Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 20, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
ஈழத்தமிழர்கள் மீது சிங்கள அரசு தொடரும் இனவழிப்பு - யேர்மனியில் நடைபெற்ற இளையோர்களின் நிகழ்வு: Top News
[Wednesday, 2012-06-13 11:24:08]

யேர்மனி Rheinland Pfalz மாநிலத்தில் சென்ற சனிக்கிழமை பல்லின சமூகத்தினருக்காக நடைபெற்ற கலாச்சார நிகழ்வில் தமிழ் இளையோர்கள் தமிழர்கள் மீது சிங்கள அரசு மேற்கொள்ளும் இனவழிப்பை கலை நிகழ்வின் ஊடாக வெகுசிறப்பாக எடுத்துக்காட்டினார்கள் .

500 க்கும் மேலான யேர்மனியர்கள் கலந்துகொண்ட இவ் நிகழ்வில் பலர் இப்படியான கொடுமைகளுக்கு தமிழ் மக்கள் முகம் கொடுக்கும் செய்தி தாம் இதுவரை ஆழமாக அறியவில்லை எனவும் அதேநேரம் இன்றைய உலகில் இப்படி நடந்திருப்பது மிக கவலை அளிப்பதாகவும் தெரிவித்தனர் .

அத்தோடு இவ் நிகழ்வில் Landau நகர உள்ளூர் அரசியல்வாதிகள் கலந்துகொண்டு தமிழ்மக்களுக்கு தமது ஆதரவை தெரிவித்தனர் . இளையோர்களால் வழங்கப்பட்ட நாட்டிய நாடகத்தில் புலத்தில் ஈழத்தமிழர்கள் தாம் வாழும் அந்தந்த நாடுகளில் பல்லின சமூகத்துடன் வாழ்ந்தாலும் தமது இனம் தாயகத்தில் அழிக்கப்படுவதை ஒருகாலமும் விடமாட்டார்கள் என்றும் அதை தடுத்து நிறுத்த பல்லின சமூகத்தின் ஆதரவை நாடிநிற்கின்றார்கள் என கருப்பொருளாக அமைத்திருந்தார்கள் .

தாம் புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் தமிழின அடையாளங்களை பேணும்வகையில் இங்கு வாழ்கின்றார்கள் என்று தமிழ்த் தேசியக் கொடியை உயர அசைத்து வீரத்துடன் நடனம் புரிந்தார்கள் .இவ் நிகழ்வை முன்னெடுத்த இளையோர்களுக்கு எமது பாராட்டை தெரிவித்துக்கொள்கின்றோம் .

யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை

  Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

யேர்மனியில் எழுச்சியுட​ன் நடைபெற்ற தமிழ் இனவழிப்பு நாள் - 2013!Top News
[Sunday, 2013-05-19 14:58:17]

ஒட்டுமொத்த உலகச் சதியுடன், சிறீலங்கா பயங்கரவாத அரசாங்கம் தமிழீழத்தில் நடாத்திய இனவழிப்பு நாளான மே-18 இன் நினைவுநாள் நேற்று யேர்மனியின் டுசில்டோர்ப் நகரில் எழுச்சியுடன் நடைபெற்றது. பிற்பகல் 14:00 மணியளவில் டுசில்டோர்ப் தொடரூந்து நிலையத்தின் முன்பாக ஆரம்பித்த மக்களின் பேரணி , கோட்டொலிகள் , பதாதைகள் அடங்கலாக நகர நிகழ்வுத் திடலை நோக்கி நகர ஆரம்பித்தது. முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட இனவழிப்புக் கொடூரங்களை நினைவுபடுத்திய பதாதைகளை மக்கள் ஏந்தியிருந்தனர். வீதியின் இருமருங்கிலும் நின்ற யேர்மனிய மற்றும் வெளிநாட்டு மக்களுக்குத் தெளிவுபடுத்தும் வகையில் துண்டுப்பிரசுரங்கள் விநியோக்கிக்கப் பட்டன. எமது மண்ணில் நடைபெற்ற தமிழின அழிப்பினை நினைவுபடுத்தும் வகையில், அதற்கு நியாயம் கோரும் வகையிலும் எழுப்பப்பட்ட கோட்டொலிகள் வெளிநாட்டவர்களின் கவனத்தை ஈர்த்தன.



இன்னொரு இனத்தை அழித்து விழா கொண்டாடுவதுதான் வெற்றி விழாவா?: முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் அரியநேந்திரன் Top News
[Sunday, 2013-05-19 08:32:44]

தமிழ் மக்களுக்கு சுதந்திரமான அரசியல் தீர்வு விடுதலை எப்போது கிடைக்கின்றதோ, அது வரையும் எமது பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளுகளை நினைவு கூர்ந்து பிராத்தனை செய்யும் வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். மட்டக்களப்பிலுள்ள இலங்கை தமிழரசுக்கட்சியின் கிளை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த வைபவத்தில் தொடர்ந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன்; தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்கு செல்லுவது போல அடிக்கடி 4ம் மாடிக்கும் செல்கின்றனர். ஒரு மாதத்திற்கு இரண்டு தடவைகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்கு செல்வது போன்று மாதத்திற்கு ஒரு தடவையாவது 4ம் மாடிக்கு செல்ல வேண்டியுள்ளது.



நோர்வேயில் எழுச்சியுற நடைபெற்ற இன அழிப்பு நாள் நினைவேந்தல் நிகழ்வு Top News
[Sunday, 2013-05-19 07:45:25]

18.05.2013 மாலை 1700 மணிக்கு இன அழிப்பு நாள் நினைவேந்தல் பேரணி ஒஸ்லோ மத்திய தொடரூந்து நிலைத்தின் அருகாமையிலுள்ள சதுக்கத்தில் இருந்து ஆரம்பமாகி நோர்வே பாராளமன்றத்தை சென்றடைந்தது. பாராளமன்றத்தின் முற்பகுதியில் முள்ளிவாய்கால் பெரும் நெருப்பில் கொண்ட கொள்கைக்காக பெரும் புயலை எதிர்கொண்டு வீரகளமாடிய வேங்கைகளுக்கும் அவர்களின் கேடயமாய் நின்று மானப்போர் புரிந்த மக்களுக்கும் மலர் வணக்கம் செலுத்தப்பட்டது. ஈழத்தமிழ் அவையினர் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த பேரணியில் பல நூற்றுக்கணக்கான மக்கள் கரம்கோர்த்து தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தினர்.



நேற்றைய தினம் சுவிஸில் நடைபெற்ற மே-18 முள்ளிவாய்க்கால் செந்நெருப்புநாள் நிகழ்வு! Top News
[Sunday, 2013-05-19 07:38:28]

விடுதலைக்காகப் போராடிய தமிழினத்தை உலக நாடுகள் பலவற்றின் துணையோடு இனப்படுகொலை செய்த, இந்தக்காலத்தின் அதியுச்ச இனப்பேரழிப்பு நடந்த தமிழீழத்தில், இறுதிவரை மண்டியிடாது போராடிய மாவீரர்களுக்கும், மக்களுக்குமான நான்காம் ஆண்டு நினைவு எழுச்சி நிகழ்வான மே-18 முள்ளிவாய்க்கால் செந்நெருப்புநாள், நேற்று சூரிச் மாநிலத்தில் அமைந்துள்ள Helvetia Platz திடலில் நடைபெற்றது. இதில் சுவிஸ் வாழ் தமிழ்மக்கள் மிகவும் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டிருந்தனர். சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற வணக்க நிகழ்வானது பொதுச்சுடரேற்றலுடன் ஆரம்பமாகி, சுவிஸ் மற்றும் தமிமீழத் தேசியக்கொடிகள் ஏற்றப்பட்டதனைத் தொடர்ந்து, ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கத்துடன், மலரஞ்சலி செலுத்தப்பட்டது.



லண்டனில நடைபெற்ற முள்ளிவாய்க்கால் பேரணியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கெடுப்புTop News
[Sunday, 2013-05-19 07:22:29]

பிரித்தானிய தமிழர் பேரவையினால் லண்டனில் நேற்றையதினம் 18-05-13 சனிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவெழுச்சி பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கலந்து கொண்டு எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய நாடுகளின் மகா நாட்டில் கலந்து கொள்வது என்ற பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனின் முடிவுக்கு தமது கண்டனத்தையும் ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தியிருக்கிரார்கள்.



மே 18 தமிழின அழிப்பு நினைவு நாள் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் அனுஷ்டிப்பு!Top News
[Saturday, 2013-05-18 21:10:40]

இலங்கைத்தீவில் தமிழர் தேசத்திற்கு எதிராக அரச பயங்கரவாதத்தால் மேற்கொள்ளப்பட்ட கொடிய மனிதப்பேரவலத்தின் உச்சத்தைத் தொட்ட மே 18-2009 நினைவுகளைச் சுமந்தபடி அதன் நான்காவது ஆண்டில் நிற்கின்றோம். ஆயிரக்கணக்கான மக்களை முள்ளிவாய்க்கால் என்ற குறுகிய நிலப்பரப்புக்குள் சிக்கவைத்து, சர்வதேச ரீதியாக தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை திட்டமிட்ட ரீதியில் பயன்படுத்தி, சாட்சிகள் அற்ற போரை நடத்தி, ஒரு தேசிய இனத்தின் அழிவை உறுதிப்படுத்துவதில் சிறிலங்கா அரசு கவனம் செலுத்தியிருந்தது. ஆனால் படுகொலை செய்யப்பட்ட மக்களின் ஏக்கங்களையோ அல்லது எமது மக்களின் நீடித்து நிலைக்கக் கூடிய சுதந்திரமான வாழ்வுக்காக இறுதிவரை போராடிய போராளிகளின் கனவுகளையோ மறைக்க முடியாதபடி, உலகத்தின் கண்களுக்கு ஈழத்தமிழர்களின் அடிப்படை அரசியலுரிமைக்கான தேவைகளும் நியாயப்பாடுகளும் வெளிச்சத்திற்கு வந்துகொண்டிருக்கின்றன.



படையினரால் மீட்கப்பட்ட வன்னி மக்களுக்கு உணவுகொடுக்க புலம்பெயர் சமூகம் முன்வரவில்லை - ஜனாதிபதி மகிந்த Top News
[Saturday, 2013-05-18 20:54:42]

"இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது படையினரால் மீட்கப்பட்ட மக்களுக்கு உணவுகொடுக்க புலம்பெயர் சமூகம் வரவில்லை" என்று இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கூறுகிறார். இலங்கை அரசாங்கத்தின் நான்காவது போர் வெற்றிவிழா மேடையிலேயே மகிந்த ராஜபக்ஷ இவ்வாறு கூறினார். கொழும்பு காலி முகத்திடலில் நடந்த அரசாங்கத்தின் போர் வெற்றி விழாவில் சிறப்பு விருந்தினர்கள், அரசியல்வாதிகள், முப்படையினர் மற்றும் பொதுமக்கள் என பெருமளவிலானோர் கலந்துகொண்டனர். "மனிதக் கேடயங்களாக பிடித்து வைக்கப்பட்டிருந்த மக்களை படையினர் மீட்டனர். அவர்களுக்கு உணவுகொடுக்க புலம்பெயர் சமூகத்தினர் வரவில்லை, அரசாங்கமும் படையினரும் தான் உணவுகொடுத்து பராமரித்தார்கள்" என்றார் மகிந்த ராஜபக்ஷ.



தனித்தமிழீழம் அமையும் வரை மாணவர் போராட்டம் ஓயாது; தடையை மீறி மெரீனாவில் பேரணி.Top News
[Saturday, 2013-05-18 20:45:17]

இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட பிறகும், சொந்த மண்ணை விட்டு பல இலட்சம் தமிழர்கள் உலகெங்கும் சிதறி ஓடிய பின்னரும் ஈழத்தில் மீதமிருப்போர் மேலும் மேலும் துன்புறுத்தப்பட்டு வருகின்றனர். இக்கொடுமையைத் தடுத்து நிறுத்த வழியில்லாமல் உலகத் தமிழரெல்லாம் மனம் வெதும்பிய நிலையில் தமிழக மாணவர்கள் போராட்டம் எல்லோருக்கும் ஒரு புதிய நம்பிக்கையைக் கொடுத்தது.



இன்று தமிழீழ சுதந்திர சாசனம் முரசறைவு : ஈழவிடுதலைப் போராட்டத்தில் வரலாற்று முன்னகர்வு!Top NewsTop News
[Saturday, 2013-05-18 20:35:53]

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பெரும் முன்னகர்வாக தமிழீழ சுதந்திர சாசனம் முள்ளிவாய்க்கால் பெருவலியினை கூட்டு நினைவு கொள்ளும் மே-18ம் நாளாகிய இன்று முரசறையப்படுகின்றது. இந்த முரசறைவுக்கான மாநாடு கடந்த 15ம் நாள் முதல் அமெரிக்காவின் பென்சிலவேனியா பெருநகரில் இடம்பெற்று வரும் நிலையில் இன்று சனிக்கிழமை அமெரிக்க நேரம் மதியம் 12 மணிக்கு தமிழீழ சுதந்திர சாசனம் முரசறையப்படவிருக்கின்றது.



முள்ளிவாய்க்காலில் உயிர்நீர்த்த உறவுகளுக்கு கண்ணீர் மல்க வவுனியாவில் நினைவு பிரார்த்தனை!Top News
[Saturday, 2013-05-18 20:08:27]

இறுதியுத்தத்தின் போது முள்ளிவாய்க்கால் உயிர் நீத்த பொதுமக்களின் 4 ஆம் ஆண்டு நினைவு தினமும் ஆத்ம சாந்திப் பிரார்த்தனைக் கூட்டமும் இன்றுகாலை 10 மணிக்கு வவுனியா கலாசார மண்டபத்தில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. இன்று காலை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தலைமையில் அகவணக்கத்துடன் ஆரம்பமானது. இந்நிகழ்வில் உயிர் நீத்த மக்களுக்கான நினைவுச் சுடர் ஏற்றலையும் மலர் அஞ்சலியையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா, தமிழர் விடுதலைக்கூட்டணியின் பொதுச் செயலாளர் வீ. ஆனந்தசங்கரி, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், ஐக்கிய சோசலிச முன்னணியின் தலைவர் சிறிதுங்க வீரசூரிய, பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், சிறீதரன், சரவணபவன், வினோ ரோதநாதலிங்கம், சிவசக்தி ஆனந்தன்,



வவுனியாவில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தழிப்பு!Top News
[Saturday, 2013-05-18 13:34:14]

முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் உயிர் நீத்த மக்களின் ஆண்டு நினைவாக 2010ம் ஆண்டு மே மாதம் 16ம் திகதி திறந்து வைக்கப்பட்ட வவுனியா சம்மளங்குளம் நினைவுத்தூபி நேற்றிரவு இனம் தெரியாத தமிழ்த் தேசியத்திற்கு எதிரான குழுக்களால் இடித்தழிக்ககப்பட்டுள்ளதாக வவுனியா நகரசபை பதில் தலைவர் எம்.எம்.ரதன் தெரிவித்துள்ளார். சம்பவம் அறிந்த இன்று காலை நேரடியாக அதனை வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் மற்றும் நானும் சென்று பார்வையிட்டோம். இச்சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக தெரிவித்தார்.



டென்மார்க்கில் பாராளமன்றம் நோக்கி பேரணியாக சென்ற மக்கள் மனு கையளித்தனர்! Top News
[Saturday, 2013-05-18 08:14:10]

17.05.2013 அன்று டென்மார்க் வெளிவிவகார அமைச்சகத்தின் அலுவகத்தின் முன்பாக பேரணி ஆரம்பமானது. அதனைத்தொடர்ந்து பாராளமன்றம், நோக்கி பெரும் திரளான மக்கள் உணர்வு பூர்வமாக முள்ளிவாய்காலில் இடம்பெற்ற இனவழிப்பில் இறந்த தமிழீழ மக்களின் படங்கள் மற்றும் தமிழீழ தேசிய கொடியை ஏந்தியவண்ணம் தமிழீழம் ஒன்றே இறுதி முடிவு என்ற உணர்வுடன் ஊர்வலமாக பாராளமன்றம், நோக்கி பேரணியாக வந்தடைந்தார்கள்.



மௌரிசியஸ் தமிழ் மக்கள், தமிழீழ மக்களுடன் கைகோர்த்து போராட்டத்தி​ல் ஈடுபட்டனர்!Top News
[Saturday, 2013-05-18 08:00:22]

நேற்று மே 17 ஆம் திகதி மௌரிசியஸ் நாட்டின் தலைநகர் போர்ட் லூயிஸில் மௌரிசியஸ் தமிழ் கோயில்களின் கூட்டமைப்பு, அங்கு இருக்கும் அனைத்து தமிழ் அமைப்புகளுடன் சேர்ந்து முள்ளிவாய்காலில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கான நினைவேந்தல் எங்கு உள்ள அனைத்து ஆலயங்களிலும் செய்தபின் அந்நாட்டு பாராளுமன்றம், மற்றும் இந்திய, அமெரிக்க துதராலயங்களை நோக்கி பல்லாயிரம் மக்கள் உணர்வு பூர்வமாக தமிழீழ தேசிய கோடியை ஏந்தியவண்ணம் தமிழ் ஈழம் தான் இறுதி முடிவு என்று உணர்த்து முகமாக எமது தேசிய நிறமான சிவப்பு மஞ்சள் கோடியில் தமிழ் ஈழம் என்று பொறித்து எல்லோரும் ஏந்தி சென்றனர். அத்துடன் சிறி லங்கா சர்வதேச அமைப்புகளில் இருந்து புறக்கணிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.



யாழ்.பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு!Top News
[Friday, 2013-05-17 22:09:10]

யாழ்.பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் மிகவும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக அனைத்து பீட மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ் நினைவேந்தல் நிகழ்வு காலை 11.30 மணி தொடக்கம் 12.30 மணிவரை இடம்பெற்றுள்ளது. பல்கலைக்கழக வளாகத்திற்குள் அமைந்துள்ள சிவன் ஆலயத்தின் முன்பாக கையில் தீபங்கள் ஏந்தி உணர்வு பூர்வமாகவும் இடம்பெற்றதுடன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகளும் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



நீர்கொழும்பில் விபச்சாரிகளுக்கு எதிராக சுவரொட்டிகள்!Top News
[Friday, 2013-05-17 21:51:56]

நீர்கொழும்பு நகரின் பல இடங்களில் விபசாரிகளுக்கு எதிராக எச்சரிக்கை சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. வீதியோர விபசாரிகளுக்கு 'அசிட் வீச்சு' என்ற வாசகமே இந்த எச்சரிக்கை சுவரொட்டிகளில் எழுதப்பட்டுள்ளன. குறிப்பாக வைத்தியசாலை அருகில் கடந்த வாரம் இதே போன்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டடிருந்தன. இந்நிலையில் வியாழக்கழமை இரவு முதல் மீண்டும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. விபசாரத்தை ஒழிப்பதற்கு உடனடியாக ஒன்று சேருவோம், விபசாரிகளுக்கு இனிமேல் தண்டனை 'அசிட்' ஆகும் போன்ற வாசகங்கள் இந்த சுவரொட்டிகளில் சிங்களத்தில் எழுதப்பட்டுள்ளன. இந்த சுவரொட்டிகளுக்கு எவரும் உரிமை கோரவில்லை.


RoyaShades-l2011(04-12-11)
Canada Kanthasamy Kovil
Mahesan supramaniyam 031109
Suresh-remax-2013-01-01
TamilsGuid-191012-2013
NIRO-DANCE-100213
Ramans2011
TDE_Computers2011
INNSYS-20120930
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com