Untitled Document
March 26, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
புதிய மைல் கல்லை எட்டியது பேஸ்புக் லைட் அப்பிளிக்கேஷன்: - 2 பில்லியன் பயனர்களை எட்டவுள்ளது.
[Friday 2017-02-10 19:00]

பல மில்லியன் கணக்கான பயனர்களால் பயன்படுத்தப்பட்டுவரும் பேஸ்புக் வலைத்தளமானது விரைவில் 2 பில்லியன் பயனர்களை எட்டவுள்ளது. இவ் வலைத்தளத்தினை அதிகளவானவர்கள் தமது மொபைல் சாதனங்களிலேயே பயன்படுத்தி வருகின்றனர். இதற்காக விசேட அப்பிளிக்கேஷன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. எனினும் குறைந்தளவு டேட்டா பாவனை மற்றும் விரைவாக செயற்படக்கூடியது என்பவற்றின் அடிப்படையில் பேஸ்புக் லைட் (Facebook Lite) அப்பிளிக்கேஷனே அதிக பயன்பாட்டில் காணப்படுகின்றது.


சுருக்கங்களின்றி இளமையான சருமத்தை தரும் சீரக நீர்..
[Friday 2017-02-10 09:00]

சீரகம் என்ற பேரிலேயே ஜீரணத்தை உணர்த்துவதால் அதனைப் பற்றி புதிதாய் சொல்ல வேண்டியதில்லை. நீரில் சில சீரகத்தை போட்டு நன்றாக கொதிக்க வைத்து ஆற வையுங்கள். இந்த நீரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் பல்வேறு நன்மைகள் உண்டாகும். சீரகம் பொதுவாக வயிறு உப்புசத்தை சரி செய்யும். ஜீரண சக்தியை அதிகரிக்கும். வயிறு சம்பந்த பாதிப்பை குணப்படுத்தும் என கேள்விப்பட்டிருப்பீர்கள். அதனை குடிப்பதால் இன்னும் பல அற்புத நன்மைகள் உண்டாகும். அவை எவையென கண்போம்.


குறைந்த மின்பாவனை, 0.01 செக்கன் வேக இணைய உலாவி அறிமுகம்
[Friday 2017-02-10 09:00]

சில வருடங்களுக்கு முன்னர் கைப்பேசிகளில் அதிகளவில் பயன்படுத்தப்பட்ட இணைய உலாவியாக ஒபேரா விளங்கியது. இவ் உலாவி டெக்ஸ்டாப், லேப்டொப் கணினிகளிலும் பயன்படுத்தப்பட்டு வந்தது. பின்னர் ஏனைய உலாவிகளில் தரப்பட்டுள்ள சிறப்பம்சங்கள் மற்றும் வேகம் காரணமாக இவ் உலாவியின் பயன்பாடு குறைவடையத்தொடங்கியது. எனினும் விட்ட இடத்தை மீண்டும் பிடிப்பதற்கான முயற்சியில் ஒபேரா நிறுவனம் இறங்கியுள்ளது. இதற்காக அதிவேகமான இணைய உலாவலைத் தரக்கூடிய புதிய பதிப்பு ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது.


விருந்து நிகழ்ச்சிகளில் கடைப்பிடிக்க வேண்டிய பண்புகள்
[Friday 2017-02-10 09:00]

நட்சத்திர அந்தஸ்து கொண்ட உணவு விடுதிகளில் அல்லது சர்வதேச தரம் மிக்க உணவு விடுதிகளில் சாப்பிடும் போது சில பண்புகளை கடைப்பிடிப்பது மிகவும் அவசியம். அதுபோல சில உயர்தர விருந்து நிகழ்ச்சிகளிலும் அவை அவசியம். அந்த பண்புகள் எவை என்பது குறித்து இங்கே காண்போம். விருந்து நிகழ்ச்சிக்கு செல்வது என்றால் அழகாக, சுத்தமாக உடை அணிந்து செல்ல வேண்டும். சில நிகழ்ச்சிகளில் எந்த மாதிரியான உடை அணிந்து வரவேண்டும் என்று குறிப்பு இருக்கும். உதாரணமாக சில விருந்து நிகழ்ச்சிகளுக்கு கோட்-சூட் அணிந்து செல்ல வேண்டும் என்பது அவசியம். எனவே விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்ப உடை அணிந்து செல்லவேண்டும். குறிப்பாக பாரம்பரிய அல்லது மேற்கத்திய நாகரிக உடைகள் அணிந்து செல்ல வேண்டும். லுங்கி, ஜீன்ஸ் பேண்ட்-டீ ஷர்ட் போன்ற உடைகளை தவிர்ப்பது அவசியம். அதுபோல காலணிகள் விஷயத்திலும் கவனம் அவசியம். சில நிகழ்ச்சிகளுக்கு சாதாரண செருப்பு அணிந்து செல்லக்கூடாது, ஷூ அணிவது அவசியம்.


முதுமையிலும் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா..!
[Thursday 2017-02-09 22:00]

பெரும்பாலானவர்கள் ஓய்வுக்குப் பின் உடைந்துபோவது பணி சார்ந்தும் அதன் தொடர்ச்சியாக வீட்டிலும் உள்ள அதிகாரம் பறிபோவதால்தான். ஆனால், நன்றாக யோசித்துப்பார்த்தால், ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள முடியும்... அதிகாரம் என்பது ஒரு சுமைதான். ஆகையால், ஓய்வு காலம்தான் உண்மையில் ஒரு மனிதன் வாழ்க்கையை அனுபவித்து வாழ்வதற்கான காலகட்டம் என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். அடுத்த விஷயம், வேலைக்குச் செல்லும் நாட்களில், நம் உடலையும் மனதையும் ஆரோக்கியமாகக் கவனித்துக்கொள்ளும் வாய்ப்புகளை வேலை ஆக்கிரமித்துக்கொள்ளும். ஆனால், ஓய்வு காலம் அதை நமக்கே நமக்கானதாக்குகிறது.


கேக்கைத் திருடிச் சாப்பிட்ட மகனை அடித்துக் கொன்ற தாய்..
[Thursday 2017-02-09 10:00]

கேக்கின் ருசியால் ஈர்க்கப்பட்ட கார்ஸியாவின் ஒன்பது வயது நிரம்பிய இளைய மகன் ஜெக் அந்த கேக் துண்டை எடுத்துச் சாப்பிட்டுவிட்டான். இதையறிந்த கார்ஸியா, ஜெக்குக்கு தகுந்த பாடம் புகட்ட எண்ணி, ஜெக்கை ஒரு கதிரையில் அமரவைத்து இரண்டு கைகளையும் கதிரையின் கைப்பிடிகளோடு கட்டிவிட்டார். பின்னர், தன் காதலன் வில்ஸிடம் தனது மகனை அடிக்கச் சொல்லியிருக்கிறார். தனது மகளுக்காக வைத்திருந்த கேக் துண்டை திருடிச் சாப்பிட்டுவிட்ட ஜெக் மீது கடும் கோபமுற்றிருந்த வில்ஸ், ஜெக்கை கண்மண் தெரியாமல் தாக்கினார். ஜெக் சுய நினைவிழந்து விழுந்தபோதும் தாக்குதலை நிறுத்தவில்லை.


கல்சியம் நிறைந்த உணவுகள் உடலுக்கு அத்தியாவசியம்..
[Thursday 2017-02-09 10:00]

ஒரு கட்டிடத்திற்கு அஸ்திவாரம் முக்கியம். அது போல நமது உடம்பை ஒவ்வொரு உறுப்புகளும் தாங்கி பிடித்து கொண்டிருக்கின்றன. இப்படி பாதுகாப்பாக வைப்பதற்கு ஒவ்வொரு உறுப்புகளுக்கும், ஒவ்வொரு விதமான சத்துப்பொருட்கள் தேவைப்படுகின்றன.. உடலை தாங்கி பிடிக்க முக்கிய பங்கு வகிப்பது எலும்புளே. எலும்பு மட்டும் இல்லாவிட்டால் என்னாவாகியிருக்கும்? நேராக நிற்க முடியாது. நேராக நடக்க முடியாது. குனிய முடியாது. நிமிர முடியாது, தலை நேராக நிற்காது. இப்படி நினைத்தே பார்க்க முடியாத ஒரு நிலை ஏற்பட்டிருக்கும்.


மாதவிடாய் வரமுன் மார்பகங்களில் ஏற்படும் வலி - நிவாரணம் பெறும் வழிகள்..
[Thursday 2017-02-09 10:00]

பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படுவதற்கு முன்பு உடல் மற்றும் மனம் ரீதியாக பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகிறது. அத்தகைய மாற்றத்தின் போது, பெண்கள் உடல் ரீதியாக மார்பகம் மற்றும் பிறப்புறுப்பு போன்ற இடங்களில் அதிகப்படியான வலியை உணர்வார்கள். மாதவிடாய் ஏற்படுவதற்கு முன் ஏற்படும் மாற்றங்கள் என்ன? உடலில் ஹார்மோன் சுரப்புகளில் மாற்றம் அடைவதால், மார்பக காம்புகளின் வளர்ச்சியை தூண்டி, ஒருவித வலியை ஏற்படுத்துகிறது. இதுதவிர திடீரென உடல் எடை அதிகரித்த மாதிரியான எண்ணம் உருவாகும்.


நிலத்தடி காய்கறிகளில் தான் அதிக மருத்துவ குணங்கள்..
[Thursday 2017-02-09 09:00]

பூமிக்கு அடியில் விளையும் காய்கறிகளை சிலர் தவிர்ப்பார்கள். ஆனால் அது சரியல்ல. காரணம், அக்காய்கறிகளில் நிறைய மருத்துவ நன்மைகள் அடங்கியிருக்கின்றன. அதுகுறித்துப் பார்ப்போம்...


புற்றுநோயை தைரியமாய் எதிர்கொள்வோம்
[Wednesday 2017-02-08 22:00]

உலகெங்கும் உள்ள மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், புற்றுநோய் பற்றிய பயம் மற்றும் தவறான கருத்துகளைப் போக்கவும் நம்பிக்கையை ஏற்படுத்தவும் அனுசரிக்கப்படுகிறது. புற்றுநோய் தற்போது அதிகரித்துவரும் நோய்களில் ஒன்று. அதில் பத்து சதவீதம் மட்டுமே பரம்பரை நோயாக வர வாய்ப்புண்டு. மற்றவை எல்லாம் தனி ஒருவரை மட்டுமே பாதிக்கும் தன்மை கொண்டது.


திரையே இல்லாமல் 3D யில் படம் பார்க்கலாம் ; நவீன கண்டுபிடிப்பு
[Wednesday 2017-02-08 22:00]

திரை இல்லாமல், சலனப் படங்களை பார்க்க உதவும், 'ஹோலோகிராம்' தொழில்நுட்பம் திடீரென மெருகேற ஆரம்பித்திருக்கிறது.முன்பு அறிவியல் புனைகதைகளில் மட்டுமே இருந்த ஹோலோகிராமை, மிகுந்த ஆராய்ச்சிக்குப் பிறகு நிஜமாக்கினர். ஆனால், திரை இல்லாமல், லேசர் கதிர் மூலம் படங்களை பார்க்க முடிந்தாலும், 1 செ.மீ., அளவிலேயே படம் தெரிந்தது. தவிர, அதை பக்கவாட்டிலிருந்து பார்த்தால் தெளிவாகத் தெரியாமல் இருந்தது.


நாக்கின் வடிவம், நிறத்தை வைத்தே அவர்களின் குணங்களை அறியலாம்..
[Wednesday 2017-02-08 20:00]

ஒருவருடைய நாக்கின் வடிவம் மற்றும் நிறத்தை வைத்தே அவர்கள் எப்படி பட்டவர்கள் அவர்களின் குணங்கள் என்ன என்பதை பற்றி கூறிவிடலாம்.


கண்ணாடி அணியும் பெண்களுக்கான அழகுக் குறிப்புக்கள்..
[Tuesday 2017-02-07 21:00]

முகத்தின் அழகைப் மிகைப்படுத்தி காட்டுவதில் முக்கிய பங்கை கொண்டுள்ளது கண்கள். கண்ணாடி அணியும் பெண்கள் தங்கள் கண்களுக்கு எவ்வாறு மேக்-அப் போட வேண்டும் என்பதை பார்க்கலாம். கண்ணாடி அணியும் பெண்களுக்கான பியூட்டி டிப்ஸ் கம்ப்யூட்டரில் அதிக நேரமாக வேலை செய்பவர்கள் கண் கண்ணாடியை பலர் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வாழ்வில் கண் கண்ணாடி அன்றாட வாழ்க்கையில் அவசியமான பொருளாக மாறிவிட்டது. தற்போது பல விதமான மாடல்களில் கண்ணாடியின் பிரேம் சின்னதாக, சிக்கென கவர்ச்சியாக வந்துவிட்டது. அதனால், கண்ணாடி அணியும் பெண்கள், மேக்கப் போடுவது முக்கியமானதாக மாறிவிட்டது. முகத்தின் அழகைப் மிகைப்படுத்தி காட்டுவதில் முக்கிய பங்கை கொண்டுள்ளது கண்கள்.


ஹை ஹீல்ஸ் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புக்கள்..
[Monday 2017-02-06 22:00]

அழகாக இருக்கிறது என்று நினைத்து ‘ஹை ஹீல்ஸ்’ எனப்படும் குதிகால் உயரம் அதிகம் கொண்ட செருப்புகளை அணிந்துவிட்டு, அதனால் அவதிப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது.


மூக்கின் அழகோடு முந்நூறு ஆண்டு வாழவேண்டுமா..
[Monday 2017-02-06 22:00]

முகத்திற்கு அழகை கொடுக்கும் மூக்கு, எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. சிலருக்கு கூர்மையாகவும், சிலருக்கு சப்பையாகவும், கிளி மூக்கு போன்றும், குடைமிளகாய் போன்று பெரியதாகவும் இருக்கும். ஆனால் எப்படிப்பட்ட தோற்றம் இருந்தாலும் ஒழுங்காக பராமரித்து, அழகாக மேக்கப் செய்து கொண்டால் கவலைப்படத் தேவையில்லை. வீட்டிலேயே பேஷியல் செய்வது போல் எண்ணெய்ப்பசை உள்ள நல்ல பேஸ் மசாஜ் க்ரீமை மூக்கிற்கு நன்றாக தடவி, மசாஜ் செய்ய வேண்டும். மூக்கில் பிளாக் ஹெட்ஸ் உள்ளவர்கள், விரல்களால் மூக்கின் பக்க வாட்டிலும், நுனியிலும் அதிக நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.


உடலுக்கு அதிகபட்ச பாதிப்பை ஏற்படுத்தும் குளிர்பானங்கள்..
[Monday 2017-02-06 21:00]

வெயிலில் வியர்க்க விறுவிறுக்க நடக்கும்போது கடைகளை பார்த்தால், ‘அங்குபோய் குளிர்பானம் குடிக்கலாமே!’ என்று தோன்றும். பாட்டில் மற்றும் டின்களில் இருக்கும் அவை, ‘வாங்க குடித்து மகிழலாம்’ என்று அழைப்புவிடுப்பது போலவும் தோன்றும். வீட்டிற்கு போனாலும் பிரிட்ஜை திறந்து, அது போன்ற குளிர்பானத்தையே குடிக்கத்தோன்றும். ஆனால் அந்த ‘கார்பனேட்டட் சாப்ட் டிரிக்ஸ்’ வகைகள் தாகத்தையோ, சோர்வையோ விரட்டும் சிறந்த பானங்கள் அல்ல. அவைகளை தொடர்ந்து பல ஆண்டுகள் பருகிவந்தால் ஈரல் நோய்களும், உடல் பருமன் பிரச்சினைகளும் தோன்றும்.


கவலை மற்றும் மன அழுத்தத்தால் புற்று நோய் ஏற்படும் அபாயம்
[Sunday 2017-02-05 22:00]

கவலை மற்றும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புற்றுநோயால் மரணம் ஏற்பட ஆபத்து அதிகம் உள்ளதாக ஆதாரங்களை விஞ்ஞானிகள் சமர்ப்பித்துள்ளனர்.இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் புற்று நோய் பாதிப்பில்லாத ஒரு லட்சத்தி 60 ஆயிரம் பேர்களில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், குறைந்த அளவு மன உளைச்சல் அடைந்தவர்களை விட, மன உளைச்சலால் அதிக பாதிப்படைந்தவர்களுக்கு பல வகையான புற்று நோய்களால் ஏற்படும் உயிர் ஆபத்து மூன்று பங்கு அதிகமுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.


சைவ உணவு சாப்பிட்டால் இதய ஆரோக்கியத்தைப் பேணலாம்
[Sunday 2017-02-05 22:00]

சைவ உணவை மட்டும் சாப்பிடுபவர்களுக்கு மாரடைப்பு போன்ற இதய நோய்கள் வராது என்று உறுதியாகச் சொல்ல முடியாது. காரணம், சைவ உணவு என்றால் முழு தானியங்கள், காய்கறிகள், பழங்கள், கீரைகள் போன்றவற்றை மட்டுமே சாப்பிட வேண்டும். ஆனால், இன்றைய திகதியில் சைவம் சாப்பிடுபவர்கள் வறுத்த உணவு, பொறித்த உணவு, இனிப்பு, நெய் மற்றும் எண்ணெயில் தயாரிக்கப்பட்ட நொறுக்கு தீனிகள், ஐஸ்கிறீம், சொக்லேட், பால்மாவினால் செய்யப்பட்ட உணவு வகைகள் போன்றவற்றை அளவுக்கதிகமாகவும், தாங்கள் விரும்பும் வேளையிலும் சாப்பிடுகிறார்கள்.


ஆண், பெண் நட்பில் கிடைக்கும் நன்மைகள்..
[Sunday 2017-02-05 22:00]

ஒரு பெண் பள்ளிகூடத்துக்கோ, வகுப்பிற்கோ அல்லது தொழிலுக்கு சென்றால் கூட அவளுக்கு நம்பிக்கையான ஒரு நண்பன் இருந்தால் பயமின்றி போய் வரலாம். பாதையில் “தனிமையாக போகிறாளே என்ன நடக்குமோ” என வீட்டில் உள்ளவர்களும் பயப்படாமல் இருக்கலாம். ஆனால் வீடு மட்டுமே உலகமாக்கப்பட்டு வளரும் சில பெண் பிள்ளைகள் வீட்டுக்கு வந்து போகும் அண்ணனின் நண்பனையோ அல்லது பக்கத்து வீட்டு ஜன்னலில் தெரியும் வாலிபனையோ காதலிக்கத் தொடங்கி விடுகிறார்கள்.


புற்றுநோய், இதயநோயிருந்து பாதுகாப்பு பெற கேரட் சாப்பிடுங்க
[Sunday 2017-02-05 22:00]

சத்துகள் நிறைந்தது ‘கேரட்’ என்று நமக்குத் தெரியும். ஆனால் அது, புற்றுநோய்க்கு எதிரான கேடயமாகவும் ஆகிறது என்று தற்போது ஓர் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல்வேறு மருத்துவக் குணங்களைக் கொண்ட கேரட்டில் வைட்டமின் ஏ, பி1, பி2, பி6, கே மற்றும் பையோடின், நார்ச்சத்து, பொட்டாசியம், தையமின் போன்ற சத்துகள் அதிக அளவில் நிறைந்துள்ளன. நமது உடல்நலத்துக்குத் தேவையான சத்துகள் அனைத்தையும் கேரட் கொண்டுள்ளது. எனவே இதை நாம் உணவில் அதிகமாகச் சேர்த்து சாப்பிட்டு வந்தால், நல்ல பார்வை மட்டுமின்றி, வேறு சில உடல் பிரச்சினைகளும் நம்மைத் தாக்காமல் தடுக்கலாம்.


இதயத்தை வலுப்படுத்தும் புற்றுநோய் மருந்துகள்: - புதிய ஆய்வில் தகவல்
[Sunday 2017-02-05 17:00]

புற்று நோயை குணப்படுத்தவும், அது மேலும் பரவாமல் தடுக்கவும் பலவிதமான மருந்துகள் உட்கொள்ளப்படுகின்றன. அதனால் உடல் உறுப்புகளுக்கு பக்க விளைவுகள் ஏற்படுமா? என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அந்த மருந்துகள் இதயத்தின் திசுக்களை வலுப்படுத்தி அவை நல்ல முறையில் செயல்பட புத்துயிர் அளிப்பது தெரிய வந்துள்ளது. இதனால் ரத்த செல்கள் மற்றும் ரத்த ஓட்டத்தில் தடை உள்ளிட்ட பாதிப்புகள் நீங்கும். எனவே மாரடைப்பு, இதய நோய்கள் ஏற்படுவதில் இருந்து பாதுகாப்பு ஏற்படும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.


ரத்தசோகையுள்ள கர்ப்பிணி பெண்களுக்கான மருத்துவ குறிப்புக்கள்
[Saturday 2017-02-04 23:00]

கர்ப்பமான பெண்களுக்கு ரத்தசோகை இருந்தால் பிரசவத்தின் போதும் அதற்கும் பிறகும் பல சிக்கல்கள் ஏற்படலாம். பிரசவத்தின் போது பொதுவாக அதிக ரத்த இழப்பு ஏற்படும். ஏற்கனவே ரத்த சோகை நோய் இருந்தால் ரத்த இழப்பு உயிருக்கே ஆபத்தாக முடியும்.தாய்க்கு ரத்தசோகை இருந்தால் குழந்தை குறை பிரசவத்திலும், குறைவான எடையுடனும் பிறக்கும் வாய்ப்பு இருக்கிறது. அந்த குழந்தைகளுக்கும் ரத்தசோகை ஏற்படும் வாய்ப்பிருக்கிறது. நோயாளி இரும்பு சத்து இல்லாத உணவுகளை உண்ணும் பழக்க உடையவராக இருந்தால் இரும்பு சத்து அதிகம் இருக்கும் உணவுகளை அவர் சாப்பிட வேண்டும்.


சாம்சங்-ஐ பின்தள்ளி வரலாற்று சாதனை படைத்த ஆப்பிள்
[Friday 2017-02-03 22:00]

ஆப்பிள் நிறுவனம் 2017-ல் முதல் காலாண்டு வருமானத்தை சமீபத்தில் வெளியிட்டது. அதன் படி ஆப்பிள் நிறுவனம் இது வரை இல்லாத அளவு 78.4 பில்லியன் அமெரிக்க டாலர்களை வருமானமாக ஈட்டியுள்ளது. ஆப்பிள் கடந்த ஆண்டு வெளியிட்ட ஐபோன் 7 சாதனத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பே இதற்கு முக்கிய காரணமாக அறியப்படுகின்றது. ஆப்பிள் விற்பனையை பொருத்த வரை ஐபோன்களின் சராசரி விற்பனை விலை 695 டாலர்களாக அதிகரித்து உள்ளது என சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். டிசம்பர் மாதம் வரையிலான காலாண்டில் ஐபோன்களின் சராசரி விற்பனை விலை 619 டாலர்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.


குழந்தைகளை சளியிலிருந்து பாதுகாக்கும் வழிகள்..
[Friday 2017-02-03 22:00]

சில சமயங்களில் சாய்ச்சல் கூட வரும். அதனால் சிறு குழந்தைகள் சொல்ல தெரியாமல் அழுவார்கள். பொதுவாக குழந்தைகளை இந்த காலகட்டத்தில் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு சளி கட்டி அவதிப்பட்டால் வீட்டில் இருக்கும் சுக்கு, மிளகு, திப்பிலி, சித்தரத்தை, இவற்றை சம அளவு எடுத்து இடித்து பொடியாக்கி வைத்துக் கொண்டு 1/2 ஸ்பூன் எடுத்து தேனில் குழைத்து கொடுத்தால் மார்பில் கட்டியிருக்கும் சளி நீங்கிவிடும். இவ்வாறு சளி பிரச்சனையால் அவதிபடுபவர்களுக்கு வயதுக்கு தகுந்தாற்போல மருந்தினை எடுத்துக்கொள்ளலாம்.


சிறந்த மருத்துவ குணம் மிக்க திராட்சை...
[Thursday 2017-02-02 23:00]

திராட்சையில் கருப்பு மற்றும் பச்சை திராட்சை என இரண்டு ரகங்கள் உள்ளது. கருப்பு ரகத்தில் பன்னீர் திராட்சை என்று ஒன்று உள்ளது. குறைந்த புளிப்புத்தன்மையுடன் சாப்பிடுவதற்கு ருசியாக இருப்பதுடன் அதிக மருத்துவ குணமும் இவ்வகை பன்னீர் திராட்சையில் உண்டு. அரைக்கிலோ அளவு கொண்ட திராட்சை பழத்தை சாப்பிடுவது என்பது ஒரு நேர உணவு உட்கொள்ளுவது என்பதற்கு சமம். ஒரு மனிதன் அப்படி அரைக்கிலோ பழத்தினை அப்படியே சாப்பிடுவது என்பது சிரமமான ஒரு காரியமாக இருக்கும். ஆகவே நாம் இதை சாறு எடுத்து சாப்பிட்டால் மிகுந்த பலனும் கிடைக்கும்,


அதிகரித்துவரும் விவாகரத்திற்கான காரணங்களும் தீர்வும்...
[Thursday 2017-02-02 23:00]

குருவி கூட தனக்கான ஒரு கூட்டை ஒரே நாளில் கட்டிக்கொள்வதில்லை. பல நாட்கள் போராடி தான் தனக்கான பாதுகாப்பான கூட்டை அமைத்து கொள்கிறது. சில சமயம் குருவியே தான் கட்டிய கூட்டை அழித்து விட்டு பின்னர் அவதிப்படும். அதுபோல் தான் திருமண பந்தமும். சமீபகாலமாக திருமணத்திற்கு பின்னர் மனமுறிவு ஏற்பட்டு கணவன்-மனைவி பந்தத்தை சிதைத்துக்கொள்ள நீதிமன்ற வாசலில் ஆண்டு கணக்கில் தவம் கிடக்கும் தம்பதிகள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது.


டோக்கியோ ஒலிம்பிக்கில் ஸ்மார்ட்போனிலிருந்து பதக்கங்கள் தயாரிப்பு
[Thursday 2017-02-02 23:00]

டோக்கியோவில் 2020 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் வழங்கப்பட இருக்கும் பதக்கங்களை பழைய தொழில்நுட்ப சாதனங்களை மறுசுழற்சி செய்து பயன்படுத்த இருப்பதாக ஜப்பான் தெரிவித்துள்ளது. முன்னதாக பழைய ஸ்மார்ட்போன் மற்றும் சிறிய சாதனங்களை மறுசுழற்சி செய்து பதக்கங்களை தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. அதன்படி சுமார் 5000 பதக்கங்கள் இம்முறையில் தயாரிக்கப்படும் என செய்திகள் வெளியாகின.


குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிப்பதற்கான காரணங்கள்..
[Thursday 2017-02-02 23:00]

படுக்கையில் சிறுநீர் கழிக்கும் நோயை ஆங்கிலத்தில் என்யூரிசிஸ் என்று மருத்துவர்கள் அழைக்கிறார்கள். குழந்தைகள் படுக்கை, உடைகள் அல்லது பொருத்தமற்ற இடங்களில் தன்னிச்சையாகவோ அல்லது அனிச்சையாகவோ சிறுநீர் கழித்துவிடுவதே இந்நோயாகும். குழந்தை வளர வளர இந்நோய் தானாகவே சரியாகிவிடும். அல்லது சிகிச்சையின் மூலம் சரியாக்கி விடலாம். ஒரு சில குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிப்பதை ஐந்தாறு மாதங்கள் நிறுத்தி பின் மீண்டும் தொடரும் வாய்ப்புகளும் உண்டு. பொதுவாக ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழித்தால் தான் அது பிரச்சனை. ஐந்து வயதுக்குற்பட்ட குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழித்தால் அது நோயல்ல. அது பற்றி கவலைப்பட தேவையில்லை.

SELVI-HOMES-09-02-17
Mahesan-Remax-169515-Seithy
Easankulasekaram-Remax-300716
Elankeeran-debt-solution-25-06-2016
Tharsi-home-15-10-2016
<b>05-03-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற Ninaivakal-2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>26-02-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற ARAJEN-Beauty-Forever-2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>25-02-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற NETHRA - Movie Appreciation  நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா