Untitled Document
April 19, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
மெல்பேணில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தேசிய மாவீரர் நாள் நிகழ்வு! Top News
[Tuesday 2017-11-28 18:00]

தமிழீழ விடுதலைப்போரில் தங்கள் இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை நினைவுகூரும் தேசிய நினைவெழுச்சிநாள் நிகழ்வுகள் 27ம் திகதி திங்கட்கிழமையன்று மெல்பேணில் அமைந்துள்ள Springvale நகர மண்டபத்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது. மெல்பேண் நேரம் மாலை 6 மணிக்கு மணியொலியுடன் தொடங்கிய ஆரம்பமான இந்நிகழ்விற்கு பிரசாத் (தமிழ்மொழியில்) மற்றும் துளசி (ஆங்கிலமொழியில்) ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.

பொதுச்சுடர் ஏற்றலுடன் ஆரம்பமாகிய இந்நிகழ்வில், பொதுச்சுடரினை தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர் திரு.பிரான்ஸிஸ் கிறிஸ்ரி அவர்கள் ஏற்றிவைத்தார். தொடர்ந்து அவுஸ்திரேலியத் தேசியக் கொடியினை மாவீரர் லெப்.கேணல் மணிவண்ணனின் சகோதரர் திரு.சிங்கராசா சுரேஷ்குமார் அவர்களும், தமிழீழத் தேசியக் கொடியினை மாவீரர் லெப்.கேணல் சதன் / இளமாறனின் புதல்வன் திரு. பவித்திரன் சிவநாதன் அவர்களும் ஏற்றி வைத்தார்கள்.

அதனையடுத்து ஈகச்சுடரேற்றல் நிகழ்வு இடம்பெற்றது. முதலாவது மாவீரன் லெப். சங்கரின் திரு உருவப்படத்திற்கு திரு. சசிகரன் வடிவேலு அவர்களும், முதலாவது பெண் மாவீரர் 2ம் லெப். மாலதியின் திரு உருவப்படத்திற்கு திருமதி சாரதா இருதயநாதர் அவர்களும் மலர் தூவி வணக்கம் செலுத்தினார்கள்.

கொடியேற்றலைத் தொடர்ந்து அகவணக்கமும், தேசத்திற்காய் விதையான வீர மறவர்களுக்கான மலர்வணக்கமும் இடம்பெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்தோரும் உரித்துடையோரும் தமது மாவீரச் செல்வங்களுக்கு ஈகச்சுடரேற்றி, மலர்வணக்கம் செய்தனர்.தொடர்ந்து மண்டபம் நிறைந்திருந்த மக்கள் கூட்டத்தினர் தமது மலர்வணக்கத்தைச் செலுத்தினர்.

மலர்வணக்கநிகழ்வின் போது தாயக துயிலுமில்லக் காட்சிகளை தாங்கிய காணொலிகளும், மாவீர்ர் பாடல்களும், மாவீ

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா