Untitled Document
March 29, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
சந்திரனில் இறுதியாக காலடி எடுத்துவைத்த விண்வெளி வீரர் மரணம்
[Wednesday 2017-01-18 13:00]

சந்திரனில் இறுதியாக காலடி எடுத்துவைத்த விண்வெளி வீரரான எயூஜின் கெர்னான், அமெரிக்காவில் காலமானார். அமெரிக்க விண்வெளி வீரரான எயூஜின் கெர்னான் கடந்த 1972ஆம் ஆண்டு அப்பல்லோ 17 விண்கலத்தில் சந்திரனுக்கு சென்று, அங்கு தங்கி சில ஆய்வுகளை மேற்கொண்டார். இதுவரை சந்திரனுக்கு சென்ற விண்வெளி வீரர்களில் இறுதியாக அங்கு ஆய்வுகளை செய்தவர் என்னும் பெருமைக்குரியவரான எயூஜின் கெர்னான், உடல் நலக்குறைவால் தனது 82ஆவது வயதில் டெக்சாஸ் மாநிலத்தின் ஹொஸ்டன் நகரில் உள்ள வைத்தியசாலையில் இன்று மரணமடைந்தார்.யூஜினின் மரணத்திற்கு அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான ’நாசா’ தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.


அபோபிஸ் விண் பாறை - பூமியோடு மோதும் வாய்ப்புக் குறைவு!
[Saturday 2017-01-14 19:00]

யூன் 2004ல் கண்டுணரப்பெற்ற அபோபிஸ் ‘அஸ்ரெறொயிட்’ ASTEROID APOPHIS (கதிரவனைச் சுற்றிவரும் குறுங்கோள்), 2029ல் புவிக்கு மேலாக 30,000 கிலொமீற்றர் உயரத்தில் செல்லும்;. அத்தோடு 2036ல் கோளொடு மோதுகின்ற வாய்ப்பு மிகக்குறைவு என ஆய்வு காட்டுகிறது. அச்சுறுத்திக்கொண்டிருக்கும் அபோபிஸ் ‘அஸ்ரெறொயிட்’ விண்கல் புவியைத் தாண்டி செல்லும் பொழுது உலகம் முழுதிருக்கும் வான சாத்திரிகள் அதனை ஊன்றிக் கவனிப்பர். அத்தோடு, வானத்தை நோக்குவோரும் இணையத்துக்குச் சென்று, 2036ல் கோளொடு மோதமுடியும் என ஆய்வு காட்டுகின்ற ‘அஸ்ரெறொயிட்’டின் படங்களை உடனுக்குடன் பார்க்கமுடியும்.


இராணுவத் துறையிலும், உளவுத் துறையிலும் நுளம்பை போலவே தோன்றும் உளவாளி ரோபோக்கள்!
[Saturday 2017-01-14 17:00]

பார்ப்தற்கு நுளம்பை போலவே தோன்றும் உளவாளி ரோபோக்கள் பார்ப்பதற்கு அப்படியே கொசு போலவே தெரிகிறதா? ஆனால் அதுதான் இல்லை. இது முழுக்கமுழுக்க ஒரு உளவாளியைப் போலவே கண்காணிக்கும் திறனுள்ள ஆளில்லாத மிகச்சிறிய விமானமாகும். இதனை இன்னும் தயாரித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். இதற்குரிய நிதியினை அமெரிக்க அரசாங்கமே வழங்குகிறது. இதனை இருந்த இடத்திலிருந்து ரிமோட் மூலமாகவே விரும்பியவாறு இயக்கலாம். அத்துடன் நவீனரக சிறிய கமராவையும் மைக்குரோபோனையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த கொசு போன்ற பறக்கும் ரோபோவை ரிமோட் மூலமாக மனிதர்கள் மீது கொசுவைப் போலவே கட்சிதமாக பறந்து சென்று உட்கார்ந்து கொள்ளச் செய்யலாம்.


யார் யார் எந்தெந்த பழச்சாறுகள் குடிக்கலாம்?
[Friday 2017-01-13 17:00]

சோர்வுற்ற தருணங்களில் நாக்கில்பட, நமக்குப் புத்துணர்ச்சி தரும் என நம்பவைக்க ஏதோ ஒரு பானம் நமக்குத் தேவையாக இருக்கிறது. இன்றைய டைட் ஷெட்யூல் வாழ்க்கைமுறைக்கு உடலுக்கும் உள்ளத்துக்கும் எனர்ஜி தரக்கூடிய பானங்களே தேவை. கார்பனேட்டட் குளிர்பானங்களிலோ, நாயர் கடை டீயிலோ கிடைக்காத அபார சத்துக்களை அள்ளி அள்ளித் தருபவை, பழங்களில் இருந்து எடுக்கப்படும் ஜூஸ்கள். எந்த ஜூஸால் என்ன பலன் கிடைக்கும் என்பது தெரியாமலேயே நாம் பல பழச்சாறுகளை அருந்திக்கொண்டுதான் இருக்கிறோம்.


காதலிக்கும் பெண்கள் கடைப்பிடிக்க வேண்டியவை:
[Thursday 2017-01-05 18:00]

ஒருபோதும் காதலில் அத்துமீறாதீர்கள். காதலின் புனிதத்தை காப்பாற்றும் உறுதி இருந்தால் மட்டும் காதலியுங்கள். இதை புத்தாண்டு காதல் உறுதிமொழியாக எடுத்துக்கொள்ளுங்கள்.

1. காதலியோடு செலவிடும் நேரத்தை காதலிக்கவும், காதலுக்காகவும் மட்டும் செலவிடுங்கள். காதலுக்கும் கடமை உணர்வு மிக முக்கியம். அதனால் காத்திருக்கச் செய்தல், சந்திப்பை தாமதப்படுத்துதல், ஒத்திப்போடுதல் ஆகியவற்றை தவிர்த்திடுங்கள். சந்திப்பின்போது இடையூறு இல்லாத, பாதுகாப்பான சூழலை உருவாக்கி கடைப்பிடியுங்கள். சூழல் நன்றாக அமைந்துவிட்டால் காதலி நம்பிக்கையுடன் அன்பை வெளிப்படுத்துவாள்.


மூன்றாம் தலைமுறையாக விரைவில் அறிமுகமாகின்றது APPLE WATCH 3
[Thursday 2017-01-05 07:00]

ஆப்பிள் நிறுவனம் தனது Apple Watch 2 இனை கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் அறிமுகம் செய்திருந்தது. இக் கடிகாரமானது மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பினைப் பெற்றதை தொடர்ந்து புதிய பதிப்பினை உருவாக்கும் முயற்சியில் இறங்கியிருந்தது. Apple Watch 3 எனும் குறித்த கைக் கடிகாரம் வடிவமைக்கப்பட்டு தற்போது விற்பனைக்கு தயாராகிவிட்டது. இந் நிலையில் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இத் தகவலை Digitimes சஞ்சிகை வெளியிட்டுள்ளது.


புற்றுநோய் கட்டிகளை அகற்றும் நவீன தொழில்நுட்பத்தினைக் கொண்ட நானோ தட்டுக்கள் உருவாக்கம்!
[Monday 2017-01-02 17:00]

மனிதர்களைத் தாக்கும் உயிர்கொல்லி நோய்களில் ஒன்றான புற்றுநோய் தொடர்பான ஆய்வுகள் தற்போது முடுக்கிவிடப்பட்டுள்ளது. அமெரிக்க வரலாற்றில் மட்டும் 14.5 மில்லியன் வரையானவர்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது ஒவ்வொரு வருடமும் 13 மில்லியன் வரையானவர்கள் புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளாவதாகவும் புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இதன் அடிப்படையில் மிச்சிக்கன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தொடர்ச்சியான ஆராய்ச்சியினை மேற்கொண்டு வருகின்றனர். இதன் விளைவாக நவீன தொழில்நுட்பத்தினைக் கொண்ட நானோ தட்டுக்களை உருவாக்கியுள்ளனர்.


செல்பி பிரியர்களை ஆச்சர்யத்தில் மூழ்கடிக்க வருகிறது ஒரு புத்தம் புதிய vivo v5 plus கைப்பேசி!
[Monday 2017-01-02 17:00]

சந்தையில் ஸ்மார்ட் போன்கள் அதிகமாக விற்கப்பட்டாலும், மக்கள் விரும்புவது செல்ஃபி எடுப்பதற்கு நல்ல மொபைல் வேண்டுமென்று தான். ஆம், இப்போதெல்லாம், கைப்பேசியின் பின்புற காமெராவை யாரும் அதிகமாக பயன்படுத்துவதில்லை. எல்லாம் முன்பக்க காமெராவினால் எல்லாம் செல்ஃபி மையமாகிவிட்டது. இந்நிலையில், முன்னனி ஸ்மார்ட் கைப்பேசி நிறுவனமான vivo வருகிற 23 ஆம் திகதி ஒரு புத்தம் புதிய vivo v5 plus கைப்பேசி ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த கைப்பேசியானது, செல்ஃபி பிரியர்களை கவர்வதற்காகவே தயாரிக்கப்பட்டுள்ளது. ஆம் இரண்டு முன்பக்க கமெராவுடன் அறிமுகமாக உள்ளது.


கை இல்லாதவருக்கு இறந்தவரின் கையை பொருத்தி போலந்து டாக்டர்கள் சாதனை!
[Friday 2016-12-23 14:00]

போலந்து நாட்டைச் சேர்ந்த 32 வயது வாலிபர் பிறவியிலேயே மணிக்கட்டுக்கு கீழ் விரல்கள் அதாவது கை இல்லாமல் பிறந்தார் இதனால் மிகவும் கஷ்டப்பட்டு வந்த அவர் விரோல்கலா மருத்துவ பல் கலைக்கழக ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஆடம் டொமேன்ஸ் விகாவிடம் சென்று சிகிச்சை ஆலோசனை பெற்றார்.அப்போது மரணம் அடைந்த ஒருவரின் கையை தானமாக பெற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி இறந்தவரின் கை தானமாக பெறப்பட்டது.


சூரிய குளியல் நீரிழிவு மற்றும் இருதய நோயை தடுக்கும்: - புதிய ஆய்வில் தகவல்
[Friday 2016-12-23 14:00]

சூரிய குளியல் உடல் நலத்துக்கு நல்லது என்ற பொதுவான கருத்து நிலவுகிறது. இதனால் மேலை நாடுகளில் கடற்கரையில் பொதுமக்கள் சூரிய குளியலில் ஈடுபடுகின்றனர்.இத்தகைய சூரிய குளியலால் நீரிழிவு மற்றும் இருதய நோய்கள் வராமல் தடுக்கப்படும் என்ற புதிய தகவல் ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.உணவுப்பொருட்களில் உள்ள அதிக அளவிலான கொழுப்பினால் வளர்சிதை நோய் ஏற்படுகிறது. உடலில் வைட்டமின் டி குறைபாடினால் அத்தகைய நோய் உருவாகிறது என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.


கடலுக்கடியில் இயங்கும் தனி உலகம்..! – மர்மங்களின் பிறப்பிடம்
[Friday 2016-12-23 10:00]

தமிழர் வரலாற்றை கொஞ்சம் பின்சென்று அதாவது இருபது ஆயிரம் வருடங்களுக்கு முன் சென்று கடலில் மூழ்கிய ஓர் தனி உலகிற்கு சென்று பார்க்கலாம். பயப்பட வேண்டாம் நீண்ட தூரப் பயணம் என்ற அச்சமும் வேண்டாம் நான்கு அல்லது 5 நிமிடத்தில் முடிந்து விடும். ஆனாலும் அவசியமான தொன்று என்பது இறுதியில் புரியும். தனக்கே உரிய சிறப்பினால் உலகுக்கே எச்சரிக்கை விடுத்தான் அன்றைய வீரத் தமிழன் அவன் சேர்த்து வைத்த பெருமையை இப்போது நாம் காத்துக் கொண்டு வருகின்றோமா என்பது கேள்விக் குறிதான். நாவலன் தீவு அல்லது குமரிக்கண்டம் என்றும் இப்போது லொமூரியா எனவும் வரலாற்றில் பதிவான ஓர் இடத்தை நோக்கிய பயணமே அது. நம்மில் பலருக்கு தெரிந்த கதைதான் இது ஆனாலும் நவீன காலத்திற்கு தொடர்புண்டு.


ஒரே வாரத்தில் கல்லீரலை சுத்தம் செய்ய உலர்ந்த திராட்சையை எப்படி சாப்பிடலாம்?
[Wednesday 2016-12-21 07:00]

நம் உடலில் இருந்து நச்சுக்களை அகற்றும் பெரிய வேலையை கல்லீரல் செய்துக் கொண்டிருக்கிறது. அதுவே நச்சுக்களால் சூழப்பட்டு செயற்திறன் குறைந்து போனால் என்ன ஆகும்? உடல் நிலை தான் மேலும் மோசமாகும். புகை, ஆல்கஹால், கண்ட உணவுகள், அசுத்தமான சுற்றுப்புற சூழல் போன்றவை நுரையீரல் மற்றும் கல்லீரல் நலன் சீர்கெட முக்கிய காரணிகளாக இருக்கின்றன. உங்கள் கல்லீரல் ஆரோக்கியம் சீர்குலைந்து போனால் ஈரல் அழற்சி, ஈரல் நோய் மற்றும் கொழுப்பு கல்லீரல் போன்றவை உண்டாகும் அபாயம் இருக்கின்றன…


கடுமையான குளிர்…! சமாளிக்க என்ன வழி…!
[Saturday 2016-12-17 19:00]

பருவநிலை மாற்றத்தை சமாளிப்பது என்பது மனிதர்களுக்கு கிடைத்துள்ள சவாலான விஷயமாகும். எந்த ஒரு சூழ்நிலையையும் சமாளித்து விடலாம். ஆனால், குளிர் காலத்தை சமாளிப்பது என்பது மிகப்பெரிய சவால் தான். குளிர்காலத்துக்கு தேவையான தயாரிப்புகளை செய்தால், எளிதில் குளிரை வென்று விடலாம். நல்ல தரமான உல்லன், கம்பளி போர்வை, சொட்டர் போன்றவைகளை பயன்படுத்தினால் குளிர்காலத்தில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். குளிர்காலத்தினால் என்னென்ன பாதிப்பகள் ஏற்படுகின்றன. குளிர் காலத்தில் சளி, தும்மல், இருமல், தலைவலி என்று அடுக்கடுக்காகப் பிரச்னைகள் படை எடுத்து வரும்.


இரவு நேரப்பணி கல்லீரல் பிரச்சனையை உருவாக்குகிறது…!
[Saturday 2016-12-17 09:00]

இன்றைய சூழலில் எல்லாத்துறைகளை எடுத்துக் கொண்டாலும் இரவு நேரப்பணி இல்லாமல் இல்லை. ஐ.டி. துறையிலிருந்து, பி.பி.ஓ. நிறுவனங்கள் வரை இரவு நேரப்பணிகளில் ஊழியர்களை பயன்படுத்துகின்றனர். தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது இரவு நேரப்பணி.அப்படி இரவு நேரப்பணி செய்பவர்களுக்கு ‘ஜெட்லேக்’ என்ற பிரச்சனை ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஜெட்லேக் என்றால் என்ன? ஜெட்லேக் என்பதற்கு வின் பயண களைப்பு என்கின்றார்கள். அதாவது, ஓய்வு எடுக்கக்கூடிய நேரங்களில், உடலை வேலைக்கு உட்படுத்துவது.


நரை முடியை தடுக்கும் மூலிகை எண்ணெய்...!
[Friday 2016-12-16 18:00]

நீங்கள் பாத்திருக்கலாம். இப்போதும் நமது பாட்டிகளுக்கு கூந்தல் கருப்பாகவும், நீளமாகவும் இருக்கும். இதற்கு காரணம் அவர்கள் எண்ணெய் உபயோகப்படுத்தியதே. ஆனால் நாம் தோற்றத்திற்கு நன்றாக இல்லை என்று எண்ணெய் வைக்கும் பழக்கத்தை மறந்துவிட்டோம். கூந்தல் வளர எண்ணெய் மிகவும் முக்கிய இடம் பெற்றுள்ளது. இவை சருமத்தால் ஊடுருவி கூந்தலின் செல்களுக்கு ஊட்டம் அளித்து நன்றாக வளர்ச் செய்யும். அப்படி உங்கல் கூந்தலை கருகருவென வளர்க்கவும் நரை முடி விரவில் தோன்றாமலும் இருக்க ஒரு பாட்டி சொன்ன வைத்தியம் இது.


கருந்துளை வழியாக வந்து செல்லும் வேற்று கிரகவாசிகள்!
[Thursday 2016-12-08 18:00]

வேற்றுகிரக வாசிகள் இருக்கிறார்களா இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள் நம்மை போன்று இருப்பார்களா அல்லது சினிமாவில் காட்டப்படும் உருவங்களில் இருப்பார்கள் இது போன்ற எண்ணற்ற கேள்விகள் நம் மனதில் எழுவது உணடு. வேற்று கிரகவாசிகள் உள்ளார்களா என்ற கேள்விக்கு நமது இஸ்ரோ விஞ்ஞானிகள் கிட்டத்தட்ட ஆம் என்று பதிலளித்து ள்ளனர். பூமிக்கு வேற்றுக்கிரகவாசிகள் அடிக்கடி வந்து செல்கின்றார்கள், பூமி முழுவதும் அவர்கள் சஞ்சரித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்றவாறு பல செய்திகள் அன்றாடம் வெளி வந்த வண்ணமே இருக்கின்றது.


தானியங்கி கார் தொழில்நுட்பத்தில் ஆப்பிள்!
[Tuesday 2016-12-06 19:00]

ஆப்பிள் நிறுவனம் தானியங்கி கார் தொழில்நுட்பத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுப்பியுள்ள கடிதத்தின் மூலம் ஆப்பிள் நிறுவனத்தின் இந்த திட்டம் பற்றி தெரியவந்துள்ளது. அந்த கடிதத்தில்,'தானியங்கி தொழில்நுட்பம் மூலம் போக்குவரத்து உட்பட பல்வேறு துறைகளில் ஈடுபட ஆர்வமாய் உள்ளோம்.' என்று கூறியுள்ளது. மேலும் அந்த கடிதத்தில்,'தானியங்கி தொழில்நுட்பத்தில் விரைவில் நிபுணத்துவம் பெற, இதில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்கள் சில தகவல்களை பரிமாறிக் கொள்ளலாம். அதே வேலையில், எந்த நிறுவனத்தின் தனித்துவமும் இதனால் பாதிக்கப்படக் கூடாது.' என்று கூறியுள்ளது.


ரத்தத்தின் அடர்த்தியை குறைக்கச் செய்யும் உணவுகள்!
[Monday 2016-12-05 19:00]

இரத்தம் அடர்த்தியாக இருந்தால் ரத்த ஓட்டம் குறைவாக இருக்கும். இதனால் இதய நோய்கள் தொடங்கி, பக்க வாதம் வரை பல பிரச்சனைகள் வரும் வாய்ப்புண்டு. நரம்புகளிலும் இதய நாளங்களிலும் இரத்தக் கட்டு ஏற்படுபவர்களுக்கு இரத்த இளக்கிகளை உண்ணுமாறு பரிந்துரைக்கப் படுகிறார்கள். ரத்தத்தை அடர்த்தியை குறைக்கும் வகையில் நாம் உண்ணும் உணவுகளை மாற்றிக் கொண்டால் பிரச்சனைகளை தடுக்கலாம். அவ்வாறு சில உணவுப் பொருட்கள் ரத்தத்தின் அடர்த்தியை குறைக்க்ம். அவை எதுவென பார்க்கலாம். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்


பற்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் அற்புத உணவுகள்:
[Thursday 2016-12-01 07:00]

நாம் நம்முடைய பற்களின் ஆரோக்கியத்தை பேணிக்காக்க என்னெவெல்லாம் செய்ய வேண்டும். பற்களை நன்றாக துலக்க வேண்டும். பல் துலக்கிய பின் வாயை நன்கு கொப்பளிக்க வேண்டும். இத்தகைய நடைமுறைகளை நாம் தவறாது பின்பற்றினால், பல் சம்பந்தப்பட்ட பல வியாதிகளை தடுக்கலாம். குறிப்பாக பற்சிதைவு, பல்சொத்தை மற்றும் பல்வேறு பல் வியாதிகளை தடுக்க இயலும். கனிமங்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த, அமிலங்களை நடுநிலைப்படுத்தும், மற்றும் எச்சிலை தூண்டும் இந்த அற்புத உணவுகள் உங்களின் பற்களின் ஆரோக்கியத்தை பேணிக்காக்கின்றது.


முதுமை தோற்றம் ஏன் சீக்கிரம் வந்துவிடுகிறது தெரியுமா?
[Wednesday 2016-11-30 19:00]

ஒரே வயதாக இருந்தாலும் ஒருவர் இளமையுடனும் மற்றொருவர் சுருக்கங்களுடன் முதுமையாக ஏன் இருக்கிறார்கள். ஏன் சிலருக்கு விரைவிலேயே சுருக்கங்கள் வருகிறது? என என்றேனும் யோசித்திருக்கிறீர்களா?

வாழ்க்கைமுறைதான் இதற்கு காரணம் என்பதில் சந்தேகமில்லை. அவரவர் உண்ணும் உணவு முறை, பராமரிக்கப்படும் முறை, நேர்த்தியான வாழ்க்கை இவைதான் அழகும், நல்ல மன நிலையும் உருவாக காரணமாகிறது.


மாரடைப்பை தவிர்ப்பதற்கு நார்ச்சத்து உணவு! - அமெரிக்க விஞ்ஞானிகள் அறிவுரை
[Tuesday 2016-11-22 22:00]

நார்ச்சத்துக் கூடிய உணவுகளான இலைவகைகள், கீரைவகைகள், மரக்கறி வகைகள், பழவகைகள், தவிட்டுத்மையுடைய தானிய உணவுகள், கௌப்பி, பயறு, போன்ற அவரை வகை உணவுகள் மனிதனில் பல வகையான நோய்கள் ஏற்படும் வீதத்தைக் குறைத்து ஆரோக்கியமாக வாழ வழிவகுக்கின்றது. மாரடைப்பிலிருந்து மீண்டு வந்தவர்கள் அதிக நார்ச்சத்து மிகுந்த உணவுகளை உட்கொண்டால் அவர்கள் நீண்ட காலம் வாழலாம் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மாரடைப்பிலிருந்து மீண்டு வந்த நான்காயிரத்திற்கும் அதிகமான மக்களிடம் ஹார்வர்ட் பல்கலைகழகத்தின் பொதுச் சுகாதார பிரிவு ஆய்வு நடத்தியது.


மூன்று நாட்களில் 5 கிலோ எடையைக் குறைக்க உதவும் அற்புத டீ!
[Tuesday 2016-11-22 22:00]

நீங்கள் எளிய வழியில் உடல் பருமனைக் குறைக்க நினைத்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள அற்புத மூலிகை டீயைத் தயாரித்து தினமும் குடித்து வாருங்கள். உடல் பருமன் என்பது தற்போது ஏராளமான மக்கள் அவஸ்தைப்படும் ஒரு பெரும் பிரச்சனையாக உள்ளது. இந்த உடல் பருமனைக் குறைக்க பலர் பலவிதமான டயட்டுகள் மற்றும் ஜிம்களில் பல கடுமையான உடற்பயிற்சிகளை செய்து வருவார்கள். இன்னும் சிலர் உடல் பருமனைக் குறைக்க கடுமையாக போராடாமல் எளிய வழிகளின் மூலம் உடல் எடையைக் குறைக்க விரும்புகின்றனர். நீங்களும் எளிய வழியில் உடல் பருமனைக் குறைக்க நினைத்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒரு டீயைத் தயாரித்து தினமும் குடித்து வாருங்கள்.


வீட்டு வாசல்ல எலுமிச்சை, மிளகாய்! - ஏன் எதற்கு?
[Sunday 2016-11-20 18:00]

இது தெரிஞ்சா, நீங்களும் இனிமேல் வீட்டு வாசல்ல எலுமிச்சை, மிளகாய் கோர்த்து கட்டுவீங்க! வாசலில் எலுமிச்சை, மிளகாய், கரி சேர்த்து கட்டுவது மூட நம்பிக்கை அல்ல. அதற்கு பின்னணியில் மறைந்திருக்கும் அறிவியல் காரணங்கள் என்னென்ன என்பது பற்றி இங்கு கூறப்பட்டுள்ளது. முன்பு நாம் கடைபிடித்து வந்த ஒவ்வொரு சிறிய விஷயங்களுக்கு முன்பும் ஏதோ ஒரு நல்ல விஷயம் புதைந்திருக்கிறது. காலப்போக்கில் அவற்றை மறந்து நாம் அதை மூட நம்பிக்கை என கூற துவங்கிவிட்டோம். அதில் ஒன்று தான் வீட்டு வாசலில் எலுமிச்சை, மிளகாய், கரி சேர்த்து கட்டுவது.


இரவில் தூங்கும் முன் வாழைப்பழம் சாப்பிடுவது ஏன் தெரியுமா?
[Sunday 2016-11-20 18:00]

பலருக்கும் வாழைப்பழம் சாப்பிட சிறந்த நேரம் எதுவென்ற சந்தேகம் இருக்கும். பெரும்பாலானோர் இரவில் தான் வாழைப்பழத்தை சாப்பிடுவார்கள். ஆனால் இரவில் சாப்பிடுவது நல்லதா என்ற கேள்வி மனதில் இருக்கும். இதுக்குறித்து மற்றவர்களிடம் கேட்டால், சிலர் அது நல்லதல்ல என்று கூறுவார்கள். ஆனால் இரவில் வாழைப்பழத்தை சாப்பிடலாம். பழங்களில் வாழைப்பழம் விலைமலிவில் ஏராளமான ஊட்டச்சத்துக்களுடன் கிடைக்கும் பழமாகும். இத்தகைய வாழைப்பழத்தை இரவில் ஒருவர் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


அப்பிள் நிறுவனத்தின் மேல் மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு குந்தகம்:
[Saturday 2016-11-19 18:00]

தரம்வாய்ந்த கணணி மற்றும் மொபைல் சாதனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனம் என உலகளாவிய ரீதியில் பெயர்பெற்ற நிறுவனமாக அப்பிள் விளங்குகின்றது. எனினும் தற்போது வெளியாகியுள்ள செய்தி ஒன்று அப்பிள் நிறுவனத்தின் மேல் மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு குந்தகம் விளைவிப்பதாக உள்ளது. அதாவது ஐபோன் பாவனையாளர்கள் தமது கைப்பேசியின் ஊடாக மேற்கொள்ளும் அழைப்புக்கள் தொடர்பான விபரங்களை அப்பிள் நிறுவனம் சேகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


உலகத்திலேயே மூத்த மொழி தமிழ்! - மூத்த குடி தமிழன்!
[Wednesday 2016-11-16 08:00]

பிலேடியன் (Pleaidians) என்னும் அயல்கிரக வாசிகள் உலகத்தோடு பல காலமாக தொடர்பில் உள்ளனர் என்று அமெரிக்கர்கள் சிலர் நம்புகின்றனர். இவர்கள் நேரடியாக இந்தப் பிலேடியன் என்னும் வேற்றுலக வாசிகளோடு தொடர்பில் உள்ளவர்கள் என்று அறிவித்துள்ளனர். உலகில் உள்ள பல விஞ்ஞான முன்னேற்றங்களுக்கு இந்த அயல் கிரக வாசிகள் தான் காரணம் என்று இந்தக் குழு நம்புகின்றது. மொழி, வரலாறு ஆகியவற்றை உலகிற்கு அறியப்படுத்தியது இந்த பிலேடியன்கள் தான் என்று உறுதியாகக் கூறுகின்றனர் இந்த அமெரிக்கர்கள். மேலும் உலகில் ஏற்படும் பல்வேறு மாற்றங்களுக்கும் இந்த அயல் கிரக வாசிகள் தான் காரணம் என்று சொல்கின்றனர்.


உலகின் மிகவேகமான வெளவால் பிரேசில் நாட்டில் கண்டுபிடிப்பு..!
[Monday 2016-11-14 18:00]

உலகில் மிக வேகமாக பிறக்கக்கூடிய வெளவால் இனத்தை பிரேசில் நாட்டில் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். பிரேசில் நாட்டில் காணப்படும் வால் இல்லா வெளவால்கள்தான்,உலகிலேயே அதிவேகமாக பறக்ககூடிய வெளவால் என ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர்.இந்த வெளவால்கள் மணிக்கு 160 கி.மீட்டர் வேகத்தில் பறக்ககூடியவை. அளவில் மிகச்சிறியதாக இருக்ககூடிய இந்த வகை வெளவால்கள்,மிக வேகமாக பறக்கக்கூடியதற்கு ஏற்றவாறு உடலமைப்பை பெற்றுள்ளன.மேலும் இவற்றின் சிறிய உருவம்,எடை குறைந்த எலும்புகள்,பெரிய இறக்கை ஆகியவற்றால் இவை அதிக வேகத்தில் பறப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.


பக்கவாத நோயாளிகள் மீண்டும் நடக்கலாம்: - இதோ ஓர் அரிய கண்டுபிடிப்பு!
[Thursday 2016-11-10 17:00]

கை, கால் உறுப்புக்களை செயலிழக்க செய்யும் Paralysis என்ற நோயால் பாதிக்கப்பட்டவர்களை மீண்டும் செயல்ப்பட வைக்கும் ஓர் அரிய கருவி ஒன்று சுவிட்சர்லாந்து நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.சுவிஸில் உள்ள Federal Polytechnic School of Lausanne (EPFL) என்ற ஆய்வு நிறுவனத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் தான் இந்த கருவியை கண்டுபிடித்துள்ளனர்.மூளையின் உத்தரவுப்படி உடல் உறுப்புக்கள் இயங்குவதால், இந்த கருவி மூளையில் பொருத்தப்பட்டு இயக்கப்படும்இக்கருவியில் இருந்து வெளியாகும் உத்தரவுகள் உடலில் உள்ள முதுகு தண்டிற்கு சென்று, செயலிழந்த கை மற்றும் கால்களை மீண்டும் செயல்படுத்த தூண்டும்.

Mahesan-Remax-169515-Seithy
Elankeeran-debt-solution-25-06-2016
Easankulasekaram-Remax-300716
Tharsi-home-15-10-2016
SELVI-HOMES-09-02-17
<b>05-03-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற Ninaivakal-2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>26-02-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற ARAJEN-Beauty-Forever-2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>25-02-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற NETHRA - Movie Appreciation  நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா