Untitled Document
March 29, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
இரசாயண பொருட்கள் அடங்கிய அழகு சாதனங்களால் ஆபத்து
[Monday 2012-11-19 19:00]

இயற்கை அழகை கூடுதலாக அழகு படுத்துகிறேன் என்று கூறி இன்றைக்கு சந்தையில் விற்கும் எண்ணற்ற ரசாயன அழகு சாதன பொருட்களை வாங்கி குவிக்கின்றனர் இளைய தலைமுறைப் பெண்கள். கூந்தலுக்கு உபயோகிக்கும் ஷாம்பு முதல் விரல் நகங்களுக்கு போடும் நெயில்பாலீஸ் வரை அத்தனையும் ரசாயனம்தான். இந்த அழகு சாதனப் பொருட்களினால் ஆபத்துதான் அதிகம் இருக்கிறது என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள். அமெரிக்காவில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் சராசரியாக 12 அழகு சாதனப் பொருட்களை உபயோகிக்கின்றனராம்.


நோயாளியாகினாலும் கவலையை விடுங்கள். உடனேயே மீண்டெழ சில வழிமுறைகள்..
[Monday 2012-11-19 19:00]

எதிர்பாராத விதமாக மிகப்பெரிய நோய் நம் உடலில் குடியேறிவிட்டது என்றால் அதற்காக கவலைப்பட வேண்டாம் என்கின்றனர் நிபுணர்கள். நோய்களை தீர்க்க மருந்து மாத்திரைகளை அள்ளி விழுங்கும் அதே நேரத்தில் உற்சாக மனநிலையோடு இருந்தால் நோயை எளிதில் குணமாக்கலாம் என்கின்றனர் மனநல நிபுணர்கள்.


கல்லீரல் கோளாறு, பித்தத்திற்கு சிறந்த மருந்து பீட்ரூட்
[Monday 2012-11-19 19:00]

*பீட்ரூட்டை பிழிந்து சாறு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வர அல்சர் குணமாகும்.

* பீட்ரூட் சாறுடன் வெள்ளரிச்சாறு கலந்து சாப்பிட்டு வர சிறுநீரகங்களும் பித்தப்பையும் சுத்திகரிக்கப்படும்.

* பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சை சாற்றில் தோய்த்து உண்டுவர இரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தியாகும்.

* கல்லீரல் கோளாறுகளுக்கும் பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பித்தம் அதிகமாகி அடிக்கடி பித்த வாந்தி எடுப்பவர்களுக்கு பீட்ரூட் ஒரு சிறந்த டானிக்.


குழந்தைகளுக்கு பொரித்த, வறுத்த உணவுகளை கொடுக்காதீர்கள் - மூளையை பாதிக்கும்
[Sunday 2012-11-18 22:00]

குழந்தைகளுக்கு வறுத்த, எண்ணெயில் பொரித்த உணவுகளை கொடுத்தால் அது குழந்தைகளுக்கு மந்த தன்மையை ஏற்படுத்தி மூளையை மழுங்க வைத்துவிடும் என்று குழந்தை நல நிபுணர்கள் கூறியுள்ளனர். எனவே குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துள்ள உணவுகளை கொடுத்தால் மட்டுமே அவர்கள் புத்திசாலி குழந்தைகளாக இருப்பார்கள் என்கின்றனர் குழந்தைநல மருத்துவர்கள்.


மழைக்காலத்தில் ஏற்படும் சளியை விரட்டியடிக்கும் கருந்துளசி!
[Sunday 2012-11-18 22:00]

இந்திய மருத்துவத்தில் துளசிக்கு தனி மகத்துவம் உண்டு. சளி, காய்ச்சல், அலர்ஜி போன்றவைகளை நீக்கும் ஆயுர்வேத நிவாரணி துளசி. இதனால்தான் பண்டைய காலங்களில் இருந்து இன்றைக்கும் வீடுகளில் துளசிமாடம் வைத்து வணங்கி வருகின்றனர். மலைக்காலம் வந்தாலே சளித் தொந்தரவுகளும், தண்ணீர் அலர்ஜியும், அதிகம் ஏற்படும். இதற்கு . மருத்துவமனைகளுக்கு சென்று மாத்திரை வாங்கி சாப்பிட்டாலும் நிவாரணம் கிடைப்பதில்லை.


அதிகமாக பிஸ்கெட், கேக் சாப்பிடும் பெண்ளுக்கு கருப்பைப் புற்றுநோய் ஏற்படும் அபாயம் - கரோலின்ஸ்கா ஆய்வாளர்கள் தகவல்
[Sunday 2012-11-18 21:00]

லேசாக பசி எடுத்தாலே பிஸ்கெட் சாப்பிடும் பெண்கள்தான் அதிகம். ஏனெனில் பசி அடங்குவதோடு சுவையாகவும் இருக்கும் என்பதாலேயே நொறுக்குத்தீனிக்காக அதிக அளவில் பிஸ்கட்டுகள் மற்றும் கேக்குகளை பெண்கள் சாப்பிடுகின்றனர். ஆனால் இதுபோன்று பிஸ்கெட் மற்றும் கேக் சாப்பிடும் பெண்களுக்கு கருப்பைப் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பிருப்பதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.


காகிதம் போன்ற புல்லட் ப்ரூப் கண்டுபிடிப்பு - வெற்றிகரமான பரிசோதனை! அமெரிக்க விஞ்ஞானிகளது சாதனை.
[Sunday 2012-11-18 15:00]

காகிதம் போன்ற மெல்லிய புல்லட் ப்ரூப் பொருளை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இது லேசானது என்பதால் விவிஐபிக்கள் இனி சிரமமின்றி அணியலாம். விவிஐபிக்களுக்கு பாதுகாப்பிற்காக குண்டு துளைக்காக உடையை அணிவது வழக்கம். இதேபோல் குண்டு துளைக்காத கார், ராணுவ தளவாட அறைகள் போன்றவை குண்டுதுளைக்காக வகையில் உருவாக்கப்படுகின்றன. இவை அதிக தடிமனான உலோகங்களால் ஆனாவை. இதனால் இப்படியான உடைகளை அணிவது விவிஐபிக்களுக்கு சிரமமாக இருக்கும்.


தனுர் என்றால் வில். வில் போல் உடலை வளைப்பதால் இந்த ஆசனத்திற்கு தனுராசனம் என்று பெயர்:
[Saturday 2012-11-17 23:00]

செய்முறை.

முதலில் விரிப்பில் குப்புற படுக்கவும். உடல் நேர்க்கோடு போலவும், கால்கள் சேர்ந்து இருக்கட்டும். கைகள் பக்கவாட்டில் வைத்துக் கொள்ளவும். கைகளால் கணுக்கால்களை பிடித்து மெதுவாக மூச்சை உள்ளிழுத்து தலையையும், உடலையும் தூக்கவும். வில் போல் வளைக்கவும்.


40 வயசுக்கு முன் சிகரெட் பழக்கத்தை கைவிட்டால் ஆயுளை அதிகரிக்கலாம்
[Saturday 2012-11-17 23:00]

புகைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் நாற்பது வயதிற்கு முன்பாக அதனை கைவிட்டு விட்டால் நீண்டநாள் வாழலாம் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இதனை ஆதாரப்பூர்வமாக ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளனர். இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சர் ரிச்சர்ட் பெட்டோ தலைமையில் இது தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பிரிட்டனைச் சேர்ந்த புகைப் பழக்கத்திற்கு அடிமையான பத்து லட்சம் பெண்கள் இந்த ஆய்வில் பங்கேற்றனர்.


தியானம் செய்தால் மாரடைப்பு, பக்கவாதம் வராது - சமீபத்திய ஆய்வில் தகவல்
[Saturday 2012-11-17 22:00]

தினசரி இரண்டுமுறை மந்திரம் ஜெபித்து மெடிடேசன் செய்தால் உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்கள் ஏற்படும் தடுக்கப்படுகிறது என்ற ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். மந்திரத்தை உச்சரித்தபடி தியானம், மெடிடேசன் செய்வது முனிவர்கள், சித்தர்களின் நடைமுறை. இந்தமுறைப்படி மெடிடேசன் செய்தால் இதயநோய், பக்கவாதம் ஏற்படாது என்கின்றனர் ஆய்வாளர்கள்.


முழங்கால் கறுப்பை நீக்குவதற்கு சில நுட்பங்கள்..
[Saturday 2012-11-17 22:00]

உடலை எவ்வளவு தான் அழகாக வைத்திருந்தாலும், அவற்றின் அழகை முழங்கால் மற்றும் முழங்கை கெடுத்துவிடுகின்றன. ஏனெனில் மற்ற பகுதியை விட இந்த பகுதியானது கருப்பாக காணப்படும். மேலும் உடல் அழகாக காணப்பட வேண்டும் என்பதற்காக எத்தனை பராமரிப்புகளை மேற்கொண்டாலும், அதிலும் கால்களை கவனமாக பராமரித்தாலும் மென்மையாக, முடி இல்லாமல் அழகாக இருக்கும். ஆனால் அந்த நேரத்தில் முழங்கால் மட்டும் கருப்பாக இருந்தால், நாம் செய்யும் அனைத்தும் வீணாகிவிட்டது போல் இருக்கும். ஆகவே அத்தகைய அழகைக் கெடுக்கும் முழங்கால் மற்றும் முழங்கை கருப்பை எளிதில் நீக்க சில சூப்பர் டிப்ஸ் இருக்கிறது.


காதலர்களே..! காதலிக்கலாம் அதில தப்பில்லை.. ஆனா ஓடிப்போகும் முன் இந்த வீடியோவையும் ஒருக்கா பாருங்க.
[Saturday 2012-11-17 13:00]

காதலர்களே! காதலிக்கும்போது, உங்கள் காதல் உங்கள் இருவீட் டாருக்கும் தெரியவரும்போது அவர்களை உங்களது திருமணதிற்கு சம்ம‍திக்க‍ வைத்தும் உங்களது காதலின் ஆழத்தை அவர்களுக்கு புரிய வைத்தும் அவர்களது முன்னிலையி ல் அவர்களது முழு ஆசிர்வாதத்தோடு திரு மணம் செய்துகொள்ளுங்கள் அதை விடுத்து, உங்களது பெற்றோர்களை தவிக்க‍ விட் டும் கண்ணீரில் மூழ்கடித்தும் அவர்களை புறக்கணித்து, ஓடிப்போய் திருமணம் செய் துகொள்ளாதீர்கள்.


உடல் எடையை அதிகரிக்க உண்ண வேண்டிய உணவு வகைகள்..
[Friday 2012-11-16 21:00]

இன்றைய மக்களுள் சிலர் எடை அதிகமாக உள்ளது என்பதற்காக அதை குறைக்க நிறைய முயற்சிகளை எடுக்கின்றனர். அதே சமயம், சிலர் எடை அதிகமாகவில்லை என்று அதற்காக பல முயற்சிகளை எடுக்கின்றனர். அவ்வாறு முயற்சி செய்யும் போது, எல்லா உணவுகளையுமே சாப்பிடக் கூடாது. உடல் ஆரோக்கியமாக இருக்கும் வகையில் உணவுகளை சாப்பிட்டால் தான், உடல் எடை அதிகமாவது, குறைவது போன்றவை ஏற்படுவதோடு, உடலை எந்த ஒரு நோயும் தாக்காமல் இருக்கும்.


உடலுக்கு புத்துணர்ச்சி தரும் சக்தி வாய்ந்தது மிளகு
[Friday 2012-11-16 21:00]

சளியோ இருமலோ வீட்டில் மிளகு இருந்தால் போதும் நோயை போக்கிவிடலாம் என்பார்கள். பாட்டி வைத்தியத்தில் மிளகுக்கு மிகப்பெரிய பங்குண்டு. நறுமணப்பொருளான மிளகு இயற்கை வைத்தியத்தில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. நம்வீட்டில் சமைக்கப்படும் அனைத்துப் பொருட்களிலும் ஒரு சிட்டிகை மிளகு சேர்த்துக்கொண்டால் உண்ணும் உணவு எளிதில் ஜீரணமாகும் என்கின்றனர் நிபுணர்கள்.


கோபப்படுவதால் ரத்த அழுத்தம் அதிகரித்து மாரடைப்பு ஏற்படும் அபாயம் -மருத்துவர்கள் எச்சரிக்கை
[Friday 2012-11-16 20:00]

ஒரு சிலர் எப்பொழுது பார்த்தாலும் கோபத்துடனே இருப்பார்கள். சிடு சிடு முகமும், சிவந்த கண்களுமாய் இருப்பார்கள். இது போன்ற நபர்களுக்கு மாரடைப்பு எளிதில் தாக்கி மரணம் சம்பவிக்கும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். கோபத்தினால் பள்ளி மாணவர்களுக்கும் கூட இதயநோய் தாக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளதால் நோயை தடுக்க சினத்தை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர் மருத்துவர்கள்.


முதுமைத் தோற்றத்தை ஏற்படுத்தும் கருவளையத்தை நீக்க இலகு வழி
[Thursday 2012-11-15 21:00]

இன்றைய பெண்களுக்கு இருக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் கருவளையம். இந்த கருவளையம் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மட்டும் வருவதில்லை, அதிக வேலைச் சுமையினால் போதுமான தூக்கம் கிடைக்காததால், கண்களைச் சுற்றி கருப்பான வளையங்கள் வருகின்றன. இவ்வாறு கருவளையங்கள் வருவதால், முகம் சற்று பொலிவிழந்து, முதுமைத் தோற்றத்தை தருகிறது. அதிலும் தற்போது நிறைய க்ரீம்கள் கடைகளில் விற்கப்படுகின்றன.


தொலைக்காட்சி பார்க்கும் குழந்தைகளுக்கு முரட்டுத்தனம் அதிகரிக்கும் அபாயம்
[Thursday 2012-11-15 21:00]

தொலைக்காட்சிகள் முன்பு குழந்தைகள் அதிக நேரம் செலவழிப்பதால் அவற்றில் ஒளிபரப்பாகும் வன்முறைக் காட்சிகளை தவறாமல் பார்க்க நேரிடுகிறது. பள்ளிப்படிப்பை முடிக்குமுன் குழந்தைகள் 8000 கொலைகளை பார்க்க நேரிடுகிறது. இதனால் குழந்தைகளிடையே வன்முறை உணர்வு அதிகரிக்கிறது என்கின்றனர் நிபுணர்கள்.


உடல் எடையை குறைக்கும் வழிமுறைகள் சில..
[Thursday 2012-11-15 21:00]

நிறைய மக்கள் அதிகம் நடப்பதற்கு உடல் எடையை குறைப்பதற்கு இல்லாமல், உடல் எடையை கட்டுப்பட்டுவதற்குத் தான். ஆகவே உடல் எடை அதிகரித்து அசிங்கமான தோற்றத்தைப் பெறுவதற்கு முன்பு, நடைப்பயிற்சியை ஆரம்பியுங்கள். உடல் எடை எளிதில் குறைய வேண்டுமென்றால், தினமும் நடந்தால் மட்டும் முடியாது என்பதற்காக, சிலர் அவற்றை ஒரு பெரிய விஷயமாக எண்ணாமல் நடைப்பயிற்சியை தவிர்த்து, ரன்னிங், நீச்சல் போன்ற பயிற்சிகளில் ஈடுபடுகின்றனர்.


குளிர் காலங்களில் ஏற்படும் உதடு வெடிப்பை நீக்க சில வழிகள்..
[Wednesday 2012-11-14 22:00]

பொதுவாக வறட்சி, வெடிப்பு போன்றவை உதட்டில் வந்தால், மிகவும் வலியுடன், முக அழகையே அது கெடுத்துவிடும். இத்தகைய வெடிப்பு வருவதற்கு பருவநிலை மாறுபாடான கோடை, குளிர், காற்று போன்றவை காரணங்களாகும்.


இனிப்பான பானங்கள் அருந்துவதனால் கோபத்தை கட்டுப்படுத்தலாம் - ஆராய்ச்சி முடிவு
[Wednesday 2012-11-14 22:00]

இனிப்பான பானங்களைக் குடிப்பதால் கோபம் கட்டுப்படும் என்று புதிய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உளவியல் ஆய்வு இதழ் ஒன்று தெரிவித்துள்ளது. இனிப்புப் பதார்த்தங்களை விட, இனிப்புச் சுவையுள்ள பழச்சாறுகள், பானங்களைக் குடிப்பவர்களுக்கு எரிச்சலூட்டும் விஷயங்களோ, கோபத்தை வெளிப்படுத்த வேண்டிய சம்பவங்களோ ஏற்பட்டால் அதை மனதளவில் கட்டுப்படுத்தி அமைதியை ஏற்படுத்துவதாக குறிப்பிட்ட ஆய்வு தெரிவிக்கிறது.


தலைச்சுற்றலில் இருந்து நிவாரணம் பெற சீரகம் சிறந்த மருந்து
[Wednesday 2012-11-14 22:00]

சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும்.திராட்சை ஜூஸுடன் சீரகம் கலந்து பருகி வர இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்.அகத்திக்கீரையுடன் சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கஷாயம் சாப்பிட்டு வந்தால் மனநோய் குணமாகும். இதனை உணவில் சேர்த்துச் சாப்பிட்டால் நன்றாக ஜீரணமாகிவிடும்.

SELVI-HOMES-09-02-17
Mahesan-Remax-169515-Seithy
Tharsi-home-15-10-2016
Elankeeran-debt-solution-25-06-2016
Easankulasekaram-Remax-300716
<b>05-03-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற Ninaivakal-2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>26-02-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற ARAJEN-Beauty-Forever-2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>25-02-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற NETHRA - Movie Appreciation  நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா