Untitled Document
March 26, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
பனிக்காலத்தில் ஏற்படும் சரும வறட்சியிலிருந்து பாதுகாப்பு பெற சிறந்த வழிகள்..
[Wednesday 2017-02-01 21:00]

பனிக்காலத்தில் பெரும்பாலனோர் சருமம் வறட்சியால் அவதிப்படுகின்றனர். சிலரது சருமம் வறட்சியடைந்து, மென்மைத்தன்மை நீங்கி, சொரசொரப்பாக, சுருக்கங்களுடன் காணப்படும். இந்த நிலை பனிக்காலத்தில் மிகவும் மோசமாக இருக்கும். சரும வறட்சிக்கு புறக்காரணிகள் பல இருந்தாலும், ஒரு சிலருக்கு பரம்பரைக் காரணங்களாலும் சரும வறட்சி ஏற்படுகிறது. இத்தகைய வறட்சியான சருமத்தை உடனுக்குடன் சரிசெய்து கொள்ள வேண்டும். இல்லையெனில், பல பாக்டீரியாக்கள் வறண்ட சருமத்தின் வழியே ஊடுருவி உடலுக்கு சில ஒவ்வாமையை ஏற்படுத்தும்.


நோக்கியா, ஆரஞ்சின் அதிரடி திட்டங்கள்..
[Wednesday 2017-02-01 19:00]

நோக்கியா மற்றும் ஆரஞ்சு நிறுவனங்கள் இணைந்து எதிர்காலத்தில் 5ஜி மொபைல் நெட்வொர்க்களை உருவாக்கி வருகின்றன. இத்திட்டங்களின் கீழ் "அல்ட்ரா பிராட்பேண்ட்" மற்றும் இண்டர்நெட் ஆஃப் திங்ஸ் (Internet of things) வசதி உள்ளிட்டவை அடங்கும். இது குறித்து வெளியாகியுள்ள நோக்கியா வரைபடத்தில் 5G நெட்வொர்க் மொபைல் போன்களை கடந்து பல்வேறு வசதிகளை வழங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஸ்மார்ட் ஆடைகள் முதல் சுங்க வரி செலுத்துவது வரை பல்வேறு வசதிகளை இந்த தொழில்நுட்பம் கொண்டிருக்கும். ஸ்மார்ட் குளிர்சாதன பெட்டியில் இருந்து தானியங்கி ரோபோட் போன்ற வசதிகள் வழங்கப்படுவதால் மொபைல் நெட்வொர்க் பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


அதிக கோபத்தை ஏற்படுத்தும் உணவுப் பொருட்கள்!
[Wednesday 2017-02-01 19:00]

அனைவருக்குமே ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வதாலும், உடற்பயிற்சியில் ஈடுபடுவதாலும், மன அமைதி கிடைத்து, சந்தோஷத்தை உணர முடியும் என்பது தெரியும். ஆனால் ஒருசில உணவுகளை உட்கொண்டால், அவை மனநிலையைக் கெடுப்பதோடு, எரிச்சலையும், கோபத்தையும் தூண்டும்.எனவே ஏற்கனவே உங்களுக்கு மூக்கிற்கு மேல் கோபம் வருமாயின், கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்களை மட்டும் தயவு செய்து சாப்பிடாதீர்கள். சரி, இப்போது உங்களுக்கு அதிகளவு கோபத்தை வரவழைக்கும் உணவுப் பொருட்கள் என்னவென்று பார்ப்போம்.


அக்குளின் கருமையை போக்க இலகுவழி...
[Wednesday 2017-02-01 19:00]

நமது உடலில் மடிப்புகள் அதிகம் உள்ள மறைவான இடங்கள் அனைத்தும் கருமையாக இருக்கும். ஏனெனில் மறைவான இடங்களில் அதிகமாக காற்றோட்டம் இல்லாமல் இருப்பதால், அந்த இடங்களில் அழுக்குகள் மற்றும் கிருமிகள் அதிகமாகி, கருமை நிறத்தினைக் கொடுக்கிறது. நமது உடம்பில் அப்படி கருப்பாக இருக்கும் ஒரு இடம் தான் அக்குள். எனவே அக்குள்களில் ஏற்படும் கருமையை போக்கி, பளிச்சிட சூப்பரான சில டிப்ஸ் இதோ! சர்க்கரையானது, நமது அக்குள்களில் இருக்கும் இறந்த செல்களை நீக்கி, பளிச்சிட செய்யும் தன்மைக் கொண்டது. எனவே சர்க்கரையை நீரில் கலந்து, அதை அக்குள்களில் ஸ்கரப் செய்து வர வேண்டும்.


பளபளப்பான முகத்தைப் பெற்றுக்கொள்ள இலகு வழிமுறைகள்..
[Tuesday 2017-01-31 22:00]

சிலருக்கு முகத்திலும் கை மற்றும் கழுத்து பகுதிகளிலும் அடர்ந்த கருத்த நிற திட்டு திடீரென ஏற்படும். முகம் பல நிற வேறுபாடுகளுடன் காணப்படும். அதிக மெலானின் உற்பத்தியாகும் பொழுது பல இடங்களில் இந்த அடர் நிற திட்டு ஏற்படுகின்றது. அடர் ப்ரவுன் நிறம், லேசான ப்ரவுன் நிறம் முதல் கறுப்பு நிறம் வரை கோணல் மாணலாக இத்திட்டு படர்ந்து ஏற்படுகின்றது.


உங்களிடம் மனைவி இதைத் தான் எதிர்பார்க்கிறார்...
[Tuesday 2017-01-31 21:00]

கணவன் மண வாழ்வின் ஆரம்பத்திலிருந்தே அனைவருக்கும் மகிழ்வாய் குடும்பம் நடத்த ஆசைதான். அது சிலருக்கு எளிதாகவும் அனேகருக்கு சிரமமாகவும் இருக்கிறது. இந்த நிலை மாற குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை? கணவன் மனைவி எதிர்பார்ப்புகள் என்னென்ன? குடும்பத்தில் மகிழ்ச்சி நிகழ என்னென்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதை பார்க்கலாம்.


மாணவர்களுக்கென அறிமுகமாகும் டெல் லேப்டாப்கள்..
[Tuesday 2017-01-31 21:00]

டெல் நிறுவனத்தின் புதிய Latitude மற்றும் குரோம்புக் நோட்புக் சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பிரத்தியேக பதிப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய சாதனங்களில் 2 இன் 1 ஸ்டான்டர்டு நோட்புக் மற்றும் Latitude சீரிஸ் குரோம்புக் உள்ளிட்டவை அடங்குகின்றது. டெல் Latitude 11 கன்வேர்டிபில் மற்றும் குரோம்புக் 11 கன்வேர்டிபில் சாதனங்கள் டெல் நிறுவனத்தின் புதிய மாடல்கள் ஆகும். இந்த லேப்டாப்களை மடித்து டேப்லெட் போன்றும் பயன்படுத்தக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் பயன்படுத்த ஏதுவாக கடினமானதாகவும், கீறல் விழாத கிளாஸ் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டுள்ளது.


வாட்ஸ்அப்பில் வரவிருக்கும் புது அம்சங்கள்
[Tuesday 2017-01-31 21:00]

ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் வாட்ஸ்அப் பயன்படுத்துவோருக்கு விரைவில் புதிய அம்சங்கள் வழங்கப்பட இருக்கிறது. தற்சமயம் சோதனை செய்யப்பட்டு வரும் புதிய அம்சங்கள் வாட்ஸ்அப் பீட்டா பதிப்பில் வழங்கப்பட்டு வருகிறது. பீட்டா பதிப்பில் வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ்அப்பின் புதிய அம்சங்கள் சோதனை செய்யப்படும் போதே வழங்கப்படும். வாட்ஸ்அப் புதிய அப்டேட் மூலம் வழங்கப்பட இருக்கும் அம்சங்கள் மூலம் உங்களது நண்பர் இருக்கும் இடத்தை டிராக் செய்ய முடியும். இத்துடன் அவர்கள் ஸ்டேட்டஸ் மாற்றும் போது உங்களுக்கும் நோட்டிபிகேஷன் வரும். இவை தற்சமயம் பீட்டா பதிப்பில் வழங்கப்பட்டுள்ளது.


மன அழுத்தத்திலிருந்து மீண்டு பெண்கள் மகிழ்ச்சியாக வாழ...
[Monday 2017-01-30 21:00]

பெண்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிப்புக்குள்ளாவதற்கு மன அழுத்தமே முக்கிய காரணமாக இருக்கிறது. இது குறித்து விரிவாக பார்க்கலாம். பெண்களின் மன அழுத்தம் இனி மறைந்து போகும் பெண்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிப்புக்குள்ளாவதற்கு மன அழுத்தமே முக்கிய காரணமாக இருக்கிறது. ஆதலால் மனக்கவலைகளை உருவாக்கும் சிந்தனைகள் உதிக்க ஒருபோதும் இடம் கொடுத்துவிடக்கூடாது. பிரச்சினைகள் துளிர்விட தொடங்கும்போதே மன அழுத்தம் தோன்றுவதற்கு இடம் கொடுக்காதபடி மனதை திசை திருப்பி விட வேண்டும்.


இவ் வருடம் வெளியாகவுள்ள ஸ்மார்ட்போன்களில் காத்திருக்கும் அதிசயம்
[Monday 2017-01-30 21:00]

ஸ்மார்ட்போன்களில் அவ்வப்போது புதுப்புது சிறப்பம்சங்கள் வழங்கப்படுவது வாடிக்கையான ஒன்று தான். கடந்த ஆண்டு வெளியான ஸ்மார்ட்போன்களில் கைரேகை ஸ்கேனர், வாட்டர் ப்ரூஃப் வசதி உள்ளிட்ட அம்சங்கள் நம்மை வெகுவாக கவர்ந்தது. பொதுவாக புதிய சிறப்பம்சங்கள் விலை அதிகமான ஸ்மார்ட்போன்களில் வழங்கப்பட்டு பின் சில காலம் கழித்து அனைவரும் வாங்க கூடிய விலை கொண்ட ஸ்மார்ட்போன்களில் இவை வழங்கப்படும். ஆனால் இன்று நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. எத்தகைய அம்சமாக இருந்தாலும் அவை பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன்களில் உடனடியாக வழங்கப்பட்டு விடுகிறது. பெரும்பாலும் இவை சீன நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களில் முதலில் வழங்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.


ஆண்களின் தொப்பைக்கு இது தான் காரணம்..
[Monday 2017-01-30 21:00]

பெண்களை விட ஆண்களுக்குத் தான் பெரும்பாலும் அதிகப்படியான தொப்பை ஏற்படுகிறது. இதற்காக சொல்லப்படும் காரணத்தை கீழே விரிவாக பார்க்கலாம். ஆண்களுக்கு தொப்பை அதிகமாக இருப்பது ஏன்? பெண்களை விட ஆண்களுக்குத் தான் பெரும்பாலும் அதிகப்படியான தொப்பை ஏற்படுகிறது. அதற்கு என்ன காரணம் என நீங்கள் யோசித்தது உண்டா? ஆண்களுக்கு பெண்களை விட அதிகமான தொப்பை ஏற்பட என்ன காரணம்? பெண்கள் மற்றும் ஆண்கள் ஆகிய இருபாலர்களுக்கும் அதிகப்படியான தொப்பை ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றது.


தோல் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிய ஸ்மார்ட் மென்பொருள்..
[Monday 2017-01-30 21:00]

மனித உடலில் தோல் சார்ந்த வியாதிகளை கண்டறிவது சற்றே கடினம் ஆகும். அதுவும் தோல் புற்றுநோய் இருப்பதற்கான அறிகுறிகளை உணர முடியாது. தற்சமயம் வரை பலருக்கும் சிக்கல் ஏற்படுத்தும் இது போன்ற வியாதிகளை எதிர்காலத்தில் தானாக கண்டறிந்து அதற்கேற்ப சிகிச்சை பெற்றுக் கொள்ள முடியும். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியோடு இது சாத்தியமாக்கப்பட்டுள்ளது. நம் உடலில் தோல் நோய் இருப்பதை கண்டறியும் திறன் கொண்ட செயற்கை நுண்ணறிவு மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை ஒப்பிட்டு பார்த்து நம் உடலில் தோல் நோய் இருப்பதை இந்த செயற்கை நுண்ணறிவு மென்பொருள் சரியாக உறுதி செய்துவிடுகிறது.


என்றும் இளமையுடன் வாழ சிறந்த மருந்து துளசி நீர்..
[Monday 2017-01-30 20:00]

துளசி இந்த செடியின் அனைத்து பாகங்களும் மருத்துவ தன்மை நிறைந்தது. இயற்கை தந்த படைப்புகளில் துளசி அற்புதமான ஒரு சிறந்த மருந்தாகும். துளசியின் மருத்துவ குணங்களை அனைவரும் அறிந்திருப்பது அவசியமானதாகும். மருத்துவம் முன்னேறும் இந்நாளில் பல நவீன கண்டுபிடிப்புகள் இருந்தாலும் நோய்களும் தொடர்ந்து மனிதனை தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றது.எந்த நோயாக இருந்தாலும் கவலைப்படாமல் துளசிநீர் மட்டும் குடித்து வாருங்கள். அனைத்து நோய்களின் தாக்கமும் குறைந்து விடும். துளசி நீர் எப்படி செய்வது?


6 நாட்கள் நுரையீரல்கள் இன்றி உயிர் வாழ்ந்த பெண்
[Saturday 2017-01-28 20:00]

கனடாவை சேர்ந்த பெண் மெலிஸ்சா பெனாய்ட் (32). இவர் பிறக்கும் போதே நுரையீரலில் நார் கட்டியுடன் கூடிய கெட்டநீர் பையுடன் பிறந்தார். இவருக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில் திடீரென அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு உடல் உறுப்புகள் ஒன்றன்பின் ஒன்றாக செயல் இழக்க தொடங்கியது. உடனே அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் நோய் பாதித்த நுரையீரலை அகற்றி விட்டு தானமாக பெற்று மாற்று நுரையீரல் பொருத்த முடிவு செய்தனர். இதற்கிடையே உடல் உறுப்புகள் செயல் இழப்பதை தடுத்து அவரது உயிரை காப்பாற்ற உடனடியாக நோய் பாதித்த நுரையீரல்கள் அகற்றப்பட வேண்டிய சூழ்நிலை இருந்தது. ஆனால் மாற்று நுரையீரல் தானமாக கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது.


சோப்பு போட்டு சுத்தம் செய்யக்க்கூடிய ஸ்மார்ட்போன்
[Saturday 2017-01-28 20:00]

இன்று வெளியாகும் பல்வேறு ஸ்மார்ட்போன்களிலும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது. இவை ஸ்மார்ட்போன்கள் தண்ணீரில் நனைந்தாலும், சில விநாடிகளில் இருந்து நிமிடங்கள் வரை தண்ணீரில் இருந்தாலும் எதுவும் ஆகாமல் பார்த்துக் கொள்கிறது. ஆனால், கியோசிரா எனும் ஜப்பான் நிறுவனம் தயாரித்துள்ள புதிய ஸ்மார்ட்போன் வாட்டர் ரெசிஸ்டண்ட் ஸ்மார்ட்போன்களையே மிஞ்சும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தண்ணீரில் நனைந்தால் பாழாகாது என்பதோடு வெந்நீர் மற்றும் சோப்பு கட்டிகள் மூலம் பாதிக்கப்படாத வகையில் கியோசிராவின் ரஃபேர் (Kyocera Rafre) ஸ்மார்ட்போன் வடிவமைக்கப்பட்டுள்ளது.


கர்ப்பிணி பெண்களுக்கு எதிர்ப்பு சக்தி தரும் இளநீர்
[Friday 2017-01-27 22:00]

கர்ப்பிணிகள் அதிகமாக இளநீர் பருகுவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. கர்ப்ப காலத்தில் இயற்கையான மருத்துவ குணம் நிறைந்த இளநீரை பருகுவது தாய்க்கும், கருவில் உள்ள குழந்தைகளுக்கும் ஏற்றது என்றும் மருத்துவர்கள் பரிந்துரைந்துள்ளனர். இளநீரில் எலக்ரோலைட் அதாவது மின்பகுபொருள் அதிகமாக உள்ளது. எனவே கர்ப்பமாக இருக்கும் பெண்கள் இளநீர் அருந்துவது மிகவும் அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள். இதனால் கர்ப்ப காலத்தில் சிறுநீர் தொற்றுநோய் ஏற்படுவது தவிர்க்கப்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர், தாது உப்புக்களும், உயிர்சத்தும் மிதமாகவே சர்க்கரை, உப்பு மற்றும் புரத சத்து உள்ளது. மேலும் இதில் குளோரைடு,பொட்டசியம் மற்றும் மக்னிசியம் அதிகமாக உள்ளது.


அதிநவீன சொகுசு பஸ் பங்களா அறிமுகம்
[Friday 2017-01-27 21:00]

வரவேற்பு அறை, சமையலறை, படுக்கையறை, குளியலறை, வெந்நீர் நீச்சல் குளம் மற்றும் ஹெலிகாப்டர் வசதியுடன் அதிநவீன சொகுசு பஸ் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவில் உள்ள லாஸ் வேகாஸ் நகரில் கடந்த 8-ம் தேதி புதியரக மின்னணுப் பொருட்கள் மற்றும் வாகனங்களை அறிமுகப்படுத்தும் கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில் இடம்பெற்ற அகஸ்டா நிறுவனத்தின் புதிய தயாரிப்பான ‘ஆர்.வி.’ என்னும் அதிநவீன வசதிகளுடன் கூடிய சொகுசு பஸ் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.


கூந்தலைப் பாதுகாக்க செம்பருத்தி மருத்துவம்
[Thursday 2017-01-26 23:00]

இன்றைய காலத்தில் தலைமுடியை சரியாக பராமரிக்காவிட்டால், மாசடைந்த சுற்றுச்சூழலால் தலைமுடி பலவீனமாகி, உதிர ஆரம்பிப்பதுடன், பொலிவிழந்து, வறட்சியுடன் அசிங்கமாக நார் போன்று காணப்படும். தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த எத்தனையோ இயற்கை பொருட்கள் உள்ளன. அதில் செம்பருத்தி குறிப்பிடத்தக்கவை. இப்போது செம்பருத்தியின் பொடியைக் கொண்டு எப்படி தலைமுடி பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது என காணலாம். நாட்டு மருந்து கடைகளில் விற்கப்படும் செம்பருத்தி பொடியையும் பயன்படுத்தலாம். செம்பருத்தி பொடி என்பது செம்பருத்தி இலை, பூ இரண்டும் சேர்ந்தது.


இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் உடற்பயிற்சிகள்
[Thursday 2017-01-26 22:00]

இதயத்தை பாதுகாக்கவும், ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பல உடற்பயிற்சிகள் உள்ளன. இத்தகைய உடற்பயிற்சி மூலம் இதயத்தை நல்ல உறுதியுடனும், ஆரோக்கியத்துடனும் வைத்துக் கொள்ள முடியும். எப்படியெனில் இவ்வகை பயிற்சிகள் இதயத் துடிப்பின் வேகத்தை அதிகரிக்கச் செய்வதால், இதயம் ஆரோக்கியமாக இருக்கிறது. பொதுவாக இதயத்தை நல்ல நிலையில் வைத்திருப்பதன் மூலம், உடல் ஆக்ஸிஜனைப் பயன்படுத்தும் முறையில் மிகச்சிறந்த முன்னேற்றம் காணப்படும். அதிலும் இதயம் ஆரோக்கியமாக இருக்கும் பொழுது, படிகளில் ஏறும் போது களைப்படைய மாட்டோம்.


தாய்ப்பாலுக்கு மிகச்சரியான மாற்று ஆட்டுப்பால்
[Thursday 2017-01-26 22:00]

ஆட்டுப்பாலில் அபரிமிதமான மருத்துவ குணங்கள் நி றைந்திருப்பதாக சித்த மருத்துவ நூல்கள் கூறுகின்றன. ஆட்டுப்பால் தாய்ப்பாலுக்கு மிகச்சரியான மாற்று என்று தற்போதைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆட்டுப்பாலில் உள்ள பீட்டாகேசின் என்ற புரத அமைப்பு தாய்ப்பாலில் காணப்படும் புரத அமைப்பினை ஒத்ததாக உள்ளது. இதே போல் ஆட்டுப்பாலில் உள்ள ஒலிகோசேர்க்ரைடு என்னும் சர்க்கரையின் அமைப்பும் தாய்ப்பாலில் உள்ளது போன்றே காணப்படுகிறது. இதனால், பச்சிளங்குழந்தைகளுக்கு தாய்ப்பாலுக்கு மிகச்சிறந்த மாற்று ஆட்டுப்பால் மட்டுமே.


கர்ப்பிணி பெண்க ள் ஆல்கஹால் அருந்துவதால் ஏற்படும் பாதிப்புகள்
[Wednesday 2017-01-25 23:00]

ஆல்கஹால்' நிரம்பிய மதுவை அருந்தும் அனைவருக்கும் குறிப்பாக பெண்களுக்கு அதிலும் கர்ப்பிணி பெண்களுக்கு அதிக பாதிப்புகள் ஏற்படுகின்றது. என்ன விளைவுகள் ஏற்படுகின்றன என்பதை கீழே பார்ப்போம். ஆண்கள் வீதிக்கு வந்து குடித்தால், பெண்களில் பலர் வீட்டிலேயே குடிக்கிறார்கள். உயர்ந்த அந்தஸ்திலுள்ள பல பெண்களும், 'பார்ட்டி' என்று வரும்போது, 'குடிக்க' ஆரம்பிக்கத் தொடங்கி, அதற்குப் பழகி, பிறகு அடிமையாகி விடுகிறார்கள்.


வாழை இலையில் சாப்பிடுவதன் பயன்கள்..
[Wednesday 2017-01-25 23:00]

எத்தனையோ பாரம்பரியமான விஷயங்களை, நம் முன்னோர்கள் அற்புதமாய் கண்டுபிடித்து வைத்திருக்கிற விஷயங்களை தவறவிட்டு விட்டோம். அதில் ஒன்றுதான் இந்த வாழை இலையில் சாப்பிடுவது. வாழை இலையில் சாப்பிடுவதால், இளநரை வராமல் நீண்டநாட்கள் தலைமுடி கருப்பாக இருக்கும். வாழை இலை ஒரு கிருமி நாசினியாகும். உணவில் உள்ள நச்சுக்கிருமிகளை வாழை இலை அழிக்கும் தன்மை கொண்டது.


இயற்கையான முறையில் சரும முடிகளை நீக்கும் வழிகள்
[Wednesday 2017-01-25 23:00]

சருமத்தின் அழகையும், ஆரோக்கியத்தையும் பாதுகாக்க வேண்டுமானால், கெமிக்கல் கலந்த பொருட்களை சருமத்திற்கு பயன்படுத்துவதற்கு பதிலாக, இயற்கை பொருட்களைக் கொண்டு சரும முடிகளை நீக்குங்கள். இங்கு அப்படி சரும முடிகளை நீக்குவதற்கு பயன்படும் ஒருசில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பயன்படுத்தி, சருமத்தில் வளரும் தேவையற்ற முடிகளை நீக்குவதோடு, அதன் வளர்ச்சியையும் கட்டுப்படுத்தலாம்.


சர்க்கரை வியாதியால் ஏற்படும் பாலியல் பிரச்சனைகள்
[Wednesday 2017-01-25 23:00]

சர்க்கரை வியாதியால் உடலின் உறுப்புகள் அனைத்துமே பாதிக்கப்பட்டுவிடுகிறது. இரத்த நாளங்கள் பழுதடைந்து ‌விரைவில் சிதைந்துவிடுகிறது. இதனால் விரைப்புத் தன்மை இல்லாமை, விந்தணுக்களில் குறைபாடு ஏற்படுதல், விந்து முந்துதல், செக்ஸ் உணர்ச்சி குறைந்துவிடுதல், பெண்ணாக இருந்தால் பிறப்புறுப்பை வழவழப்பாக வைத்துக்கொள்ளும் யோனிச் சுரப்பி நீர் குறைந்து பிறப்புறுப்பு வறண்டுவிடுதல், பிறப்புறுப்பில் நோய்த் தொற்று, ஹார்மோன்களில் குறைபாடுகள் அல்லது மாறுபாடுகள் போன்ற பல்வேறு பிரச்சனைகள் தோன்றுகின்றன.


அதிக நேரம் வறுத்த உணவு புற்றுநோயை ஏற்படுத்தும் - ஆய்வில் தகவல்
[Tuesday 2017-01-24 21:00]

பொன்நிறத்தில் வறுக்கப்படும் உணவு வகைகள் உடல் நலத்துக்கு தீங்கு இழைப்பதில்லை. அதே நேரம் மிகவும் கருஞ்சிவப்பு நிறத்தில் வறுத்து சாப்பிடும் உணவால் புற்றுநோய் ஏற்படும் ஆபத்து இருப்பதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். உருளைக்கிழங்கு மற்றும் வேரில் இருந்து கிடைக்கும் கிழங்கு வகை உணவு பொருட்கள் மற்றும் ரொட்டியை அதிக வெப்பத்தில், நீண்ட நேரம் வறுத்து சாப்பிடுகின்றனர்.இவ்வாறு சாப்பிடுவதில் பெரும்பாலானோருக்கு அலாதி பிரியம் உள்ளது. அவ்வாறு சாப்பிடுவது உடல் நலத்துக்கு தீங்கானது. அதனால் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு உள்ளது என எச்சரிக்கப்பட்டுள்ளது.


இனி மொபைலிலேயே கண் பரிசோதனை செய்யலாம்..
[Monday 2017-01-23 22:00]

கண் கண்ணாடிகளை இணையத்திலேயே வாங்கும் வசதி வந்துவிட்டது. ஆனால், துாரப் பார்வையா, கிட்டப் பார்வையா என்பதை அறிய, மருத்துவர்களை நாடவேண்டியிருக்கிறது. இப்போது அதற்கு மாற்றாகவும் ஒரு கருவி வந்திருக்கிறது. அமெரிக்காவில், கலிபோர்னியாவிலுள்ள, 'ஐக்யூ' (Eyeque) என்ற நிறுவனம், அதே பெயரில் உருவாக்கியிருக்கும் சாதனத்தை ஒரு ஸ்மார்ட்போனில் பொருத்திக்கொள்ள வேண்டும். அதனுடன், இலவசமாகக் கிடைக்கும், 'மை ஐக்யூ' என்ற மொபைல் செயலியையும் தரவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். ஐக்யூ சாதனம் வழியே மொபைலில் தெரியும் சில காட்சிகளை பார்த்து, தெளிவாகத் தெரியும் வரை, செயலியில் தெரியும் பொத்தான்களை அழுத்தி சரி செய்ய வேண்டும்.


பக்க விளைவின்றி முகத்தில் உள்ள அழுக்கை நீக்க எளிய வழி
[Monday 2017-01-23 22:00]

எந்த ஒரு பக்கவிளைவும் ஏற்படுத்தாமல், சருமத்தை அழகாக்கவும், உடலை ஆரோக்கியமாக்கவும் வைக்க சூடான நீரை வைத்து ஆவி பிடிப்பது மிகவும் சிறந்தது. முகத்தில் உள்ள அழுக்கை நீக்குவதற்கு எளிய வழி எந்த ஒரு பக்கவிளைவும் ஏற்படுத்தாமல், சருமத்தை அழகாக்கவும், உடலை ஆரோக்கியமாக்கவும் வைக்க சூடான நீரை வைத்து ஆவி பிடிப்பது மிகவும் சிறந்தது. ஏனெனில் இதனால் சருமத்தில் உள்ள சரும துளைகள் விரிவடைந்து, அதில் உள்ள அழுக்குகள், கிருமிகள் விரைவில் வெளியேறிவிடும். மேலும் இதற்கு எந்த ஒரு செலவும் ஆகாது.


பெண்களுக்கு காலை உணவின் அவசியம்
[Monday 2017-01-23 22:00]

காலை வேளையில் பணிக்கு செல்லும் அவசரத்தில் தங்கள் உடல் நலனில் அக்கறை செலுத்தாமல் அரைகுறையாக காலை உணவை முடித்துக்கொள்ளும் பெண்கள் அதிகம். பெண்களே காலை உணவு கட்டாயம் தேவை வேலைக்கு செல்லும் பெண்கள் இரட்டிப்பு பணிச்சுமையை சுமக்க வேண்டியிருக்கிறது. காலையில் அவசர, அவசரமாக வீட்டு வேலைகளை முடித்துவிட்டு வேலைக்கு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பியதும் மீண்டும் வேலையை தொடர வேண்டியிருக்கிறது.

Elankeeran-debt-solution-25-06-2016
Mahesan-Remax-169515-Seithy
Tharsi-home-15-10-2016
SELVI-HOMES-09-02-17
Easankulasekaram-Remax-300716
<b>05-03-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற Ninaivakal-2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>26-02-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற ARAJEN-Beauty-Forever-2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>25-02-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற NETHRA - Movie Appreciation  நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா