Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 25, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
பிரான்ஸ் நோர்மன்டி கான் பல்கலைக்கழகத்தில் ஒலித்த இலங்கையின் இறுதி யுத்த சாட்சியங்களின் குரல்கள் ! Top News
[Wednesday, 2012-05-16 11:30:21]

முள்ளிவாய்க்கால் மூன்றாமாண்டினை உலகத் தமிழினம் நினைவேந்தி வரும் நிலையில் சிங்கள பௌத்த பேரினவாத அரசின் தமிழினஅழிப்புக் கொடுமைகளின் நேரடிச்சாட்சியங்களின் குரல்கள் பிரான்ஸ் - நோர்மன்டிக் கோன் பல்கலைக்கழகத்தில் ஒலித்துள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரான்சின் வட பிராந்தியத்திற்கான மக்கள் பிரதிநிதி வள்ளுவன் பாக்கியசோதி ஒருங்கிணைப்பில் இரண்டாம் உலகப் போரின் வரலாற்றுச் சாட்சியமாக விளங்கும் வட பிரான்சின் நோர்மன்டி- கோன் பல்கலைக்கழகத்தில் கருத்தரங்கொன்று 15-05-2012 செவ்வாய்கிழமையன்று இடம்பெற்றிருந்தது.

இந்தக் கருத்தரங்கிலேயே போரின் நேரடிச் சாட்சியங்களாக , போராளிகள் மற்றும் பொதுமக்கள், தமது நேரடி அனுபவங்களை அங்கு பகிர்ந்துகொண்டனர். சொலிடாரித்தே தமிழீழம் என்ற பிரெஞ்சு அமைப்பு மற்றும் ஆகிய எப்.எஸ்.ஈ. என்ற மாணவர் ஒன்றியம் இக்கருத்தரங்கிற்கு உறுதுணை வழங்க பிரான்ஸ் தமிழர் நடுவம் தனது பூரண ஒத்துழைப்பை வழங்கியிருந்தது.

எதிர்வரும் நாடாளுமன்றத ;தேர்தலில் அத்தொகுதியில் இடதுசாரிக்கட்சியின் சார்பில் போட்டியிடவுள்ள சோபியா லியா அவர்களின் இக்கருத்தரங்கினை நெறிப்படுத்தியிருந்தார். இக்கருத்தரங்கில் பல்கலைக்கழக மாணவர்கள், பேராசிரியர்கள், சமூக அரசியல் செயற்பாட்டாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் என பல பிரென்சு நாட்டவர்கள் பங்கெடுத்திருந்தனர்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உள்துறை அமைச்சர் நாகலிங்கம் பாலசந்திரன் இளையோர் பிரதிநிதி மகிந்தன் சுப்பிரமணிம் மற்றும் தகவற்துறை துணை அமைச்சர் சுதர்சன் சிவகுருநாதன் ஆகியோரும் பங்கெடுத்து கருத்துக்களை பகிர்ந்து கொண்டிருந்தனர்.

கருத்தரங்கில் போரின் நேரடிச் சாட்டிசியங்களின் கருத்துக்களுக்கு முன்னதாக சனல் -4 தொலைக்காட்சியின் இலங்கையின் கொலைக்களங்கள் ஆவணப்படம் திரையிடப்பட்டது.

துமிழர்கள் மீதான சிறிலங்காவின் இனவழிப்பின் காட்சிகளை திரையில் கண்ட அத்தனை விழிகளும் துயரம் பொங்க விம்மி அழுத காட்சிகள் அரங்கில் வேறொரு பரிமாணத்தைத் தோற்றுவித்தது.

தொடர்ந்து இறுதிக் கணம்வரை அங்கிருந்து, பின் வெளியேறிவந்த போராளிகள் மற்றும் பொதுமக்களின் அனுபவங்களின் கருத்துக்களுக்கான களம் திறக்கப்பட்டது.

பல்லைக்கழக மாணவர்கள், ஊடகவியலாளர்கள், கேள்விகளைத் தொடுத்து, அவர்களின் பதில்களைப் பதிவுசெய்தனர்.

பிரெஞ்சு வானொலிகள் இரண்டு, மற்றும் பிரெஞ்சுப் பத்திரிகையாளர்கள் பலரும் இதில் கலந்துகொண்டனர்.

சொலிடாரித்தே தமிழீழம், நாடுகடந்த தமிழீழம், தமிழர் நடுவம் ஆகிய அமைப்புக்களின் பிரதிநிதிகள், தமது கருத்துக்களையும், தமிழ்மக்களின் தேவைகளையும் அங்கு வந்திருந்தவர்கள் மத்தியில் முன்வைத்தனர்.

சர்வதேசத்தை முற்றாக அலட்சியப்படுத்திவிட்டு, சர்வதேச சட்டங்கள் மனிதநேய விழுமியங்களை முற்றாக நிராகரித்துவிட்டு, இந்த நூற்றாண்டில் மிகக்கொடூரமான இப்படுகொலையை நடத்திய சிறீலங்கா அரசு, அனைத்துலக நீதிமன்றத்தின் முன்நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

தமிழர்கள் தொடர்ந்து இனப்படுகொலைக்கு உள்ளாகின்றார்கள் என்ற பேருண்மை ஏற்றுக்கொள்ளப்பட்டு, அம்மக்களின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படவேண்டும் என்றும், இதற்காக பிரெஞ்சு அரசாங்கம் முன்னின்று செயற்பட்டு, சர்வதேச சமூகத்தின் கருத்தை இதன்பால் திரட்டவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இன்றும், சிறைக்கூடக்களிலும் தடுப்புமுகாம்களிலும் அடைக்கப்பட்டு வாடும் தமிழ்மக்களின் நிலைகுறித்து எடுத்துவிளக்கிய போராளிகள் அவர்களின் விடுதலைக்கு சர்வதேச சமூகம் சிறீலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் விதத்தில் பிரெஞ்சு அரசாங்கம் ஆவன செய்யவேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நோர்மன்டியில் கான் பல்கலைக்கழகத்தில், முதல்முதலாக இந்த நிகழ்வு நடைபெற்றிருப்பதை, நன்றியுணர்வோடு சுட்டிக்காட்டிய தமிழர்நடுவப் பிரதிநிதி, தமிழ்மக்களின் நிலையை, இந்நிகழ்வினூடாக ஓரளவேனும் புரிந்தகொண்டிருக்கும் நீங்கள் அந்த மக்களுக்கு எவ்வகையில் உதவிசெய்யலாம் என கேட்டிருந்தார்.

தமிழ்மக்களிற்கு வரலாறு நெடுகிலும் நடத்தப்பட்ட பெருங்கொடுமைகள் குறித்து தற்போதுதான் தாம் அறிந்துகொள்வதாகவும், தமிழ்மக்களின் உணர்வுகளோடு தாம் இணைந்திருப்பதாகவும், தமிழ்மக்களால் மேற்கொள்ளப்படும் போராட்டங்களில் தாம் நேரடியாகக் கலந்துகொண்டு, தமிழ்மக்களின் கரங்களைப் பலப்படுத்துவோம் என்றும் அங்கிருந்த அனைவரும் உறுதிபடத் தெரிவித்தனர்.

ஆர்மேனிய மக்கள் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டார்கள் என்பதை ஏற்றுக்கொண்டு அறிவித்த பிரேஞ்சு அரசாங்கம் சிறீலங்கா அரசால் தமிழ்மக்கள் இனப்படுகொலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர் என்பதை ஏற்றுக்கொண்டு அறிவிக்கவேண்டும் என்னும் கோரிக்கையை முன்வைத்து கையொப்பப் போராட்டம் நடத்திவரும் நாடுகடந்த தமிழீழ அரசின் கையொப்பப் போராட்ட படிவங்களில், அங்கு வருகைதந்திருந்த அனைவரும் கையொப்பம் இட்டு தமது ஆதரவை வழங்கியிருந்தனர்.

நிகழ்வு, இரவு 23.30 வரையும் நடைபெற்றது. வந்திருந்த அனைவரும் பொறுமையுடனும், ஆர்வமாகவும், இறுதிவரை நிகழ்வில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இக்கருத்தரங்கிற்கு முன்னதாக பிற்பகல் ஐந்து மணிக்கு நோர்மொண்டி பிராந்திய வானொலியொன்று போராளிகளுடனான கேள்வி பதில் நிகழ்ச்சியினை, நேரடியாக ஒலிபரப்புச் செய்திருந்தமை இங்கு குறிப்பிடதக்கது.

நாதம் ஊடகசேவை

  Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

பாடுமீன் சமூக அபிவிருத்தி சங்கசங்கம்(பிரான்ஸ்) ஏற்பாட்டில் இலவச பாட வகுப்புக்கள் ஆரம்ப நிகழ்வு!Top News
[Thursday, 2013-05-23 19:09:07]

இன்று(புதன் கிழமை) மட்டக்களப்பு மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய பகுதியும் எல்லைப்புற பகுதியுமான 40 வட்டை விபுலானந்தா வித்தியாலயத்தில் இலவச பாடவகுப்புக்களை ஆரம்பிப்பதற்கான நிகழ்வுகள் பி.பகல் 2 மணியளவில் பாடுமீன் சமூக அபிவிருத்திச் சங்கத்தின் ஆலோசகர் திரு.பி.தயாபரன் அவர்களின் தலைமையில் ஆரம்பமானது. இந்நிகழ்விற்கு மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்விப்பணிப்பாளர் திரு.க.பாஸ்கரன் அவர்கள் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டார்.அத்தோடு, மட்டக்களப்பு மேற்கு வலய பிரதிக் கல்விப்பணிப்பாளர் (நிர்வாகம்) திரு.ஞா.சிறிநேசன் , பட்டிப்பளை பிரதேச கோட்டக்கல்வி அதிகாரி திரு.ந.தயாசீலன், 40 வட்டை விபுலான்ந்தா வித்தியால அதிபர் மற்றும் மாவடிமுன்மாரி அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையின் பிரதிஅதிபர் ஆகியோர். அதிதிகளாக கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.



கனடா - பிரித்தானியா - பிரான்ஸ் : தமிழீழ சுதந்திர சாசன முரசறைவும் மே-18 தமிழீழத் தேசிய துக்க நாள் நிகழ்வரங்கும் ! Top News
[Thursday, 2013-05-23 11:26:46]

தமிழீழ சுதந்திர சாசன முரசறைவினை மையாக கொண்டு முள்ளிவாய்க்கால் நான்காம் ஆண்டுப் பெருவலியினை கூட்டுநினைவு கொள்ளும் மே-18 தமிழீழத் தேசிய துக்க நாள் நிகழ்வுகள் கனடா, பிரித்தானியா, பிரான்சு ஆகிய நாடுகளில் இடம்பெற்றுள்ளன. தமிழீழ சுதந்திர சாசன முரசறைவின் பிரதான நிகழ்வு அமெரிக்காவில் இடம்பெற்றிருந்த சமவேளை, பிரித்தானியா, கனடா (ரொறன்ரோ) மற்றும் பிரான்சு ஆகிய நாடுகளில் ஒன்றுகூடிய தமிழர்கள் உணர்வுபூர்வமாக சுதந்திர சாசனத்தினை முரசறைந்து நினைவேந்திக் கொண்டிருந்தனர்.



கனடா ஒன்ராரியோ பாராளுமன்றம் முன்றலில் இடம்பெற்ற தமிழினப் படுகொலை நினைவு நாள் - மே 18, 2013 Top News
[Thursday, 2013-05-23 09:43:07]

மே 18, 2013, சனிக்கிழமை, மாலை 5:00 மணிக்கு கனடாவில் ரொறன்ரோ மண்ணில், குயின்ஸ் பார்க் (ஒன்ராரியோ பாராளுமன்ற) முன்றலில், முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் நான்காம் ஆண்டு நினைவாக 'தமிழினப் படுகொலை நாள் 2013' நிகழ்வானது மாபெரும் மக்கள் எழுச்சியோடு ஓரணியில் அணி திரண்ட பேரணியாக எழுச்சிகரமாக நடைபெற்றது. விடுதலைக்காக விதைக்கப்பட்டவை என்றோ ஒரு நாள் தலைமுறைகள் கடந்தாலும் மறுபடியும் பலமுறைகள் முளைத்தே தீரும் என்பதற்கு முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை ஒரு சிறந்த எடுகோள். கனடியத் தமிழர் தேசிய அவையின் ஒருங்கிணைப்பில் கனடாத் தமிழர் சமூகமும், மாணவர் சமூகமும் மற்றும் ஏனைய அமைப்புக்களையும் பொதுமக்களையும் உள்ளடக்கிய மக்கள் சமூகமாக ஒருங்கிணைந்து இந்த மாபெரும் நிகழ்வு நடந்தேறியது.



இராணுவத்தினரின் காணி சுபீகரிப்பு குறித்து ஐ.நா அதிகாரிகளுக்கு ஹத்துருசிங்க விளக்கம்!Top News
[Wednesday, 2013-05-22 19:59:38]

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தின் தேவைக்காக சில காணிகள் இனங்காணப்பட்டுள்ளன. இராணுவம் பொறுப்பேற்கவுள்ளதாக கூறப்படும் காணிகளின் அளவை சிலர் வேண்டுமென்றே அதிகரித்துச் சொல்வதாக யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க, ஐக்கிய நாடுகள் சபையின் உயர்மட்ட அதிகாரிகளுக்கு விளக்கமளித்துள்ளார். ஐ.நா.வின் மனிதாபிமான ஒத்திசைவாக்க அலுவலகத்தின் உயரதிகாரிகளான அக்னெஸ் அஸகென்பே மற்றும் மார்க் பிரளோபா ஆகியோருக்கு யாழ். வலிகாமம் வடக்கிலுள்ள நிலங்களை இராணுவம் பொறுப்பேற்பது தொடர்பான பிரச்சினை குறித்து விளக்கமளிக்கும் போதே யாழ். கட்டளைத் தளபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பின் போது, இராணுவம் பொதுமக்களின் காணிகளை பொறுப்பேற்பதாக கூறுவதை அவர் மறுத்துள்ளார். பலாலி விமான நிலையம், காங்கேசன்துறை துறைமுகம் என்பவற்றின் அபிவிருத்திக்காக காணிகள் பொறுப்பேற்கப்படுவதாகவும் அவர் இதன்போது கூறியுள்ளார்.



இந்திய வீடுகள் அமைக்கும் பணி மட்டக்களப்பில் ஆரம்பம் - இந்திய உயர்ஸ்தானிகர் ஆரம்பித்து வைத்தார்!Top News
[Wednesday, 2013-05-22 19:36:00]

கிழக்கு மாகாணத்தில் இந்திய உதவியுடனான வீடமைப்பு திட்ட வேலைகள் இன்று புதன்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று கிராமங்களில் ஆரம்பித்து வைக்கப்பட்டன. பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச, இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே. காந்தா ஆகியோர் வீட்டுத் திட்டங்களுக்கான வேலைகளை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தனர். மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி பிரதேச செயலக நிர்வாக பிரிவிலுள்ள மூன்று கிராமங்களில் நடைபெற்ற இது தொடர்பான நிகழ்வுகளின் போது, சிங்கள கிராமமான மங்களாகம கிராமத்திலே முதலாவது வைபவம் இடம்பெற்றது.



வாழைச்சேனை கல்குடா வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். Top News
[Wednesday, 2013-05-22 08:57:08]

இச்சம்பவம் இன்று புதன்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.

வாழைச்சேனை இந்துக்கல்லூரியில் கணித பாடம் கற்பிக்கும் சிவநேசன் கேமராஜன் (வயது 30) என்பவரே இவ்வாறு ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார். அவரோடு இப்பாடசாலையில் சிற்றூழியராக கடமையாற்றும் மார்கண்டு அகிலன் (வயது 30) என்பவரும் படுகாயமடைந்துள்ளார்.



விடுதலைக்கான இன்றைய கனவும் நாளைய வெற்றியும்: - முரசறையப்பட்ட தமிழீழ சுதந்திர சாசனத்தின் உள்ளடக்கம் வெளிவந்தது ! Top News Top News
[Tuesday, 2013-05-21 19:57:07]

2009ம் ஆண்டுக்கு பின்னரான ஈழவிடுதலைப் போராட்டத்தின் விடுதலைப்பாதையின் பெரும் இராஜதந்திர முன்னகர்வாக மே-18 முள்ளிவாய்க்கால் நான்காம் ஆண்டு கூட்டுநினைவேந்தல் நாளில் உலகத் தமிழர்களின் முரசறைவாக அமைந்த தமிழீழ சுதந்திர சாசனத்தின் உள்ளடக்கம் வெளிவந்துள்ளது. தமிழீழத் தாயக மக்கள் மக்கள் உட்பட 1 இலட்சத்துக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ்மக்கள் பங்கெடுத்த உருவாக்கியிருந்த தமிழீழ சுதந்திர சாசனத்தின் உள்ளடக்கத்தின் விபரம் :



ஈழத்தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் இந்தியாவிற்கு தோல்வி - ஏற்றுக்கொண்டார் இந்திய உயர்ஸ்தானிகர்! Top News
[Tuesday, 2013-05-21 15:36:16]

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் இந்தியா தோல்வி கண்டுள்ளது எனவும் இதனை தான் ஒப்புக்கொள்வதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே. காந்தா, தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரிடம் ஒப்புக் கொண்டுள்ளார். நேற்று கொழும்பு ஹலதாரி ஹோட்டலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் இந்திய உயர் ஸ்தானிகரக்கு விசேட விருந்துபசாரமொன்று வழங்கப்பட்டது. அதில் இரு தரப்பினருக்குமிடையெ இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்திய உயர்ஸ்தானிகர் மேற்கண்டவாறு குறிப்பிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.



முள்ளிவாய்க்கால் தமிழ் இன அழிப்பு நினைவு சுமந்து யேர்மனியில் தொடரும் கவனயீர்ப்பு நிகழ்வுகள் Top News
[Tuesday, 2013-05-21 09:13:12]

முள்ளிவாய்க்கால் தமிழ் இன அழிப்பு நினைவு சுமந்து யேர்மனியில் தொடரும் கவனயீர்ப்பு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழ் இன அழிப்பு நினைவு சுமந்து யேர்மனி பெர்லின் மற்றும் பீலேபெல்ட் நகரங்களில் கவனயீர்ப்பு மற்றும் இன அழிப்பு கண்காட்சி முன்னெடுக்கப்பட்டது . யேர்மனியின் தலைநகரத்தில் மக்கள் நடமாடும் நகர மத்தியில் கவனயீர்ப்பு நிகழ்வு பல்லின சமூகத்தினரிடம் செல்லும் வகையில் சிறீலங்கா அரசு ஈழத்தமிழர்கள் மீது முன்னெடுக்கும் இன அழிப்பை வெளிக்காட்டும் முகமாக யேர்மன் மொழியில் தகவல்கள் வாசிக்கப்பட்டு மற்றும் பதாதைகள் தாங்கி துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டது .



மே18 நான்காம் ஆண்டு நினைவேந்தல், மயிலாடுதுறையில் நடைபெற்றது. Top News
[Monday, 2013-05-20 21:10:53]

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை போர்க்குற்றநாள் நினைவேந்தல் நிகழ்வு நேற்றுமுன்தினம் மயிலாடு துறையில் இடம்பெற்றது (18 05 2013). இதில் ஏராளமான தமிழின உணர்வாளர்கள் கலந்துகொண்டதோடு படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு அஞ்சலிகளையும் செலுத்தியுள்ளனர்.



நெதர்லாந் நாட்டில் இடம்பெற்ற தமிழினவழிப்பின் 4ம் அண்டு நினைவு நாள். Top News
[Monday, 2013-05-20 20:22:03]

சிங்கள பேரினவாதம் 60 ஆண்டுகளாக தமிழிழ மக்கள் மீது திட்டமிட்ட தமிழினவழிப்பை மேற்கொள்கின்றது. சிங்கள பேரினவாதம் செய்த தமிழினவழிப்பின் உச்சக்கட்டமே 18. வைகாசி 2009ம் ஆண்டாகும். வைகாசி 18ம் திகதியை உலகெங்கும் வாழ்கின்ற தமிழீழ உறவுகள் ஓர் துயரநாளாகவும் தமிழீழ மண்ணை மீட்டெடுக்க வேண்டுமென உறுதியெடுக்கின்ற நாளாகவும் எழுச்சிப்பூர்வமாக நினைவுகூர்ந்து வருகின்றார்கள்.



வவுனியாவில் 7 வயதுச் சிறுமி மீது பாலியல் வல்லுறவு - நீதி கோரி பாரிய ஆர்ப்பாட்டம்!Top News
[Monday, 2013-05-20 15:33:34]

வவுனியா நெடுங்கேணி சேனைப்பிலவில் 7 வயது சிறுமியொருவரைப் பாலியல் பலாத்காரம் செய்தவரை உடன் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் எனக்கோரி திங்கட்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருக்கின்றது. சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் பேரில் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருமளவிலான மக்கள் கலந்து கொண்டு சிறுவர்களுக்கும் பெண்களுக்கும் எதிராக நடத்தப்படுகின்ற சித்திரவதைகள் வன்முறைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்திருக்கின்றனர்.



கோவையில் நடைபெற்ற மே 18 போர்க்குற்றநாள் நிகழ்வில் பெருமளவு ஈழ விடுதலை ஆதரவாளா்கள் பங்கேற்ப்பு. Top News
[Monday, 2013-05-20 10:26:35]

கோவையில் நேற்றையதினம் (18 05 2013) முள்ளிவாய்க்கால் இனப்படுகொல போர்க்குற்றநாள் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் ஏற்ப்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் பெருமளவான தமிழீழ விடுதலை ஆதரவாளா்களும் செயற்ப்பாட்டாளர்களும் கலந்துகொண்டனர்.



கனடாவில் நாடு கடந்த தமிழீழ அரசின் சார்பில் நடைபெற்ற தமிழீழ தேசிய துக்க நாள் நிகழ்வு Top News
[Monday, 2013-05-20 09:15:07]

"ஈழத் தமிழ் மக்களுக்கான தீர்வு சுதந்திர இறைமை உடைய தமிழீழ அரசே"
- தமிழீழ சுதந்திர சாசன முரசறைவில் பிரதமர் உருத்திரகுமாரன் வலியுறுத்தினார்.

"தமிழீழ மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் வடக்கு, கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கி அமைய விருக்கும் தமிழீழ அரசு ஜனநாயக விழுமியங்களை அடிப்படையாகக் கொண்டிருக்கும். சுதந்திர இறைமை உடைய அரசே தமிழ் மக்களுக்கு அவசியம். மக்களால் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளுக்கு சட்டமியற்றி, அதனை அமுல்படுத்தும் உரிமை இருக்கும். சட்டத்தின்முன் தமிழீழ மக்கள் அனைவருமே சரிசமமாக நடாத்தப்படுவார்கள். தமிழீழ அரசாங்கம் மதசார்பற்றதாக இருக்கும். தமிழ், முஸ்லீம் மக்களது தனித்துவம் பேணப்படும்.



மெல்பேணில் நடைபெற்று வரும் தமிழர் இனவழிப்பு புகைப்படக் கண்காட்சி! Top News
[Monday, 2013-05-20 08:08:59]

அவுஸ்திரேலியா மெல்பேர்ண் நகரில் ஞாயிற்றுக்கிழமை (19-05-2013) அன்று தமிழர் இனவழிப்பை நினைவுபடுத்தும் புகைப்படக் கண்காட்சி தொடங்கிவைக்கப்பட்டது. மதியம் இரண்டு மணிக்குத் தொடங்கப்பட்ட இந்நிகழ்வு தமிழ் ஏதிலிகள் கழகத்தைச் (Tamil refugee Council) சேர்ந்த Ron Guy தலைமையில் இடம்பெற்றது. இக்கண்காட்சியில், முள்ளிவாய்க்கால் பேரழிவின் இறுதிக்காலப்பகுதியில் எடுக்கப்பட்ட, இதுவரை வெளிவராத புகைப்படங்களும் போரின் பின்னான எமது மக்களின் அவல வாழ்வை வெளிப்படுத்தும் புகைப்படங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இப்படங்கள் அனைத்தும் முள்ளிவாய்க்கால் காலப்பகுதி தொடக்கம் கடந்த ஆண்டின் இறுதிவரை தமிழர் தாயகத்தில் நடைபெற்ற தமிழின அழிப்பின் சாட்சியமாக உள்ளன. இப்படங்களில் பெரும்பாலானவற்றைப் படம்பிடித்து பாதுகாப்பாக அந்த ஆவணங்களை அவுஸ்திரேலியா வரை கொண்டு வந்து சேர்ந்த்தவரும் நேரடியாக இக்கண்காட்சித் தொடக்க நிகழ்வில் கலந்துகொண்டார்.


Mahesan supramaniyam 031109
RoyaShades-l2011(04-12-11)
INNSYS-20120930
AJRwindows22.05.13
Ramans2011
TamilsGuid-191012-2013
Canada Kanthasamy Kovil
NIRO-DANCE-100213
TDE_Computers2011
Suresh-remax-2013-01-01
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com