Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 18, 2013 [GMT]
  • Welcome
  • Welcome
29 வது ஆண்டு கறுப்பு யூலை 23ம் திகதி பிரான்சில் நினைவு கூரப்பட்டது: Top News
[Tuesday, 2012-07-24 21:06:49]

தமிழர்களின் வரலாற்றில் 1983 ம் ஆண்டு ஆழப்பதிந்த வடுகள் கொண்ட நாள் யூலை 23ம் நாள் . நரமாமிசத்தை நாhந்தம் பூஐpக்கு ஒரு சிங்களம் அரசியல் கைதிகளாக சிறையில் இருந்த விடுதலை வீரர்களான குட்டிமணி தங்கத்துரை ஜெகன் உட்பட 52 பேர் துடிக்க துடிக்க சிங்கள வெறிநாய்களால் கடித்துக்குதறப்பட்ட நாட்கள். சிங்கள இனத்தையும் அதன் அரசை நம்பி காலாகலமாய் சிங்கள தேசத்திற்குள் சிங்கள இனத்தை சகோதரர்களாய் எண்ணி வாழ்ந்தவர்ளை மனிதநேயமே சிறிதும் இன்றி அவர்களின் உடமைகளை பறித்து சொத்துக்களை களவாடியும் நாசம் செய்தும் அவர்களின் உயிரைப்பறித்தும் யாழ்ப்பாணத்திற்கு உடுத்த உடுப்புகளுடன் அதுதான் உங்கள் நிலம் என்று விரட்டித்த காலம்.

சிங்களத்துடன் சேர்ந்து வாழ முடியாது என்றும் தனித்தே வாழ வேண்டும் அதனை உயிர் கொடுத்தே பெறவேண்டும் என்றும் பல்லாயிரம் இளைஞர் யுவதிகள் வேறு வழியில்லை ஆயுதம் எந்தி போராட புறப்பட்ட காலம். பல்லாயிரக்கணக்கான மக்கள் சொந்த மண்ணை விட்டும் நாட்டை விட்டு உயிர் அச்சத்தால் உலகம் முழுவதும் அகதிகள் என்கின்ற அந்த ஸதையும் பெயரையும் பெற்றுக் கொண்ட காலம் நேற்று போல் இருந்தது ஆனால் இவை நடந்து முடிந்து 29 ஆண்டுகளாகி விட்டன.

எத்தனை ஆண்டுகளானாலும் தமிழர் நெஞ்சங்களில் ஆறாத வடுக்களை தந்த யூலை மாதம் கறுப்பு யூலை என்கின்ற பெயரை தாங்கிய நாள் பிரான்சு வாழ் தமிழீழ மக்களால் பாரிசின் மனிதவுரிமைகள் சதுக்கத்தில் 23ம் நாள் திங்கட்கிழமை பி. பகல் 3.30 மணிக்கு நினைவு கூரப்பட்டது.

பொதுச்சுடானை தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு உறுப்பினர் திரு. விசுவநாதன் அவர்கள் ஏற்றி வைத்திருந்தார். கறுப்பு யூலை நினைவுத்தூபிக்கு மக்கள் மலர் வணக்கம் செய்திருந்தனர். முக்கிய பிரமுகர்கள் பிரெஞ்சு ஆங்கிலம் தமிழ் மொழிகளிலே உரையாற்றினர். இறுதியில் தாயகம் காணும்வரை தேவையான அரசியல் ரீதியான முன்னெடுப்பை செய்வோம் என இந்நாளில் அனைவரும் உறுதி எடுத்துக்கொண்டனர். நம்புங்கள் தமிழீழம் பாடலுடன் தரக கோசத்துடன் நிகழ்வு சரியாக 6.00 மணிக்கு நிறைவு பெற்றது.

  Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome

யாழ்.பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு!Top News
[Friday, 2013-05-17 22:09:10]

யாழ்.பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் மிகவும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக அனைத்து பீட மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ் நினைவேந்தல் நிகழ்வு காலை 11.30 மணி தொடக்கம் 12.30 மணிவரை இடம்பெற்றுள்ளது. பல்கலைக்கழக வளாகத்திற்குள் அமைந்துள்ள சிவன் ஆலயத்தின் முன்பாக கையில் தீபங்கள் ஏந்தி உணர்வு பூர்வமாகவும் இடம்பெற்றதுடன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகளும் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



இளைஞர்களின் சக்தி அமைதியாக ஓடிக் கொண்டிருக்கும் கங்கையைப் போல இருக்க வேண்டும் !Top News
[Friday, 2013-05-17 21:33:28]

கரைபுரண்டோடும் காட்டாற்று வெள்ளம்போல இளைஞர்களின் சக்தி இருக்கக் கூடாது. அது அமைதியாக ஓடிக் கொண்டிருக்கும் கங்கையைப் போல இருக்க வேண்டும் என தேசிய இளைஞர் சேவைகள் மன்ற கிழக்கு மாகாணப் பணிப்பாளர் கே.தவராஜா தெரிவித்துள்ளார் தடுப்பின்றிச் செல்லும் அழகிய வாகனத்தின் சாரதி தன்னையும் அந்த வாகனத்தையும் அந்த வீதியால் செல்லும் மற்றவர்களையும் தனது சொத்துக்களையும் ஏனையவர்களின் உடமைகளையும் அழிப்பதற்கே பயன்படுத்துவான் தடுப்பின்றிச் செல்லும் வாகனமாக இளைஞர் சக்தி இருந்து விடக்கூடாது. வேகத்துடன் விவேகமும் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்;.



தேசியக்கொடி பட்டொளிவீச தமிழீழ சுதந்திர சாசன முரசறைவு மாநாடு உணர்வெழுச்சியுடன் தொடங்கியது !Top News
[Friday, 2013-05-17 21:20:04]

முள்ளிவாய்கால் பெருவலியின் கூட்டுநினைவினை உலகத் தமிழினம் நினைவேந்தும் நிகழ்வுகளின் உச்சமாக அமைகின்ற தமிழீழ சுதந்திர சாசன முரசறைவுக்கான மாநாடு உணர்வெழுச்சியுடன் தொடங்கியது. விடுதலைக்கான இன்றைய கனவும் நாளைய வெற்றியும் எனும் முழக்கத்துடன் அமெரிக்காவின் பென்சிலவேனியாவில் தொடங்கியுள்ள இந்த மாநாட்டினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் அங்குராப்பணம் செய்துவைத்தார்.



குழந்தைகள் மூவரை கிணற்றில் வீசி தானும் தற்கொலைக்கு முயற்சித்த தாய் - வவுனியாவில் சம்பவம்!Top News
[Friday, 2013-05-17 16:45:37]

இலங்கையின் வடக்கே வவுனியா தாண்டிக்குளத்தில் இளம் தாயொருவர் தனது மூன்று பெண் பிள்ளைகளுடன் கிணற்றில் பாய்ந்ததில், மூன்று பிள்ளைகளும் உயிரிழந்துள்ளனர். தாய் மட்டும் உயிர் தப்பியுள்ளார். உயிர் தப்பிய தாயிடம் பொலிசார் விசாரணை செய்து வருகின்றனர். உயிரிழந்த மூத்த பிள்ளைக்கு 3 வயதாகிறது. மற்றைய இரண்டு பிள்ளைகளும் ஒன்றரை வயதான இரட்டைக் குழந்தைகள் என்று பொலிசார் கூறுகின்றனர். கிளிநொச்சியில் இருந்து இடம்பெயர்ந்த இந்தத் தாய் வவுனியா தாண்டிக்குளத்தில் கணவருடன் வசித்து வந்துள்ளார். கணவன் வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்து குடும்பத்தைக் கவனிக்காமல் விட்டதனால், குடும்பம் வறுமையில் வாடியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.



மின்சார சபை அதிகாரிகளின் கவனயீனம் - யாழில் 5 பேர் பலியெடுப்பு!Top News
[Thursday, 2013-05-16 17:29:44]

வட மாகாணத்தில் இலங்கை மின்சார சபை யாழ் பிராந்திய அதிகாரிகளின் கவனயீனத்தினால், அண்மைக் காலங்களில் குடாநாட்டில் ஐந்து பேர் வரையில் உயிரிழந்துள்ளனர். அண்மையில் மல்லாகப் பகுதியில் 19 வயது இளைஞன் செல்வராஜா செந்தூரன் மின் கம்பத்திற்கு இடையாக இருந்த மரக்கிளைகளை வெட்டிக் கொண்டிருந்த போது மின் தாக்குதலுக்கு உட்பட்டு தூக்கி வீசப்பட்டார். அதன்போது, தலைப்பகுதியில் காயம் ஏற்பட்ட நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.



விடுதலைப் புலிகளின் தலைவர் தங்கியிருந்த ஆனந்தபுரம் வீடு கண்டுபிடிப்பு!Top News
[Thursday, 2013-05-16 15:18:40]

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் முற்றுகைப் போர் நடைபெற்றபோது விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் குடும்பத்தினர் மறைந்திருந்ததாகக் கூறப்படும் வீடு ஒன்று ஆனந்தபுரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வீட்டில் கடந்த 1996ஆம் ஆண்டு தொடக்கம் பிரபாகரனின் குடும்பத்தினர் வசித்து வந்ததாகவும் இதனால் அப்பகுதி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இருந்ததாகவும் பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.



தமிழீழ சுதந்திர சாசன முரசறைவுக்கான மாநாடு நேற்றையதினம் மாலை பிரதமர் உருத்திரகுமார் அவர்களால் தொடக்கி வைக்கபட்டுள்ளது. Top News
[Thursday, 2013-05-16 10:59:37]

தமிழீழ விடுதலையில் அக்கறைக் கொண்ட அனைவரும் மனவெழுச்சியோடு எதிர்பார்த்திருக்கும் தமிழீழ சுதந்திர சாசன முரசறைவுக்கான மாநாடு நேற்றையதினம் புதன்கிழமை (15-05-2013) அமெரிக்காவில் பென்சிலவேனியா மாநிலத்தில் Lancaster நகரில் மாநாடு அங்குராப்பண நிகழ்வு பிரதமர் உருத்திரகுமார் அவர்களால் மாலை 7 மணியளவில் தொடக்கி வைக்கபட்டுள்ளது.



கனடாவில் தழும்பகம் நடாத்திய ஓவியக்கண்காட்சி Top News
[Thursday, 2013-05-16 10:47:34]

செவ்வாய்க்கிழமை, மே 14ஆம் நாளன்று தழும்பகம் என்று அழைக்கப்படும் தமிழின அழிப்புக் காட்சியகம் கனடாவின் ஒன்டரியோ மாகாணத்தில் அமைந்துள்ள மக்மாஸ்டர் பல்கலைக்கழகத்தில் தனது கண்காட்சி நிகழ்வினை இன்று நடாத்தியது. இதிலே ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் திட்டமிட்டு நடாத்தப்படுகின்ற இனப்படுகொலையின் உச்சக்கட்டமாக கடந்த 2008 - 2009 ஆம் ஆண்டில் நடைபெற்ற படுகொலைகளையும் தமிழ் மக்கள் பட்ட இன்னல்களையும் மிகவும் சிறப்பாக எடுத்தியம்பும் ஓவியங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டன. இவ்வோவியங்களை தமிழீழ ஓவியரான s. ராஜன் அவர்கள் வரைந்திருந்தார்.



இந்தியாவின் டெல்லி உயர்நீதிமன்றத்தின் பிரபல வழக்கறிஞர் வே.ராம் சங்கர் தமிழீழ சுதந்திர சாசன மாநாட்டில் பங்கெடுப்பு ! Top News
[Wednesday, 2013-05-15 22:32:43]

முள்ளிவாய்க்கால் நினைவேந்தும் நான்காம் ஆண்டு கூட்டுநினைவு நிகழ்வுகளின் உச்ச நிகழ்வாக அமையவுள்ள தமிழீழ சுதந்திர சாசன முரசறைவு மாநாட்டில், இந்தியாவின் டெல்லி உயர்நீதிமன்றத்தின் பிரபல வழக்கறிஞர் வே.ராம் சங்கர் அவர்கள் பங்கெடுக்கின்றார். டெல்லி தமிழ்வழங்கறிஞர் சங்கத்தின் செயலராகவும் உள்ள வழக்கறிஞர் வே.ராம் சங்கர், இந்தியத் தலைநகர் டெல்லியில் பிரபல வழக்கறிஞர்களில் ஒருவாகவுள்ளார். எதிர்வரும் மே-18ம் நாள் முரசறையப்படவுள்ள தமிழீழ சுதந்திர சாசன முரசறைவினை மையமாக கொண்டு, இன்று புதன்கிழமை (15-05-2013) அமெரிக்காவில் பென்சிலவேனியா மாநிலத்தில் மாநாடு அங்குராப்பண நிகழ்வுடன் தொடங்குகின்றது.



விடுதலைக்கான இன்றைய கனவும் நாளைய வெற்றியும்: தமிழீழ சுதந்திர சாசன முரசறைவு எழுச்சி மாநாடு இன்று அமெரிக்காவில் அங்குரார்ப்பணம்! Top News
[Wednesday, 2013-05-15 21:05:37]

தமிழீழ விடுதலையில் அக்கறை கொண்ட அனைவரும் மனவெழுச்சியோடு எதிர்பார்த்திருக்கும் தமிழீழ சுதந்திர சாசன முரசறைவுக்கான மாநாடு விடுதலைக்கான இன்றைய கனவும் நாளைய வெற்றியும் எனும் முழக்கத்துடன் அமெரிக்காவில் தொடங்குகின்றது. முள்ளிவாய்கால் பெருவலியின் கூட்டுநினைவினை உலகத் தமிழினம் நினைவேந்தல் நிகழ்வுகளின் உச்சநிகழ்வாக தமிழீழ சுதந்திர சாசன முரசறைவு அமைகின்றது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முன்னெடுப்பில் உலகத் தமிழர்களின் முரறைவாக தமிழீழ சுதந்திர சாசனம் எதிர்வரும் மே18 நாள் அமெரிக்க நேரம் மதியம் 12மணிக்கு முரசறையப்படவிருக்கின்றது. இந்நிலையில் சுதந்திர சாசனத்தினை மையமாக கொண்டு அமெரிக்காவின் பென்சிலவேனியா மாநிலத்தில் இன்று புதன்கிழமை உணர்வெழுச்சியுடன் மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வுடன் இடம்பெறுகின்றது.



லயன் எயார் விமான பாகங்களோடு மீட்கப்பட்ட அடையாள அட்டைக்குரிய பெண் யாழில் உயிரோடு இருப்பது தெரியவந்துள்ளது! Top News
[Wednesday, 2013-05-15 19:23:39]

தமிழீழ விடுதலைப் புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அரசாங்கத்தினால் குற்றஞ்சாட்டப்படும் லயன் எயார் விமான பாகங்களோடு மீட்கப்பட்ட அடையாள அட்டைக்குரிய பெண்ணொருவர் உயிரோடு இருப்பது தெரியவந்துள்ளது. விமானம் வெடித்து சிதறியபோது இந்த பெண் உயிரிழந்திருக்கலாம் என்று முன்னர் கருதப்பட்டது. ஆனால் இவர் சிறுப்பிட்டி வடக்கு நீர்வேலிப் பகுதியில் தற்போதும் உயிரோடு வாழ்ந்து வருகின்றார். இவரது பெயர் குணமணி கோவிந்தசாமி (59 வயது) (547642317V)என்பதாகும். 1998 ஆம் ஆண்டு செம்டம்பர் மாதம் 29 ஆம் திகதி பலாலியிலிருந்து இரத்மலானை நோக்கி 42 பயணிகளுடனும் 8 விமானப்படைச் சிப்பாய்களுடனும் லயன் எயார் அன்ரனோவ் 24 ரக இந்த விமானம் பயணித்த போது இரணை தீவுக்கடலில் வீழ்ந்தது. இவ் விமானத்தின் பாகங்களை மீட்கும் நடவடிக்கைகள் கடந்த 03ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட போதே இந்த அடையாள அட்டையும் மீட்கப்பட்டுள்ளது. ஆனால் கறுப்பு பெட்டி இன்னமும் மீட்கப்படவில்லை.



கல்முனை மரியா தெரேசா சர்வதேச கல்லூரியில் இடம்பெற்ற வருடாந்த விளையாட்டுப்போட்டி. Top News
[Wednesday, 2013-05-15 08:11:57]

கல்முனை மரியா தெரேசா சர்வதேச கல்லூரியின் ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான வருடாந்த விளையாட்டுப்போட்டி கடந்த சனிக்கிழமையன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் அவர்களும் விசேட அதிதியாக கல்முனை தமிழ் பிரதேச செயலாளர் லவநாதன் அவர்களும் மாணவர்களின் பெற்றோர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர். சிறுவர்களின் விளையாட்டும், இல்ல குடிகளும் போட்டியைக்காண வந்தோரின் கண்களை கவர்ந்திருந்தது.



ஒன்றாய் எழுந்து தமிழினவழிப்பிற்கு நீதி கேட்போம் வாரீர்: Top News
[Tuesday, 2013-05-14 20:52:03]

எமது அன்பிற்கும் மதிப்பிற்குரிய தமிழ் உறவுகளுக்கு யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பு தனது எழுச்சிகரமான வணக்கத்தை தெரிவித்துக்கொள்கின்றது. நாம் அரசாட்சி செய்து தலைநிமிரந்து வாழ்ந்த எமது உயிரினும் மேலான தமிழீழ மண் இன்று சிங்கள பேரினவாதத்தால் அடிமைப்பட்டுள்ளது. வந்தோரை வரவேற்ற எமது தமிழீழ உறவுகள் சொல்லெனா துன்பத்தை அனுபவித்து வருகின்றார்கள். சிங்கள பேரினவாதத்தால் திட்டமிட்ட வகையில் எமது மக்களின் கருத்துரிமை, மொழியுரிமை, கல்வியுரிமை பொருளாதாரவுரிமை மறுக்கப்பட்டு எமது சகோதரிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி எமது சகோதரர்களை துன்புறுத்தி தமிழினவழிப்பை நடாத்தி வருகின்றது.



முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளின் நினைவு பிராத்தனை நடத்துவதற்கான கலந்துரையாடல்! Top News
[Tuesday, 2013-05-14 20:25:35]

இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த பொதுமக்களை நினைவு கூர்ந்து வவுனியாவில் நடத்தப்படவுள்ள பிராத்தனைக் கூட்டம் தொடர்பான கலந்துரையாடல் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன தலைமை இன்று காலை 10 மணிக்கு வவுனியாவில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஐந்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் விசேடமாக வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன் வினோ ரோதராதலிங்கம் மனித உரிமைச் செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான சண் மாஸ்ரர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உப தலைவர் கஜன் மற்றும் உள்ளுராட்சி சபைகளின் தலைவர்கள் உறுப்பினர்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.



பிரான்சில் தமிழீழ சுதந்திர சாசனத்தினை வலுவூட்டி ஆடுகளமிறங்கிய வீரர்கள்! Top News
[Tuesday, 2013-05-14 19:52:42]

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையினை கூட்டுநினைவு கொள்ளும் மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளில் , முரசறையப்படவுள்ள தமிழீழ சுதந்திர சாசனத்திற்கு வலுவூட்டும் பொருட்டு , பிரான்சில் இடம்பெற்றிருந்த தமிழீழ சுதந்திர சாசன எழுச்சிக்கிண்ணத்திற்கான ஆடுகள சுற்றுப்போட்டி, நம்பிக்கையினை கட்டியெழுப்பும் உணர்வெழுச்சி நிகழ்வாக அமைந்துள்ளது. முள்ளிவாய்கால் நினைவேந்தல் வாரத்தின் முதற்நாளில் (12-05-2013) இந்நிகழ்வு இடம்பெற்றிருந்தது.


INNSYS-20120930
RoyaShades-l2011(04-12-11)
Canada Kanthasamy Kovil
NIRO-DANCE-100213
TamilsGuid-191012-2013
Ramans2011
Mahesan supramaniyam 031109
Suresh-remax-2013-01-01
TDE_Computers2011
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com