழ் உதவிக் கல்வி பணிப்பாளர் திருமதி சடகோபன்,வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர்,உட்பட அதிகாரிகளும் ஆசிரியர்களும்,மாணவர்களும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
 gloriousprinters.com 2021
Mahesan-Remax-169515-Seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா