Untitled Document
August 19, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
விவசாயிகளுக்கு ஒவ்வொரு நடிகரும் குரல் கொடுக்க வேண்டும்: - நடிகர் ஜீவா
[Tuesday 2017-08-08 17:00]
இது என்ன மாயம், ஜம்புலிங்கம் 3டி, ஆட்டநாயகன், மதராஸபட்டிணம் போன்ற படங்களில் குணசித்ர காமெடி படங்களில் நடித்துள்ளவர் ஜீவா. விவசாயிகளின் வாழ்க்கை நிலையை சொல்லும் ‘நம்ம விவசாயம்’ குறும்பட விழாவில் நேற்று கலந்துகொண்டு அவர் பேசியது: விவசாயிகளின் இன்றைய பரிதாப நிலையை உணர்த்தும் வகையில் இப்படத்தின் காட்சிகள் அமைந்திருந்தது.

முத்தக்காட்சிக்கு கட்டுப்பாடு தளர்த்திய அமலாபால்!
[Tuesday 2017-08-08 17:00]

மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு முன்பு இருந்த திரையுலகம் தற்போது புதிய டிரெண்டுக்கு மாறியிருக்கிறது. தமிழில் பெயர் வைத்தால் வரிச்சலுகை, யூ சான்றிதழ் பெறுவதற்கான விதிமுறைகள் என ஒரு சில காரணங்களால் இயக்குனர்கள் தங்களது படங்களில் இடம்பெறும் சில கவர்ச்சி காட்சிகளை பட ரிலீஸ் வரை வெளியிடாமல் தவிர்த்து வந்தனர் அல்லது யூ சான்றிதழுக்காக காட்சிகளை விரசமில்லாமல் படமாக்கி வந்தனர். ஜிஎஸ்டி வரி அமலுக்கு பிறகு வரிச்சலுகை என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போய்விட்டது.


ஓவியா தற்கொலை முயற்சியா? - தகவல் பரவியதால் பரபரப்பு
[Saturday 2017-08-05 16:00]

ஒரு தனியார் தொலைக் காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை ஓவியா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.சென்னையை அடுத்த பூந்தமல்லி, செம்பரம்பாக்கம் பகுதியில் உள்ள ஈ.வி.பி. பிலிம் சிட்டியில் ஒரு தனியார் தொலைக்காட்சி நடத்திவரும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்காக பிரமாண்டமான அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. வீடு போன்று அமைக்கப்பட்டுள்ள அந்த அரங்கில் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.


அஜித் படத்தில் அக்‌ஷரா ஹாசன் அறிமுக காட்சியில் அரங்கம் அதிரும்!
[Saturday 2017-08-05 16:00]

அஜித் நடிப்பில், சிவா இயக்கத்தில் உருவான, `விவேகம்'. வருகிற 24-ந் தேதி ரிலீஸ் ஆகிறது. இதில் கபிலன் வைரமுத்து முக்கிய பங்காற்றியுள்ளார்.சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படம் பற்றி கபிலன் வைரமுத்து கூறுகிறார்...


40 வயதில் பிகினி போஸ் கொடுத்த பூஜா குமார்!
[Saturday 2017-08-05 09:00]

கமல்ஹாசன் இயக்கி நடித்த விஸ்வரூபம் படத்தில் ஹீரோயினாக நடித்தவர் பூஜா குமார். இவரின் வயது 40-யை தாண்டுகிறது. ஆனால், இவரின் இளமை தோற்றம் இன்றும் மாறாமல் உள்ளது, அதற்கு சான்றாக சமீபத்தில் இவர் வெளியிட்ட பிகினி போஸ் ஒன்று பெரும் வைரல் ஆகி வருகின்றது.


சினிமாவில் புதிய நடிகைகளை வரவேற்கிறேன்: - ராகுல் பிரீத்திசிங்
[Saturday 2017-08-05 09:00]

தெலுங்கு சினிமாவில் நடிக்கும் திறமையானபுதிய நடிகைகளை வரவேற்கிறேன் என்று நடிகை ராகுல் பிரீத்திசிங் கூறினார்.தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராகுல் பிரீத்திசிங். தற்போது தமிழ்,தெலுங்கில் வர இருக்கும் ‘ஸ்பைடர்’, தமிழில் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவர் தெலுங்கில் நடித்துள்ள ‘ஜெயஜானகிநாயகா’ படம் வருகிற 11-ந் தேதி வெளியாகிறது. இதில் அன்பான ஒரு குடும்பத்தின் புத்திசாலி பெண்ணாக நடித்திருக்கிறார்.


சாய் பல்லவியின் முகத்தில் செயற்கை முகப்பரு? - சர்ச்சை கிளப்பும் ரசிகர்கள்
[Saturday 2017-08-05 09:00]

‘பிரேமம்’ மலையாள படத்தில் நடித்த சாய் பல்லவி ரசிகர்கள் மனதை கவர்ந்தார். அவரை தமிழில் நடிக்க கேட்டு மணிரத்னம் உள்ளிட்ட ஒரு சில இயக்குனர்கள் அணுகினர். வெவ்வேறு காரணங்களால் அவர் நடிக்கவில்லை. தற்போது விஜய் இயக்கும் ‘கரு’ படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்.


அசல் படத்தில் நடித்த நடிகையை உல்லாசத்துக்கு அழைத்த மர்ம நபர்!
[Friday 2017-08-04 18:00]

அஜீத்துடன் ‘அசல்’ படத்தில் நடித்தவர் கொய்னா மித்ரா. இந்தியில் பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். கடந்த 2 வாரமாக இவரது செல்போனுக்கு மர்ம நபர் ஒருவர் அடிக்கடி பேசி தொந்தரவு தந்து வந்தார். இடைவிடாமல் போன் அழைப்பு வந்ததால் கொய்னா பேசினார். மறுமுனையில் பேசியவர் கொய்னாவிடம் ஆபாசமாக பேசினார்.


தோஷ நிவர்த்தி பரிகார பூஜையில் பிரணிதா!
[Friday 2017-08-04 18:00]

சகுனி, எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் படங்களில் நடித்திருப்பவர் பிரணிதா. குடும்பப்பாங்கு, கிளாமர் என மாறுபட்ட வேடங்களில் நடித்தும் பெரிதாக ஒர்க் அவுட் ஆகவில்லை. ‘காலிபட்டா 2’ என்ற ஒரு கன்னட படத்தில் மட்டும் தற்போது நடித்து வருகிறார். அதன் படப்பிடிப்பும் முடிந்தது. இதையடுத்து தொழில் தொடங்குவதில் ஆர்வம் காட்டினார்.


மூன்று ஹீரோயினுடன் சோனியா அகர்வால்!
[Friday 2017-08-04 18:00]

இயக்குனர் செல்வராகவனிடம் விவாகரத்து பெற்று பிரிந்த சோனியா அகர்வால் மீண்டும் படங்களில் தலைகாட்டி வருகிறார். இந்த ஆண்டு ஏற்கனவே சாயா, எவனவன், வின்னர் (தெலுங்கு) படங்களில் நடித்துள்ளார். அடுத்து ‘உன்னால் என்னால்’ படத்தில் நடிக்கிறார். அவருடன் 3 இளம் ஹீரோயின்களும் அறிமுகமாகின்றனர். இப்படத்தை எழுதி இயக்கி, நாயகனாக நடிக்கும் ஏ.ஆர்.ஜெயகிருஷ்ணா கூறும்போது, ‘கிராமத்திலிருந்து பிழைப்பு தேடி சென்னை வருபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.


பன்முக ஆற்றல் கொண்ட வெண்ணிற ஆடை மூர்த்தி!
[Friday 2017-08-04 18:00]

தமிழ் சினிமாவில்... இல்லை... இல்லை... உலக சினிமாவிலேயே ‘வெண்ணிற ஆடை’ மூர்த்தியை போல இன்னொரு நடிகர் இல்லை என்று சொல்லக்கூடிய அளவுக்கு தனித்துவம் வாய்த்தவர். எண்ணூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். நடிகர் மட்டுமல்ல. வழக்கறிஞர், ஜோதிடர், எழுத்தாளர் என்று பன்முகத்தன்மை கொண்டவர்.


சிவாஜி சிலை அகற்றியதன் பின்னணி என்ன? - நடிகை கஸ்தூரி கேள்வி
[Friday 2017-08-04 18:00]

சிவாஜி சிலை நள்ளிரவில் அகற்றியதன் பின்னணி என்ன? எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் என்று சர்ச்சை கிளப்பியிருக்கிறார் நடிகை கஸ்தூரி. சென்னை கடற்கரை சாலையில் அமைக்கப்பட்டிருந்த சிவாஜி சிலை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக கூறி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து சிலையை வேறு இடத்தில் வைக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு சிவாஜி சிலை திடீரென்று அகற்றப்பட்டது. இந்த சிலை சிவாஜி மணிமண்டபத்தில் வைக்கப்படும் என்று கூறப்படுகிறது.


அர்ஜூனுக்கு ஆக்‌ஷன்கிங் பட்டம் கொடுத்த கலைப்புலி தாணு!
[Friday 2017-08-04 18:00]

ரஜினிக்கு ‘பைரவி’ திரைப்பட விளம்பரங்களில் ‘சூப்பர் ஸ்டார்’ பட்டம் கொடுத்த அதே கலைப்புலி தாணுதான், ‘யார்’ திரைப்பட விளம்பரங்களில் அர்ஜூனுக்கும் ‘ஆக்‌ஷன் கிங்’ பட்டம் கொடுத்தார். ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் நடித்து வெளியாகியுள்ள 150வது படம் நிபுணன்.


அரவிந்த்சாமியை தேடும் பிரபல நடிகைகள்!
[Thursday 2017-08-03 17:00]

செல்வா இயக்கத்தில் `வணங்காமுடி' படத்தில் நடித்து வரும் அரவிந்த்சாமியை மதுரை மற்றும் தூத்துக்குடியை சேர்ந்த இரு பெண்கள் தேடி வருகிறார்களாம்.அரவிந்த் சாமி தற்போது `சதுரங்க வேட்டை 2', `வணங்காமுடி', `பாஸ்கர் ஒரு ராஸ்கல்', `நரகாசூரன்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.


இயக்குனராக மாறும் ஏ.ஆர்.ரஹ்மான்!
[Thursday 2017-08-03 17:00]

இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ‘ஒன் ஹார்ட்’ என்ற படத்தை இயக்கி உள்ளார். இப்படம், ‘கான்சர்ட் ஜேனர்’ என்ற பாணியில் உருவாகியிருக்கிறது. ஒரு இசை கலைஞர் தனது இசை குழுவுடன் இணைந்து ஒரு நிகழ்ச்சியை எவ்விதம் வெற்றிகரமாக மேடையேற்றுகிறார் என்பதுதான் இப்பாணி. மைக்கேல் ஜாக்ஸன் இறப்பதற்கு முன் அவரை வைத்து உருவாக்கப்பட்டது ‘திஸ் இஸ் இட்’ கான்சர்ட் திரைப்படம்.


சமந்தாவுக்கு விதவிதமாக வடிவமைக்கப்படும் திருமண ஆடைகள்!
[Thursday 2017-08-03 17:00]

காதல் ஜோடிகள் சமந்தா, நாக சைதன்யாவுக்கு கடந்த ஜனவரி மாதம் திருமண நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில் நடந்தது. வரும் அக்டோபர் மாதம் 6ம் தேதி கோவாவில் திருமணம் நடக்கிறது. திருமண ஏற்பாடுகளை சைதன்யா குடும்பத்தினர் தீவிரமாக கவனித்து வருகின்றனர். 6ம் தேதி தொடங்கி 3 நாட்கள் திருமண விழா நடக்கவுள்ளதை யடுத்து சமந்தாவுக்கு திருமண ஆடைகள் விதவிதமாக வடிவமைக்கப்படுகிறது.


விஜய் சேதுபதியுடன் நடிக்கும் ஜனகராஜ்!
[Thursday 2017-08-03 17:00]

தமிழ் சினிமாவில் 10 வருடங்களுக்கு பின் ரீஎண்ட்ரி கொடுத்திருக்கிறார் காமெடி நடிகர் ஜனகராஜ். ரஜினி, கமல் உள்ளிட்ட பல்வேறு ஹீரோக்கள் படங்களில் காமெடி வேடங்களில் நடித்தவர் ஜனகராஜ்.


ஜுலியை வைத்து படம் தயாரிக்கவுள்ள கூல் சுரேஷ்!
[Thursday 2017-08-03 17:00]

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள ஜுலியை வைத்து படம் எடுக்க போவதாக நடிகர் கூல் சுரேஷ் தெரவித்துள்ளார். நடிகர் சந்தானத்துடன் பல படங்களில், காமெடி காட்சிகளில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகர் கூல் சுரேஷ். இவர் சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.


புத்தக லைப்ரரி வைத்திருக்கும் கஜோல்!
[Thursday 2017-08-03 17:00]

‘மின்சார கனவு’ படத்தில் நடித்த கஜோல் பலவருடங்களுக்கு பிறகு தமிழில், ‘வேலையில்லா பட்டதாரி 2’ம் பாகத்தில் நடிக்கிறார். படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் புத்தகமும் கையுமாக கஜோலை காண முடிகிறது. செல்போன், இன்டர்நெட்டில் பல நடிகைகள் மூழ்கியிருக்கும் இந்தநாளில் கஜோல் புத்தகமும் கையுமாக மாறியிருப்பதற்கு என்ன காரணம்? இதுபற்றி கஜோல் கூறியது:


தலைமுடியை தடவிய நடிகருக்கு கன்னத்தில் அறைந்த கவர்ச்சி நடிகை!
[Thursday 2017-08-03 17:00]

பாகுபலி முதல்பாகத்தில் ‘மனோஹரி..’ பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடியவர் பாலிவுட் நடிகை ஸ்கார்லெட் வில்சன். இந்தியில், ‘ஹன்சா ஏக் சான்யாக்’ படத்தில் கவர்ச்சி நடனம் ஆட ஒப்பந்தம் ஆனார்.


யானையின் தும்பிக்கையை கட்டித்தழுவும் ரெஜினா: - சென்சார் கத்திரியிலிருந்து தப்புமா
[Wednesday 2017-08-02 17:00]

சமீபகாலமாக ரெஜினா கெசன்ட்ரா கவர்ச்சி நடிப்பில் பிய்த்து உதறிக்கொண்டிருக்கிறார். ஜெமினிகணேசனும் சுருளிராஜனும், சரவணன் இருக்க பயம் ஏன் படங்களில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை திணறடித்தார். இது தமிழில் அவருக்கு தனி இடத்தை பெற்றுத்தந்திருக்கிறது. அடுத்து தெலுங்கு திரையுலகில் நம்பர் ஒன் இடத்தை கைப்பற்றும் முடிவுடன் களம் இறங்கியிருக்கிறார்.


பிக்பாஸ் நிகழ்ச்சியை கவுண்டமனி தொகுத்து வழங்கினால் எப்படி இருக்கும்!
[Wednesday 2017-08-02 17:00]

100 நாள்கள், 14 பிரபலங்கள், 30 கேமராக்கள். ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது என கமலை வைத்து விளம்பரம் செய்யத் தொடங்கியதில் இருந்து, பிக் பாஸ் ஷோ எப்படி இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்தது. நிகழ்ச்சி ஆரம்பித்த முதள்நாளில் இருந்து இணையதள வாசிகளுக்கு பெரும் கொண்டாட்டம். பிக் பாஸ் நிழச்சியை வைத்து தினமும் மெமிஸ், கலாய்த்து கொண்டுள்ளனர் நெட்டிசன்கள். இந்நிலையில் ட்விட்டரில் இந்த நிகழச்சியில் கவுண்டமனி இருந்திருந்தால் எப்படி இருக்கும் என்று ட்ரெணட் ஆகியுள்ளது.


தாத்தாவாக நடிக்கும் விஜய் சேதுபதி!
[Wednesday 2017-08-02 17:00]

சி.பிரேம்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, த்ரிஷா நடிக்கும் ‘96’ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தலைப்புக்கேற்றார் போல, படத்தின் கதையும் 96களில் நடப்பதுபோல் தான் உருவாக்கப்பட்டுள்ளதாம். இதுஒரு ரொமான்டிக் படம் என்பது குறிப்பிடத்தக்கது. மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனம் சார்ப்பில் எஸ்.நந்தகோபால் தயாரிக்கிறார்.


சுமூக தீர்வு காண வேண்டும்: - ரஜினி வேண்டுகோள்
[Wednesday 2017-08-02 17:00]

சம்பளம் மற்றும் பயணப்படி விவகாரம் குறித்து பெப்சி தொழிலாளர்கள் தயாரிப்பாளர்களுக்கு இடையே மோதல்போக்கு ஏற்பட்டுள்ளதையடுத்து இன்று 2வது நாளாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி மற்றும் நிர்வாகிகள் இன்று ரஜினியை நேரில் சந்தித்து பேசினார்.


எனது திறமையை வெளிப்படுத்த இயக்குனராக மாறினேன்: - அர்ஜூன்
[Wednesday 2017-08-02 17:00]

அர்ஜூன் நடித்துள்ள 150வது படம் ‘நிபுணன்’. இப்படத்தின் வெற்றி நிகழ்ச்சியில் நேற்று கலந்து கொண்டு அர்ஜூன் கூறியது: நான் நடிகனாவேன் என்று எண்ணவில்லை. எனது உடற்கட்டை பார்த்துதான் என்னை நடிகனாக்கினார்கள். இன்றைக்கு 150 படம் முடித்திருக்கிறேன் என்பதை நம்ப முடியவில்லை. இனியும் நடிப்பை தொடர்வேன்.


நிறபாகுபாடு என்பது ஒரு பிரச்னை இல்லை: - எமி ஜாக்ஸன்
[Tuesday 2017-08-01 18:00]

லண்டனை சேர்ந்தவர் எமி ஜாக்ஸன். மதராஸ பட்டணம் மூலம் தமிழில் அறிமுகமானார். தாண்டவம், ஐ, கெத்து, தங்கமகன் என தமிழில் தொடர்ந்து நடித்துள்ள அவர் தற்போது ரஜினியுடன் 2.0 படத்தில் நடிக்கிறார். இப்படத்தை தவிர தற்போது அவருக்கு கைவசம் தமிழில் படங்கள் எதுவும் இல்லை.


ஊழலை கண்டுபிடித்த கமல்ஹாசன் நற்பணி மன்றத்தினர்: - வாழ்த்திய கமல்
[Tuesday 2017-08-01 18:00]

பெரம்பலூரில் முட்டை ஊழலை தனது நற்பணி இயக்கத்தினர் அம்பலப்படுத்தியதாக கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். முட்டை ஊழலை எனது நற்பணி இயக்கத்தினர் அம்பலப்படுத்தியது பெருமையே என்றும் நடிகர் கமல் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். சட்டத்தை மீறாமல் ரசிகர்கள் நற்பணி இயக்க வழக்கறிஞர்களின் ஆலோசனைப்படி செயல்பட வேண்டும் என்றும் கமல்ஹாசன் ரசிகர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். அழுகிய முட்டைகள் குழந்தைகளுக்கு பெரம்பலூரில் தரப்பட்டது அம்பலமாகியதை அவர் ட்வி்ட்டரில் சுட்டிக் காட்டியுள்ளார்.


கப்பல் படை வீரராக நடிக்கும் ரஹ்மான்!
[Tuesday 2017-08-01 18:00]

அறிமுக இயக்குனர் பிராஷ் இயக்கத்த்தில் ரஹ்மான் நடிக்கும் படம் ஆபரேஷன் அறப்பைமா. துருவங்கள் பதினாறு தவிர பகடி ஆட்டம், முகத்திரை உள்ளிட்ட படங்கள் ரஹ்மானுக்கு பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. ஆபரேஷன் அறப்பைமா என்ற வித்தியாசமான தலைப்பை கொண்டு உருவாகி வரும் இந்த படத்தில் ரஹ்மான் கப்பல் படை வீரராக நடிக்கிறார்.

Easankulasekaram-Remax-300716
SELVI-HOMES-09-02-17
Tharsi-home-15-10-2016
Mahesan-Remax-169515-Seithy
Elankeeran-debt-solution-25-06-2016
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b> 30-06-2017 அன்று கனடா-ரொரன்டோவில் நடைபெற்ற மின்னல் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா