Untitled Document
April 23, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
சுனாமி அனர்த்தத்தின் 13 ஆவது வருடம் - வடக்கு, கிழக்கில் அஞ்சலி! Top News
[Tuesday 2017-12-26 20:00]

சுனாதி அனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் 13 ஆண்டுகளாகும் நிலையில் இலங்கையின் பல இடங்களிலும் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்ற து.

சுனாமிப் பேரலையால் உயிரிழந்த உறவுகளின் நினைவேந்தல் நிகழ்வு கண்ணீருக்கு மத்தியில் யாழ். வடமராட்சி கிழக்கு உடுத்துறையில் இன்று காலை ஆரம்பமானது. இதன்போது கடந்த 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் திகதி ஏற்பட்ட கடல் கொந்தளிப்பில் உயிர்நீத்த உறவுகளுக்கு மலர் தூவி, தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆழிப்பேரலையினால் அதிகளவிலானவர்கள் உயிரிழந்த கல்லடி, திருச்செந்தூர் பகுதியில் இன்று காலை அஞ்சலி நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டன.திருச்செந்தூர் வாழ் பொதுமக்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மட்டக்களப்பு, அம்பாறை மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் ஆகியோர் தலைமையில் வழிபாடுகள் நடத்தப்பட்டன.

இதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களுக்கு மலர்த்தூவி, விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.மேலும், சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில், செங்கலடி புனித நிக்கொலஸ் தேவாலயத்தில் விசேட ஆராதனைகளும், வழிபாடுகளும் இன்று இடம்பெற்றன.அத்துடன் உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி இதன்போது அஞ்சலி செலுத்தப்பட்டது.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
Ambikajewellers-01-08-2021-seithy
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா