Untitled Document
January 22, 2018 [GMT]
  • Welcome
  • Welcome
வயிற்றில் உள்ள குடற்புழுக்கள் செய்யும் அட்டுழியங்கள் பற்றி தெரியுமா?
[Tuesday 2017-12-05 18:00]

குடல் புழுக்கள் என்பது அசுத்தமான பழக்கவழக்கங்களால் உண்டாகிறது… குடல் புழுக்கள் வந்தால் சரியாக சாப்பிட முடியாது. வயிற்றுக் கோளாறுகள் வந்துவிடும். குடல் புழுக்களை குறைந்தது ஆறு மாதத்திற்கு ஒரு முறையாவது நீக்க வேண்டியது அவசியமாகும். குடல் புழுக்கள் வயிற்றில் வளர தொடங்கினால் குறைந்தது ஆறு மாதங்கள் வரையாவது வளரும் தன்மை கொண்டது.

குடல் புழுக்களை குழந்தைகளுக்கு நீர்ம மருந்து கொடுப்பதாலும், பெரியவர்களுக்கு புழுவை நீக்கும் மாத்திரைகளை சாப்பிடுவதாலும் நீக்க முடியும். ஆனால் இது போன்ற மாத்திரைகளை அடிக்கடி சாப்பிடுவது கூடாது. இதனை சாப்பிடும் போது மருத்துவர் பரிந்துரை என்பது மிகவும் அவசியமாகிறது. அதுமட்டுமின்றி இது போன்ற மாத்திரைகள் கர்ப்பிணி பெண்களுக்கு பரிந்துரைக்கப்படுவது இல்லை. தொடர்ச்சியை கீழே கீழே வாசியுங்கள்…

குடல் புழுக்கள் வந்த உடன் அழிப்பதற்கு பதிலாக அவை வயிற்றில் சேராமல் பாதுக்காத்துக் கொள்வது மிகவும் அவசியமாகிறது. குடல் புழுக்களை அழிக்க சில இயற்கையான காய்கறிகளும், இயற்கை மருந்துகளும் உள்ளன. உடலுக்கு எந்த விதமான தீங்கும் இன்றி குடல் புழுக்களை நீக்கிவிடும் தன்மை கொண்டது. இந்த பகுதியில் குடற்புழுக்கள் எதனால் உண்டாகின்றன, அவை வராமல் பாதுகாக்க என்னென்ன வழிகள் உள்ளன.. அவற்றை போக்க உதவும் வைத்தியங்கள் பற்றியும் விரிவாக காணலாம்.

குடல் புழுக்கள் வர காரணம்:அசுத்தமான சுற்றுப்புறம்தான் குடல்புழுத் தொல்லைக்கு அடிப்படைக் காரணம். குறிப்பாக, தெருவோரங்களைத் திறந்தவெளிக் கழிப்பிடங்களாகப் பயன்படுத்துபவர்களுக்கு இந்தத் தொல்லை அடிக்கடி வருகிறது. அசுத்தமான தெருவில், மண் தரையில், தண்ணீரில் குழந்தைகள் விளையாடுவது, அழுக்கடைந்த பொம்மைகளுடன் விளையாடுவது, காலில் செருப்பு அணியாமல் நடப்பது, உணவு சாப்பிடுவதற்கு முன்னால் கைகளைக் கழுவிச் சுத்தப்படுத்தத் தவறுவது ஆகியவை குடல்புழு ஏற்படுவதற்குத் துணைபோகின்றன.

குழந்தைகளுக்கு?:சுத்தமில்லாத குடிநீர், சுகாதாரமற்ற உணவு மூலமும் இது ஏற்படுகிறது. குழந்தைக்கு மண் உண்ணும் பழக்கம் இருந்தால் குடலில் புழு வளர்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. சமையலுக்கு முன்பு காய்கறிகளைக் கழுவிச் சுத்தம் செய்யத் தவறினாலும், குடல்புழுத் தொல்லை ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

கழிப்பறை சுத்தம்:சுயசுத்தம் காக்கப்பட வேண்டும். சுற்றுப்புறச் சுகாதாரம் மேம்பட வேண்டும். குளிப்பறை மற்றும் கழிப்பறைகளை எப்போதும் சுத்தமாக வைத்திருங்கள். திறந்தவெளிகளையும் தெருவோரங்களையும் கழிப்பறைகளாகப் பயன்படுத்தக் கூடாது. கழிப்பறைக்குச் சென்றுவந்தவுடன் கைகளைச் சோப்பு போட்டு நன்றாகக் கழுவுங்கள். குழந்தைகளையும் இவ்வாறு செய்வதற்குப் பழக்கப்படுத்துங்கள்.

சுத்தம்:

சகதி, சேறு உள்ள அசுத்தமான இடங்களில் குழந்தைகளை விளையாடவிடக் கூடாது. சுத்தமான இடங்களில் விளையாடுவதை ஊக்கப்படுத்துங்கள். நகங்களைப் பத்து நாட்களுக்கு ஒருமுறை வெட்டிவிட வேண்டும். குழந்தைகள் விரல் சூப்பக் கூடாது.

உள்ளாடைகள்:

குழந்தை ஈரப்படுத்திய உள்ளாடைகளை உடனுக்குடன் மாற்றுவதும், தினந்தோறும் மாற்ற வேண்டியதும், சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டியதும் மிகவும் அவசியம். எக்காரணத்துக்காகவும் உள்ளாடைகளை அடுத்தவர்களுடன் பகிர்ந்துகொள்ளக் கூடாது.

உணவு சுகாதாரம்:

ஈக்கள் மொய்த்த பண்டங்களைச் சாப்பிடக் கூடாது. காரணம், மலத்திலுள்ள புழுக்களின் முட்டைகளைக் குடிநீருக்கோ, உணவுக்கோ கொண்டுவருவதில் ஈக்களுக்குப் பெரும்பங்கு உண்டு. சாலையோரக் கடைகளில் எதையும் வாங்கிச் சாப்பிடக் கூடாது.

நீரில் கழுவவும்:

காய், கனிகளை உண்பதற்கோ சமைப்பதற்கோ பயன்படுத்தும் முன்பு தண்ணீரில் நன்றாகக் கழுவிக்கொள்ள வேண்டும். இதனால் நீங்கள் சமைக்கும், சாப்பிடும் உணவுகள் சுத்தமாகவும் நச்சுக்கள் இன்றியும் இருக்கும்.

சுத்தமான நீர்:

நன்றாகக் கொதிக்கவைத்து ஆறவைத்த தண்ணீரையே குடிக்க வேண்டும். பாதுகாக்கப்பட்ட உணவு வகைகளையே உண்ண வேண்டும். சாப்பிடுவதற்கு முன்பு கைகளைச் சோப்பு போட்டுக் கழுவ வேண்டியது அவசியம்.

வெளியில் செல்லும் போது..:

காலில் செருப்பு அணிந்துதான் வெளியில் செல்ல வேண்டும். அசுத்தமான குளம், குட்டை, ஏரி, நீச்சல்குளம் போன்றவற்றில் குளிப்பதையும் நீச்சலடிப்பதையும் தவிர்க்க வேண்டும்.

புண்கள் இருந்தால்..:

வீட்டுக்குள் நுழைந்ததும் பாதங்களை நன்றாகக் கழுவிச் சுத்தப்படுத்த வேண்டும். பித்த வெடிப்பு, சேற்றுப்புண் இருந்தால் உடனே சிகிச்சை பெற்றுவிட வேண்டும்.

இறைச்சிகள்:

தரமான கடைகளில் மட்டுமே இறைச்சியை வாங்க வேண்டும். மீன், இறைச்சி போன்றவற்றை நன்றாக வேகவைத்த பின் சாப்பிட வேண்டும்.

செல்லபிராணிகள்:

வீட்டில் வளர்க்கப்படும் நாயாக இருந்தாலும் அதைத் தூக்கி கொஞ்சினாலோ, விளையாடினாலோ கண்டிப்பாகக் கைகளைச் சோப்பு போட்டுக் கழுவ வேண்டும்.

பூண்டு:

பூண்டுடை பயன்படுத்தி குடலில் உள்ள புழுக்களை வெளியேற்றும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: விளக்கெண்ணெய், மஞ்சள், பூண்டு. ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய்யில் பூண்டுகளை துண்டுகளாக்கி போட்டு வதக்கவும். இதில் கால் ஸ்பூன் மஞ்சள் சேர்க்கவும். இதை இருவேளை சாப்பிடும்போது குடல் புழுக்கள் வெளியேறும். வயிறு சுத்தமாகும். செரிமானம் சீராகும். 5 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு விளக்கெண்ணெய் பயன்படுத்த கூடாது.

பூசணி விதை:

பூசணி விதையை பயன்படுத்தி மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: பூசணி விதை, தேன். அரை ஸ்பூன் அளவுக்கு பூசணி விதை பொடி எடுக்கவும். இதனுடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து இரவு தூங்கப்போகும் முன்பு சாப்பிட்டு வந்தால் குடல் புழுக்கள் வெளியேறும். பெரியவர்களுக்கு அரை ஸ்பூன் பூசணி விதை பொடியும், குழந்தைகளுக்கு கால் ஸ்பூன் அளவுக்கும் எடுக்கவும். இதை 3 நாட்கள் சாப்பிடலாம். 6 மாதத்துக்கு ஒருமுறை எடுத்துக்கொள்வது நன்மை தரும்.

பப்பாளி விதை:

பப்பாளி விதையை பயன்படுத்தி குடல் புழுக்களை வெளியேற்றும் மருந்து தயாரிக்கலாம். ஒரு ஸ்பூன் பப்பாளி விதை எடுக்கவும். சிறியவர்களுக்கு என்றால் அரை ஸ்பூன் அளவுக்கு எடுக்கவும். இதில் தேவையான அளவு நீர்விட்டு கொதிக்க வைக்கவும். வடிகட்டி தேன் சேர்த்து வாரம் ஒரு முறை என 4 வாரங்கள் குடித்துவர வயிற்று புழுக்கள் வெளியேறும். நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் வேப்பம் பூவை பயன்படுத்தி மருந்து தயாரிக்கலாம். அரை ஸ்பூன் நெய் காய்ந்ததும் வேப்பம் பூவை சேர்த்து வதக்கவும். இதில், நீர் சேர்த்து உப்பு போட்டு கொதிக்க வைக்கவும். வடிக்கடி மாதம் ஒருறை குடித்துவர குடலில் புழுக்கள் வராமல் இருக்கும்.

வேப்பம் பூ:

வேப்பம் பூவை முன்னோர்கள் வாரத்துக்கு ஒருமுறை உணவில் சேர்த்தார்கள். இதனால் குடல் புழுக்கள், தொற்று கிருமிகள் வராமல் தடுக்கப்பட்டது. வேப்பம் பூவில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. வேப்பம் பூவை அடிக்கடி உணவில் சேர்ப்பதால் ஆரோக்கியம் கிடைக்கும். தரமற்ற, அதிகளவில் உணவை சாப்பிடுவதால் ஏற்படும் வயிற்றுவலியை குணப்படுத்தும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். இஞ்சியை சாறாக்கி தொப்புளில் 5 சொட்டுக்கள் விட்டு, தொப்புளை சுற்றி தடவுவதன் மூலம் வயிற்று வலி குணமாகும்.

கோவைக்காய்:

கோவைக்காய் பித்தம், ரத்தப் பெருக்கு, வாயு, வயிற்றில் உள்ள பூச்சி ஆகியவற்றுக்கெல்லாம் முடிவு கட்டும் நல்ல மருந்தாகும். கோவை இலைச் சாறு, பித்தம், ஷயம், மூல நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகப் பயன்படும். கரம் மசாலா அல்லது உஷ்ணத்தைத் தரும் மருந்துகள் கோவைக்காயால் ஏற்படும் தீமைகளுக்கு நல்ல மாற்றாகும்.

  
  
   Bookmark and Share Seithy.com



கண்களுக்கு சொட்டு மருந்தா?... கவனம்
[Monday 2018-01-22 13:00]

கண்களில் சொட்டு மருந்துகளைப் பயன்படுத்தும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். கண்களில் பாதிப்பு ஏற்படும்போது அதைச் சரிசெய்வதற்கு திரவ நிலையில் உள்ள சொட்டு மருந்துகளைப் பயன்படுத்துவது வழக்கமாக உள்ளது.



தனியாக இருக்கும்போது நெஞ்சுவலி ஏற்பட்டால் நீங்கள் செய்ய வேண்டியது?
[Saturday 2018-01-20 19:00]

ஒவ்வொரு முறை இருமுவதற்கு முன்னரும் மூச்சை இழுத்து விட வேண்டும். இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும்.இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையிலோ அல்லது வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இருமிக்கொண்டே இருக்க வேண்டும்.



அரிப்பு ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள்
[Saturday 2018-01-20 18:00]

அரிப்பு என்பது ஒவ்வாமையின் வெளிப்பாடு. பெரும்பாலான நேரம் அரிப்பை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. பொது இடம் என்றுகூடப் பார்க்காமல் சொறியத் தொடங்கிவிடுவோம். அரிப்பு ஏற்படுவதற்குக் காரணங்கள் அநேகம். என்றாலும், இவற்றை இரண்டே இரண்டு பிரிவுகளில் அடக்கி வைத்திருக்கிறது, மருத்துவம். உடலின் வெளியிலிருந்து வருவது ஒரு வகை. உடலுக்குள்ளேயே இருப்பது அடுத்த வகை.



முகத்தை அழகாக்கிக் காட்டும் Beauty App அறிமுகம்
[Saturday 2018-01-20 18:00]

முகத்தை அழகாக்கிக் காட்டும் கைபேசி செயலிகள் உலகம் முழுவதும் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், வட கொரியாவில் முதன்முறையாக போம்ஹயங்கி 1.0 என்ற Beauty App திறன்பேசி பயன்பாட்டாளர்களுக்காக வெளியிடப்படுகிறது.



இரவில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?
[Friday 2018-01-19 19:00]

பிறந்த நேரம் என்பது நம் எல்லோருக்குமே மிகவும் அவசியமானது. ஏனெனில் ஒருவரின் பிறந்த நேரத்தை வைத்து தான் அவர்களின் எதிர்காலத்தின் நன்மைகள் மற்றும் பாதிப்புகளை பற்றி சரியாக தெரிந்துக் கொள்ள முடியும்.



வேலைக்கு போகும் பெண்கள் திருமணம் செய்ய மறுப்பதற்கு காரணம்
[Friday 2018-01-19 17:00]

பெண்கள் பலர் இப்போது ஆண்களைப் போல தாமதமாக திருமணம் செய்வதையே விரும்புகின்றனர். 35 வயதிற்கு மேல் திருமணமாகாமல் இருப்பதால் வரும் பிரச்சனைகளை பார்க்கலாம்.



சருமத்தை பொலிவடையச்செய்யும் பாதாம் பேஷியல்
[Friday 2018-01-19 17:00]

சருமத்தை மென்மையாகவும், பொலிவடையச்செய்யவும் பாதாம் ஃபேஸியலை வாரம் ஒருமுறை செய்து வந்தால் படிப்படிபாக பலனை காணலாம்.



வயிற்றுக்கொழுப்பை குறைக்கும் எளிய வழிமுறைகள்
[Friday 2018-01-19 12:00]

எளிய வழிகளை பின்பற்றினால் வயிற்றுக் கொழுப்பை மட்டுமல்ல, முழு உடல் எடையையும் குறைத்து ஆரோக்கிய வாழ்வு வாழ முடியும்.சரியான முறையில் சாப்பிட்டால் 80 சதவீத கொழுப்பை நிச்சயம் குறைக்க முடியும். ஆரோக்கியமான மற்றும் சீரான உணவு முறையை பின்பற்றும் போது இதை நாம் சாதிக்க முடியும். தேவையான அளவு ஊட்டச்சத்துகளை சாப்பிட்டால் கொழுப்பை குறைக்கலாம்.



நெற்றியில் ஏன் குங்குமம் வைக்க வேண்டும் தெரியுமா?
[Thursday 2018-01-18 17:00]

உடற்கூறு மற்றும் அறிவியல் பூர்வமான உண்மையை பெண்கள் சந்தனம் மற்றும் குங்குமம் நெற்றியில் இடுவதற்கான காரணங்கள் அறியப்பட்டுள்ளது.



கழுத்து, முதுகு வலி பிரச்சனையில் இருந்து விடுபட வேண்டுமா? உங்களுக்கான டிப்ஸ்
[Thursday 2018-01-18 16:00]

நாள் முழுவதும் கம்ப்யூட்டர் அல்லது மொபைலையே பார்த்துக் கொண்டிருப்பதால் நரம்புகள் மற்றும் தசைகள் பாதிக்கப்பட்டு கழுத்து, முதுகு வலி உண்டாகிறது. ஆரம்பத்தில் சாதாரணமாக வலித்தாலும் அதனை கவனிக்காமல் விடும்போது கழுத்தையே திருப்பமுடியாத அளவிற்கு பிரச்சனைகளை கொடுத்துவிடுகிறது. இந்த வலியை குறைக்க வலி மருந்துகளை சாப்பிடுவது நல்லதல்ல. இதற்கு இயற்கையான முறையில் தீர்வளிக்க யோகாவினால் முடியும்.



இரவில் நித்திரைக்கு முன் பற்களைத் துலக்கினால் கிடைக்கும் நன்மைகள்!
[Thursday 2018-01-18 15:00]

இரவில் படுக்கும் முன் பற்களைத் துலக்குவதால், வாயில் பாக்டீரியாக்களின் பெருக்கம் தடுக்கப்படுவதோடு, பற்கள் சொத்தையாகும் அபாயமும் குறையும்.



ரத்த நாளங்களில் கொழுப்பு படிவதைத் தடுக்கும் சப்போட்டா
[Thursday 2018-01-18 10:00]

சப்போட்டா பழத்திலுள்ள சில சத்துப்பொருட்களும், வைட்டமின்களும், ரத்த நாளங்களில் கொழுப்பு படிவதைத் தடுக்கும் சிறப்பு செயல்பாடு உடையன ஆகும்.



தீக்காயம் ஏற்பட்டால் உடனடியாக செய்யவேண்டியவை
[Wednesday 2018-01-17 19:00]

தீப்புண் மிகவும் பயங்கராமனது அதே சமயம் வலி மிக்கது. தீப்புண் உண்டான பிறகு தரப்படுகிற சிகிச்சைகளை விட, முதலில் தருகின்ற முதலுதவி தான் மிகவும் முக்கியமானது. வீட்டில் கவனக்குறைவாக ஏதேனும் சூடான பாத்திரத்தை தொட்டதாலோ அல்லது சூடான பதார்த்தங்கள் கொட்டியதாலோ தீப்புண் உண்டானால் உடனடியாக என்ன செய்ய வேண்டும் என்று அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.



கற்றாழையை ஆண்கள் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?
[Tuesday 2018-01-16 19:00]

இயற்கையாகவே அளவுக்கு அதிக நன்மைகளை தருவது கற்றாழை. அதிக மருத்துவ குணங்களும், ஆண்டி வைரல், பூஞ்சை எதிர்ப்பு பொருள், அழற்சி எதிர்ப்பு பொருள் என அனைத்தும் இதில் கிடைக்கின்றன.



இதய நோய் வராமல் பாதுகாக்க வாரம் 5 நாட்கள் உடற்பயிற்சி அவசியம்
[Tuesday 2018-01-16 11:00]

குறிப்பாக நடைப்பயிற்சி (Walking), மெல்லோட்டம் (jogging), சைக்கிள் பயிற்சி (Cycling), நீச்சல் பயிற்சி (Swimming) போன்ற பயிற்சியின் மூலம் நமது இதயத்தை வலுவாக்க முடியும். முறைப்படி மேற்கொள்ளப்படும் உடற்பயிற்சிகள் நம்மை பலவித நோய்களில் இருந்து பாதுகாக்கின்றன. தினமும் 30 நிமிடங்களில் தவறாமல் செய்யும் உடற்பயிற்சி உடல் ஆரோக்கியத்திற்கு பயன் அளிக்கும். வாரத்திற்கு குறைந்த பட்சம் ஐந்து முறை, முறையான உடற்பயிற்சி செய்தால் கீழ்காணும் நன்மைகளைப் பெறலாம்.


Mahesan-Remax-169515-Seithy
Tharsi-home-15-10-2016
Easankulasekaram-Remax-300716
SELVI-HOMES-09-02-17
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா