Untitled Document
December 18, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
நீங்கள் எப்படி அமர்வீர்கள்? - இதுதான் உங்கள் குணமாம்..!
[Saturday 2017-02-18 22:00]

ஒருவர் உட்காரும் நிலையை வைத்து, அவர்களின் ஆளுமை திறன் எப்படி இருக்கும் என்பதை பற்றி கூறிவிடலாம்.

காலின் பாதங்கள் விலகி வைத்து அமர்தல்

காலின் இரண்டு பாதங்களையும் விலக்கி வைத்து இருந்தபடி அமர்ந்தால், அவர்கள் மிகவும் குழந்தைத்தனமாக இருப்பார்கள். ஆனால் இவர்கள் படைப்பு மற்றும் ஆற்றலில் மிகச் சிறந்து விளங்குவார்கள்.


உங்களை ஆரோக்கியப் பயணத்தில் இணைக்கும் தியானம்..
[Saturday 2017-02-18 21:00]

தியானத்திற்கான பயணத்தை விடாமுயற்சியோடு தொடர்ந்தால் உங்களுக்குக் கிடைக்கக் கூடிய பலன்கள் அளவிட முடியாதவை. இப்போது தியானத்தை பற்றி விரிவாக பார்க்கலாம்.எல்லா வகை தியானங்களும் எல்லோருக்கும் ஏற்றதல்ல. அவரவர் தன்மைக்கு ஏற்ப சில வகை தியானங்கள் சிலருக்கு மிக எளிதாகவும், சில வகை தியானங்கள் மிக கஷ்டமானதாகவும் இருக்கலாம். அவை தியானம் செய்யும் ஆரம்ப நாட்களிலேயே தெரிந்து விடும். உங்களுக்கேற்ற ஒரு தியானத்தை ஏற்றுக் கொண்டு தொடர்ச்சியாக அதைச் செய்வது மிக முக்கியம்.


iPhone 8 - நம் முகத்தையே கடவுச் சொல்லாக பயன்படுத்த முடியும்
[Saturday 2017-02-18 21:00]

இவ்வருடம் செப்டெம்பர் மாதமளவில் ஆப்பிள் நிறுவனமானது iPhone 8 கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது. மூன்று வெவ்வேறு பதிப்புக்களாக அறிமுகம் செய்யப்படவுள்ள இக் கைப்பேசிகள் தொடர்பாக பல தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன. இந்நிலையில் தற்போது மற்றுமொரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது முகத்தினை ஸ்கான் செய்யக்கூடிய முப்பரிமாண (3D) ஸ்கானர் இணைக்கப்படவுள்ளது. இதன் மூலம் கைப்பேசியினை பாவனை செய்பவர்களின் முகத்தினை கடவுச் சொல்லாக பயன்படுத்த முடியும். இது பாதுகாப்பினை அதிகரிக்கும் ஒரு செயற்பாடாக அமைந்துள்ளது. இத் தொழில்நுட்பமானது இதுவரை எந்தவொரு கைப்பேசிகளிலும் தரப்படவில்லை. எனினும் இப் புதிய தொழில்நுட்பம் இணைக்கப்படுவதால் வெளிவரவுள்ள ஐபோன்களின் விலையானது 10 டொலர்கள் தொடக்கம் 15 டொலர்கள் வரை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


சோர்வைப் போக்கும் ஆரஞ்சுப்பழம்..
[Saturday 2017-02-18 08:00]

ஆரஞ்சுப்பழமானது எண்ணற்ற நன்மைகளை நமக்கு வாரி வழங்குகிறது. உடல்நலக்கோளாறு, அஜீரண பிரச்சனை இருப்பவர்களுக்கு இந்த பழத்தில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.நாம் உண்ணும் இந்த ஆரஞ்சுப் பழத்தை 'கமலா பழம்' என்றும் அழைப்பதுண்டு. இந்த வகை ஆரஞ்சுப்பழமானது எண்ணற்ற நன்மைகளை நமக்கு வாரி வழங்குகிறது. ஆரஞ்சுப்பழத்தில் ஏ, பி, சி ஆகிய சத்துகள் மிக அதிக அளவில் கலந்துள்ளன. சுண்ணாம்புச் சத்தும், இரும்புச் சத்தும் கூட அதிக அளவு காணப்படுகின்றன.


வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவுப்பொருட்கள்..
[Friday 2017-02-17 08:00]

சில உணவுப்பொருட்களை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உடல் நல பாதிப்புகளை உருவாக்கும். எந்த உணவுப்பொருட்களை சாப்பிட்டால் என்ன பிரச்சனை வரும் என்று பார்க்கலாம். வெறும் வயிற்றில் கட்டாயம் சாப்பிடக்கூடாத உணவுப்பொருட்கள் சில உணவுப்பொருட்களை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உடல் நல பாதிப்புகளை உருவாக்கும். எந்த உணவுப்பொருட்களை சாப்பிட்டால் என்ன பிரச்சனை வரும் என்று பார்க்கலாம்.


மாதவிடாய் காலத்தில் ஏற்படும் பழுப்பு நிற உதிரபோக்கு ..
[Thursday 2017-02-16 09:00]

பெண்களுக்கு மாதவிடாயின் போது அடர் சிவப்பு, பழுப்பு, கருஞ்சிவப்பு போன்ற நிறங்களில் உதிரப் போக்குகள் வெளிப்படும், அதற்கு என்ன காரணம் என்று தெரிந்து கொள்ளுங்கள். பெண்களுக்கு மாதவிடாயின் போது அடர் சிவப்பு, பழுப்பு, கருஞ்சிவப்பு போன்ற நிறங்களில் உதிரப் போக்குகள் வெளிப்படும், அதற்கு என்ன காரணம் என்று உங்களுக்கு தெரியுமா?


40 வயதுக்கு மேல் ஜாக்கிங் செய்ய டாக்டரின் அனுமதி அவசியம்..
[Wednesday 2017-02-15 08:00]

ஜாக்கிங் என்றால் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பது டாக்டர்கள் கருத்து. நாற்பது வயதுக்கு மேல் என்றால், ஜாக்கிங் செய்ய டாக்டரிடம் அனுமதி பெற வேண்டும். சிலருக்கு முழங்கால் மூட்டு வலி இருந்து கொண்டே இருக்கும்; இதைக் கால் வலி என்று தவறாக நினைத்துக்கொண்டிருப்பர்; அதற்காக, ஆங்கில மருந்து முதல் ஆயுர்வேத ஆயில் வரை பயன்படுத்துவர். எனினும், வலி தொடர்ந்து கொண்டிருக்கும். இதற்கு உண்மையான காரணம், மருத்துவ ஆலோசனை இல்லாமல், நானும் உடற்பயிற்சி செய்கிறேன் என்று ஜாகிங் கிளம்பிவிடுவது தான். மற்ற உடற்பயிற்சி போலத்தான் ஜாக்கிங்கும். ஆனால், எல்லா வயதினரும் இதை செய்யக் கூடாது; வாக்கிங் போகலாம்; ஜாக்கிங் என்றால் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பது டாக்டர்கள் கருத்து.


பொடுகு பிரச்சனைக்கான காரணமும் தீர்வும்..
[Wednesday 2017-02-15 07:00]

உலகம் முழுவதும் மனிதன் தலையினுள் இருக்கும் மூளையைப் பற்றியும் தலையில் இருக்கும் பொடுகு பற்றியும் கவலைப்படுகின்றான். இது குறித்து விரிவாக பார்க்கலாம். உலகம் முழுவதும் மனிதன் தலையினுள் இருக்கும் மூளையைப் பற்றியும் தலையில் இருக்கும் பொடுகு பற்றியும் கவலைப்படுகின்றான். இது தலையின் இறந்த செல்கள். இவை நம் தோளில் துணியில் செதில் செதிலாக உதிர்ந்து விழும். இது பலருக்கு தீராத பிரச்சினையாக இருக்கின்றது. இது ஏன் ஏற்படுகின்றது?


5G யின் சின்னம் மற்றும் பெயர் உறுதியானது
[Tuesday 2017-02-14 23:00]

உலக தொழில்நுட்ப சந்தையில் வயர்லெஸ் கனெக்டிவிட்டி முக்கிய பங்காற்றி வரும் நிலையில் வயர்லெஸ் கனெக்டிவிட்டிகளின் அடுத்த அத்தியாயம் 5G தான் என்றும் அதற்கான சின்னமும் உறுதி செய்யப்பட்டுள்ளது.


காதல் தோல்வியிலிருந்து வெளிவர சில நுட்பங்கள்..
[Tuesday 2017-02-14 22:00]

ஒருவரது உறவினை இழந்ததினால் இதயம் நொறுங்கியுள்ளவர், தம்மை நேசிக்காதவரை தானும் நேசிப்பதை நிறுத்த, தெரிந்து கொள்ள வேண்டிய வழிகள், அவரது வாழ்வை மேற்கொண்டு நகர்த்த அவருக்கு உதவும். காதல் தோல்வியின் வலியிலிருந்து மனதிற்கு மகிழ்ச்சியை தரும் காதல் என்கிற உணர்வு, காதலில் சில பிரச்சனைகள் ஏற்படும் போது வேதனையையும் தருகிறது. பிரச்சனை தீர்ந்து மீண்டும் மகிழ்ச்சி ஏற்பட்டால் சரி, மாறாக அந்த பிரச்சனை அதிகமாகி உறவினை இழக்கும்போது ஏற்படும் வலி அதிகம். அந்த வலியிலிருந்து வெளிவரும் வழிகள் குறித்து காண்போம். ஒருவரது உறவினை இழந்ததினால் இதயம் நொறுங்கியுள்ளவர், தம்மை நேசிக்காதவரை தானும் நேசிப்பதை நிறுத்த, தெரிந்து கொள்ள வேண்டிய வழிகள், அவரது வாழ்வை மேற்கொண்டு நகர்த்த அவருக்கு உதவும்.


சளி, காய்ச்சல், தைராய்டு, புற்றுநோய் அனைத்தையும் போக்கும் அபூர்வப்பழம்!
[Tuesday 2017-02-14 18:00]

நமக்கு எளிதாகக் கிடைக்கக்கூடிய சாதாரண பொருட்களிலேயே எண்ணிலடங்கா மருத்துவக் குணங்கள் கொட்டிக்கிடக்கின்றன. அவற்றை அறிந்துகொள்ளாமல் பல லட்ச ரூபாய்களைச் செலவு செய்து, மருந்துகளையும் மாத்திரைகளையும் தேடிப்போய் வாங்கிக்கொண்டிருக்கிறோம். அப்படி எளிதாகக் கிடைக்கும் அருமருந்து முள் சீத்தாப்பழம். நம் வீட்டிலேயே காய்த்துத் தொங்கிக்கொண்டிருக்கும் முள் சீத்தாப்பழத்தில் எத்தனையோ மருத்துவக்கூறுகள் அடங்கியிருக்கின்றன.


முக சுருக்கத்தை போக்கி இளமையை மீண்டும் பெற சிறந்த வழிகள்..
[Monday 2017-02-13 17:00]

இயற்கை பொருட்களைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், சரும பிரச்சனைகள் நீங்குவதோடு, சரும செல்களும் ஆரோக்கியமாக இருக்கும். சருமமும் சுருக்கம் இன்று பொலிவுடன் இருக்கும்.தற்போதைய மோசமான வாழ்க்கை முறையால், இளமையிலேயே சருமத்தில் சுருக்கங்கள் வருகிறது. இதனால் விரைவிலேயே முதுமைத் தோற்றத்தைப் பெற நேரிடுகிறது. சருமத்தில் இருக்கும் சுருக்கங்களைப் போக்க கடைகளில் ஏராளமான க்ரீம்கள் விற்கப்படலாம். ஆனால், அந்த க்ரீம்களில் கெமிக்கல்கள் இருப்பதால், அது தற்காலிகமாக பலனைத் தருமே தவிர, மற்றொரு பக்கம் அந்த க்ரீம்கள் சரும செல்களை பாதித்துக் கொண்டிருக்கும்.


விரைவிலேயே தூங்கவைக்கும் ரோபோ தலையணை அறிமுகம்
[Sunday 2017-02-12 21:00]

‘இன்சோம்னியா’ என்ற தூக்கமின்மையால் அவதியுறுவோருக்காக விசேட ரோபோ தலையணை ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது. நிலக்கடலையின் வடிவத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த ரோபோவின் பெயர் சோம்நொக்ஸ். மென்மையான, அதேநேரம் உறுதியான வடிவம் கொண்ட இந்த ரோபோ தலையணையைக் கட்டியணைத்தபடி படுத்துக்கொண்டால் விரைவிலேயே தூக்கத்தைத் தழுவிவிடலாம் என்கிறார்கள் இதைத் தயாரித்தவர்கள்.


பல் ஆண்டு வாழ்வதற்கு சிறந்த வழிமுறைகள்..
[Sunday 2017-02-12 18:00]

சர்க்கரை நோயாளிகள் தங்கள் பற்களின் நலனை ஆரோக்கியமாக பாதுகாக்க எந்தெந்த வழிமுறைகள் உள்ளன என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.பொதுவாகவே பற்களின் மீது அதிக ஆரோக்கியம் எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். ஈறுகளில் உண்டாகும் பாதிப்பு இதயத்தை பாதிக்கும் என ஆய்வுகளில் மூலம் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதுமட்டுமின்றி, வாய் சுகாதாரம் குறைபாடு ஏற்பட்டால் உடலில் எளிதாக பாக்டீரியாக்கள் அதிகம் தேங்கும் அபாயம் உண்டாகும். இதில், சர்க்கரை நோயாளிகள் தங்கள் பற்களின் நலனை பாதுகாக்க எந்தெந்த டிப்ஸ் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என இனி காணலாம்...


எலும்புத்துளை நோய்யிலிருந்து பாதுகாப்பு தரும் நிலக்கடலை..
[Sunday 2017-02-12 08:00]

நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானது நமது உடலின் தீமை செய்யும் கொழுப்பைக் குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது.நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் கர்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசியம். எனவே நிலக்கடலையைத் தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்பப்பை சீராகச் செயல்படுவதுடன் கர்பப்பைக் கட்டிகள், நீர்க்கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது குழந்தைப்பேறும் உடன் உண்டாகும். தினமும் பெண்கள் எடுத்துக் கொண்டால் மகப்பேறு நன்றாக இருக்கும். கருவின் மூளை மற்றும் நரம்பு வளர்ச்சி சிறப்பாக அமையும். கருத்தரிப்பதற்கு முன்பே உண்பது மிக மிக உத்தமம். இல்லையேல் கருவுற்ற பின்னும் எடுத்துக் கொள்ளலாம்.


சருமத்திற்கு பளபளப்புடன் பாதுகாப்பும் தரும் வாசனை குளியல் பொடி
[Saturday 2017-02-11 23:00]

சரும பாதிப்புக்களுக்கு இயற்கை மூலிகைகளைக் கொண்ட குளியல் பொடிகளை உபயோகப்படுத்தினால் சருமம் பளபளப்பதுடன் பாதுகாப்பும் கிடைக்கிறது. சரும பாதிப்புக்களுக்கு இயற்கை மூலிகைகளைக் கொண்ட குளியல் பொடிகளை உபயோகப்படுத்தினால் சருமம் பளபளப்பதுடன் பாதுகாப்பும் கிடைக்கிறது. இவை சருமத்திற்கு போஷாக்கு தருகின்றன. கிருமிகள் அழுக்குகள் தங்காமல் காக்கப்படுகின்றன.


செயற்கை நுண்ணறிவு மென்பொருளான 'அலெக்சாவின் வியக்க வைக்கும் நவீன வசதிகள்...
[Friday 2017-02-10 20:00]

அமேசான், தன் செயற்கை நுண்ணறிவு மென்பொருளான, 'அலெக்சா'வை கடந்த ஆண்டு வீட்டு உபயோக சாதனங்கள் வடிவில் அறிமுகப்படுத்தியது. அண்மையில், பிரிட்டனில் கார்களிலும் அலெக்சா பயன்பட ஆரம்பித்துள்ளது. சிறிய ஒலி பெருக்கியைப் போன்ற தோற்றமுள்ள 'எக்கோ, எக்கோ டாட்' ஆகிய அச் சிறு சாதனங்கள் வீட்டு உதவியாளராக செயல்படுபவை. வீட்டிலிருப்பவர், தன் குரல் மூலம் அவற்றுக்கு உத்தரவிட்டு இயக்க முடியும்.இப்போது அலெக்சா மென்பொருளை, பிற நிறுவனங்களும் உரிமம் பெற்று தங்கள் கருவிகளில் பயன்படுத்த முடியும். எனவே, 'லாஜிடெக்' நிறுவனம் பிரிட்டனில் கார்களுக்கு 'டேஷ் போர்'டில் பொருத்திக் கொள்ளும் 'அலெக்சா' சாதனம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.


உடல் சூட்டை சமப்படுத்தி ரத்த ஓட்டத்தை சீராக்கும் கராம்பு
[Friday 2017-02-10 20:00]

கராம்பு மரத்தின் மொட்டு, இலை, தண்டு போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. கிராம்பில் பலவித மருத்துவ குணங்கள் உள்ளன. கார்போ ஹைட்ரேட், ஈரப்பதம், புரதம், வாலடைல் எண்ணெய், கொழுப்பு, நார்ப்பொருள், மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச் சாம்பல்கள், கால்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிபோ பிளேவின், நயாசின், வைட்டமின் சி மற்றும் ஏ போன்றவை உள்ளன.


புதிய மைல் கல்லை எட்டியது பேஸ்புக் லைட் அப்பிளிக்கேஷன்: - 2 பில்லியன் பயனர்களை எட்டவுள்ளது.
[Friday 2017-02-10 19:00]

பல மில்லியன் கணக்கான பயனர்களால் பயன்படுத்தப்பட்டுவரும் பேஸ்புக் வலைத்தளமானது விரைவில் 2 பில்லியன் பயனர்களை எட்டவுள்ளது. இவ் வலைத்தளத்தினை அதிகளவானவர்கள் தமது மொபைல் சாதனங்களிலேயே பயன்படுத்தி வருகின்றனர். இதற்காக விசேட அப்பிளிக்கேஷன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. எனினும் குறைந்தளவு டேட்டா பாவனை மற்றும் விரைவாக செயற்படக்கூடியது என்பவற்றின் அடிப்படையில் பேஸ்புக் லைட் (Facebook Lite) அப்பிளிக்கேஷனே அதிக பயன்பாட்டில் காணப்படுகின்றது.


சுருக்கங்களின்றி இளமையான சருமத்தை தரும் சீரக நீர்..
[Friday 2017-02-10 09:00]

சீரகம் என்ற பேரிலேயே ஜீரணத்தை உணர்த்துவதால் அதனைப் பற்றி புதிதாய் சொல்ல வேண்டியதில்லை. நீரில் சில சீரகத்தை போட்டு நன்றாக கொதிக்க வைத்து ஆற வையுங்கள். இந்த நீரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் பல்வேறு நன்மைகள் உண்டாகும். சீரகம் பொதுவாக வயிறு உப்புசத்தை சரி செய்யும். ஜீரண சக்தியை அதிகரிக்கும். வயிறு சம்பந்த பாதிப்பை குணப்படுத்தும் என கேள்விப்பட்டிருப்பீர்கள். அதனை குடிப்பதால் இன்னும் பல அற்புத நன்மைகள் உண்டாகும். அவை எவையென கண்போம்.


குறைந்த மின்பாவனை, 0.01 செக்கன் வேக இணைய உலாவி அறிமுகம்
[Friday 2017-02-10 09:00]

சில வருடங்களுக்கு முன்னர் கைப்பேசிகளில் அதிகளவில் பயன்படுத்தப்பட்ட இணைய உலாவியாக ஒபேரா விளங்கியது. இவ் உலாவி டெக்ஸ்டாப், லேப்டொப் கணினிகளிலும் பயன்படுத்தப்பட்டு வந்தது. பின்னர் ஏனைய உலாவிகளில் தரப்பட்டுள்ள சிறப்பம்சங்கள் மற்றும் வேகம் காரணமாக இவ் உலாவியின் பயன்பாடு குறைவடையத்தொடங்கியது. எனினும் விட்ட இடத்தை மீண்டும் பிடிப்பதற்கான முயற்சியில் ஒபேரா நிறுவனம் இறங்கியுள்ளது. இதற்காக அதிவேகமான இணைய உலாவலைத் தரக்கூடிய புதிய பதிப்பு ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது.


விருந்து நிகழ்ச்சிகளில் கடைப்பிடிக்க வேண்டிய பண்புகள்
[Friday 2017-02-10 09:00]

நட்சத்திர அந்தஸ்து கொண்ட உணவு விடுதிகளில் அல்லது சர்வதேச தரம் மிக்க உணவு விடுதிகளில் சாப்பிடும் போது சில பண்புகளை கடைப்பிடிப்பது மிகவும் அவசியம். அதுபோல சில உயர்தர விருந்து நிகழ்ச்சிகளிலும் அவை அவசியம். அந்த பண்புகள் எவை என்பது குறித்து இங்கே காண்போம். விருந்து நிகழ்ச்சிக்கு செல்வது என்றால் அழகாக, சுத்தமாக உடை அணிந்து செல்ல வேண்டும். சில நிகழ்ச்சிகளில் எந்த மாதிரியான உடை அணிந்து வரவேண்டும் என்று குறிப்பு இருக்கும். உதாரணமாக சில விருந்து நிகழ்ச்சிகளுக்கு கோட்-சூட் அணிந்து செல்ல வேண்டும் என்பது அவசியம். எனவே விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்ப உடை அணிந்து செல்லவேண்டும். குறிப்பாக பாரம்பரிய அல்லது மேற்கத்திய நாகரிக உடைகள் அணிந்து செல்ல வேண்டும். லுங்கி, ஜீன்ஸ் பேண்ட்-டீ ஷர்ட் போன்ற உடைகளை தவிர்ப்பது அவசியம். அதுபோல காலணிகள் விஷயத்திலும் கவனம் அவசியம். சில நிகழ்ச்சிகளுக்கு சாதாரண செருப்பு அணிந்து செல்லக்கூடாது, ஷூ அணிவது அவசியம்.


முதுமையிலும் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா..!
[Thursday 2017-02-09 22:00]

பெரும்பாலானவர்கள் ஓய்வுக்குப் பின் உடைந்துபோவது பணி சார்ந்தும் அதன் தொடர்ச்சியாக வீட்டிலும் உள்ள அதிகாரம் பறிபோவதால்தான். ஆனால், நன்றாக யோசித்துப்பார்த்தால், ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள முடியும்... அதிகாரம் என்பது ஒரு சுமைதான். ஆகையால், ஓய்வு காலம்தான் உண்மையில் ஒரு மனிதன் வாழ்க்கையை அனுபவித்து வாழ்வதற்கான காலகட்டம் என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். அடுத்த விஷயம், வேலைக்குச் செல்லும் நாட்களில், நம் உடலையும் மனதையும் ஆரோக்கியமாகக் கவனித்துக்கொள்ளும் வாய்ப்புகளை வேலை ஆக்கிரமித்துக்கொள்ளும். ஆனால், ஓய்வு காலம் அதை நமக்கே நமக்கானதாக்குகிறது.


கேக்கைத் திருடிச் சாப்பிட்ட மகனை அடித்துக் கொன்ற தாய்..
[Thursday 2017-02-09 10:00]

கேக்கின் ருசியால் ஈர்க்கப்பட்ட கார்ஸியாவின் ஒன்பது வயது நிரம்பிய இளைய மகன் ஜெக் அந்த கேக் துண்டை எடுத்துச் சாப்பிட்டுவிட்டான். இதையறிந்த கார்ஸியா, ஜெக்குக்கு தகுந்த பாடம் புகட்ட எண்ணி, ஜெக்கை ஒரு கதிரையில் அமரவைத்து இரண்டு கைகளையும் கதிரையின் கைப்பிடிகளோடு கட்டிவிட்டார். பின்னர், தன் காதலன் வில்ஸிடம் தனது மகனை அடிக்கச் சொல்லியிருக்கிறார். தனது மகளுக்காக வைத்திருந்த கேக் துண்டை திருடிச் சாப்பிட்டுவிட்ட ஜெக் மீது கடும் கோபமுற்றிருந்த வில்ஸ், ஜெக்கை கண்மண் தெரியாமல் தாக்கினார். ஜெக் சுய நினைவிழந்து விழுந்தபோதும் தாக்குதலை நிறுத்தவில்லை.


கல்சியம் நிறைந்த உணவுகள் உடலுக்கு அத்தியாவசியம்..
[Thursday 2017-02-09 10:00]

ஒரு கட்டிடத்திற்கு அஸ்திவாரம் முக்கியம். அது போல நமது உடம்பை ஒவ்வொரு உறுப்புகளும் தாங்கி பிடித்து கொண்டிருக்கின்றன. இப்படி பாதுகாப்பாக வைப்பதற்கு ஒவ்வொரு உறுப்புகளுக்கும், ஒவ்வொரு விதமான சத்துப்பொருட்கள் தேவைப்படுகின்றன.. உடலை தாங்கி பிடிக்க முக்கிய பங்கு வகிப்பது எலும்புளே. எலும்பு மட்டும் இல்லாவிட்டால் என்னாவாகியிருக்கும்? நேராக நிற்க முடியாது. நேராக நடக்க முடியாது. குனிய முடியாது. நிமிர முடியாது, தலை நேராக நிற்காது. இப்படி நினைத்தே பார்க்க முடியாத ஒரு நிலை ஏற்பட்டிருக்கும்.


மாதவிடாய் வரமுன் மார்பகங்களில் ஏற்படும் வலி - நிவாரணம் பெறும் வழிகள்..
[Thursday 2017-02-09 10:00]

பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படுவதற்கு முன்பு உடல் மற்றும் மனம் ரீதியாக பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகிறது. அத்தகைய மாற்றத்தின் போது, பெண்கள் உடல் ரீதியாக மார்பகம் மற்றும் பிறப்புறுப்பு போன்ற இடங்களில் அதிகப்படியான வலியை உணர்வார்கள். மாதவிடாய் ஏற்படுவதற்கு முன் ஏற்படும் மாற்றங்கள் என்ன? உடலில் ஹார்மோன் சுரப்புகளில் மாற்றம் அடைவதால், மார்பக காம்புகளின் வளர்ச்சியை தூண்டி, ஒருவித வலியை ஏற்படுத்துகிறது. இதுதவிர திடீரென உடல் எடை அதிகரித்த மாதிரியான எண்ணம் உருவாகும்.


நிலத்தடி காய்கறிகளில் தான் அதிக மருத்துவ குணங்கள்..
[Thursday 2017-02-09 09:00]

பூமிக்கு அடியில் விளையும் காய்கறிகளை சிலர் தவிர்ப்பார்கள். ஆனால் அது சரியல்ல. காரணம், அக்காய்கறிகளில் நிறைய மருத்துவ நன்மைகள் அடங்கியிருக்கின்றன. அதுகுறித்துப் பார்ப்போம்...


புற்றுநோயை தைரியமாய் எதிர்கொள்வோம்
[Wednesday 2017-02-08 22:00]

உலகெங்கும் உள்ள மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், புற்றுநோய் பற்றிய பயம் மற்றும் தவறான கருத்துகளைப் போக்கவும் நம்பிக்கையை ஏற்படுத்தவும் அனுசரிக்கப்படுகிறது. புற்றுநோய் தற்போது அதிகரித்துவரும் நோய்களில் ஒன்று. அதில் பத்து சதவீதம் மட்டுமே பரம்பரை நோயாக வர வாய்ப்புண்டு. மற்றவை எல்லாம் தனி ஒருவரை மட்டுமே பாதிக்கும் தன்மை கொண்டது.

SELVI-HOMES-09-02-17
Mahesan-Remax-169515-Seithy
Tharsi-home-15-10-2016
Easankulasekaram-Remax-300716
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா