Untitled Document
June 24, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
காலா படத்தின் வில்லன் ரஜினி பற்றி என்ன சொல்கிறார் தெரியுமா?
[Tuesday 2017-06-06 15:00]

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் காலா படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் பங்கஜ் திரிபாதி வில்லனாக நடிக்கிறார். காலா படத்தில் பீகாரைச் சேர்ந்த பாலிவுட் நடிகர் பங்கஜ் திரிபாதி வில்லனாக நடிக்கிறார்.


சினிமாத்துறைக்கு வந்த பிறகு என் சுதந்திரம் பறிபோனது;சொந்த ஊரில் நடந்த பாராட்டு விழாவில் SPB
[Tuesday 2017-06-06 09:00]

சினிமாத்துறைக்கு வந்த பிறகு எனது சுதந்திரம் பறிபோனது என தனது சொந்த ஊரில் நடந்த பாராட்டு விழாவில் பேசிய பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வேதனையுடன் தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு நகரில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கோணேட்டம்பேட்டை கிராமம். பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இந்த கிராமத்தில் பிறந்தவர். இவர், தனது 72-வது பிறந்த நாளை தனது கிராமத்தில் எளிமையாக கொண்டாடினார்.


சினிமாக்கான ஜிஎஸ்டி வரியால் பிராந்திய மொழிப்படங்கள் சிதையும் அபாயம்: கமலஹாசன்
[Monday 2017-06-05 22:00]

சினிமாக்கான ஜிஎஸ்டி வரியால் பிராந்திய மொழிப்படங்கள் சிதையும் அபாயம் ஏற்படும் என்று கமலஹாசன் தெரிவித்துள்ளார். வருகிற ஜுலை 1-ந் தேதி முதல் மத்திய அரசு விதித்துள்ள ஜி.எஸ்.டி. வரி அமலுக்கு வரவிருக்கிறது. சினிமாவுக்கு 28% ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால், திரையரங்குகளில் டிக்கெட் விலை உயரும் என்ற அச்சம் நிலவியுள்ளது.இதனையடுத்து, ஜி.எஸ்.டி வரியால் சினிமா உலகம் பெரிதும் பாதிக்கப்படும் என்று நடிகர் கமல் சில தினங்களுக்கு முன்பு கூறியிருந்தார்.


வேலைக்காரன் பட பர்ஸ்ட் லுக் வெளியீடு
[Monday 2017-06-05 22:00]

சிவ கார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘வேலைக்காரன்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியுள்ளது.


நயனின் இடத்தைப் பிடிக்கும் ஆசையில் திரிஷா

[Monday 2017-06-05 22:00]

தமிழ் சினிமாவில் நயன்தாரா போன்று வலம்வர வேண்டும் என்ற எண்ணத்திலேயே பொழுதைக் கழித்து வருகிறாராம் திரிஷா. முன்னணி நடிகையாக இருந்தும் நயன் வாங்கும் சம்பளத்தை விட குறைவாகவே தனக்கு சம்பளம் கிடைப்பதாக ஃபீல் பண்ணும் திரிஷா, இதற்காக சில அதிரடி நடவடிக்கைகளிலும் இறங்கியுள்ளதாக சொல்கிறார்கள்.


மல்லுவுட்டில் கால்பதிக்கும் ஹன்சிகா
[Monday 2017-06-05 22:00]

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம்வந்த ஹன்சிகாவுக்கு இப்போது குறிப்பிடும்படியான வாய்ப்புகள் இல்லை. இதனால், அவரது கவனம் மலையாள திரையுலகம் பக்கம் திரும்பியுள்ளது.


கவர்ச்சியாக நடிக்க மறுத்து படங்கள் இழக்கும் மஞ்சிமா!
[Monday 2017-06-05 17:00]

சிம்பு ஜோடியாக, ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் அறிமுகமானவர் மஞ்சிமா மோகன். தற்போது சத்ரியன், இப்படை வெல்லும் படங்களில் நடித்து வருகிறார். அறிமுக நடிகைகள் பலர் ரேவதிபோல் நடிக்க ஆசை என்ற கொள்கையுடன் வருகிறார்கள். ஆனால் சக ஹீரோயின்கள் போட்டி, சம்பளம் போன்ற விஷயங்களால் பின்னர் கிளாமருக்கு துணிந்து விடுகிறார்கள். ரேவதி பாலிசியுடன் வந்த ரெஜினா தற்போது படுகிளாமராக நடித்து வருகிறார்.


ஆண்களை குப்பை என்பதா? நடிகை வீடு முற்றுகை
[Monday 2017-06-05 16:00]

தமிழில், காதல் சொல்ல வந்தேன், உயர்திரு 420, நந்தா நந்திதா உட்பட சில படங்களில் நடித்தவர் மேக்னா ராஜ். இவர், மலையாளம், கன்னட படங்களிலும் நடித்து வருகிறார். இப்போது ’ஜிண்டா’ என்ற கன்னடப் படத்தில் நடித்துள்ளார். முசாஞ்சே மகேஷ் இயக்கும் இந்தப் படம் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகிறது. இதன் டீசர் சமீபத்தில் வெளியானது. அதில் மேக்னா, ஆண்களை கடுமையாகப் பேசுவது போல காட்சி இடம்பெற்றுள்ளது.


ரஜினியின் காலா பட ரகசியத்தை வெளியிட்ட ஹூமாகுரேஷி!
[Monday 2017-06-05 16:00]

பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘காலா’ ரகசியத்தை அப்படத்தில் நடிக்கும் நடிகையான ஹூமாகுரேஷி வெளியிட்டுள்ளார்.ரஜினியின் ‘காலா’ படப்பிடிப்பு கடந்த 28-ந்தேதி தொடங்கியது. பா.ரஞ்சித் இயக்கும் இதன் படப்பிடிப்பு மும்பையில் தொடர்ந்து நடைபெறுகிறது. தினமும் ரஜினியை பார்க்க பெரும் கூட்டம் வருவதால், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் படப்பிடிப்பு நடந்து வருகிறது.


வலியால் சிரமப்பட்ட அஜித்: - நடந்தது என்ன?
[Monday 2017-06-05 16:00]

அஜித் தற்போது விவேகம் படத்தில் நடித்து வருகிறார். ஒவ்வொரு படம் முடியும் போதும் அவருக்கு ஏதாவது காயங்கள் ஏற்பட்டு விடுகிறது. இப்படித்தான் உல்லாசம் படத்தின் போது தொடங்கிய முதுகு வலியால் மிகவும் அவதிப்பட்டார்.அவருக்கு ஆப்ரேஷன் நடந்தது. பின் சுந்தர் சி இயக்கத்தில் 1999 ல் வெளியான உன்னைத்தேடி படம் முடிந்த நேரம் அஜித்துக்கு ஒரு சங்கடமான காலகட்டம். ஆம். ஆப்ரேஷன் முடிந்த பிறகு உடனடியாக இப்படத்திற்கு டப்பிங் பேச வேண்டிய சூழல்.


சதியால் தோல்வியான இளைய தளபதியின் படம்!
[Monday 2017-06-05 16:00]

இளைய தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் பிஸியாக நடித்து வருகின்றார். விஜய் படங்கள் என்றாலே எப்போதும் ஒருவிதமான பிரச்சனைகளுடன் தான் ரிலிஸாகும்.அவரின் தலைவா படத்திற்கு நடந்த கொடுமைகள் எல்லாம் அனைவரும் அறிந்ததே, ஆனால், விஜய் தன் திரைப்பயணத்தில் மிகவும் கஷ்டப்பட்ட தருணம் காவலன் படம் வரும் போது தான்.


ரஜினியின் இளமைக்கால ரோலில் நடிக்கிறாரா தனுஷ்?
[Monday 2017-06-05 16:00]

நடிகர் தனுஷ் சூப்பர் ஸ்டாரின் மருமகன் தனுஷ் என்பது பலருக்கும் தெரியும். தான் ஒரு இயக்குனரும் கூட என்பதை தனுஷ் ஏற்கனவே பவர் பாண்டி படத்தின் மூலம் நிரூபித்து விட்டார்.தற்போது ரஜினியை வைத்து காலா படத்தையும் தயாரித்து வருகிறார் தனுஷ். பா.பாண்டி படத்தில் ராஜ் கிரணின் இளமை கால வேடத்தில் தனுஷ் நடித்திருந்தார்.


தனுஷ் படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகியதுக்கு இதுதான் காரணமா?
[Monday 2017-06-05 16:00]

தனுஷ், வெற்றிமாறன் கூட்டணியில் தயாராகும் வட சென்னை படத்திற்காக ரசிகர்கள் வெயிட்டிங். ஆனால் படத்தின் வேலைகள் எந்த நிலையில் உள்ளது, படப்பிடிப்பு நடந்து வருகிறதா என்று எந்த தகவலும் சரியாக தெரியவில்லை.இந்த நிலையில் முக்கிய வேடத்தில் நடிப்பதாக இருந்த விஜய் சேதுபதி படத்தில் இருந்து நீங்கிவிட்டதாகவும், அவருக்கு பதிலாக அமீர் நடிக்கப்போவதாகவும் தகவல்கள் வந்தது.


சில தயாரிப்பாளர்களுடன் அப்படி இருந்து தான் ஆக வேண்டும்: - சன்னி லியோன் பகீர் தகவல்
[Monday 2017-06-05 15:00]

சன்னி லியோன் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார். இவர் இதற்கு முன் ஆபாச படங்களில் நடித்து வந்தவர்.இவர் ஆரம்பத்தில் மிகவும் கூச்ச சுபாவம் உள்ளவர் தானாம், ஆனால், பட வாய்ப்பிற்காக பட கம்பெனிகளை தேடி சென்ற போது பலரும் இவரை படுக்கைக்கு அழைத்தார்களாம்.


படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது ரஜினிகாந்தின் ‘காலா’ படத்தில் நடிக்க மம்முட்டியுடன் பேச்சுவார்த்தை
[Monday 2017-06-05 08:00]

ரஜினிகாந்தின் ‘காலா’ படத்தில் அம்பேத்கர் வேடத்தில் மம்முட்டியை நடிக்க வைக்க பேச்சு நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ரஜினிகாந்த் நடிக்கும் ‘காலா’ படப்பிடிப்பு மும்பையில் உள்ள குடிசைப்பகுதிகள், கடை வீதிகள், வழிபாட்டு தலங்களில் நூற்றுக்கணக்கான துணை நடிகர்-நடிகைகளுடன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ரஜினிகாந்த் கறுப்பு வேட்டி ஜிப்பா, முஸ்லிம் குல்லா அணிந்து மிடுக்காக நடந்து சென்று மக்களிடம் குறைகள் கேட்பது போன்றும், மோட்டார் சைக்கிள் பின்னால் உட்கார்ந்து குறுகலான தெருக்களில் பயணித்து தமிழர்களுக்கு உதவுவது போன்றும் காட்சிகளை படமாக்குகின்றனர்.


யார் போறாங்களோ, அவங்களுக்கே விருது: அரவிந்த்சுவாமி கிண்டல்
[Sunday 2017-06-04 20:00]

விருதுக்கு எனது பெயர் பரிந்துரைக்கப்பட்டாலும், வாக்குகளுக்காக எனது நேரத்தை செலவழிக்க விரும்பவில்லை என்று நடிகர் அரவிந்த்சுவாமி கூறியுள்ளார்.முக்கிய நிகழ்வுகள் குறித்து அவ்வப்போது தனது கருத்தை டிவிட்டரில் பதிவு செய்யும் நடிகர் அரவிந்த்சுவாமி, ''சில விருதுகள் வாக்குகளை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படுவதில்லை. யார் விழாவுக்கு செல்கிறார்களோ அவர்களே விருதைப் பெற வேண்டியதாக உள்ளது.


தமிழ்ப் பேச தடுமாறும் இந்தி நடிகை!
[Sunday 2017-06-04 20:00]

துல்கர் சல்மான் ஹீரோவாக நடிக்கும் படம், ‘சோலோ’. மலையாளம், தமிழில் உருவாகும் இந்தப் படத்தை பிஜாய் நம்பியார் இயக்குகிறார். இவர், விக்ரம், ஜீவா நடித்த ’டேவிட்’ என்ற படத்தை இயக்கியவர். இந்தி நடிகர் தினோ மோரியா, இந்தி நடிகை நேகா சர்மா, தன்ஷிகா, ஸ்ருதி ஹரிஹரன் உட்பட பலர் நடிக்கின்றனர்.


கமல் கருத்தும் ரஜினி முடிவும் சரிதான்: சமுத்திரக்கனி
[Sunday 2017-06-04 17:00]

ரஜினி அரசியலுக்கு வருவது அவர் விருப்பம். அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். மக்கள்தான் யார் வேண்டும், யார் வேண்டாம் என தீர்மானிப்பார்கள் என திரைப்பட இயக்குனர் சமுத்திரக்கனி கூறினார். இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கி நடித்த ’தொண்டன்’ படம் தமிழகம் முழுவதும் வெளியாகி ஒடிக் கொண்டு இருக்கிறது. கரூரில் தொண்டன் திரையிடப்பட்டுள்ள திரையரங்கில் இயக்குநர் சமுத்திரகனி நேற்று ரசிகர்களை சந்தித்தார்.


நாகினி நடிகை மருத்துவமனையில் அனுமதி
[Sunday 2017-06-04 17:00]

இந்தியில் புகழ்பெற்ற டிவி தொடர், ’நாகின்’ . பாம்பு மற்றும் அதன் சக்திகளை அடிப்படையாகக் கொண்ட இந்த தொடர் ஹிட்டானது. இதையடுத்து இந்தத் தொடர் தமிழ், தெலுங்கு, மலையாளம், சிங்களம் உட்பட பல்வேறு மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியானது. நாகினி என்ற பெயரில் தமிழில் வந்த இந்தத் தொடர் இங்கும் ஹிட்.


நடிகர் சாமிக்கண்ணு மரணம்: நடிகர் சங்கம் இரங்கல்!
[Sunday 2017-06-04 17:00]

மூத்த தமிழ் நடிகர் சாமிக்கண்ணு உடல் நல குறைவால் நேற்று மாலை காலமானார். அவருக்கு வயது 95. அவர் மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது. தனது எட்டு வயதிலிருந்து நாடக கம்பெனிகளில் பணியாற்றி 1954 ல் ’புதுயுகம்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர் சாமிகண்ணு. சிவாஜி, எம்.ஜி.ஆர், ரஜினி, கமல் உட்பட பல ஹீரோக்களுடன் நடித்துள்ளார்.


சீனாவில் ஹாலிவுட் பட வசூலை ஓரங்கட்டிய தங்கல்!
[Sunday 2017-06-04 17:00]

தீபிகா படுகோன் நடிப்பில் சீனாவில் வெளியான ஹாலிவுட் படத்தின் வசூலை ஓரங்கட்டிய தங்கல் திரைப்படம் 1,066 கோடி வசூலித்து அங்கு சாதனை படைத்துள்ளது. நிதேஷ் திவாரி இயக்கத்தில், அமீர் கான் நடித்த படம், தங்கல். இந்த படம் இந்தி, தமிழ், தெலுங்கு என 3 மொழிகளில் இந்தியா முழுவதும் வெளியிடப்பட்டு வசூலில் சாதனை படைத்தது.


மீண்டும் படப்பிடிப்பில் காயம் அடைந்த தல அஜித்.
[Saturday 2017-06-03 22:00]

சிவா இயக்கத்தில் அஜித், காஜல் அகர்வால், அக்ஷ்ரா ஹாசன், விவேக் ஓபராய் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் விவேகம். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் ஐரோப்பிய நாடுகளில் மட்டுமே தொடர்ந்து நடைபெற்றது. குறிப்பாக பல்கேரியா நாட்டில் அதிகமாக நடத்தப்பட்டது.


ரஜினியின் ‘2.0’ படம் சுமார் 15 மொழிகளில் வெளியீடு
[Saturday 2017-06-03 21:00]

ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் ‘2. 0’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது இறுதிக்கட்ட பணிகளில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இப்படத்தை உலகளவில் சுமார் 15 மொழிகளில் வெளியிட பட தயாரிப்பாளர்கள் குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன


60 வயது தமிழ் பட டைரக்டர் வேலு பிரபாகரன் 35 வயது நடிகை ஷெர்லிதாசை மணந்தார்!
[Saturday 2017-06-03 18:00]

60 வயது தமிழ் பட டைரக்டர் வேலு பிரபாகரன் 35 வயது நடிகை ஷெர்லிதாசை பத்திரிகையாளர்கள் முன் திருமணம் செய்து கொண்டார். ‘நாளைய மனிதன்’, ‘கடவுள்’, ‘புரட்சிக்காரன்’, ‘நாளைய பொழுது உன்னோடு’, ‘மீண்டும் ஒரு காதல் கதை’ உள்பட 15-க்கும் அதிகமான படங்களை இயக்கியவர் வேலு பிரபாகரன். இவ ருக்கு வயது 60. வேலுபிரபாகரன் இயக்கத்தில் உருவான ‘ஒரு இயக்குனரின் காதல் டைரி’ என்ற படம் நேற்று ரிலீஸ் ஆனது.


நடிகைகள் மோதல்: படக்குழு அப்செட்!
[Saturday 2017-06-03 10:00]

படப்பிடிப்பில் நடிகைகள் இருவர் மோதலில் இறங்கியதால் படக்குழு அப்செட் ஆகியுள்ளது. தமிழில், ஆடுகளம் படத்தில் அறிமுகமானவர் டாப்ஸி. தொடர்ந்து ஆரம்பம், காஞ்சனா 2 உட்பட பல தமிழ்ப் படங்களில் நடித்த இவர், இப்போது இந்தி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் அங்கு நடித்த பிங்க், நாம் ஷபானா படங்கள் அவருக்கு நல்ல பெயரைப் பெற்று தந்துள்ளன. இப்போது ’ஜுத்வா’ என்ற படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்துவருகிறார்.


படப்பிடிப்பில் தீ - உயிர் தப்பினார் ஹீரோயின்!
[Saturday 2017-06-03 10:00]

படப்பிடிப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் ஹீரோயின் அதிதி ராவ் உயிர் தப்பினார். மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடித்த படம், ’காற்று வெளியிடை’. இதில் ஹீரோயினாக நடித்தவர் அதிதி ராவ் ஹைதாரி. இவர் இப்போது ’பூமி’ என்ற இந்திப் படத்தில் நடித்துவருகிறார். ஓமுங் குமார் இயக்கும் இந்தப் படத்தில் சஞ்சய் தத் ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் படத்துக்காக மும்பையிலுள்ள ஆர்.கே.ஸ்டூடியோவில் திருமண பாடல் ஒன்று படமாக்கப்பட்டு வருகிறது.


மரத்தை வெட்டியதாக பிரபல நடிகர் மீது வழக்கு!
[Saturday 2017-06-03 10:00]

தனது பங்களாவில் இருந்த மரத்தை வெட்டியதாக பிரபல இந்தி நடிகர் மீது மும்பை மாநகராட்சி வழக்குப் பதிவு செய்துள்ளது. பிரபல இந்தி நடிகர் ரிஷிகபூர். (வயது 64). சினிமா குடும்பத்தை சேர்ந்த இவரது மகன் ரன்பீர் கபூர் இளம் ஹீரோவாக இப்போது நடித்துவருகிறார். இவர்களது பங்களா, பாலி ஹில் பகுதியில் இருக்கிறது. இங்குள்ள கட்டடத்தை இடித்துவிட்டு புதிய வீடு கட்ட திட்டமிட்டுள்ளார் கபூர். இந்த வேலையை கான்ட்ராக்டர் ஒருவரிடம் ஒப்படைத்துள்ளார்.


சினிமாவை விட்டே விலகுவேன்: கமல் அறிவிப்பு
[Saturday 2017-06-03 09:00]

சினிமா டிக்கெட் மீதான ஜிஎஸ்டி வரியை விலக்காவிட்டால் திரைப்படத் தொழிலை விட்டு விலகுவதைத் தவிர வேறு வழியில்லை என்று நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். சினிமா டிக்கெட்டுகளுக்கு ஜிஎஸ்டி வரிவிதிக்கப்பட்டது தொடர்பாக சென்னை தென்னிந்திய வர்த்தக சபையில் நடிகர் கமல்ஹாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

Easankulasekaram-Remax-300716
Elankeeran-debt-solution-25-06-2016
SELVI-HOMES-09-02-17
Mahesan-Remax-169515-Seithy
Tharsi-home-15-10-2016
<b> 10-06-2017 அன்று கனடா - ரொரன்டோவில்          இராகாலயா நுண்கலைக்கூடம் வழங்கிய கானமாருதம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b> 03-06-2017 அன்று கனடா - ரொரன்டோவில் நடைபெற்ற இதயராகங்கள் இசை நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>14-05-2017 அன்று கனடா - ரொரன்டோவில் நடைபெற்ற தாயின்மடியில் நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா