Untitled Document
March 29, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
பருத்திவீரனின் 10ம் ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடிய கார்த்தி
[Friday 2017-02-24 08:00]

பருத்திவீரன் படம் ரிலீசாகி இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை கொண்டாடும் விதமாக நடிகர் கார்த்தி, தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர்,"10 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் பருத்திவீரன் படம் ரிலீசானது. அன்றிலிருந்து இன்று வரை உங்களின் அன்பு என்னுடன் உள்ளது. நான் பல ஏற்றங்களையும், இறக்கங்களை பார்த்துள்ளேன். ஆனால் அப்போதெல்லாம், உங்களின் அன்பு என்னுடனேயே உள்ளது. அந்த அன்பு தான் என் வாழ்க்கையை அழகாக ஆக்கி உள்ளது. அந்த அன்புக்கு நான் எப்போதும் கடமைப்பட்டுள்ளேன். அதற்காக தொடர்ந்து நான் முழு முயற்சி செய்வேன். உங்களின் அன்புக்கு நன்றி.


இயக்குநராகிறார் விஷ்ணு விஷால்..
[Friday 2017-02-24 08:00]

விஷ்ணு விஷால் தனது அடுத்த படத்தில் துணை இயக்குநராக நடிக்க உள்ளார்.விஷ்ணு விஷால் நடிப்பில் கடைசியாக வெளியான `மாவீரன் கிட்டு' ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் விஷ்ணு முற்றிலும் மாறுப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனைத்தொடர்ந்து விஷ்ணு, முருகானந்தம் இயக்கத்தில் 'கதாநாயகன்' மற்றும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், `முண்டாசுப்பட்டி' இயக்குநர் ராம் உடன் மீண்டும் இணைய இணைகிறார். சைக்கோ த்ரில்லர் படமாக உருவாக உள்ள இப்படத்தில் விஷ்ணுவுக்கு ஜோடியாக அமலாபால் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.


போலீஸ் ஆக களமிறங்குகிறார் சிம்ரன்..
[Friday 2017-02-24 08:00]

இயக்குநர் செல்வா இயக்கத்தில் “ அரவிந்த் சாமி “ - “ ரித்திகா சிங் “ நடிக்கும் திரைப்படத்தில் நடிகை சிம்ரன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

மேஜிக் பாக்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கணேஷ் தயாரித்து பிரபல இயக்குநர் செல்வா இயக்கும் திரைப்படம் “ மேஜிக் பாக்ஸ் ப்ரொடக்ஷன் நம்பர் 3 “ .அரவிந்த் சாமி கதாநாயகனாகவும் , ரித்திகா சிங் கதாநாயகியாகவும் நடிக்கும் இத்திரைப்படம் சென்ற வாரம் பூஜையுடன் துவங்கியது. இப்படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகை சிம்ரன் போலிஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தில் மற்றும்மொரு கதாநாயகியாக நந்திதா நடிக்கிறார்.


சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புவதாக கருணாஸ் புகார்..
[Friday 2017-02-24 08:00]

சமூக வலைதளங்களில் தான் தெரிவிக்காத கருத்துக்களை சிலர் அவதூறாக பரப்புவதாக கூறி நடிகரும், எம்.எல்.ஏ.வுமான கருணாஸ் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று புகார் அளித்துள்ளார். முதல்வரை மக்கள் தேர்வு செய்ய தேவையில்லை, சட்டமன்ற உறுப்பினர்களே முதல்வரை தேர்வு செய்வார்கள் என சமூக வலைதளங்களில் சில நாட்களுக்கு முன்னர், திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ள நடிகர் கருணாஸ் கூறியதாக, ஒரு செய்தி வேகமாக பரவி வந்தது. இதையடுத்து, கருணாஸை விமர்சித்து அதிகம் பேர் கருத்துக்களை பதிவு செய்து வந்தனர்.


சாமி-2 வின் நாயகியானார் சாய் பல்லவி..
[Thursday 2017-02-23 21:00]

பிரேமம் சாய் பல்லவி தமிழில் வாலு விஜயசந்தர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பின்னர் கால்சீட் பிரச்சினையால் அவர் அந்த படத்தில் இருந்து விலகியதை அடுத்து இப்போது தமன்னா புக்காகியுள்ளார். அதைத் தொடர்ந்து மாதவனுக்கு ஜோடியாக சார்லி மலையாள படத்தின் தமிழ் ரீமேக்கில் கமிட்டாகி விட்டார் சாய்பல்லவி. இந்த நிலையில், தற்போது ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் சாமி-2 படத்திலும் சாய் பல்லவி நடிப்பதாக தற்போது கோலிவுட்டில் ஒரு செய்தி பரவியுள்ளது.


விஜய் யேசுதாஸ் ஹீரோவானார்..
[Thursday 2017-02-23 21:00]

இவோக் தயாரிப்பில், பிரபல பின்னணி பாடகர் விஜய் யேசுதாஸ் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் "படைவீரன்".

தேனி மாவட்டத்தில் உயிர்ப்போடு வாழும் ஒரு கிராமமும்...அதன் மண்சார்ந்த மனிதர்களின் வாழ்க்கையுமாக உருவாகும் படம் "படைவீரன்". பிரபல பின்னணி பாடகர் விஜய் யேசுதாஸ் முதன்முறையாக கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் அம்ரிதா என்ற புதுமுகம் கதாநாயகியாக நடிக்கின்றார். கதையின் களம் மிகவும் பிடித்திருந்ததால் இயக்குனர் பாரதிராஜா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.


அரவிந்த் சாமி - அமலாபால் - நைனிகா இணையும் புதிய படம்
[Thursday 2017-02-23 21:00]

மலையாள இயக்குனரான சித்திக், தான் மலையாளத்தில் இயக்கிய வெற்றிப்படங்களை தமிழிலும் ரீமேக் செய்து இங்கேயும் வெற்றி கண்டவர். அந்த வரிசையில் மலையாளத்தில் மம்முட்டி-நயன்தாரா நடிப்பில் சித்திக் இயக்கிய ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ என்ற படத்தையும் தமிழில் ரீமேக் செய்து இயக்கவிருக்கிறார். மலையாளத்தில் மம்முட்டி நடித்த கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தற்போது நயன்தாரா நடித்த கதாபாத்திரத்தில அமலாபால் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.


இந்த சமூகத்துக்கு நல்லது செய்ய வேண்டும் - விஷால்
[Thursday 2017-02-23 21:00]

என்னை உயர்த்திய இந்த சமூகத்துக்கு மறுபடியும் நான் ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் உதவி செய்து வருகிறேன் என தெரிவித்துள்ளார், நடிகர் விஷால். சிதம்பரம் மாவட்டம் பிச்சாவாரத்தில் உள்ள பள்ளி விழாவில் “ துப்பறிவாளன் “ திரைப்படத்தின் படபிடிப்பில் இருந்த நடிகர் விஷால் மற்றும் பிரசன்னா கலந்து கொண்டனர். இவர்களோடு ஆபர் தொண்டு நிறுவன தலைவி நடிகை பூங்கோதை கலந்துகொண்டார். தென்னிந்திய நடிகர் சங்கமும் , ஆபர் தொண்டு நிறுவனமும் இணைந்து எம்.ஜி.ஆர் நகர் மக்களுக்கு வெள்ள நிவாரண உதவி செய்தனர். விஷால் மாணவர்களுக்கு காலணிகள் , நோட்டு புத்தகங்கள் , சீருடைகள் வழங்கிய பின் பேசினார். அவ்விழாவில் விஷால் பேசியது ;


பாவனா கடத்தல்: வழக்கில் முக்கிய குற்றவாளியான சுனில் நீதிமன்றத்தில் சரண்..
[Thursday 2017-02-23 20:00]

நடிகை பாவனா கடத்தப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான சுனில் நீதிமன்றத்தில் சரணடைந்தார். நடிகை பாவனா கேரளாவில் கடத்தப்பட்டு பாலியல் சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், முக்கிய குற்றவாளியான சுனில் என்ற பல்சர் சுனில் தலைமறைவாக இருந்தார். அவர் இன்று எர்ணாகுளம் கோர்ட்டில் சரண் அடைந்தார்.பிரபல நடிகை பாவனா தமிழில் சித்திரம் பேசுதடி, தீபாவளி உள்பட பல படங்களில் நடித்துள்ளார். மலையாளத்திலும் முன்னணி நடிகர்களுடன் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.


விவேகத்தின் செகண்ட் லுக் வெளியீடு
[Thursday 2017-02-23 08:00]

சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் விவேகம் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் சில வாரங்களுக்கு முன் வெளிவந்தபோது அதில் இடம்பெற்ற அஜித்தின் சிக்ஸ் பேக் உடலமைப்பு அதிக வரவேற்பையும், அதேசமயம் கடும் கிண்டலுக்கும் சர்ச்சைகளுக்கும் ஆளானது. முக்கியமாக, அஜித்தின் சிக்ஸ்பேக் உண்மை இல்லை, கிராபிக்ஸ் மூலம் செய்யப்பட்ட வடிவமைப்பு அது என்றும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில், விவேகம் படத்தின் இயக்குநரான சிவா "அஜித்தின் உடலமைப்பு கிராபிக்ஸ் அல்ல.


சூர்யாவின் வழியில் பெண் சிங்கமான ஜோதிகா..
[Thursday 2017-02-23 08:00]

தனது கணவர் சிங்கமாக சீறியதை தொடர்ந்து தற்போது ஜோதிகாவும் பெண் சிங்கமாக உருவெடுக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த ஜோதிகா, தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியிருக்கிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஜோதிகா நடிப்பில் தற்போது ‘மகளிர் மட்டும்’ படம் உருவாகி வருகிறது.


எம்.எல்.ஏ. ஆனார் தியாகராஜன்
[Thursday 2017-02-23 07:00]

படத்தயாரிப்பு, தொழில் என, பிசியாக இருக்கும் தியாகராஜன், முக்கியமான கேரக்டர் கிடைத்தால் மட்டுமே, நடிக்க சம்மதிக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பின், தற்போது, விஜய் ஆண்டனி நடிக்கும் எமன் படத்தில், முன்னாள் எம்.எல்.ஏ.,வாக நடித்துள்ளார் தியாகராஜன். இந்த கதையைக் கேட்டதுமே நடிக்க சம்மதித்தாராம். எதிரியை அடித்து, நொறுக்கி வசனம் பேசுவதை விட, மூளையை பயன்படுத்தி, புத்திசாலித்தனமாக யோசித்து முடிவு எடுக்கும் வில்லனாக, இதில் பின்னி பெடலெடுத்துள்ளாராம். இந்த படத்தை பார்த்தப் பின், அரசியல்வாதிகள் இப்படியெல்லாம் இருப்பரா என, பலருக்கும் ஆச்சர்யம் ஏற்படும் என்கிறது படக்குழு.


பாவனாவிற்கு நடந்தது இது தான் ; காருக்குள் தடயங்கள் சிக்கின
[Thursday 2017-02-23 07:00]

தமிழ் மற்றும் மலையாள நடிகை பாவனா கடந்த 17-ந்தேதி இரவு காரில் கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டார்.இது தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியானது. இச்சம்பவம் பற்றி பாவனா போலீசில் புகார் செய்தார். போலீசார் இச்சம்பவம் குறித்து முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள அதிர்ச்சி தகவல்கள் வருமாறு:-


நாலு பேருக்கு நல்லது செய்வது தான் என் கனவு, லட்சியம் - லாரன்ஸ்
[Thursday 2017-02-23 07:00]

ஜல்லிக்கட்டு போராட்டம், அறக்கட்டளை மூலம் உதவி, அம்மாவுக்கு கோவில், விவசாயி குடும்பத்துக்கு, மூன்று லட்சம் ரூபாய் உதவி போன்ற பரபரப்புக்கு இடையே, விரைவில் வெளியாகவுள்ள, மொட்ட சிவா கெட்ட சிவா படம் பற்றியும், தன் தனிப்பட்ட விஷயங்களையும் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் ராகவா லாரன்ஸ்: மொட்ட சிவா கெட்ட சிவா பற்றி... முழுக்க முழுக்க, இது ஒரு கமர்ஷியல் படம். இதுவரை பேய் படங்களில், அம்மாவின் இடுப்பில் அமர்ந்து, பயந்து நடிச்சிட்டிருந்தேன். இப்போது, போலீஸ் கேரக்டரில், அடாவடியாக ஒரு படம் பண்ணியிருக்கிறேன். எம்.ஜி.ஆர்., பாடலான, ஆடலுடன் பாடலை கேட்டு, என்ற பாடலை, ரீ - மிக்ஸ் செய்திருக்கிறோம். முதல் காட்சியில் துவங்கி, கடைசி வரை காமெடியாக இருக்கும்.


படுக்கை அறை காட்சியிலும் நடிப்பேன் : கங்கனா ரணாவத்
[Wednesday 2017-02-22 21:00]

படுக்கை அறை காட்சியில் நடிக்க தயக்கம் இல்லை என்று பாலிவுட்டின் முன்னணி நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.இந்தி நடிகை கங்கனா ரணாவத் ‘ரங்கூன்’ படத்தில் சயிப்அலிகான், ஷாகித்கபூர் ஆகியோருடன் நெருக்கமான காட்சிகளில் நடித்திருக்கிறார். அரை நிர்வாண காட்சிகளில் என்னால் நடிக்க முடியும் அதற்காக மிகவும் பிகுபண்ண மாட்டேன். ஒரு காட்சியில் மேல் ஆடை இல்லாமல் நடிக்க வேண்டியது இருந்தது. ஷாகித் என் உடலில் ஒட்டி இருக்கும் அட்டைப் பூச்சிகளை அகற்றுவது போன்ற காட்சி, துணிச்சலாக நடித்தேன்.


பொட்டு அம்மனாக நயன்தாரா..
[Wednesday 2017-02-22 21:00]

கரண் நடித்த மலையன் படத்தை இயக்கியவர் கோபி. அதையடுத்து கஞ்சா கருப்பு லீடு ரோலில் நடித்த வேல்முருகன் போர்வெல்ஸ் என்ற படத்தை இயக்கினார். அந்த படம் எதிர்பார்த்தபடி ஓடாததால் படத்தை தயாரித்த கஞ்சாகருப்பு வுக்கும், அவருக்குமிடையே பிரச்சினை ஏற்பட்டது. பின்னர் சமுத்திரகனி உள்ளிட்ட சில சினிமா நண்பர்கள் தலையிட்டு அவர்களது பிரச்சினை தீர்த்து வைத்தனர். அதையடுத்து தனது புதிய படத்தை மெகா படமாக இயக்க வேண்டும் என்று கதை ரெடி பண்ணி வந்த மலையன் கோபி, தற்போது நயன் தாராவிடம் ஒரு கதையை சொல்லி ஓகே பண்ணி விட்டார்.


கீர்த்தி சுரேஷையும் கடத்த திட்டம் : பாவனாவின் கார் டிரைவர்
[Wednesday 2017-02-22 21:00]

பாவனா கார் டிரைவர் சுனில் நடிகை கீர்த்தி சுரேஷையும் கடத்த திட்டமிட்டான் என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.பிரபல நடிகை பாவனாவை கடத்தி பாலியல் கொடுமை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியான கார் டிரைவர் சுனில் தலைமறைவாக இருக்கிறான். அவனைப்பற்றி மலையாள திரைஉலகினர் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டு வருகிறார்கள்.டிரைவர் சுனில் நடிகை பாவனாவிடம் கார் டிரைவராக பணியாற்றிய போது அவர் மூலம் பல மலையாள நடிகைகளுடன் பழக்கம் ஏற்பட்டது. அவர்களது நடவடிக்கைகளை கவனித்த சுனில் நடிகைகளை கடத்தி பணம் பறிக்க திட்டமிட்டான்.


தனுஷ் என்னிடம் தரக்குறைவான விளையாட்டை ஆடினார்: சுசித்ரா
[Wednesday 2017-02-22 21:00]

பாடகி சுசித்ராவின் தொடர் டுவிட்டுகளால் கடந்த இரண்டு தினங்களாக சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. பின்னணி பாடகியான சுசித்ரா, ’ஆயுத எழுத்து’ உள்ளிட்ட படங்களில் சிறிய வேடத்திலும் நடித்துள்ளார். நடிகர் கார்த்திக்கை திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்நிலையில், கடந்த பிப்ரவரி 20-ந் தேதி இவர் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் காயம்பட்ட தனது கையின் புகைப்படத்தை பதிவு செய்து, ‘இது தனுஷ் கூட்டத்தின் மோசமான ஆட்களால் ஆன காயம். மன்னியுங்கள். நீங்கள் தகுதி இழந்துவிட்டீர்கள்’ என்று குறிப்பிட்டிருந்தார்.


பாலியல் வன்கொடுமைகளுக்கெதிராக கடுமையான தண்டனை சட்டம் வேண்டும் - சினேகா ஆவேசம்
[Wednesday 2017-02-22 21:00]

நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருப்பது, தமிழ் நாட்டில் பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்படுவது போன்ற சம்பங்கள் நடிகை சினேகா மனதில் ஆழமான காயத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:


திகில் படத்தின் நாயகியான சோனியா அகர்வால்
[Wednesday 2017-02-22 21:00]

சோனியா அகர்வால் 5 மொழிகளில் உருவாகும் திகில் படம் ஒன்றில் நடிக்கவிருக்கிறார். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என ஐந்துமொழிகளில் ‘அகல்யா’ என்கிற திகில் படம் தயாராக உள்ளது. இந்த படத்தை தயாரித்து இயக்குகிறார் இயக்குனர் ஷிஜின்லால். மலையாளத்தில் நிறைய விளம்பரப்படங்களை இயக்கிய அனுபவம் உள்ள இவர் ‘அகல்யா’ படத்தின் மூலம் திரையுலகில் இயக்குனராக அறிமுகமாகிறார்.


எக்கட்சி அரசேற்றாலும் நம் பணி பொதுநலம் காப்பதே - கமல் ஆவேசம்
[Wednesday 2017-02-22 20:00]

சத்தம் போடாமல் அடிநாதத்துடன் அடக்கி வாசிக்கவே நினைத்தேன், ஆனால் என் இயக்க பொறுப்பாளரின் கைது என்னை பேச வைக்கிறது என்று கூறியுள்ளார் நடிகர் கமல். ஜல்லிக்கட்டு போராட்டம் தொடங்கி தற்போது தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் சூழல் வரை தொடர்ந்து டுவிட்டரில் குரல் கொடுத்து வருகிறார் நடிகர் கமல். கமலின் டுவிட்டர் பதிவுகளை பலரும் ஆதரித்து வருகின்றனர். மக்களின் குரலை அவர் பிரதிபலிப்பதாக கருத்து தெரிவிக்கின்றனர். இந்நிலையில் கமலின் நற்பணி இயக்கத்தை சேர்ந்த சுதாகர் மற்றும் இன்னும் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து கமல் தன் டுவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது...


கறி வெட்டும் கத்தியுடன் றொமான்ரிக் காட்சியில் சமந்தா..
[Wednesday 2017-02-22 08:00]

விஜய்யுடன் கத்தி படத்தில் நாயகியாக நடித்த சமந்தா அந்தப் படத்தில் கத்தி கூடப் பேசியிருக்க மாட்டார். ஆனால், நேற்று அவர் டிவிட்டரில் கையில் கத்தியுடன் வெளியிட்ட புகைப்படம் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஆரண்ய காண்டம் படத்தை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவில் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் நடிக்கும் படத்தில் சமந்தா நாயகியாக நடிக்கிறார். அப்படத்தின் புகைப்படம் ஒன்றைத்தான் நேற்று சமந்தா அவருடைய டிவிட்டரில் வெளியிட்டிருந்தார். தூங்கிக் கொண்டிருக்கும் ஒருவர் (விஜய் சேதுபதி ?) பக்கத்தில் கறியை வெட்டும் கத்தியுடன் சமந்தா அமர்ந்திருக்கும் புகைப்படம் அது.


பல நாட்களாக பாவனாவைப் பின் தொடர்ந்து திட்டம் போட்டுக் கடத்திய பல்சர் சுனில்..!
[Wednesday 2017-02-22 08:00]

நடிகை பாவனாவை கடந்த வெள்ளியன்று இரவு ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து திரும்பி வரும் வழியில் காரை மறித்து, கடத்திச்சென்று சுமார் இரண்டு மணி நேரம் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதில் முதன்மை குற்றவாளி தான் பல்சர் சுனி(ல்). மலையாள தயாரிப்பாளர் ஒருவர் இந்த சம்பவத்திற்குப்பின் இவனைப்பற்றி விசாரித்ததில் கிடைத்த அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டுள்ளார்.. அவர் கூறிய தகவல்களின்படி, இந்த பல்சர் சுனி, பாவனா நடிக்கும் படங்களின் ஷூட்டிங்ஸ்பாட், அவர் டப்பிங் பேச செல்லும் ஸ்டுடியோ என எல்லா இடத்திற்கும் ட்ரைவராக வந்து நிற்பானாம்.. ஷூட்டிங்கிற்கு கார் அனுப்பும் நிறுவனங்கள் இவனுக்கு பழக்கம் என்பதால் இவன் அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டுள்ளான்..


கிருஷ்ணா - ஆனந்தியின் நடிப்பில் பண்டிகை - மார்ச் 9 இல் ரிலீஸ்
[Wednesday 2017-02-22 08:00]

நிழல் உலக தாதாக்களை மையமாக கொண்டு உருவாகி இருக்கும் படம் பண்டிகை. இதில் கிருஷ்ணா - ஆனந்தி முதன்மை ரோலில் நடித்துள்ளார்கள். டி டைம் டாக்கீஸ் சார்பில் விஜயலக்ஷ்மி தயாரிக்க, பெரோஸ் இயக்க, ஆர்எச்.விக்ரம் இசையமைக்க, அரவிந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து ரிலீஸ்க்கான வேலைகள் நடந்து வருகிறது. இந்நிலையில், பண்டிகை படத்தின் இசை வெளியீட்டு விழா, வருகிற பிப்ரவரி 26-ம் தேதி, சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கில், காலை 9 மணிக்கு நடைபெற இருக்கிறது. இதில் பல திரைப்பிரபலங்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். தொடர்ந்து மார்ச் 9-ம் தேதி படம் ரிலீஸாகிறது, ஆரா சினிமாஸ் பண்டிகை படத்தை ரிலீஸ் செய்கின்றனர்.


ரஜினியுடன் யோடி சேருகிறார் வித்யா பாலன்..
[Tuesday 2017-02-21 20:00]

கபாலி படத்தை முடித்த கையோடு பா.ரஞ்சித் இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் ரஜினி. இந்தப்படத்தை நடிகர் தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப்படம் குறித்த அறிவிப்பு வந்து மாதங்கள் பல கடந்துவிட்டது. ஆனால் படம் குறித்த வேறெந்த தகவலும் வெளியாகவில்லை. ஆரம்பகாலத்தில் பத்திரிகையாளர்களிடம் சகஜமாக பழகி வந்த பா.ரஞ்சித் கபாலி கமிட்டானதிலிருந்தே பந்தா காட்ட ஆரம்பித்துவிட்டார். அதிலும் குறிப்பாக இரண்டாவது முறையாக ரஜினியை இயக்கும் வாய்ப்பு கிடைத்ததும் ஆளே மாறிவிட்டார். அதனால் ரஜினியின் புதுப்படம் குறித்த நகர்வு வெளியே வரவில்லை.


அமலாபால் - விஜய் சட்டப்படி விவாகரத்து
[Tuesday 2017-02-21 20:00]

நடிகை அமலாபால், இயக்குநர் விஜய் சட்டப்படி விவாகரத்து பெற்றனர். மைனா, தலைவா உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை அமலாபால். இவருக்கும், சினிமா இயக்குனர் விஜய்க்கும், 2014 ஜூனில் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின், சினிமாவில் அமலாபால் நடிப்பதை, விஜய் மற்றும் அவரது குடும்பத்தினர் விரும்பவில்லை என, கூறப்படுகிறது. இதையடுத்து, இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. சுமுகமாக பிரிந்து விடுவது என, முடிவெடுத்தனர். ஆகஸ்ட்டில், சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில், இருவரும் ஆஜராகி, பரஸ்பர விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தனர்.


சிம்புவின் இசையமைப்பில் பாடுகிறார் அனிருத்
[Tuesday 2017-02-21 19:00]

சிம்புவும் அனிருத்தும் சந்தானத்துக்காக தங்களது தொழிலையே மாற்றிக் கொண்டுள்ளனர். சிம்பு தமிழ் சினிமாவில் நடிகராக மட்டுமல்லாமல், பாடகர், எழுத்தாளர் என பன்முகமாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், தற்போது அவர் இசையமைப்பாளராகவும் உருமாறியிருக்கிறார். சந்தானம் நடிக்கும் ‘சக்க போடு போடு ராஜா’ படத்தில் இவர் இசையமைப்பாளராக களமிறங்கியிருக்கிறார்.இப்படத்தின் பாடல் பதிவில் பிசியாக இருக்கும் சிம்பு, சமீபத்தில் ஒரு பாடலுக்கு அனிருத்தை பாட வைத்திருக்கிறார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை சிம்பு தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சிம்புவும், அனிருத்தும் ஏற்கெனவே நிறைய படங்களில் பாடல் பாடியுள்ளனர்.


‘பொறுக்கி’ என்று தமிழர்களை சொன்னதற்கு மக்கள் பதில் அளிப்பர்- கமல் பதில்
[Tuesday 2017-02-21 19:00]

எலும்பில்லாத, பகட்டான முட்டாள் என்று கூறுவதா? சுப்பிரமணியசாமிக்கு கமல்ஹாசன் பதில் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். இதுபற்றி கருத்து தெரிவித்த பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி, ‘தமிழ் பொறுக்கிகள்’ என்று கூறினார். இதற்கு கமல்ஹாசன் கடும் எதிர்ப்பு தெரிவித்து கருத்து கூறினார். உடனே சுப்பிரமணியசாமி டுவிட்டரில் கமல்ஹாசனுக்கு கண்டனம் தெரிவித்து கருத்தை வெளியிட்டார்.

Mahesan-Remax-169515-Seithy
Easankulasekaram-Remax-300716
SELVI-HOMES-09-02-17
Tharsi-home-15-10-2016
Elankeeran-debt-solution-25-06-2016
<b>05-03-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற Ninaivakal-2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>26-02-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற ARAJEN-Beauty-Forever-2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>25-02-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற NETHRA - Movie Appreciation  நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா