Untitled Document
[GMT]

செய்தி இணையம்

எம்மைப்பற்றி உங்களுடன்!

செய்தி இணையத்தளம் 2007ம் ஆண்டு ஐரோப்பாவில் ஆரம்பிக்கப்பட்டு உலகப்பரப்பில் தமிழர்களிடையே பிரபலமடைந்து தனது சேவையை ஆற்றி வருகிறது. காலப்போக்கில் 2010ம் ஆண்டு புலம்பெயர் தேசத்திலுள்ள பல இளநிலை ஊடகவியலாளர்களால் மீண்டும் நிருவாக மாற்றம் பெற்று விரிவாக்கம் செய்யப்பட்டு ஈழம், இலங்கை, தமிழ்நாடு, இந்தியா மற்றும் புலம்பெயர்ந்து உலக நாடுகளில் வாழும் தமிழர்களது செய்திகளையும் நாளும் தாங்கி வருகிறது.

மேலும், எமது செய்தி இணையத்தளத்திற்கு ஈழம், இலங்கை, தமிழகம் மற்றும் உலகின் பல நாடுகளிலும் பரந்து வாழும் ஊடகத்துறையினரதும் சக ஊடகங்களினதும் ஆதரவும் நன்மதிப்பும் கிடைக்கப்பெற்று, செய்தி தனக்கென ஒரு தனித்துவத் தன்மையைப் பேணிவருகிறது. எமது இந்த ஊடகத்துறைப் பயணத்தைத் தொடர்ந்தும் முன்நகர்த்தி இணையப்பரப்பில் வலம்வர ஈழம், இலங்கை, தமிழ்நாடு, இந்தியா மற்றும் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் உள்ள பல ஊடகவியலாளர்களும் ஊடகத்துறை ஜாம்பவான்களும் எமக்கு உறுதுணை புரிகின்றனர்.

செய்தி இணையமானது தமிழர்களதும் உலக மாறுதல்களதும் அரசியல் பொது அறிவுசார்ந்த மற்றும் திரைத்துறைசார்ந்த செய்திகளையும் உடனுக்குடன் வாசகர்கள் மத்தியில் எடுத்துவருவதுடன் - சக ஊடகவியலாளர்கள் மற்றும் இணையத்தளங்களுடனும் நல்லுறவைப்பேணி அரவணைத்து ஊடக உலகை வலம் வருகிறது.

எமது இந்த ஊடகத்துறைப் பயணத்திற்கு இன்றுவரை உதவிவரும் வணிகர்கள், படைப்பாளிகள், செய்தியாளர்கள், ஆய்வாளர்கள், அரசியல் விமர்சகர்கள் அரசியல்வாதிகள் மற்றும் ஒளிப்படக் கலைஞர்கள் இவர்கள் உள்ளடங்கலான எமதருமை வாசகப் பெருமக்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

எமது இணையத்தளமானது உலகத்தமிழர்கள் மற்றும் ஊடகங்களதும் ஒர் உறவுப்பாலமாகவும், இணையச் சங்கமமாகவும் செயற்பட்டுவரும் அதேவேளை புலம்பெயர்து வெளிநாடுகளில் வாழும் தமிழர்களது செய்திகளுக்கும் அறிவித்தல்களுக்கும் முக்கியத்துவம் தந்து தனது சேவையைத் தொடர்ந்தும் செய்து வரும் என்பதை அறியத்தந்து தங்கள் பேராதரவினை வேண்டி நிற்கிறது என்பதனை தெரிவித்துக்கொள்கிறது.

வானம் உள்ளவரை, வையகம் உள்ளவரை வாழ்க தமிழ்!

Send us your comments

உங்கள் கருத்துக்களை எமக்கு அனுப்பவும்

Name: (First and Last name)
Email Address: (eg: infoseithy@gmail.com)
your Comments:
00017403