Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
June 19, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
தமிழ் இளையோர் நடனத் திறமையை சர்வதேச தரத்தில் வெளிப்படுத்திய கனடியத் தாளம் போட்டி நிகழ்ச்சி. Top News
[Wednesday, 2012-06-27 11:50:59]

இளையோர் ஒன்றியத்தின் கலைப் பண்பாட்டுக் குழு நடாத்திய தாளம் 2012 நடனப் போட்டி ஞாயிறு, யூன்24 ரொரென்ரோவில் அமைந்துள்ள Metro Toronto Convention Centreஇன் John Bassett Theatre இல் சிறப்புற நடைபெற்றது. தாளம் 2012 இல் ஆறு பல்கலைக்கழகங்களில் இருந்து நடன அணிகள் கலந்து கொண்டனர்.

மெக்மாஸ்டர் பல்கலைக்கழகத்தில் இருந்து MacFlow Maruaders அணியும், கொன்கோர்டியா பல்கலைக்கழகத்தில் இருந்து Montreal Maniacs அணியும், ஒசாவா பல்கலைக்கழகத்தில் இருந்து Oshawa Titans அணியும், ரயர்சன் பல்கலைக்கழகத்தில் இருந்து Ryerson Royalty அணியும், ரொறன்ரோ பல்கலைக்கழகத்தின் இசுகாபுரோ வளாகத்தில் இருந்து UTSC Assassins அணியும், யோர்க் பல்கலைக்கழகத்தில் இருந்து York Seneca Huskies அணியும், போட்டியில் கலந்து கொண்டனர்.

30 தொடக்கம் 40 நடனக் கலைஞரைக் கொண்ட இந்த ஆறு அணிகளும் கடந்த பல மாதங்களாக தாளம் 2012 போட்டிக்காகவே கடும்பயிற்சி மேற்கொண்டு வந்தனர். தாளம் 2012 பிற்பகல் 5:30 மணிக்கு கனடியத் தேசியக் கீதம் மற்றும் தமிழ்த் தாய் வாழ்த்து, அகவணக்கம் ஆகியவற்றுடன்ஆரம்பித்தது.

தொடர்ந்து கனடியத் தமிழ் இளையோர் ஒன்றியத்தின் கலைப் பண்பாட்டுக் குழுவைச் சேர்ந்த ஜனனி இராசநாதன் வரவேற்பு உரையாற்றினார். வரவேற்பு நடனத்தைத் தொடர்ந்து தாளம் நடனப் போட்டி நிகழ்வுகள் ஆரம்பித்தன. Montreal Maniacs, MacFlow Maruaders , York Seneca Huskies, UTSC Assassins, Ryerson Royalty மற்றும் Oshawa கனடியத் தமிழ் Titans விறுவிறுப்பான நடனங்களை வரிசையாக வழங்கினர்.

அனைத்து அணிகளும் நடனத்தோடு சேர்த்து நன்றாக அமைக்கப்பட்ட காட்சிகள்,பொருட்கள், உடைகள் ஆகியவற்றைக் கொண்டு தங்கள் திறமைகளைக் வெளிக்காட்டினர். ஒரு குறிப்பிட்ட கருத்தை எடுத்து, அக்கருத்தை திறம்பட அனைத்து அணிகளும் வெளிப்படுத்தியிருந்தனர். போட்டியிடும் அணிகளை ஊக்குவிக்கும் முகமாக 6 அணிகளுக்கும் 100 நபர்களைக் கொண்ட Cheer Squad என்றழைக்கபடும் ஒரு குழு தங்கள் குரல்களையும் கரகொலியையும் எழுப்பி அணிகளுக்கு ஆதரவு வழங்கினர்.

இந்நிகழ்வில், கனடாவில் இருந்து தமிழீழ உதைப்பந்தாட்ட கழக அணியில் பங்குபற்றிய விளையாட்டு வீரர்களை மதிப்பளிக்கும் முகமாக விருதுகளும் வழங்கப்பட்டது. தாளம் 2012 க்கு ஆதரவு வழங்கி பல அனுசரணையாளர் , அரசியல்வாதிகள், பொதுமக்கள் ஆகியோர் வருகை தந்திருந்தனர். கனடிய அரசாங்கத்தின் சார்பாக ஆளும் கட்சியான கொன்சவேற்றிவ் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் மார்க் அட்லர் (MP Mark Adler - Conservative - York Center), ஸ்பாபுரோ அஜின்கோட் தொகுதி லிபரல் பாராளுமன்ற உறுப்பினர் ஜிம் கரியானிஸ் (MP Jim Karigiyanis - Liberal - Scarborugh Agincourt), லிபரல் ஒன்ராரியோ மாகாண பாராளுமன்ற உறுப்பினர் கிளன் முறே (Glen Murray - MPP Toronto Centre), சான்தயாபரன் ஒன்டாரியோ கன்செர்வடிவ் கட்சித் தலைவர் ரிம் குடாக்கின் சார்பாகவும் ( Tim Hudark-Ontario Progressive conservative Leader), மார்க்கம் நகரசபை உறுபினர் லோகன்கணபதியும், OntarioNDPகட்சியின் தலைவர் நீதன் சானும், மார்க்கம் கல்விச்சபை உறுப்பினர் வனிற்றா நாதன் ஆகியோரும் நிகழ்வின் பொழுது தாளம் 2012 இற்கும் அதை வழங்கிய கனடியத் தமிழ் இளையோர் ஒன்றியத்தின் கலைப் பண்பாட்டுக் குழுவிற்கும், போட்டியிட்ட அணிகளுக்கும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

தாளம் நடனப் போட்டியில் வரும் அனைத்து நிதியும் தமிழ் இளையோரிற்கான ஒரு சமூக நிலையம் உருவாக்கும் திட்டத்திற்கு ஒதுக்கி வைக்கப்படும் என கனடியத் தமிழ் இளையோர் ஒன்றியத்தால் அறிவிக்கப்பட்டது. இதனை விளக்கி கனடியத் தமிழ் இளையோர் ஒன்றியம் சார்பாக தீபனா ஞானகிருஷ்ணன் உரையாற்றினார்.

போட்டியின் முடிவுகள் அறிவிக்கபடும் முன் இசை நிகழ்வுகளும், உலகளாவிய தமிழ் இளையோர் அவையின் சார்பில் லண்டன், UK இல் இருந்து வருகை தந்த ஆடுகளம் சர்வதேச நடனப் போட்டியின் ஒருங்கிணைப்பாளரில் ஒருவரான பிருந்தா ஸ்கந்ததேவாவின் சிறப்பு உரையும் நடைபெற்றன. கனடியத் தமிழ் இளையோர் ஒன்றியத்தின் கலைப் பண்பாட்டுக் குழுவைச் சேர்ந்த ஆர்த்தி வேலுப்பிள்ளை வழங்கிய நன்றியுரையைத் தொடர்ந்து பரிசளிப்பு இடம்பெற்றது. பரிசு பெற்ற அணிகளின் விவரங்கள் பின்வருமாறு.

Thaalam 2012 Champions - UTSC Assassins
Thaalam 2012 Runner-Up - Oshawa Titans
Thaalam 2012 2nd Runner-Up - York Seneca Huskies
Best Classical Dance Award - York Seneca Huskies
Best Gaana Award - York Seneca Huskies & UTSC Assassins
Best Tamil Heritage Dance Award - Oshawa Titans
Best Western Dance Award - UTSC Assassins
Best Choreography Award - York Seneca Huskies
Best Costume Award - Oshawa Titans
Best Portrayal of Theme - York Seneca Huskies
Best Tamil Heritage Award - MacFlow Marauders & Oshawa Titans
Best Showmanship Award - Oshawa Titans
Best Cheer Squad Award - Oshawa Titans
People's Choice Award - Montreal Maniacs

தாளம் 2012 இல் வெற்றி பெறும் அணி அக்டோபர் திங்களில், UKஇல் இடம்பெறவுள்ள ஆடுகளம் சர்வதேச நடனப் போட்டியில் கனடா சார்பாக போட்டியிடும் என முன்னர் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில், ஆடுகளம் போட்டியில் UTSC Assassins போட்டியிடவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

மணிவண்ணன் உடல் தீயுடன் சங்கமம்..! Top News Top News
[Sunday, 2013-06-16 17:34:21]

மறைந்த மணிவண்ணன் உடல் சென்னை போரூரில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. அவருக்கு திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். கோவை மாவட்டம், சூலூரைச் சேர்ந்த மணிவண்ணன், 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் வலம் வந்தவர். இயக்குனர் பாரதிராஜாவின் பிரதான சீடர்களில், மணிவண்ணனும் ஒருவர். "கோபுரங்கள் சாய்வதில்லை" படம் மூலம் இயக்குனர் ஆனார். நூறாவது நாள், அமைதிப்படை போன்ற பல, வெள்ளி விழா படங்களை இயக்கியவர். பாரதிராஜா இயக்கத்தில், ரஜினி நடித்த, கொடி பறக்குது படத்தில், வில்லனாக அறிமுகமானார். இதைத் தொடர்ந்து, வில்லன், குணசித்திரம் மற்றும் நகைச்சுவை நடிகராக, 400க்கும் மேற்பட்ட படங்களில், மணிவண்ணன் நடித்துள்ளார்.



போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு NOW WOW அமைப்பின் ஊடாக மட்டக்களப்பு இந்து இளைஞர் பேரவையினர் உதவி!Top News
[Sunday, 2013-06-16 08:38:09]

மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையினரால் கனடா, அமெரிக்காவிலுள்ள போரினால் காயப்பட்டவர்களுக்கும், விதவைகளுக்கும், வறியவர்களுக்குமான அமைப்பின் (NOW WOW) உதவி மூலம் வாகரை புணாணை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையிலுள்ள வறிய மாணவர்களுக்கு பாதணி மற்றும் கல்வி உபகரணம் நேற்று வௌ;ளிக்கிழமை வழங்கப்பட்டது. இங்கு கல்வி கற்கும் வறிய மாணவர்கள் ஒருவருக்கு தலா ஆயிரம் ரூபாய் வீதம் நாற்பது மாணவர்களுக்கு நாற்பதாயிரம் ரூபாய் பெறுமதியான பாடசாலை பாதணிகள் மற்றும் அப்பியாசக் கொப்பிகள் ஆகியவை வழங்கப்பட்டது. இவைகள் அனைத்தும் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் தலைமையில் வழங்கப்பட்டது.



பிரபல நடிகர்,இயக்குனர் மணிவண்ணன் மாரடைப்பால் திடீர் மரணம் - புலிக்கொடி போர்த்தி அஞ்சலி! Top News
[Saturday, 2013-06-15 17:06:54]

தென்னிந்திய பிரபல திரைப்பட இயக்குநரும், நடிகருமான மணிவண்ணன்(58) மாரடைப்பால் இன்று அவரது வீட்டில் காலமானார். சென்னை நெசப்பாக்கத்தில் ஆர்.வி.ஆர். ஹவுஸ் குடியிருப்பு பகுதியில் மணிவண்ணன் குடும்பத்துடன் வசித்து வந்தார். இன்று பகல் 12 மணி அளவில் வீட்டில் உட்கார்ந்து இருந்தார். அப்போது திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. முதுகு வலிப்பதாக வீட்டில் இருந்தவர்களிடம் கூறினார். அடுத்த நிமிடம் மயங்கி கீழே சாய்ந்து உயிரிழந்தார். மணிவண்ணன் 400 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். 50 படங்கள் இயக்கி உள்ளார்.



உலக சமாதானத்தை உருவாக்குவதற்கான அனுபவ பகிர்வு மாநாட்டில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை பங்கேற்பு Top News
[Friday, 2013-06-14 20:16:26]

துருக்கி, இஸ்தான்புல் நகரில் துருக்கி மனிதவுரிமை அமைப்பு நடாத்திய மகாநாட்டில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை, தென் ஆபிரிக்காவில் இருந்து அபிரிக்க நேஷனல் கவுன்சில் பிரதிநிதி,ஐயலாந்தில் இருந்து சின் பைன் அமைப்பு, பாஸ்கு லாண்ட் பிரநிதித்துவ படுத்தி பட்டசுன அமைப்பு கலந்து கொண்டனர். தற்சமயம் துருக்கியில் குர்திஸ்தான் விடுதலை போராட்ட அமைப்பான PKK விற்கும் துருக்கி அரசுக்கும் இடையே சமாதான பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கும் நிலையில், பலமுறை சமாதான பேச்சுவார்த்தை நடாத்தி தோல்வி கண்டிருந்த நிலையில், உலகத்தில் ஏற்கனவே விடுதலை போராட்டங்கள், அதனிடையே சமாதான பேச்சுவார்த்தைகள் நடாத்திய இன மக்களுடன் தமது அனுபவங்களை பகிர்ந்து கொள்வதும், அதிலிருந்து குர்திஸ்தான் மக்கள் நடந்து கொண்டிருக்கும் பேச்சு வார்த்தையில் தமது அடிப்படை விடுதலையை விட்டுக்கொடுக்காது எவ்வாறு செயற்படலாம் என்ற நோக்கில் இந்த மகாநாடு நடைபெற்றது.



போரினால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாணவர்களுக்கு இந்து இளைஞர் பேரவையினர் கல்வி உபகரணங்கள் உதவி! Top News
[Friday, 2013-06-14 13:26:31]

மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையினரால் கனடா, அமெரிக்காவிலுள்ள போரினால் காயப்பட்டவர்களுக்கும், விதவைகளுக்கும், வறியவர்களுக்குமான அமைப்பின் உதவி மூலம் வாகரை கட்டுமுறிவுக்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையிலுள்ள வறிய மாணவர்களுக்கு கல்வி உபகரணம் நேற்று வியாழக்கிழமை வழங்கப்பட்டது. இங்கு கல்வி கற்கும் வறிய மாணவர்கள் ஒருவருக்கு தலா 900 ரூபாய் வீதம் 198 மாணவர்களுக்கு ஒரு இலட்சத்து எழுபத்தி எட்டாயிரத்து இருநூறு ரூபாய் பெறுமதியான பாடசாலை பாதணிகள் மற்றும் அப்பியாசக் கொப்பிகள் ஆகியவை வழங்கப்பட்டது.



வவுனியா அங்காடி வியாபாரிகள் மாற்றிடம் வழங்ககோரி நகரசபைக்கு முன்பாக உண்ணாவிரதம்!Top News
[Wednesday, 2013-06-12 19:16:01]

வவுனியா நகரசபைக்கு முன்பாக உள்ள அங்காடி வியாபாரிகள் தமக்கு மாற்றிடம் வழங்ககோரி நகரசபைக்கு முன்பாக இன்று (12) உண்ணாவிரதப் போரட்டத்தினை மேற்கொண்டுள்ளனர்.

இது தொடர்பாக தெரியவருவதாவது,

வவுனியா நடைபாதை வியாபாரிகளுக்கு என புதிய அங்காடி விற்பனை நிலையமானது கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாக நகரசபைக்கு முன்பாக அமைக்கப்பட்டு வவுனியா நகரசபையால் வழங்கப்பட்டிருந்தது. அவ்வாறு வழங்கப்பட்ட இடத்தில் தற்போது 40 வியாபாரிகள் வியாபாரம் செய்து வருகின்றனர். நாள் ஒன்றக்கு 200 ரூபாய்க்கு கூட விற்பனை செய்ய முடியவில்லை இதனால் தமக்கு மாற்றிடம் வழங்குமாறு கோரி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.



ஆயர்களின் கருத்தினை அடியோடு மறுத்த மஹிந்த அரசு!Top News
[Wednesday, 2013-06-12 19:09:45]

13 ஆவது திருத்தச் சட்டமூலத்தில் மாற்றங்கள் எதனையும் செய்ய வேண்டாம் என கத்தோலிக்க பேராயர் உட்படலான அரச்சார்பற்ற நிறுவனங்களால் விடுக்கப்பட்ட கோரிக்கையைச் சிறிலங்கா அரசு உடனடியாகவே நிராகரித்துள்ளது. 13 ஆவது திருத்தச் சட்டமூலமானது சிறிலங்கா மக்களின் விருப்பத்துக்கு மாறாக திணிக்கப்பட்ட ஒன்று. மேலும் நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் மதத்தலைவர்களுடனோ அல்லது அரசார்பற்ற நிறுவனங்களுடனோ ஒருமைப்பாட்டிளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய தேவை இல்லை என்று கூறியே சிறிலங்கா அரசு அவர்களின் கோரிக்கையை நிராகரித்துள்ளதாக இன்றைய (12) திவய்ன வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது.



வட மாகாணத்திலேயே க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறு - ஆளுநர் சந்திரசிறி!Top News
[Wednesday, 2013-06-12 15:51:05]

கடந்த வருடம் வடமாகாணம் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் திறமையான பெறுபேற்றை பெற்றுள்ளதென வடமாகாண ஆளுநர் ஜி.எ.சந்திரசிறி தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் யாழ் வேம்படி மகளீர் உயர்தரப் பாடசாலையில் நடைபெற்ற யாழ் வலயப் பாடசாலை மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது இவ்வாறு குறிப்பிட்டார். கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையிலும் யாழ் மாவட்டப் பாடசாலைகள் சராரியான பெறுபேற்றை பெற்றுள்ளன. கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையில் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடும்போது தரமான சித்தியை வடமாகாணம் பெற்றுள்ளதெனவும் தெரிவித்தார்.



'சிறை கைதிகளின் உறவினர்கள் த.தே.கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கு பகிரங்க மடல்' Top News
[Wednesday, 2013-06-12 11:59:41]

சிறைச்சாலைகளில் பலவருடங்களாக எவ்விதமான விசாரணைகளுமின்றி தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் சார்பாக அவர்களுடைய பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கு பகிரங்க கடிதமொன்றை எழுதியுள்ளனர். தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத்தலைவர் இரா.சம்பந்தனுக்கே இந்தக்கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தின் பிரதிகள், மன்னார் ஆண்டகைவ வண. இராயப்பு ஜோசப் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,



வேகக் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் விபத்து - மன்னாரில் சம்பவம் Top News

[Wednesday, 2013-06-12 11:25:13]

மன்னார் நகரிலிருந்து பிரதான பாலம் வழியாக சென்றுகொண்டிருந்த டிப்பர் ரக வாகனமொன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் பாலத்தை விட்டு விலகிச்சென்று கடற்பகுதியினுள் பாய்ந்துள்ளது. மடுவிலிருந்து தலைமன்னார்வரை ரயில் பாதை அமைக்கும் பணிகள் தற்போது துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த ரயில் பாதை வேலைக்காக மன்னாருக்கு பொருட்களை ஏற்றிக்கொண்டு வந்த இந்த டிப்பர் ரக வாகனம் பொருட்களை இறக்கிவிட்டு சென்றுகொண்டிருந்தபோதே நேற்று திங்கட்கிழமை மாலை இவ்வாறு விபத்திற்குள்ளானது. வேகக் கட்டுப்பாட்டை இழந்த இந்த டிப்பர் ரக வாகனம் பாலத்திற்கு அருகில் பாதுகாப்புக்காக கட்டப்பட்டிருந்த 6 கொங்கிரீட் தூண்களை உடைத்துக்கொண்டு சென்று கடற்பகுதியினுள் பாய்ந்துள்ளதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.



13 ஐ முற்றாக ஒழிக்க சிங்கள பெளத்தர்களின் போராட்டம் தீவிரம் - 29 அமைப்புக்கள் கூட்டணி Top News
[Wednesday, 2013-06-12 09:47:34]

அரசியலமைப்பு ரீதியாக நாட்டை பிரிக்கும் 13 ஆவது திருத்தத்தை முற்றாக ஒழிக்க வேண்டுமென்றும் இல்லாவிட்டால் நாட்டில் சிங்கள பெளத்தர்களின் போராட்டம் வெடிக்குமென்றும் 29 சிங்கள பெளத்த கடும்போக்கு அமைப்புக்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன. கத்தோலிக்க ஆயர் பேரவை மற்றும் புலி ஆதரவாளர்களின் தேவையை நிறைவேற்றுவதற்கு முயற்சிப்பதாகவும் அந்த அமைப்புக்கள் குற்றம் சாட்டின. கொழும்பு பெளத்தாலோக மாவத்தையிலுள்ள பெளத்த மகா சம்மேளனத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பொதுபல சேனா, சிங்கள ராவய, ராவணா தேசிய சங்கம் சம்மேளனம் உட்பட 29 கடும் போக்கு சிங்கள பெளத்த அமைப்புகளைச் சார்ந்த பெளத்த குருமார் உட்பட அமைப்புகளின் பிரதிநிதிகள் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.



கனடாவின் மனிதவுரிமையை மேம்படுத்தும் திட்டத்தில்; கனடிய மனிதவுரிமை மையம் முக்கிய பங்கு வகிக்கும் - கனடியப் பிரதமர் Top News
[Wednesday, 2013-06-12 09:35:06]

கனடிய அரசு மனிதவுரிமை மீறல்களிற்கெதிகாக பொதுநலவாய நாடுகள் மற்றும் பு-8 நாடுகளிடையே பகிரங்கமாகக் குரல் கொடுத்து வருகின்றதென்றும் கனடிய அரசின் மனிதவுரிமை பேணும் கட்டமைப்புக்களுடன் இணைந்து கனடிய மனிதவுரிமை மையம் (CHRV) முக்கிய பங்காளியாக செயலாற்றும் எனத் தான் நம்புவதாகவும் கனடியப் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.



மட்டக்களப்பு செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் நடைபெற்ற பால் நிலை வன்முறைக்குறைப்பு நிகழ்வு! Top News
[Wednesday, 2013-06-12 07:51:05]

மட்டக்களப்பு செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் நேற்றைய (11.06.2013) தினம் பால் நிலை வன்முறைக்குறைப்பு சம்பந்தமான விழிப்புணர்வு கலந்துரையாடல் நடைபெற்றது. CDF நிறுவனத்தின் அனுசரணையுடன் நடைபெற்ற இன் நிகழ்வில் பால் நிலை வன்முறைக்குறைப்பு நிலையம் மூலம் இதுவரை கையாண்ட சம்பவங்கள் பற்றியும் அதன் செயற்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. இதில் இலங்கை மனித உரிமை ஆனைக்குழு உத்தியோகத்தர்களான திரு.மனோகரன், திரு.அசிஸ் ஆகியோர் கலந்துகொண்டு இலங்கை வன்முறைச்சம்பவங்கள் பற்றியும்,இலங்கை சட்டதிட்டங்கள் பற்றியும் விளக்கமளித்திருந்தனர். இவ்வைத்தியசாலையில் இருவருட காலமாக GBV Desk ஆரம்பிக்கப்பட்டு பல சம்பவங்கள் பதிவாகிய உள்ளதாகவும். இதில் குடும்ப வன்முறை, பாலியல் துஸ்பிரயோகம், தற்கொலை முயற்சி, மனக்கவலை, சிறுவர் துஸ்பிரயோகம் போன்ற பல சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன் இவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு GBV Desk மூலம் சிகிச்சைகளும், தீர்வுகளும், தொடர் கண்காணிப்பும் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.



நெடு​ந்தீவு முகிலனின் 4வது குறும்படம் யாழ் இந்துக்கல்லூரியில் வெளியிடப்பட்டது! Top NewsTop News
[Tuesday, 2013-06-11 20:33:17]

யாழ் இந்து கல்லூரியில் வெளிவந்த நெடுந்தீவு முகிலனின் "தோட்டி" குறும்பட வெளியீடும் சாம்பல் குறும்பட அறிமுக விழாவும் இடம்பெற்றது வடமாகாண பண்பாட்டலுவல்கள் பணிப்பாளர் என் சிறிதேவி தலமையில் 08-06-2013 சனிக்கிழமைமாலை 3.45 மணிக்கு யாழ் இந்துக்கல்லூரி குமாரசாமி மண்டபத்தில் நெடுந்தீவு முகிலனின் "தோட்டி" குறும்பட வெளியீடும் சாம்பல் குறும்பட அறிமுக விழாவும் இடம்பெற்றது.



மட்டக்களப்பு நகரில் இடம்பெற்ற 63 நாயன்மார் குரு பூஜையும், மூன்றாம் வருட எழுச்சி ஊர்வலமும்!Top News
[Monday, 2013-06-10 20:10:28]

அறுபத்து மூன்று நாயன்மார் குருபூஜையும், மூன்றாம் வருட ஆன்மீக எழுச்சி ஊர்வலமும் மட்டக்களப்பு நகரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநகரசபையின் வலையிறவு, கொக்குவில், முகத்துவாரம், மஞ்சந்தொடுவாய் ஆகிய நான்கு எல்லைகளிலுமிருந்து ஆரம்பமான ஊர்வலம் தாமரைக்கேணி மகா மாரியம்மன் ஆலயத்தை சென்றடைந்தது. "ஓம் நமசிவாய" என்ற மந்திரத்தை உச்சரித்தவாறு அறநெறிப் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், ஆலயங்களின் நிர்வாக சபையினர், இந்து அமைப்பு அங்கத்தவர்கள் மற்றும் சைவப் பொது மக்கள் அனைவரும் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.


Mahesan supramaniyam 031109
TDE_Computers2011
RoyaShades-l2011(04-12-11)
NIRO-DANCE-100213
AJRwindows22.05.13
INNSYS-20120930
Ramans2011
TamilsGuid-191012-2013
Suresh-remax-2013-01-01
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com