Untitled Document
April 25, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
விக்ரம் வேதா படத்தால் மக்களின் அன்பையும் நன்மதிப்பையும் சம்பாதித்திருக்கிறேன்: - விஜய் சேதுபதி நெகிழ்ச்சி
[Friday 2017-12-15 08:00]

புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் மாதவன் - விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி 100 நாட்களை கடந்து ஓடிக் கொண்டிருக்கும் `விக்ரம் வேதா' படம் எனது வரலாறில் முக்கிய இடத்தில் இருக்கும் என்று விஜய் சேதுபதி கூறினார்.புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் கடந்த ஜுலை 21-ஆம் தேதி வெளியாகியது.

விஜய் சேதுபதி - மாதவன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படம் வெளியானது முதலே நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த படம், 100 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கதிர், வரலட்சுமி, ஷ்ரத்தா ஸ்ரீநாத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்தின் 100-வது நாள் கொண்டாட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி, கதிர், இயக்குநர் புஷ்கர் - காயத்ரி, தயாரிப்பாளர் சசிகாந்த், சாம்.சி.எஸ் உள்ளிட்ட `விக்ரம் வேதா' படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.

இதில் விஜய் சேதுபதி பேசும் போது, எனக்கு தெரிந்தவரை, தர்மதுரை படத்திற்கு பிறகு, எனது நடிப்பில் 100 நாட்களை கடந்து ஓடும் படமாக `விக்ரம் வேதா' அமைந்ததில் மகிழ்ச்சி. பலரும், பல்வேறு விதத்தில் பாராட்டிய படம் தான் `விக்ரம் வேதா'. ஆனால் இந்த படத்தால் சுயநலமாக நான் அடைந்தது என்னவென்றால், மக்களின் அன்பையும், நன்மதிப்பையும் சம்பாதித்திருக்கிறேன். என்னை வேறுவிதமாகக் காட்டி மக்களிடம் கொண்டு சேர்த்த புஷ்கர் - காயத்ரிக்கு நன்றி. அதே போல் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. எனக்கு வரலாறு என்று ஒன்று எழுதினால் அதில் இந்த படம் முக்கிய இடத்தில் இருக்கும் என்றார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா