Untitled Document
April 19, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
2018 ஆம் ஆண்டில் பூமிக்கு பேரழிவு!
[Tuesday 2017-11-21 08:00]

பேரழிவை ஏற்படுத்தும் பாரிய நிலநடுக்கங்களை எதிர்வரும் 2018 ஆம் ஆண்டில் பூமி சந்திக்கக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அண்மைக்காலமாக உலகின் பல்வேறு இடங்களிலும் நிலநடுக்கங்கள் அதிகரித்து வருகின்றன. ஏற்கனவே 2018 ஆம் ஆண்டு உலகம் பாரிய அழிவைச் சந்திக்கும் என சதியாலோசனைக் கோட்பாடுகள் வெளிவந்தவண்ணம் இருக்கின்றன. இந்த நிலையில் பூமியானது தன் அச்சில் சுழலும் வேகத்தில் மாற்றம் அடைந்துள்ளதாகவும், இதனால் நிலநடுக்கங்கள் அதிகரிக்கும் எனவும் அமெரிக்க விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில் அமெரிக்க விஞ்ஞானியான ரோஜர் பெல்ஹெம் கருத்து தெரிவிக்கும் போது, பூமி சுழலும் வேகத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், பூமியின் சுழற்சி வேகத்திற்கும் நிலநடுக்கங்களுக்கும் பாரிய தொடர்புகள் உண்டு. பூமி சுழலுவதில் நுண்ணிய மாற்றம் ஏற்பட்டாலும் கூட அதனால் பாரிய விளைவுகள் ஏற்படக்கூடும் என அவர் கூறியுள்ளார்.

கடந்த 117 வருடங்களாக பூமியில் தொடர்ச்சியாக ஏற்பட்ட நிலநடுக்கங்கள் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டபோது, பூமியின் சுழற்சி வேகம் மாறுபடும் போது சக்திவாய்ந்த பாரிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதை கண்டுபிடித்துள்ளோம் என ரோஜர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதும் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதன் காரணமாக 2018ஆம் ஆண்டில் பாரிய அழிவை ஏற்படுத்தும் நிலநடுக்கங்களுக்கு பூமி முகம் கொடுக்க வேண்டிய வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் ரோஜர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அண்மைக்காலமாக பூமியில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றங்களுக்கும் இது காரணமாக இருக்கக்கூடும் என்ற சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன.

எவ்வாறாயிலும் தற்போது பூமியில் ஆங்காங்கே பல நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ள காரணத்தினால் அடுத்த வருடம் என்ன நடக்கும் என்ற அச்சத்தில் மக்கள் உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா