Untitled Document
April 25, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமர்வு - 2018: Top News
[Saturday 2018-01-20 19:00]

தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை எனும் ஈழத்தமிழ் மக்களின் அரசியல் பெருவிருப்பின் சனாநாயக வடிவமாக விளங்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு கனடாவில் நேற்று 19.01.2018 கூடியுள்ளது. எதிர்வரும் 21ம் நாள் வரை ரொறன்ரோவில் Aaniin community centre, 5665. 14th Ave. ( Between Middlefield and Vanni st )Markham, On L3S 3K எனும் முகவரியில் அமைந்த இவ்விடத்தில் நடைபெற்ற அமர்வில் ஒவ்வொரு நாடுகளில் இருந்தும் அரசவை உறுப்பினர் நேரடியாக பங்கெடுத்துள்ளனர்.

மேற்சபை உறுப்பினர்கள், மதியுரைக்குழுவினர் என பல வள அறிஞர்களும் அமர்வில் பங்கெடுப்பதோடு, அமைச்சர்களின் செயலறிக்கைகள், கருத்துரைகள், விவாதங்கள் என இந்த அமர்வு விரிவாக இடம்பெற்றுள்ளது.

தமிழர் தேசத்தின் மீது சிறிலங்கா திணித்துள்ள உள்ளாட்சித் தேர்தலும், தமிழர் விடுதலைப் போராட்டமும் மற்றும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடு குறித்த ஒரு விமர்சன அரங்கும் இந்த அமர்வில் பிரதானமாக விவாதிக்கப்பட்டிருந்தது.

இதனைவிட நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கனடாப்பணிமனை, 21ம் திகதியன்று பொதுமக்கள் சந்திப்பிற்கான பொதுக்கூட்டம் ஒன்றுக்கும் ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

யதுர்சன் சொர்ணலிங்கம்

TGTE SCH MEDIA

லண்டன்

  
  
   Bookmark and Share Seithy.com


Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
NKS-Ketha-04-11-2021
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா