Untitled Document
February 23, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
அமலாபால் - விஜய்க்கு நாளை விவாகரத்து..
[Monday 2017-02-20 10:00]

பிரபல நடிகை அமலாபால் - இயக்குனர் விஜய், பரஸ்பர விவாகரத்து கோரிய மனு மீதான தீர்ப்பை, வரும், 21ம் தேதிக்கு, சென்னை குடும்ப நல நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது. அமலாபால், மைனா, தலைவா உள்ளிட்ட, பல படங்களில் நடித்துள்ளார். இவருக்கும், சினிமா இயக்குனர் விஜய்க்கும், 2014 ஜூனில் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின், சினிமாவில் அமலாபால் நடிப்பதை, விஜய் மற்றும் அவரது குடும்பத்தினர் விரும்பவில்லை என, கூறப்படுகிறது. இதையடுத்து, இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. சுமுகமாக பிரிந்து விடுவது என, முடிவெடுத்தனர். 2016 ஆகஸ்ட்டில், சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில், இருவரும் ஆஜராகி, பரஸ்பர விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தனர்.


சர்வதேச குறும்பட விழா சென்னையில் இன்று ஆரம்பம்..
[Monday 2017-02-20 10:00]

சென்னையில் உள்ள சென்ன அகாடமி ஆப் மோசன் பிக்சர்ஸ் என்ற அமைப்பு ஆண்டுதோறும் சர்வதேச குறும்பட விழாவை நடத்தி வருகிறது. 4வது சர்வதேச குறும்பட விழா இன்று தொடங்குகிறது. இந்த விழாவில் திரையிட 96 நாடுகளில் இருந்து 6200 படங்கள் வந்துள்ளன. மாலை 6 மணிக்கு ரஷ்யன் கலாச்சார மையத்தில் நடக்கும் விழாவில் கலந்து கொண்டு இயக்குனர் சீனு ராமசாமி துவக்கி வைக்கிறார். வருகிற 25ந் தேதி வரை 7 நாட்கள் நடக்கும் இந்த விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 135 படங்கள் திரையிடப்படுகிறது. குறும்படங்களின் வளர்ச்சி, அதன் எதிர்காலம் குறித்த கருத்தரங்குகள், பட விமர்சன அரங்குகள் நடக்கிறது. போட்டி பிரிவிலும் படங்கள் திரையிடப்படுகிறது. நிறைவு நாள் விழாவில் கிராமி விருது பெற்ற இயக்குனர் ரிக்கி கேஜ் கலந்து கொள்கிறார்.


கமலின் படத்துக்கு ஏற்பட்ட சிக்கல்..
[Monday 2017-02-20 10:00]

கமல்ஹாசன் நடித்து வரும் அடுத்த படமான 'சபாஷ் நாயுடு' படத்தின் படப்பிடிப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 'விஸ்வரூபம்' படத்தின் இரண்டாம் பாகம் குறித்த முக்கிய தகவலை நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். அதில் 'விஸ்வரூபம் 2' படத்தின் தடையாக இருந்த முக்கிய பிரச்சனைகள் நீங்கிவிட்டதாகவும், தொழிநுட்ப மற்றும் சட்டரீதியான சவால்களை மட்டுமே சமாளிக்க வேண்டி உள்ளது. எனவே படத்தின் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் விரைவில் துவங்கி 6 மாதத்தில் படம் திரைக்கு வரும் என்று கமல் தெரிவித்திருந்தார்.


படப்பிடிப்பு பார்க்க சென்ற இலங்கைப் பெண்ணிற்கு இந்திய சினிமாவில் வாய்ப்பு..
[Monday 2017-02-20 10:00]

நடிகர் விஜய்யின் எளிமை பார்த்து தான் வியந்ததாக நியூசிலாந்து மாடல் ஒருவர் தெரிவித்துள்ளார். தமிழ்த் திரைப் படங்களில் பிற மாநிலத்திலிருந்து பல்வேறு மொழிகளிலிருந்து நடிக்க வந்து நடிகைகள் அறிமுகமாகி பிரபலமாகி வருகிறார்கள். இந்நிலையில், கண்டம் விட்டுக் கண்டம் தாண்டி கங்காரு தேசத்திலிருந்து தமிழ்ப் படங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறார். இலங்கைத் தமிழனரான அவரது பெயர் சபிஜே. சர்வதேச மாடலான இவர் மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் பங்கு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. நியூஸிலாந்தில் பிறந்து ஆஸ்திரேலியாவில் வளர்ந்த இவர் சர்வதேச மியூசிக் வீடியோக்களில் நடித்திருக்கிறார்.


'இறுதிச்சுற்று' இயக்குநர் சுதாவின் இயக்கத்தில் சிவா
[Monday 2017-02-20 09:00]

சிவகார்த்திகேயன் தனது அடுத்த படத்தில் பெண் இயக்குநர் ஒருவருடன் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து முன்னணி நடிகர்களுள் ஒருவராக மாறியுள்ள நடிகர் சிவகார்த்திகேயன். தற்போது மோகன் ராஜா இயக்கத்தில் `வேலைக்காரன்' படத்தில் நடித்து வருகிறார். ரஜினி நடிப்பில் கடந்த 1987-ஆம் ஆண்டு வெளியான `வேலைக்காரன்' படத்தலைப்பை மோகன் ராஜா இப்படத்திற்காக கைப்பற்றியுள்ளார். சிவகார்த்திகேயன் பிறந்தநாளான பிப்ரவரி 17-ஆம் தேதி அவரது ரசிகர்களுக்கு விருந்தாக இப்படத்தின் தலைப்பு படக்குழு வெளியிட்டது.


சட்டசபை நிகழ்வுகளுக்கு குஷ்பு வருத்தம் தெரிவிப்பு..
[Sunday 2017-02-19 20:00]

சட்டசபையில் நடந்த நிகழ்வுகளுக்கு குஷ்பு தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தமிழக முதல்வராக சசிகலா ஆதரவு பெற்ற எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்றுள்ளார். இதுகுறித்து நடிகையும், காங்கிரஸ் கட்சியின் நிர்வாகியுமான குஷ்பு தனது கருத்தை டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


அனிருத்தை ஈர்த்த இசை..
[Sunday 2017-02-19 20:00]

இசையமைப்பாளர் அனிருத்தை தான் நடித்த 3 படம் மூலம் சினிமாவில் அறிமுகம் செய்தவர் தனுஷ். அதன்பிறகு தான் நடித்த மற்றும் தயாரித்த படங்க ளுக்கும் அவரையே இசையமைக்க வைத்தார். அந்தவகையில், தனுஷின் வேலையில்லா பட்டதாரி, தங்கமகன் படங்களுக்கும் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்திருந்தார் அனிருத். ஆனபோதும், அதையடுத்து தனுஷ் நடித்து வரும் வேலையில்லா பட்டதாரி-2, இயக்கி வரும் பவர்பாண்டி ஆகிய படங்களுக்கு அனிருத் இசையமைக்கவில்லை. சியான் ரோல்டன் இசையமைத்து வருகிறார்.


பாவனாவின் பாலியல் தொல்லைக்கு காரணமான பின்னணி..
[Sunday 2017-02-19 20:00]

தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வரும் பிரபல நடிகை பாவனா நேற்று அவரது டிரைவரால் கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பபை ஏற்படுத்தியுள்ளது. இந்த கடத்தலின் பின்னணி பற்றி ஒரு பார்வை... கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாவனா டிரைவர் தேவை என்று பத்திரிக்கையில் விளம்பரம் செய்தார். அந்த விளம்பரத்தை பார்த்து பல்சர் சுனில் என்கிற சுனில் குமார் என்பவர் வேலைக்கு சேர்ந்தார். அவர் பாவானவுக்கு மிகவும் நம்பிக்கையானவராக மாறினார். இந்த நிலையில் பாவனாவுக்கு நெருக்கமான ஒரு போலீஸ் அதிகாரி பாவனாவிடம் "உங்களிடம் டிரைவரா உள்ள சுனில் குமார் மீது ஆள்கடத்தல் வழக்கு, கார் திருட்டு வழக்கு உள்ளது.


ஜல்லிக்கட்டு வெற்றியை '1200 கிலோ கேக்' வெட்டி கொண்டாடிய லாரன்ஸ்
[Sunday 2017-02-19 20:00]

சென்னை மெரீனா கடற்கரையில் நடந்த ஜல்லிக்கட்ட போட்டியில் நடிகர் லாரன்ஸ் தீவிரமாக கலந்து கொண்டார். இதனால் மாணவர்கள், இளைஞர்களிடையே அவர் ஹீரோவானார். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் உயிரிழந்த யோகேஸ்வரன், மணிகண்டன் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் நிதி உதவி வழங்கினார். யோகேஸ்வரன் தங்கையின் படிப்பு செலவையும் ஏற்றார். இந்த நிலையில் நேற்று 1200 கிலோ கொண்ட கேக் வெட்டி மாணவர்களுடன் ஜல்லிக்கட்டு வெற்றியை கொண்டாடினார். ஜல்லிக்கட்டில் உயிரிழந்த இளைஞர்களின் குடும்பத்தினரை கேக் வெட்டச் செய்து அதனை அவர்களுக்கு ஊட்டி மகிழ்ந்தார். பின்னர் அவர் பேசியதாவது:


தண்ணீர்ப் பிரச்சினை தீர்க்காமல், செவ்வாய் கிரகத்திற்கு ராக்கெட் விட்டு என்ன புண்ணியம் - சிவக்குமார் ஆதங்கம்
[Sunday 2017-02-19 20:00]

நதிகளை இணைத்து தண்ணீர்ப் பிரச்சினையைத் தீர்க்க அரசுகள் முன்வர வேண்டும். தண்ணீர்ப் பிரச்சினையைத் தீர்க்காமல் செவ்வாய் கிரகத்திற்கு ராக்கெட் விட்டு என்ன புண்ணியம் என்று நடிகர் சிவக்குமார் ஆதங்கத்துடன் கூறியுள்ளார். காவிரி விவகாரம் பற்றி எரிகிறது. இந்த விவகாரம் குறித்து சிவக்குமார் அறிவுப்பூர்வமாக சில கருத்துக்களைக் கூறியுள்ளார்.சிவக்குமாரின் கருத்து ; தமிழ்நாடு முழுவதும் குடிக்க தண்ணீர் இல்லாமல் ஜனங்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். குடிப்பதற்கு மட்டுமில்லாமல், விவசாயத்துக்கே தண்ணீர் இல்லாததால் நிறைய பேர் கூலிக்காரனாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாடு விவசாயத்தை நம்பி வாழ்ந்து கொண்டிருக்கும் பூமி. நமக்கு நீராதாரம் வேண்டும். ஆனால், நடக்கக்கூடியது என்ன?


விரைவில் திருமண பந்தத்தில் இணையவுள்ள கங்கனா ரனாவத்
[Sunday 2017-02-19 08:00]

பாலிவுட்டின் பிரபல நடிகைகளில் கங்கனாவும் ஒருவர். தற்போது இவர் விஷால் பரத்வாஜ் இயக்கத்தில் ‛ரங்கூன்' என்ற படத்தில் நடிக்கிறார். இதில் இவருடன் ஷாகித் கபூர், சைப் அலிகான் கபீர்கான், உள்ளிட்ட பலரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். நடிகை கங்கனா, தான் ஒருவரை காதலிப்பதாகவும், அவரை திருமணம் செய்ய முடிவெடுத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.


கௌதம் மேனனுடன் மோதல்; வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த விக்ரம்
[Sunday 2017-02-19 08:00]

துருவ நட்சத்திரம்' படத்தின் மூலம் முதன்முறையாக இணைந்துள்ள விக்ரம் - கவுதம் மேனன் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த முழு தகவலை கீழே பார்ப்போம்.விக்ரம் தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் `துருவ நட்சத்திரம்' படத்தில் நடித்து வருகிறார். கவுதம் மேனனின் கனவு படமான 'துருவ நட்சத்திரம்' படம் மூலம் விக்ரம்-கவுதம் மேனன் முதன்முறையாக இணைந்துள்ளதால் இப்படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ரிது வர்மா நடிக்கிறார்.


லண்டன் நடிகருடன் ஸ்ருதிஹாசன் காதல்
[Sunday 2017-02-19 08:00]

நடிகை ஸ்ருதிஹாசனை சுற்றி எப்போதும் காதல் செய்திகள் சிறகடித்து பறந்து கொண்டே இருக்கும். இப்போது புதிய செய்தியொன்று வலம் வந்து கொண்டிருக்கிறது.லண்டனை சேர்ந்த பிரபல மேடை நாடக நடிகர் மைக்கேல் கார்செல், சமீபத்தில் மும்பை வந்தார். அவரை மும்பை விமான நிலையத்துக்கே சென்று வரவேற்ற ஸ்ருதிஹாசன் 3 நாட்கள் அவருடன் இருந்திக்கிறார். அதன் பிறகு அவரை லண்டனுக்கு வழியனுப்பி வந்திருக்கிறார்.


தமிழர்கள் உப்பு போட்டு சாப்பிட வேண்டிய நேரமிது - சித்தார்த் அதிரடி
[Sunday 2017-02-19 08:00]

தமிழக அரசியல் நிலவி வரும் பதட்டமான சூழலில் இடைப்பாடி பழனிசாமி, நம்பிக்கை ஓட்டெடுப்பில் வெற்றி பெற்றிருக்கிறார். இதுதொடர்பாக திரைப்பிரபலங்கள் பலர் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். குறிப்பாக அனைவரும் இதை ஏற்கும் மனநிலையில் இல்லாமல் தான் உள்ளனர். இது தொடர்பாக நடிகர் சித்த்தார்த் டுவிட்டரில் தனது காட்டமான பதிவை பதிட்டிருக்கிறார்.


நடிகை பாவனாவை கடத்தி மர்ம கும்பல் பாலியல் தொல்லை!
[Sunday 2017-02-19 08:00]

சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை பாவனா. தொடர்ந்து வெயில், ஜெயம் கொண்டான், தீபாவளி, அசல் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமல்லாது மலையாளத்திலும் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர், தெலுங்கு, கன்னடம் படங்களிலும் நடித்து தென்னிந்தியா முழுக்க பிரபல நடிகையாக திகழ்ந்து வருகிறார்.பாவனா படப்பிடிப்பு ஒன்று திருச்சூரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்று விட்டு கொச்சிக்கு காரில் இரவு 10.30 மணியளவில் திரும்பி கொண்டிருந்தார்.


தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிய விஷால்
[Saturday 2017-02-18 20:00]

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட நேதாஜி நகர் மக்களுக்கு 2 லட்ச ரூபாய் மதிப்பிலான உடனடி நிவாரண உதவிகளை நடிகர் விஷால் வழங்கியுள்ளார்.கடந்த வாரம் ஞாயிற்றுகிழமை சென்னை எண்ணூர் அருகே உள்ள நேதாஜி நகரில் தீ விபத்து ஏற்ப்பட்டது. இதனால் அங்கே வசித்து வரும் 25 குடும்பங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டது. உதவியின்றி தவித்து வந்த அந்த குடும்பங்கள் பற்றி அறிந்த நடிகர் விஷால் உடனே அவர்களுக்கு உதவ முன்வந்தார்.


ஜல்லிக்கட்டு போராட்ட வெற்றியை கேக் வெட்டி கொண்டாட முடிவு
[Saturday 2017-02-18 20:00]

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் அறப்போர் செய்து பெற்ற வெற்றியை உலக சாதனையாக கொண்டாட உள்ளதாக ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நடிகர் ராகவாலாரன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது - நமது பாரம்பரிய விளையாட்டான ஜல்லிகட்டு தடையை நீக்கியதை அடுத்து, அந்த சந்தோசத்தை வெற்றி விழாவாக மாணவர்கள், இளைஞர்களுடன் கொண்டாட எல்லோருக்கும் ஆசை.எனவே ஜல்லிகட்டு வெற்றியை இன்று (பிப்ரவரி 18) கொண்டாட முடிவு செய்யப்பட்டது.


சர்வதேச திரைப்பட விழாவில் ஒரு நாள் கூத்து..
[Saturday 2017-02-18 20:00]

அறிமுக இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கிய படம் ஒரு நாள் கூத்து. ‛அட்டக்கத்தி தினேஷ், மியா ஜார்ஜ், நிவேதா பெத்துராஜ், ரித்விகா, ரமேஷ் திலக், கருணாகரன் நடித்திருந்தனர். ஜஸ்டின் பிரபாகர் இசை அமைத்திருந்தார். கோகுல் பெனாய் ஒளிப்பதிவு செய்திருந்தார். கெனன்யா பிலிம்ஸ் சார்பில் ஜே.சிவகுமார் தயாரித்திருந்தார். திருமணம் என்பது வாழ்க்கையின் ஒரு பகுதி, ஒரு நிகழ்வுதான். ஆனால் அந்த ஒன்றுக்காக ஒட்டு மொத்த வாழ்க்கையையே தமிழர்கள் செலவிடுகிறார்கள். வாழ்நாள் உழைப்பை திருமணத்தில் கொட்டுகிறார்கள். திருமணம் என்பது ஒரு நாள் கூத்து. ஆடம்பர திருமணங்கள் தவிர்த்து இரு மனங்கள் இணையும் எளிய நிகழ்வாக அது மாற்றப்பட வேண்டும் என்ற கருத்தை தாங்கி வந்த படம்.


நல்ல கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பேன்: சோனம் கபூர்
[Saturday 2017-02-18 20:00]

சோனம்கபூர் ஹாலிவுட் படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார். இதற்காக அமெரிக்காவில் உள்ள யுடிஏ நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளார். இதையடுத்து அவர்கள் அவருக்கு பொருத்தமான ஹாலிவுட் படவாய்ப்பை தேடிவருகிறார்கள்.


ரஜினியின் படப்பிடிப்பில் ஏமி ஜாக்சன் - அக்‌ஷய்குமார் இடையே கடும்சண்டை
[Saturday 2017-02-18 20:00]

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் '2.0' படத்தில், அக்‌ஷய் குமாருக்கும், ஏமி ஜாக்சனுக்கும் இடையே கடும் சண்டை நடைபெற உள்ளது. ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் பிரபலம் அக்ஷய் குமார் இணைந்து '2.0' படத்தில் நடித்து வருகின்றனர். முக்கிய கதாபாத்திரத்தில் ஏமி ஜாக்சன் நடிக்கிறார். ஷங்கர் இயக்கத்தில் முதலில் வெளியான `எந்திரன்' படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அதன் தொடர்ச்சியாக 2-வது பாகமாக '2.0' படம் தயாராகி வருகிறது.


கவர்னருக்கு மின்அஞ்சல் அனுப்புங்க: கமலஹாசன் வேண்டுகோள்
[Saturday 2017-02-18 20:00]

மனஉளைச்சலை கவர்னருக்கு மின்அஞ்சலாக அனுப்ப நடிகர் கமலஹாசன் தனது டுவீட்டில் தெரிவித்துள்ளார். தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்ப நடிகர் நடிகைகள் என பலர் தங்களது கருத்துகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டு வருகின்றனர். இதில் தனது நேரடியான, வெளிப்படையான கருத்துக்களின் மூலம் ரசிகர்களை ஈர்த்து வருபவர்களில் நடிகர் கமலஹாசனும் ஒருவர்.


'மே 1' இல் வெளிவருகிறது வேலைக்காரன்'
[Saturday 2017-02-18 07:00]

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படத்திற்கு ரஜனி படத்தின் தலைப்பை கைப்பற்றியுள்ளது படக்குழு. சிவகார்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் பல்வேறு கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக, மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் தலைப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.


பழனிக்கு விஜய் போல சென்றது யார்..
[Saturday 2017-02-18 07:00]

பழனி கோவிலுக்கு சென்றது விஜய்தானா? என்பது குறித்த புதிய போட்டோ கசிந்துள்ளது. விஜய் சமீபத்தில் பழனி கோவிலுக்கு மாறுவேடத்தில் சென்று தரிசனம் செய்ததாக சமூக வலைத்தளங்களில் ஒரு புகைப்படம் வெளிவந்தது. அந்த புகைப்படத்தில் முகத்தை மூடியபடி விஜய்யின் தோற்றத்தைப்போலவே ஒருவர் காவி வேஷ்டியுடன் நடந்து வருவது போன்று இருந்தது. இதைப் பார்த்ததும் விஜய்தான் பழனி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்ததாக கூறினர்.


'ராஜூ ஹாரி ஹாதி' யில் மாமனாருடன் இணைந்து நடிக்கும் சமந்தா..
[Saturday 2017-02-18 07:00]

தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவின் மகன் நாகசைதன்யாவை நடிகை சமந்தா விரைவில் திருமணம் செய்துகொள்ளவுள்ளார். திருமணத்திற்கு பின்னர் திரைப்படங்களில் நடிக்க சமந்தாவிற்கு நாகசைதன்யா குடும்பம் சொல்லவில்லை என்பதால் சம்ந்தா தொடர்ந்து திரைப்படங்களை ஒப்பந்தம் செய்து வருவதாக கூறப்படுகின்றது. அந்த வகையில் இயக்குனர் ஒமர் இயக்கத்தில் சூப்பர் ஹிட் அடித்த ராஜூ ஹாரி ஹாதி எனும் ஹாரர் திரில்லர் படத்தின் இரண்டாம் பாகத்தில் சமந்தா நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம். ராஜூ ஹாரி ஹாதி படத்தின் இரண்டாம் பாகத்தில் நாயகனாக நாகார்ஜூனா நடிக்கவுள்ளார். இந்நிலையில் சமந்தா இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.


த்ரிஷாவுக்கு ஸ்பெஷலா ஆதரவு கொடுக்கவில்லை - நடிகர் ராணா
[Saturday 2017-02-18 07:00]

தமிழ், தெலுங்கு மொழிகளில் நடிக்கும் பிரபல நடிகையரின் மனம் கவர்ந்த நடிகர், ராணா. சக நடிகையருடன் கிசு கிசுக்களில் சிக்குவது, இவருக்கு சர்வசாதாரணம். இந்தாண்டில் மட்டும், நான்கு படங்கள், இவர் நடிப்பதில் வெளியாகவுள்ளது. இதில், காஸி படமும் ஒன்று. இனி, ராணாவுடன் பேசலாம்:


ஆபத்தான ஸ்டன்ட்களில் பாதுகாப்பு கவசங்களின்றி நடிக்கும் விஜய்..
[Friday 2017-02-17 20:00]

விஜய் 61' படத்தில் ரசிகர்களுக்கு புதுமையான விருந்து ஒன்று காத்திருக்கிறது. தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு நாளும் புதுப்புது அறிமுகங்கள், தொழில்நுட்பங்கள் என அதன் அடுத்த நிலையை நோக்கி நகர்ந்து கொண்டே இருக்கிறது. தற்போதைய நிலையில், ரசிகர்களை கவரும் வகையில் நடிகர்களும், நடிகைகளும் தங்களது பங்களிப்பை பலவிதங்களில் அளித்து வருகின்றனர். அந்தவகையில் நடிகர்கள் ஆபத்தான ஸ்டன்ட்களில் டூப் ஏதுமின்றி தாமாகவே நடித்து ரசிகர்களை கவர்கின்றனர். இவ்வாறு டூப் போடாமல் ஸ்டன்ட்களில் ஈடுபடுவது நடிகர் விஜய்க்கு ஒன்றும் புதிதல்ல.


வடசென்னை பெண்ணாக விக்ரம்முடன் நடிக்கும் தமன்னா..
[Friday 2017-02-17 20:00]

விக்ரம் படத்தில் நடிக்கும் தமன்னா, அப்படத்தில் வடசென்னை பெண்ணாக நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. விக்ரம் - தமன்னா நடிக்கும் புதிய படம் வடசென்னை கதை களத்தில் உருவாகி வருகிறது. இதில் வடசென்னை குப்பத்து பெண்ணாக தமன்னா நடிக்கிறார். இந்த படத்தின் கதையை கேட்டு அதில் ஒன்றி விட்டார். இதன் கிளைமாக்சை கேட்டு அவர் கண்கலங்கி விட்டார் என்று படக்குழுவினர் தெரிவித்தனர். வழக்கமாக கவர்ச்சி நாயகியாக வரும் தமன்னா, இந்த படத்தில் எந்தவித ஆடம்பரமும் இல்லாத அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதுபற்றி கூறிய அவர், “பாகுபலி படத்துக்கு பிறகு இந்த படமும் எனது திறமைக்கு தீனி போடும் வகையில் அமைந்து இருக்கிறது” என்றார்.


ஜூன் முதல் அரவிந்த்சாமியின் நரகாசுரன்..
[Friday 2017-02-17 20:00]

அறிமுக இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் வெளிவந்த படம் துருவங்கள் பதினாறு. இந்தப் படம் 50 நாட்களைக் கடந்து இன்னும் சென்னையின் ஒரு சில திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப்படத்தைத் தொடர்ந்து நரகாசுரன் என்ற படத்தை அவர் இயக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் அர்விந்த்சாமி கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார். அவருக்கு மூன்று கோடி சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இப்போது மேலும் ஒரு புதிய இணைப்பாக இப்படத்தில் அர்விந்த் சாமியுடன் இணைந்து நாக சைதன்யாவும் நடிக்கவிருக்கிறார். சமீபத்தில் ஐதராபாத் சென்ற கார்த்திக் நரேன் அங்கே நாக சைதன்யாவை சந்தித்து அவரிடம் நரகாசுரன் கதையை சொன்னாராம்.

AIRCOMPLUS2014-02-10-14
SELVI-HOMES-09-02-17
Mahesan-Remax-169515-Seithy
Tharsi-home-15-10-2016
Elankeeran-debt-solution-25-06-2016
Easankulasekaram-Remax-300716
<b>02-02-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற Ideal Entertainment நிறுவன அறிமுக விழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>29-01-2017 அன்று ரொரன்டோவில் தமிழ்நாடு சமூக மன்றம்  நடாத்திய தைப்பொங்கல் விழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>28-01-2017 அன்று ரொரன்டோவில்  நடைபெற்ற கனடா தமிழர் மரபு மாநாட்டு விழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா