Untitled Document
May 29, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
பலா கொட்டையில் இருந்தும் சொக்லெட் தயாரிக்கலாம்: -ஆய்வில் தகவல்
[Wednesday 2017-04-26 09:00]

வழக்கமாக கோகோவில் இருந்து தான் சாக்லேட் தயாரிக்கப்படுகிறது என்பது அனைவரும் அறிந்த உண்மையே. ஆனால் பலா கொட்டையில் இருந்தும் சாக்லேட் தயாரிக்கலாம் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. சாக்லேட் தயாரிக்க, சர்வதேச அளவில் 45 லட்சம் டன் கோகோ தேவைப்படுகிறது. ஆனால் விவசாயிகளால் அந்த அளவு கோகோ சாகுபடி செய்ய முடியவில்லை. 37 லட்சம் டன் மட்டுமே சாகுபடி செய்கின்றனர். சாக்லேட் தயாரிக்க இன்னும் 10 ஆண்டுகளில் கூடுதலாக கோகோ தேவைப்படும்.


மனித ரோபோக்களை வாடகைக்கு எடுக்கும் நடைமுறை!
[Wednesday 2017-04-26 08:00]

மனித ரோபோக்களை வாடகைக்கு எடுக்கும் நடைமுறை ஜப்பான் மக்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறது. ORIX Rentec Corporation என்ற நிறுவனம் தயாரித்துள்ள யுமி (YUMI) எனப்படும் அந்த மனித ரோபோவை வர்த்தக நிறுவனங்கள், மருத்துவமனை, அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பு தொழிற்சாலை, வீட்டு வேலை போன்றவற்றிற்கு வாடகைக்கு எடுத்து வருகின்றனர். மனிதர்களுக்கு தரும் சம்பளத்தை விட ரோபோக்களுக்கு தரும் விலை சற்று குறைவு என்பதால் யுமி ரோபோவை மக்கள் வாடகைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர்.


ஆண்களிடம் இருக்க வேண்டிய திருமண இலட்சணங்கள்!
[Tuesday 2017-04-25 17:00]

திருமணம் என்று வந்துவிட்டாலே முதலில் ஜாதக பொருத்தம் பார்பார்கள், பிறகு குடும்பத்தை பற்றி விசாரிப்பார்கள். இதற்க்கெல்லாம் மேல் ஆண் மற்றும் பெண்ணிடம் நல்ல இலட்சணங்கள் இருக்கின்றனவா என்று பார்ப்பார்கள். இந்த இலட்சணங்களில் அழகும் ஒரு பங்கு வகித்தாலும். அதற்கு மேலானவை நிறைய இருக்கின்றன. ஒழுக்கமாக வாழ்தல், பெரியவர்களுக்கு மரியாதை அளித்தால், கர்வம், அகம்பாவம் இல்லாமல் நடந்துக் கொள்தல் என 20 இலட்சணங்கள் இருப்பதாய் சாமுத்ரிகா சாஸ்திரம் கூறுகிறது. இதில் 12 இலட்சணங்கள் இருந்தால் கூட அந்த ஆணை கண்ணை மூடிக் கொண்டு திருமணம் செய்துக் கொள்ளலாம் என்றும் கூருகின்றனர்…


கூகுள் அறிமுகம் செய்யும் COPYLESS PASTE - கூகுள் குரோமின் 60 வது பதிப்பில் உள்ளடக்கப்படும்!
[Monday 2017-04-24 17:00]

கணினியை கையாளும்போது கண்டிப்பாக Copy, Paste வசதியினை பயன்படுத்த வேண்டிய அவசியம் அதிக இடங்களில் இருக்கும். Copy, Paste எனும் இந்த இரண்டு செயற்பாட்டினையும் Copyless Paste எனும் ஒரே செயற்பாடாக மாற்றும் முயற்சியில் கூகுள் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. தனது இயங்குதளமான அன்ரோயிட்டின் குரோம் உலாவியிலேயே இந்த வசதியை முதன் முறையாக அறிமுகம் செய்வதற்கு தீர்மானித்துள்ளது.


நிர்வாணமாக இருந்தால் நிம்மதி கிடைக்குமாம்.! - ஆராய்ச்சியின் முடிவில் உறுதியாம் !
[Thursday 2017-04-20 08:00]

வாழ்க்கையில் நிர்வாணமாக இருந்தால், நிம்மதி அதிகரிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இங்கிலாந்தின் லண்டனைச் சேர்ந்த பல்கலை., ஒன்று சமீபத்தில், மனிதர்களின் நிம்மதியற்ற நிலையை மாற்ற தீவிர ஆராய்ச்சியில் இறங்கியது. இதற்காக சுமார் 850 நபரை வைத்து ஆராய்ச்சியில் குதித்தது. அந்த ஆராய்ச்சியின் பெரும்பாலானோர், தாங்கள் நிர்வாணமாக இருக்கும் போது அதிக நிம்மதியுடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர். எஞ்சியிருந்த மேலும் சிலர் அரைநிர்வாணத்தில் இருக்கும் போது தங்கள் மனம் மிகவும் மகிழ்ச்சியுடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.


ஆஸ்துமா (Asthma) வைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதற்கு என்ன செய்யவேண்டும்!
[Thursday 2017-04-20 08:00]

உங்களுக்கு தொடர்ச்சியான இருமல், மூச்சு விடுவதில் சிரமம், மூச்சுவிடும் போது ஒலி ஏற்படுதல் (Wheezing) போன்றவற்றிற்கு அடிப்படையான காரணமாக அமைவது ஆஸ்துமா (ASthma) என்று சொல்லப்படும் ஒரு நிலை ஆகும். இது சுவாசக் குழாய்களைப் பாதிக்கும் ஒரு பிரச்சினையாகும். இது சுவாசக்குழாய்களின் உட்சுவரில் அலர்ச்சி / ஒவ்வாமை ஏற்படுத்தும் பொருட்களால் உண்டாகும் தாக்கம் காரணமாக ஏற்படுகிறது.


உங்களது இதயம் ஆரோக்கியமாக இருக்கிறதா என தெரிஞ்சுக்க கால் விரல் போதும்!
[Wednesday 2017-04-19 22:00]

உலகில் இதய நோயால் ஏராமானோர் மரணத்தை சந்திக்கின்றனர். இதற்கு தற்போதைய மோசமான உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை தான் காரணம் என்று சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டும் என்பதில்லை. மேலும் இன்றைய காலத்தில் மக்கள் தங்கள் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை எடுத்து வருகின்றனர். சரி, உங்கள் இதயம் ஆரோக்கியமா தான் இருக்கா? அதைத் தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா? அப்படியெனில் இக்கட்டுரையில் உங்கள் இதயம் ஆரோக்கியமாக உள்ளதா என்பதை கண்டறிய உதவும் ஓர் எளிய வழியைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.


ஈரோட்டில் எய்ட்ஸ்க்கு மருந்து கண்டுபிடித்து சாதனை படைத்த தமிழர்!
[Wednesday 2017-04-19 17:00]

எய்ட்ஸ் நோயினை உண்டாக்கும் எச்ஐவி கிருமியை அழிக்கும் மருந்தினை தமிழகத்தை சேர்ந்த மூலிகை ஆராய்ச்சியாளர் மாதேஸ்வரன் கண்டுபிடித்துள்ளார். ஈரோடு மாவட்டத்தினை சேர்ந்த எஸ். மாதேஸ்வரன் என்னும் மூலிகை ஆராய்ச்சியாளர் 30 ஆண்டுகளாக மூலிகை ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். இவர் எய்ட்ஸ் நோய்க்கு காரணமான எச்ஐவி-ஐ அளிக்கும் மருந்தினை அஸ்கந்தா மற்றும் வல்லாரை மூலிகையில் இருந்து தயாரித்துள்ளார். 2008 முதல் 2011 ஆண்டு வரை இவர் மேற்கொண்ட ஆராய்ச்சியில் இரத்தம் போன்ற உடல் திரவங்கள் மூலம் பரவும் இந்த வைரஸினை அழிக்கும் மருந்தினை தயாரித்துள்ளார்.


வயாகராவுக்கு சமமான ஜாதிக்காய் பற்றி தெரியுமா? ஆண்கள் கட்டாயம் தெரிந்து கொள்க
[Wednesday 2017-04-19 17:00]

பண்டைய காலத்தில் வயாகராவாக திகழ்ந்து வந்துள்ள ஜாதிக்காய் உடலில் தன்னெழுச்சி உணர்வுகளையும், உயிரணு உற்பத்தியையும் தாறுமாறாக அதிகரிக்கும் என்பது நம்மில் எத்தனைப் பேருக்குத் தெரியும்? இப்பட்டிப்பட்ட ஒரு மூலிகைப் பொருள் நம் மண்ணில் செழித்து செழித்து விளைகிறதென்றால் நம்ப முடிகிறதா? வாருங்கள் தொடர்ந்து இந்த சாதிக்காயின் மகத்துவங்கள் குறித்து பார்க்கலாம். ஜாதிக்காயில் எளிதில் ஆவியாகும் எண்ணெய் வகைகள் 15% உள்ளது. ஆல்ஃபா ஃபெனைன், பீட்டா ஃபெனைன், மிர்ட்டிசின், எலின்சின் போன்ற எண்ணெய்கள் இருகின்றன. இந்த வேதிப்பொருட்களில் வீரிய சக்திகள் நிறைந்துள்ளன.


குழந்தைகள் முதல் பெரியவர் வரை தினமும் ஒரு கொய்யாப்பழத்தைச் சாப்பிட்டு வந்தால்!
[Wednesday 2017-04-19 09:00]

உணவு விஷயங்களை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்து விழிப்புணர்வுடன் செயல்படுங்கள்.அந்தந்த சீசனில் கிடைக்கும் பழங்களை சாப்பிடுவது உடல் நலத்துக்கு மிகவும் நல்லது.எங்கும் சர்வ சாதாரணமாக கிடைக்கும் கொய்யா பழத்தை அலட்சியமாக நினைக்காதீர்கள்.இதில் நிறைந்துள்ள சத்துக்களைப் படித்தால் ஆச்சரியப்படுவீர்கள். கொய்யாப் பழத்தில் விட்டமின் சி, விட்டமின் பி, கால்சியம், மாக்னிஷியம், பாஸ்பரஸ் இரும்பு ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன.இவை குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சியைத் தருவதோடு எலும்புகளுக்குப் பலத்தையும் சேர்க்கும்.


கிராம்பின் காரத்தன்மை உடலில் பல உபாதைகளுக்கு மருந்தாகிறது:
[Wednesday 2017-04-19 09:00]

கிராம்பு அதிக பட்சமாக பல்வலிக்குதான் பயன்படுத்துவோம். அதை தவிர்த்து பிரியாணி மற்றும் மற்ற உணவுகளில் சேர்க்கிறோம். ஆனால் கிராம்பின் காரத்தன்மை உடலில் பல உபாதைகளுக்கு மருந்தாகிறது என தெரியுமா? உடல் நலக் கோளாறுகளை போக்க, சரும நோய்கள் குணமாக என இன்னும் பலவித பாதிப்புகளை குணப்படுத்த கிராம்பை எவ்வாறு உபயோகப்படுத்தலாம் என பார்க்கலாம்.


கொய்யா இலை தேநீர் ..! அற்புத மருத்துவ குணங்கள்
[Monday 2017-04-17 18:00]

அந்த வகையில், கொய்யா இலையில் புரதம், விட்டமின்கள் B6, கோலைன், விட்டமின் C, கால்சியம், இரும்பு, மெக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி போன்ற அனைத்து சத்துக்களையும் கொண்டுள்ளது.


சார்ஜிங் கேபிளில் சிறிய உருளை! அதன் ரகசியம் இது தான்.!
[Monday 2017-04-17 09:00]

இன்று மனிதர்களைப் பம்பரம் போல் இயங்க அத்தியாவசிய தேவையாக மின்சாரம் இருக்கின்றது. நம் உடலின் இரத்தம், சதை போன்று நம்முடன் எப்பவும் இருப்பது மின்சாரம் மூலம் இயங்கும் கருவிகள் தான். மேல் இருக்கும் புகைப்படத்தில் காணப்படுவதைப் போன்று லாப்டாப் அல்லது மொபைல் சார்ஜிங் வையர்களில் சிறிய அளவு உருளை (சிலிண்டர்) இருப்பதை இதற்கு முன் கவனித்துள்ளீர்களா? தேவையில்லாமல் இங்கு ஏன் இது போன்ற உருளை இருக்கின்றது?


சித்திரைப் புது வருடப் பிறப்பு: - மருந்து நீர் பற்றிய ஓர் சிறப்பு பார்வை.
[Friday 2017-04-14 17:00]

தமிழர் திருநாள் சித்திர புது வருடத்தையொட்டி தமிழர் வாழும் பகுதிகளின் பல இடங்களிலும் மருத்து நீர் தற்பொழுது வழங்கப்பட்டுவருகின்றது. சித்திரைப் புது வருடப் பிறப்பு தமிழ் மக்களுக்கு மிகவும் முக்கியமானதாகும். தமிழ்ப் பஞ்சாங்கங்கள் சித்திரை மாதத்திலிருந்துதான் ஆரம்பமாகின்றன. சித்திரை வருடப் பிறப்பன்று மருத்துநீர் தேய்த்து நீராடுதல் இந்து மக்களால் கடைப்பிடிக்கப்படும் பாரம்பரியம் ஆகும். புத்தாண்டில் சகல துன்பங்களும் விலகி மகிழ்ச்சியான வாழ்வு மலரப் பிரார்த்தனை செய்து, குடும்ப மூத்தோரால் அல்லது குருவால் குடும்ப உறவுகளுக்கு தலையில் வைக்கப்படும் புனித நீரை மருத்துநீர்எ ன்பார்கள்.


இந்த ஆண்டு ஐபோனில் பல்வேறு புது அம்சங்கள்!
[Friday 2017-04-14 17:00]

ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு மூன்று ஐபோன்களை வெளியிடுவது ஓரளவு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் சமீபத்தில் வெளியாகியுள்ள தகவல்களில் பல்வேறு புதிய அம்சங்கள் வெளியாகியுள்ளன. ஆப்பிள் நிறுவனம் மூன்று ஐபோன்களை இந்த ஆண்டு வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் மொடல்களுக்கு இரண்டு அப்டேட்கள் வழங்கப்படும் என்றும் இதில் 5.8 இன்ச் திரை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் 2017-இல் வெளியாகும் மூன்று ஐபோன்களிலும் 3ஜி.பி ரேம் வழங்கப்படும் என கூறப்படுகிறது.


அதிக நன்மைகளை அள்ளித் தருகிறது கூழாங்கல் நடைபயிற்சி!
[Thursday 2017-04-13 09:00]

சாதாரண நடைபயிற்சியைக் காட்டிலும், அதிக நன்மைகளை அள்ளித் தருகிறது இந்த (Pebble path) கூழாங்கல் நடைபாதை. இது குறித்த செய்தியை பார்க்கலாம். சாதாரண நடைபயிற்சியைக் காட்டிலும், அதிக நன்மைகளை அள்ளித் தருகிறது இந்த (Pebble path) கூழாங்கல் நடைபாதை. கூழாங்கற்களின் மேல் நடப்பதால், என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.. “நம் உடலில் நரம்புகள் முடிவடைவது உள்ளங்கைகளிலும் உள்ளங்கால்களிலும்தான். அதன் காரணமாகவே கை தட்டுவதைக்கூட அழுத்தமாகத் தட்ட வேண்டும் என்று சொல்வோம். செருப்பு இல்லாமல் வெறும் காலில் நடக்கும்போது, கால்களில் இருக்கும் புள்ளிகள் தூண்டப்பட்டு உடலுக்கும் மனதுக்கும் நன்மை கிடக்கிறது. கூழாங்கல் உருண்டையாக, வழவழப்பாக இருப்பதால் உள்ளங்கையிலும், உள்ளங்காலிலும் பட்டதும், ஒரு இடத்தில்கூட நிற்காமல், அனைத்துப் பகுதிகளையும் தொட்டுக்கொண்டு உருண்டோடிவிடும்.


நீரிழிவு நோய் முழுமையாக குணமடைய உதவும் கறிவேப்பிலை பானம்!
[Wednesday 2017-04-12 17:00]

கறிவேப்பிலையில் புரதச்சத்து, இரும்புச்சத்து, விட்டமின் A, B, C போன்ற சத்துக்கள் வளமாக நிறைந்துள்ளது. கறிவேப்பிலையின் மருத்துவ நன்மைகள் அன்றாட உணவில் கறிவேப்பிலையை அதிகமாக சேர்த்துக் கொண்டால், பித்தக் கோளாறு, வயிற்றுவலி, ஜீரணக்கோளாறு போன்ற பிரச்னைகள் தடுக்கப்படுவதோடு, ரத்தம் சுத்தமாக்கப்படும். தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க மற்றும் இளமையில் ஏற்படும் நரைமுடியை போக்குவதற்கு, கறிவேப்பிலையைப் பச்சையாக சாப்பிட வேண்டும். கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, கண்பார்வைக் கோளாறுகள் நீக்கி, கண் பார்வையை பிரகாசமாக்க தினமும் கறிவேப்பிலை பானம் செய்து குடிக்கலாம்.


நீரிழிவு உள்ளவர்கள் கரட், பீற்றுட் உண்ணலாமா?
[Tuesday 2017-04-11 16:00]

கரட், பீற்றுாட் என்பன எமது மண்ணில் விளையக் கூடிய சுவையான உணவுக்கு அழகைக் கொடுக்கக் கூடிய நிறப்பொருட்களை கொண்ட ஊட்டச் சத்துள்ள ஒரு உணவாகும். அதிகரித்த நிறை உடையவர்களுக்கு இது ஒரு உன்னதமான உணவாகச் சித்தரிக்கப்படுகிறது. இதற்கு காரணம் இவற்றிலே கலோரி அடர்த்தி குறைவாகக் காணப்படுவதலாகும். எனவே இவை அதிக நிறை அதிகரிப்பை ஏற்படுத்துவதில்லை. அத்துடன் இவை பசியை கட்டுப்படுத்துவதுடன் மலச்சிக்கல் ஏற்படும் தன்மையையும் குறைக்கின்றது.


ஸ்கைப் மொழிபெயர்ப்பில் ஜப்பான் மொழியும் இணைக்கப்பட்டுள்ளது!
[Tuesday 2017-04-11 07:00]

மைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்கைப் சேவையினை அறிந்திராதவர்கள் இருக்கவே முடியாது. அந்த அளவிற்கு உலகப் பிரபல்யம் பெற்ற ஓர் வலையமைப்பு சேவையாகும். இதன் ஊடாக இலவசமாகவும், சந்தா செலுத்தியும் வீடியோ அழைப்புக்கள், குரல்வழி அழைப்புக்கள், குறுஞ்செய்தி பரிமாற்றங்கள், கோப்பு பரிமாற்றங்கள் என்பவற்றினை மேற்கொள்ள முடியும். இச் சேவையில் புதிய அம்சமாக மொழி மாற்றியும் சில வருடங்களுக்கு முன்னர் இணைக்கப்பட்டிருந்தது.


படுத்தபடியே ஸ்மார்ட்போனில் தகவல்களை பார்ப்பது…! எச்சரிக்கை…!
[Monday 2017-04-10 22:00]

லண்டன் மூர்ஃபீல்ட்ஸ் கண் மருத்துவமனைக்கு வந்த 20 மற்றும் 40 வயதுடைய இரு பெண்கள், கடந்த சில நாட்களாக தங்களது கண்பார்வை மங்கி வருவதாக மருத்துவரிடம் கவலையுடன் தெரிவித்தனர். இருவரிடமும் நீண்ட நேரம் விசாரித்தார் மருத்துவர். விசாரணையில் 20வயது இளம்பெண், தினமும் இரவில் தூங்கும் முன் படுத்தபடியே ஸ்மார்ட்போனில் தகவல்களை பார்ப்பது, நட்புகளுடன் அரட்டை என்று செலவிடுபவர் என்றும், 40வயது பெண்மணி தினம் அதிகாலையிலேயே, அதாவது சூரிய உதயத்துக்கு முன்பே விழித்து படுக்கையில் இருந்த நிலையிலேயே ஸ்மார்ட்போனில் செய்தி மற்றும் தகவல்களை பார்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளவர் என்பது தெரியவந்தது. அவர்களின் பார்வை குறைபாட்டுக்கு இதுவே காரணம் என்று உறுதி செய்தனர் மருத்துவர்கள்.


பூமியில் இருப்பது போன்று வளிமண்டலத்துடன் புதிய கிரகம் கண்டுபிடிப்பு!
[Monday 2017-04-10 06:00]

விண்வெளியில் சூரிய மண்டலத்துக்கு வெளியே ஏராளமான கோள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் தற்போது புதிதாக ஒரு கோள் கண்டறியப்பட்டுள்ளது. இப்புதிய கிரகத்தை ஜெர்மனியின் மாஸ் பிளாங்க் என்ற கிரகங்களை ஆய்வு நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. அதற்கு ஜிஜே 1132பி என பெயரிடப்பட்டுள்ளது. இதில் விசே‌ஷம் என்னவென்றால் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட புதிய கிரகங்களில் வளிமண்டலம் எதுவும் இல்லை. ஆனால் இதில் பூமியில் இருப்பது போன்று வளிமண்டலம் உள்ளது.


பூண்டு மற்றும் எலுமிச்சை கொண்டு தொப்பையை குறைப்பது எப்படி?
[Monday 2017-04-10 06:00]

பலருக்கும் தொப்பை ஒரு உறுப்பாகவே ஆகிவிட்டது. ஒருவரது தொப்பையின் அளவு பெரிதாகும் போது, அவர்களுக்கு நோய்களின் அபாயமும் அதிகரிக்கும். தொப்பை கொழுப்புக்களின் தேக்கத்தால் ஏற்படுவதால், அது உடலின் செயல்பாடுகளில் இடையூறை ஏற்படுத்தி, அதனால் பல உடல்நல பிரச்சனைகளை உண்டாக்கும். தொப்பையைக் குறைப்பதற்கு எத்தனையோ வழிகள் உள்ளன. ஆனால் நாம் அனைவரும் விரும்புவது செலவே இல்லாத இயற்கை வழிகளைத் தான். எனவே தமிழ் போல்ட் ஸ்கை நம் வீட்டு சமையலறையில் உள்ள இரண்டு முக்கிய பொருட்களான பூண்டு மற்றும் எலுமிச்சை கொண்டு எப்படி தொப்பையை வேகமாக குறைப்பது என்று கொடுத்துள்ளது.


இரவில் செய்யக்கூடாத பத்து விஷயங்கள்!
[Saturday 2017-04-08 17:00]

இரவு அற்புதமானது. உடலையும், மனதையும் சாந்தப்படுத்தி ஓய்வுக்கு வழிவகுக்கும் வகையில் இயற்கை தந்த வரம் தான் இரவு. காலையில் எழுவதும், இரவில் உறங்குவதும் தான் எப்போதும் நல்லது, தற்போது பலர் இரவு நேரத்தில் சரியாக உறங்குவது கிடையாது. இதனால் உடல் மற்றும் மன நலன் இரண்டிலும் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. நம்மில் பலர் இரவு நேரத்தில் பல்வேறு லைஃப்ஸ்டெயில் தவறுகளைச் செய்கிறோம். இவற்றை கண்டுணர்ந்து தேவையான நடவடிக்கைகளை எடுத்தால் எல்லா இரவும் இனிய இரவாக அமையும்.


உலர் திராட்சையில் நிறைந்துள்ள மருத்துவ பயன்கள்:
[Saturday 2017-04-08 17:00]

உலர் திராட்சையில் நிறைந்துள்ள ஏராளமான மருத்துவ பயன்கள் குறித்து இங்கே காணலாம். உலர் திராட்சையில் வைட்டமின் பி, சி, ஃபோலிக் ஆசிட், இரும்புச் சத்து, பொட்டாசியம், கால்சியம் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்துள்ளன. ஒரு டம்ளர் நீரில் 10 உலர் திராட்சைகளை ஊற வைத்து, மறுநாள் காலையில் நீருடன் சேர்த்து உண்டால் சிறுநீரக தொற்று நோய்கள் குணமாகும். அதே உலர் திராட்சைகளை நீரில் கொதிக்க வைத்து, அருந்தினால் குடல் புண்கள் குணமாகும். உடல் வெப்பம் தணிவதற்கும் உலர் திராட்சை பெரிதும் பயன்படுகிறது.


ஆமைப்போல இயங்கும் உங்கள் கம்ப்யூட்டரை மின்னல் வேகத்தில் இயக்க!
[Monday 2017-04-03 23:00]

உங்கள் கண்னி வழக்கத்திற்கு மாறாக ஆமை போல் செயல்படுகிறதா? - கவலையை விடுங்கள் இதை செய்தால் போதும் உங்கள் கணினி மின்னல் வேகத்தில் இயங்கும். கணினியின் பொறுமையான செயல்பாட்டிற்கான காரணத்தினைக் கண்டறிய டாஸ்க் மேனேஜர் என்ற பகுதிக்குள் சென்று உங்கள் கணினியின் விண்டோஸ் பதிப்பு, ரேம், ஸ்பேஸ் ஆகியவற்றினை சரிபாருங்கள். நீங்கள் விண்டோஸ் பழைய பதிப்பினை பயன்படுத்திக்கொண்டிருந்தாலோ அதனை அன்இன்ஸ்டால் செய்துவிட்டு புதிய விண்டோஸ் பதிப்பினை இன்ஸ்டால் செய்ய வேண்டும்.


மண‌ம் கமழு‌ம் மல்லிகை பூக்களின் மருத்துவக் குணங்கள்:
[Saturday 2017-04-01 11:00]

மண‌ம் கமழு‌ம் ம‌ல்‌லி, மதுரை ம‌ல்‌லி எ‌ன்றெ‌ல்லா‌ம் தெ‌ரியு‌ம். ஆனா‌ல் மரு‌த்துவ ம‌ல்‌லியை‌ப் ப‌ற்‌றி உ‌ங்களு‌க்கு‌த் தெ‌ரியுமா? தலை‌‌யி‌ல் சூடுவத‌ற்கு‌ம், மாலை அல‌ங்கார‌ங்களு‌க்கு‌ம் பய‌ன்படு‌ம் ம‌ல்‌லிகை‌யி‌ன் மரு‌த்துவ குண‌ங்களை இ‌ப்போது பா‌ர்‌ப்போ‌ம் - சிலருக்கு வயிற்றில் கொக்கிப் புழு, நாடாப் புழு போன்றவைகள் உருவாகும். இதற்காக பெரிதாக கவலைப்பட வேண்டாம். மல்லிகைப் பூக்கள் சிலவற்றை தண்ணீ‌ரி‌ல் போட்டு கொதிக்க வைத்து, அதனை வடிகட்டி அருந்தி வந்தால் போதும், குடற்புழுக்கள் தானாக வெளியேறிவிடும்.


தினமும் நைட் இத ஒரு டம்ளர் குடிச்சா - குறட்டை பிரச்சனையைத் தவிர்க்கலாம்!
[Wednesday 2017-03-29 19:00]

நிறைய பேர் தூக்க பிரச்சனைகள் மற்றம் தூக்கமின்மையால் அவஸ்தைப்படுகிறார்கள். இப்படி சரியான தூக்கத்தை மேற்கொள்ளாமல் இருப்பதால், ஏராளமான ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்கும் அபாயம் உள்ளது. சிலர், தங்களது துணையின் குறட்டையால் இரவில் தூங்க முடியாமல் தவிப்பார்கள். குறட்டை வருவதற்கு முக்கிய காரணம், அதிகப்படியான சளி தேங்கியிருப்பது தான். அப்படி தேங்கியிருக்கும் சளியை வெளியேற்றிவிட்டால், சுவாசக்குழாய் சற்று விரிவடைந்து, குறட்டை பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.


இளமைக்குத் தேவை உடல் அல்ல மனம்: - நடிகைகள் கருத்து
[Wednesday 2017-03-29 19:00]

இளமையாக இருக்கவேண்டும் என்றுதான் எல்லோரும் கனவு காண்கிறார்கள். ஆனால் வயதாக ஆக அந்த கனவு தளர்ந்துகொண்டே வரும். பின்பு முதுமை உடலில் பல மாற்றங்களை கொண்டு வந்து சேர்க்கும். இளமையாக இருக்கவேண்டும் என்றுதான் எல்லோரும் கனவு காண்கிறார்கள். ஆனால் வயதாக ஆக அந்த கனவு தளர்ந்துகொண்டே வரும். பின்பு முதுமை உடலில் பல மாற்றங்களை கொண்டு வந்து சேர்க்கும். அதனால் சோர்ந்துபோக வேண்டியதில்லை. பிரபலமான பல நடிகைகள் இன்றும் இளமை மாறாமல் இருக்கிறார்கள்.

Mahesan-Remax-169515-Seithy
Elankeeran-debt-solution-25-06-2016
SELVI-HOMES-09-02-17
Easankulasekaram-Remax-300716
Tharsi-home-15-10-2016
<b>14-05-2017 அன்று கனடா - ரொரன்டோவில் நடைபெற்ற தாயின்மடியில் நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b>06-05-2017 அன்று கனடா- ரொரன்டோவில் அபிநயாலயா நாடியாலயம் நடாத்திய 20வது ஆண்டுவிழா நிகழ்வின் படத்தொகுப்பு. </b> படங்கள் - குணா
<b>30-04-2017 அன்று கனடா- ரொரன்டோவில்  நடைபெற்ற சங்கீத சங்கமம் நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா