Untitled Document
March 28, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
மூன்று தாயக உறவுகளின் உயிர்கள் கனடா வாழ் எம் உறவுகளால் காப்பாற்றப்பட்டுள்ளது: Top News
[Thursday 2017-12-28 18:00]

டிசம்பர் மாதத்தில் மட்டும் மூன்று இருதய சத்திர சிகிச்சைகள் இலங்கையில் உள்ள Lanka மருத்துவ மனையில் கனடா மின்னல் செந்தில் குமரனின் நிவாரண அமைப்பின் ஊடாக நடைபெற்று நோயாளிகளின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது. நாற்பது வயதான மூன்று (03) பிள்ளைகளின் தந்தையான மட்டக்களப்பு பழுகாமத்தை சேர்ந்த திருச்செல்வத்திற்கும், முப்பத்தி இரண்டு வயதான இரண்டு(02) பிள்ளைகளின் தந்தையான மட்டக்களப்பு திராய்மடுவை சேர்ந்த தங்கவடிவேல் அவர்களுக்கும், யாழ்ப்பாணம் புத்துரை சேர்ந்த ஆறு வயது சிறுவன் சயந்தன் ஆகிய மூன்று ( 3 )நோயாளிகளின் வாழ்வில் ஒரு பெரும் நிம்மதி மூச்சை கனடா தேசத்து உறவுகள் செந்தில் குமரன் ஊடாக செய்தமைக்கு ஈழத்து உறவுகளாகிய நாங்கள் உங்களை இரு கரம் கூப்பி வணங்குகின்றோம்.

இதில் சிறப்பு என்னவென்றால் செந்தில் குமரனின் நேர்மையும் நாணயமும், சேர்த்த பணத்திற்கான ஆதாரமும் அவரின் முகப்பக்கத்திலும் இணைய தளத்திலும் வெட்ட வெளிச்சமாக தெரியப்படுத்துவது. இதன் காரணமாகவே அவரால் 28 சத்திர சிகிச்சைக்கான நிதியினை மக்களிடமிருந்து திரட்டக் கூடியதாக உள்ளதென்பது தெளிவாகின்றது .

சமீபத்தில் தனது பிறந்த நாள் வைபவத்தை நிதி சேர்ப்பு நிகழ்வாக வீட்டிலேயே கொண்டாடி 21 லட்ஷம் ரூபாயை சேர்த்து திருச்செல்வம் மற்றும் தங்கவடிவேல் ஆகியோரின் இருதய அறுவை சிகிச்சையை நடாத்தி முடித்தவர் என்பது ஒரு முன்னுதாரணமான விஷயமாகும். எனவே அன்பார்ந்த உறவுகளே இவர் செய்து வருகின்ற மகத்தான சேவைக்கு நிதி உதவி செய்ய விரும்புவோர் இவரது இணையத்தளத்துக்கு சென்று ஒத்துழைப்பு வழங்குமாறு மிகவும் தயவாககேட்டுக்கொள்கின்றோம் இதோ அவரது இணையத்தளமுகவரி

www.heartsforhumanity.ca

நன்றி

இப்படிக்கு
மட்டு நகர் மக்கள்

  
  
   Bookmark and Share Seithy.com


Airlinktravel-2020-01-01
Mahesan-Remax-169515-Seithy
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா