Untitled Document
August 17, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
ரஜினி ரேஞ்சுக்கு பெரிய நடிகன் நான்: இயக்குனரிடம் சொடக்கு போட்டு சொன்ன பவர்ஸ்டார்!
[Thursday 2013-03-07 19:00]

கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்துக்குப்பிறகு பல படங்களில் காமெடியனாகவும், குத்துப்பாட்டுக்கு ஆடுபவராகவும் வளர்ந்து நிற்கிறார் பவர்ஸ்டார். என்றாலும், முக்கியத்துவம் வாய்ந்த காமெடியனாக அவரை எந்த இயக்குனர்களும் அங்கீகரிக்கவில்லை. மற்ற காமெடியன்களுடன் வரும் சப்போட்டிங் காமெடியனாகத்தான் பயன்படுத்துகிறார்கள். ஆனால் இதற்கிடையில் அவரைப்பற்றி ஏகப்பட்ட பில்டப் செய்திகள் மீடியாக்களில் உலா வந்து கொண்டிருக்கின்றன. மேலும், பவர்ஸ்டார் சார்பாகவும், ஐ படத்துக்குப்பிறகு ஒருநாளைக்கு ஐந்து லட்சமாக சம்பளத்தை உயர்த்தப்போவதாக சமீபத்தில் அதிர்ச்சி அறிக்கையொன்று வாசித்தார்கள்.


டாப்சியின் தங்கையை அறிமுகப்படுத்த போவது கவுதம் மேனனா.. வெற்றிமாறனா..
[Thursday 2013-03-07 19:00]

பஞ்சாப் ரசகுல்லா டாப்ஸி பன்னு. இப்போது தென்னிந்திய சினிமாவின் ஸ்வீட் பன்னு. சாப்ட்வேர் என்ஜினீயரான டாப்சி அழகிப் போட்டி ஒன்றில் டைட்டில் பெற தெலுங்கு படத்தில் அறிமுகமானார். ஆடுகளத்தில் நடிக்க த்ரிஷா தயங்க வெற்றிமாறன் டாப்ஸி அழைத்து வந்து வெள்ளாவி தேவதையாக்கினார். இப்போது டாப்ஸி தமிழ், தெலுங்கு, இந்தியில் ரொம்ப பிசி. தமிழில் அஜீத்துடன் வலை, ராகவா லாரன்சுடன் முனி&3, மறந்தேன் மன்னித்தேன், தெலுங்கில் ஷேடோஸ். ஜாக்பாட், குண்டலா கோதவரி, இந்தியில் சஸ்மே படோர் என ரவுண்டு கட்டி நடித்து வருகிறார்.


ரஜினியின் கோச்சடையான் ஜூலையில் வெளியீடு..!
[Thursday 2013-03-07 19:00]

ரஜினி ரசிகர்களுக்கு ஓர் நற்செய்தி.., நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ரஜினியின் கோச்சடையான் படம் ஜூலையில் ரிலீஸ் ஆக இருக்கிறது. இதனை படத்தின் தயாரிப்பாளர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்தின் இளையமகள் சவுந்தர்யா இயக்குனராக அவதரித்து இருக்கும் படம் கோச்சடையான். முதல்படத்தையே தனது அப்பா ரஜினியை வைத்து தைரியமாக இயக்கி உள்ளார். இவருக்கு பக்கபலமாக இருந்து படத்தை எடுக்க உதவியுள்ளார் டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார். ரஜினிக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ளார். இவர்களுடன் சரத்குமார், ஜாக்கி ஷெரப், ஆதி, ஷோபனா, ருக்மணி, நாசர் உள்ளிட்ட ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார், ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு செய்கிறார்.


இரண்டு மாதங்கள் படித்தும் தமிழை உச்சரிக்க முடியாமல் தடுமாறும் சோனியா அகர்வால்!
[Thursday 2013-03-07 18:00]

செல்வராகவன் நடித்த படங்களில் நடித்து வந்த சோனியா அகர்வால், அதையடுத்து அவரையே காதலித்து திருமணமும் செய்து கொண்டார். என்றாலும், அவர்களது குடும்ப வாழ்க்கை நீடிக்கவில்லை. சில மாதங்களிலேயே அவர்களது வாழ்க்கையில் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் கோர்ட் வரை சென்றதை அடுத்து, விவாகரத்தாகி பிரிந்தனர். ஆனால் அதையடுத்து தனது பெண் உதவி இயக்குனரை திருமணம் செய்து கொண்டார் செல்வராகவன். ஆனால் சோனியா அகர்வால் திருமணமே செய்யவில்லை. மீண்டும் சினிமா கோதாவில் குதித்தார். பெருத்து சரிந்து கிடந்த தனது உடல்கட்டை ஸ்லிம் பண்ணிக்கொண்டு சில படங்களில் கேரக்டர் ரோல்களில் நடித்தவர், ஒரு நடிகையின் வாக்குமூலம் படத்தில் கதாநாயகியாகவும் நடித்தார்.


காமசூத்ரா 3டியில் அந்தப்புர லீலைகள் புரியும் நாசர்!
[Thursday 2013-03-07 18:00]

தமிழ் சினிமாவில் பலதரப்பட்ட வேடங்களில் நடித்து வருபவர் நாசர். இவருக்கு சமீபகாலமாக தமிழில் போதுமான படங்கள் இல்லை. அதனால் அண்டை மாநில மொழிப்படங்களில் நடித்து வருபவர், பாலிவுட் படங்களிலும நடிக்க முயற்சி எடுத்து வருகிறார். ஏற்கனவே இந்தியில் மணிரத்னம் இயக்கிய பம்பாய் படத்தில் நடித்த நாசர், அதன்பிறகு கமலின் சாச்சி 420, பிரபுதேவா இயக்கிய ரவுடி ரத்தோர், விஸ்வரூபம், டேவிட் என பல படங்களில் நடித்திருப்பவர், இப்போது இன்னும் அதிகப்படியான படங்களை கைப்பற்ற மும்பைக்கும், சென்னைக்கும் அடிக்கடி பறந்து கொண்டேயிருக்கிறார்.


ஹ்ரித்திக் ரோஷன் - கத்ரீனா முத்தக்காட்சி: கடுப்பாகிய கத்ரீனா கயீப்!
[Thursday 2013-03-07 18:00]

பாலிவுட் பியூட்டி கத்ரீனா கயீப், அடுத்ததாக, ஹ்ரித்திக் ரோஷன் ஜோடியாக, 'பாங் பாங்' என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில், ஹ்ரித்திக்கிற்கும், கத்ரீனாவுக்கும், கெமிஸ்ட்ரி, செமத்தியாக ஒர்க் அவுட் ஆகியுள்ளதாகவும், ரொமான்ஸ் காட்சிகளில், இருவரும் புகுந்து விளையாடுவதாகவும், செய்திகள் வெளியாகின. மேலும், இந்த படத்தில், ஹ்ரித்திக்கிற்கும், கத்ரீனாவுக்கும் முத்தக் காட்சி உள்ளதாகவும், இந்த காட்சி, சமீபத்தில் படமாக்கப்பட்டதாகவும், பாலிவுட்டில் தகவல்கள் கசிந்தன. இதைக் கேள்விப்பட்ட கத்ரீனா, பயங்கர கடுப்பில் இருக்கிறாராம். "முத்தக் காட்சியாவது, மொத்தக் காட்சியாவது; யாருப்பா இப்படி, போகும் இடமெல்லாம் பஸ் ஏறி வந்து, பீதியை கிளப்புறது. பீதியை கிளப்புற ஆள், என் கையில் கிடைத்தால், அவ்வளவு தான் என, நம்பியார் ஸ்டையிலில், கைகளை பிசைந்து கொண்டிருக்கிறாம், கத்ரீனா.


சினிமா உலகம் எந்தளவுக்கு அழகானதோ.. அதே அளவுக்கு ஆபத்தானதும்கூட: இளம்பெண்களுக்கு சசிகுமார் அறிவுரை!
[Thursday 2013-03-07 18:00]

இயக்குநர் சசிகுமார் அடுத்து எடுக்க இருக்கும் படத்தில் நடிக்க வாய்ப்புத் தருவதாகச் சொல்லி போலி இ-மெயில் முகவரிகளை வைத்தும் வலைத்தளங்களை வைத்தும் சிலர் ஏமாற்றி வருகிறார்கள். இதுகுறித்து தகவல் அறிந்த ஆ.சசிகுமார் "வலைத்தளங்களை நம்பி ஏமாற வேண்டாம்" என அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: "சினிமா என்கிற பிரமாண்ட உலகை நோக்கி ஆர்வத்தோடு வருகிறவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது வரவேற்கத்தக்கத்துதான். ஆனாலும், எப்படியாவது சினிமாவில் நுழைந்துவிட வேண்டும் என்கிற ஆவலில் தவறான ஆட்களை நம்பி சிலர் ஏமாந்துவிடுவது வருத்தமளிக்கிறது.


முல்லை பெரியார் அணை பிரச்சினையுடன் காதலை கலந்து திரைப்படமாக்குகிறார் ரவிரத்னம்!
[Wednesday 2013-03-06 17:00]

முல்லை பெரியார் அணை பிரச்னை தமிழ் நாட்டுக்கும், கேரளாவிற்கும் மிகப்பெரிய சென்சேஷனல் பிரச்னையாக உள்ளது. முல்லை பெரியார் அணை உடையும் ஆபத்தில் உள்ளது. அதை உடைத்து விட்டு புதிய அணை கட்ட வேண்டும் என்று கேரளா அரசு கூறிவருகிறது. அணை பலமாக உள்ளது. அணையின் கொள்ளளவை உயர்த்த வேண்டும் என்று தமிழ்நாடு கூறிவருகிறது. இது தொடர்பாக தொடர்ந்து இரு மாநிலங்களிலும் போராட்டங்கள் நடந்து வருகிறது. சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகளும் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் சினிமாக்காரர்கள் தங்கள் பங்கிற்கு முல்லை பெரியாரை வைத்து சினிமா எடுத்து பணம் சம்பாதிக்க வழிமுறைகளை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.


விஜய் நடிக்க மறுத்த லிங்குசாமியின் ரன், சண்டக்கோழி, வேட்டை படங்கள்..
[Wednesday 2013-03-06 17:00]

ரன், சண்டக்கோழி மற்றும் வேட்டை படங்கள் விஜய் நடிக்க வேண்டியது என்று இயக்குனர் லிங்குசாமி தெரிவித்துள்ளார். விஜய்யை வைத்து படம் எடுக்க கோலிவுட் இயக்குனர்கள் ஆர்வமாக உள்ளனர். இதற்கு இயக்குனர் லிங்குசாமி ஒன்றும் விதிவிலக்கு அல்ல. விஜய் சில படங்களின் கதையைக் கேட்டு அதில் நடிக்க முடியாமல் போயுள்ளது. அந்த படங்கள் ரிலீஸான பிறகு அடடடா நல்ல படத்தை மிஸ் பண்ணிட்டோமே என்று அவர் வருத்தப்பட்டதும் உண்டு. இந்நிலையில் விஜய் மிஸ் பண்ணிய மேலும் 3 படங்கள் குறித்து தெரிய வந்துள்ளது.


காதலனை அறிமுகப்படுத்துவதற்கு தயங்கும் பாவனா!
[Wednesday 2013-03-06 17:00]

காதலன் யார் என்பதை சொல்லமாட்டேன் என சஸ்பென்ஸ் வைக்கிறார் பாவனா. இது பற்றி அவர் கூறியதாவது: நான் நடிகையானதே வித்தியாசமான அனுபவம். எனக்கு கருப்பு மேக்அப் போட்டு டெஸ்ட் வைத்தார் இயக்குனர். அவருக்கு பிடித்துவிட்டது. நடிக்க வைக்க ஒப்புக்கொண்டார். சினிமாவுக்கு வந்து 11 வருடம் ஆகிவிட்டது. தமிழ், தெலுங்கு தவிர கன்னட படங்களில் நடித்து வருகிறேன். கன்னடத்தில் டாப் ஹீரோக்களுடன் நடிக்கிறேன்.


கடல் தோல்வியால் தமிழ் சினிமாவை கைகழுவிய மணிரத்னம்..!
[Wednesday 2013-03-06 17:00]

'கடல்' ஏற்படுத்திய அதிர்வில் தமிழ் படத்தை விட்டுவிட்டு இந்தி பக்கம் கவனம் செலுத்தி வருகிறார் இயக்குநர் மணிரத்னம். ஆனால், அந்த இந்தி பட ப்ராஜெக்ட் 6 வருடங்களுக்கு முந்தையதுதானாம். 2007ல் அமீர்கானை வைத்து 'லஜ்ஜோ' என்ற படத்தை இயக்க மணிரத்னம் முடிவு செய்தார். சுதந்திரத்துக்கு முன்பு நடக்கும் கதையாக அது அமைக்கப்பட்டிருந்தது. உருது எழுத்தாளர் இஸ்மத் சுஹ்தயின் கதையை அடிப்படையாக வைத்து, பாலிவுட் எழுத்தாளர் அனுராக் கஷ்யப்வுடன் இணைந்து அந்த கதையை சினிமாவுக்கு ஏற்ப மாற்றம் செய்தார் மணிரத்னம். இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை அதில் ஏற்படும் காதல் என போகுமாம் கதை. பீரியட் பிலிம் என்பதால், ஹிந்தியுடன், உருது மொழியிலும் திறமையுள்ள எழுத்தாளர் கிடைக்காததால், ஸ்கிரிப்ட் மணிரத்னம் நினைத்த அளவுக்கு உருவாகவில்லை. ராஜஸ்தானில் ஒரே வீச்சில் படத்தை எடுத்து முடிக்க மணிரத்னம் விரும்பினார். ஆனால், முழுமையான ஸ்கிரிப்டை பார்க்காமல், பல்க்காக டேட் கொடுக்க அமீர்கான் தயாராக இருக்கவில்லை.


முருகதாஸ் இயக்கத்தில் விஜய் - அசின் இணையும் 'மார்ச் 15'
[Wednesday 2013-03-06 16:00]

நடிகை அசின் அமெரிக்காவைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை திருமணம் செய்து கொள்ளப்போகிறார் என்றும், காதலனை சந்திப்பதற்காக அடிக்கடி அவர் அமெரிக்கா சென்று வந்ததாகவும். திருமணம் காரணமாகத்தான் புதிய படங்கள் எதிலும் அவர் நடிக்க வில்லை என்றும் பரபரப்பான செய்திகள் பரவியது. இதுகுறித்து அசின் வட்டாரங்களில் விசாரித்த தகவல் இது...அசின் இப்போதைக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்தில் இல்லை. பெரிய கோடீஸ்வர குடும்பத்தில் பிறந்த அசினுக்கு கேரளாவில் சொந்தமாக நிறைய எஸ்டேட்டுகள் உள்ளன. அதில் ஒரு எஸ்டேட்டில் அசின் அணையே கட்டி உள்ளார். அதனால் அவருக்கு பணத்தின் மீது எப்போதும் ஆசை இருந்ததில்லை. அவருக்கு தன் திறமை முழுவதையும் வெளிப்படுத்தி மக்களிடம் புகழ்பெற வேண்டும் என்பதே குறிக்கோள்.


சம்பள போட்டியில் சிம்புவை மிஞ்சிய தனுஷ்!
[Wednesday 2013-03-06 16:00]

சமீபத்தில் "கேடி பில்லா கில்லாடி ரங்கா" படத்தில் ஒரு பாடல் பாடுவதற்கு சிம்பு 5 லட்சம் சம்பளமாக பெற்றார். இதற்கு யுவன் இசை அமைத்திருந்தார். இந்த தகவல் தனுசுக்கு செல்ல, அவரை விட தான் அதிக சம்பளம் வாங்க வேண்டும் என்று முடிவு செய்தார். சமீபத்தில் அவரை "சன் ஆப் சர்தார்" இந்திப் படத்தில் பாட இசை அமைப்பாளர் ஹிதேஷ் ரேஷ்மையாக அழைத்தபோதுகூட தனுஷ் பாட மறுத்தார். காரணம் இந்தியில் நடிகராக அறிமுகமாக வேண்டும் என்பதே தனுஷின் திட்டம். ஆனால் இப்போது சிம்புவின் சாதனையை முறியடிக்க மீண்டும் பாடுவது என்ற முடிவு செய்தார். அவரது முடிவுக்கு அண்ணன் செல்வராகவன் கைகொடுத்தார். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைப்பில் "இரண்டாம் உலகம்" படத்துக்காக ஒரு பாடலை பாடியுள்ளார் தனுஷ். இதற்காக அவர் பெற்றுள்ள சம்பளம் 8 லட்சம் என்கிறார்கள். இன்றைய தேதியில் ஒரு பாடலுக்கு அதிக சம்பளம் வாங்கிய பாடகர் தனுஷ்தானாம். சிம்பு, தனுஷ் ஈகோ போட்டியில் காலியாவது தயாரிப்பாளர்களின் கல்லாப்பெட்டிதான்.


கடலுக்கு அடியில் காணாமல் போன நகரத்தை கண்டுபிடிப்பது தான் வேதிகாவின் லட்சியமாம்!
[Wednesday 2013-03-06 16:00]

கடலுக்கு அடியில் காணாமல் போன நகரத்தை கண்டுபிடிச்சு அதை அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்பதையே தனது லட்சியமாக கொண்டுள்ளார் நடிகை வேதிகா. காளை, முனி, சக்கரக்கட்டி போன்ற படங்களில் நடித்தவர் நடிகை வேதிகா. தற்போது பாலா இயக்கி இருக்கும் பரதேசி படத்தில் நடித்துள்ளார். இந்தப்படம் அடுத்தவாரம் வெளிவர இருக்கிறது. இந்நிலையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.


பவர்ஸ்டார் காட்டில் இப்போது அடைமழை..
[Wednesday 2013-03-06 16:00]

பவர்ஸ்டாரின் காட்டில் இப்போது அடைமழை. எல்லோருமே தங்கள் படத்தில் பவர் ஸ்டார் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். புதிய தயாரிப்பாளர் ஒருவர் தயாரிக்கும் காமெடி படம் "நாலு பேரும் ரொம்ப நல்லவங்க". திருடர்கள் மூன்று பேர் திருட்டை வெறுக்கும் பவர் ஸ்டாரை சந்திக்கிறார்கள். இவர்கள் பவர் ஸ்டாரை திருடனாக்க முயற்சிப்பதும், பவர் ஸ்டார் இவர்களை திருத்த முயற்சிப்பதும்தான் கதை. இறுதியில் யார் ஜெயிக்கிறார்கள் என்பது படத்தின் கிளைமாக்ஸ் மெசேஜ். சினேஹல், திஷா என்ற ஹீரோயின்கள் அறிமுகமாகிறார்கள். அவர்களில் திஷா பவர் ஸ்டாரின் ஜோடி. பாலாஜி, திருப்பதி, யாசின் என்ற முன்று புதுமுகங்களும் திருடர்களாக நடிக்கிறார்கள். ஜோவி என்ற புதுமுகம் இயக்குகிறார். யுவன் இசை அமைக்கிறார். வருகிற மார்ச் 14ந் தேதி ஊட்டியில் படப்பிடிப்பு தொடங்குகிறது.


சினிமாவில் இன்னும் நீண்ட காலம் நீடிக்க ஆசைப்படும் த்ரிஷா..
[Wednesday 2013-03-06 16:00]

சினிமாவில் நடிக்க வந்து பத்தாண்டுகளை கடந்தபோதும் இன்னும் மேன்மேலும் சாதிக்க வேண்டும் என்ற துடிப்புதான் எனக்குள் ஏற்பட்டுள்ளது என்கிறார் த்ரிஷா. அதனால் முன்னணி நடிகர்களுடன் மரத்தை சுற்றி டூயட் பாடியதில் இருந்து தற்போது விடுபடத் தொடங்கியிருக்கும் நான், இனி பேசப்படக்கூடிய வேடங்களில் நடிக்கப்போகிறேன் என்கிறார். அதன் முதல் படிதான் ரம் படம். அந்த படத்தில் 4 கதாநாயகிகள் என்றாலும், நான்தான் மையக்கேரக்டர். அதனால் எனக்கு நடிப்பில் ஸ்கோர் பண்ண நிறைய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. குறிப்பாக நம்முடைய சினிமாக்களில் கதாநாயகர்கள் மொத்த கதையையும் தூக்கி சுமப்பது போல் அந்த படத்தில் நான் சுமக்கிறேன்.


விஜய் - அஜீத் நடித்தாலும் கதையில்லை என்றால் படம் ஓடாது: இயக்குனர் விக்ரமன்
[Wednesday 2013-03-06 16:00]

முன்னணி ஹீரோக்கள் நடித்தாலும், படத்தில் கதை இல்லையேன்றால் படம் ஓடாது, அதை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று கூறியுள்ளார் டைரக்டர் விக்ரமன். புதுவசந்தம் படத்தின் மூலம் இயக்குனராக அவதரித்தவர் விக்ரமன். முதல்படத்திலேயே பல விருதுகளை வாங்கிய டைரக்டர் தொடர்ந்து விஜய், அஜித், சரத்குமார், விஜயகாந்த், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களை வைத்து வெற்றிபடங்களை கொடுத்தார். கடைசியாக அவர் இயக்கிய சில படங்களை அவருக்கு ‌வெற்றியை தேடித்தரவில்லை. இருந்தும் தற்போது நினைத்தது யாரோ என்ற படத்தை இயக்கி வருகிறார்.


ரசிகர்களிற்காக விளம்பரங்களில் நடிக்கிறேன் - நதியா
[Tuesday 2013-03-05 20:00]

சினிமாவை விட என்னுடைய குடும்பத்திற்கு தான் முதல் முன்னுரிமை கொடுப்பேன் என நடிகை நதியா கூறியுள்ளார். பூவே பூச்சூடவா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நதியா. அதன்பிறகு பல்வேறு தமிழ் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். தமிழ் மட்டுமல்லாது மலையாளத்திலும் ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ளார். இப்போதும் பூவே பூச்சூடவாவில் பார்த்த நதியா போன்றே இளமையாக காணப்படுகிறார். சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில், சினிமாவில் அதிகம் நடிக்காதது குறித்த கேள்விக்கு இப்படி பதிலளித்துள்ளார். அதாவது, தமிழ் சினிமாவோ அல்லது சீரியல்கள் செய்யவோ எனக்கு முதல்ல நேரம் கிடையாது. நான் ‌தங்கியிருப்பதோ மும்பையில. குடும்பம் தான் எனக்கு முதல் முன்னுரிமை, சினிமா அப்புறம்தான்.


வெற்றி இயக்குனர் பிரபு தேவாவின் அடுத்த பாலிவுட் படம்..
[Tuesday 2013-03-05 20:00]

தமிழ், தெலுங்கில், முன்னணி நடன இயக்குனராக இருந்து, ஹீரோவாக அவதாரம் எடுத்தவர், பிரபு தேவா. பல வெற்றிப் படங்களில் நடித்தபின், அவருக்கு, இயக்குனராகும் ஆசை வந்தது. தெலுங்கு, தமிழில், இவர் இயக்கிய படங்கள், வசூலை குவித்தன. இதையடுத்து, பாலிவுட்டிலும் கால் வைத்தார். அங்கும், அவர் இயக்கிய, ரவுடி ரத்தோர், வாண்டட் ஆகிய படங்கள், பெரும் வெற்றி பெற்றன. இதையடுத்து, இந்தியில் முன்னணி இயக்குனர்களின் வரிசையில், பிரபு தேவா பெயரும் இடம்பெற்று விட்டது. அடுத்ததாக, ஷாகித் கபூர் - சோனாக்சி சின்கா இணைந்து நடிக்கும், ராம்போ ராஜ்குமார் என்ற படத்தை இயக்கி வருகிறார். படப்பிடிப்பு மும்பை உள்ளிட்ட பகுதிகளில் ஜெட் வேகத்தில் நடக்கிறது. டைட்டிலுக்கு பொருத்தமாக, ஆக்ஷன் படமாக இதை எடுக்கிறோம். முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த படமாக, இது இருக்கும் என்கிறார், இயக்குனர் பிரபு தேவா.


சானியா பாதி, நயன்தாரா பாதி இரண்டும் சேர்ந்த கலவை ''சானியாதாரா''!!
[Tuesday 2013-03-05 20:00]

அது வேற இது வேற.. இப்படி ஒரு தலைப்பில் ஒரு படம் தயாராகிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறவர் காமடெி நடிகர் ஜெயமணியின் மகன் வர்ஷன். இயக்குநர் சுந்தர் சியிடம் பணியாற்றிய திலகராஜன் என்பவர் இந்தப் படத்தை இயக்குகிறார். இதெல்லாம் ஒரு பக்கமிருக்கட்டும். படத்தின் நாயகியுடைய பெயர்தான் சுவாரஸ்யமானது. நடிகை மலையாள தேசத்து வரவுதான். எனவே அவர் பெயரில் ஏதோ ஒரு நாயர் ஒட்டிக் கொண்டிருந்தது. பார்த்தார்கள்… புதுப்பெயருக்காக ரொம்ப நேரமாக யோசித்தவர்களுக்கு ஒரு பளிச் ஐடியா மின்னியது. அதுதான் 'சானியாதாரா'. டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா பெயரிலிருந்து சானியாவையும், நயன்தாரா பெயரிலிருந்து தாராவையும் உருவி..


விஸ்வரூபத்திற்கு திரையரங்குகள் கிடைக்கக்கூடாது என தடுத்தவர்கள் யார்? விரைவில் விசாரணை அறிக்கை!
[Tuesday 2013-03-05 19:00]

விஸ்வரூபம் படத்துக்கு தியேட்டர்கள் தரக்கூடாது என தடுத்தவர்கள் யார் என்ற விசாரணை அறிக்கை விரைவில் வெளியிடப் போவதாக இந்திய போட்டி ஆணையம் (The Competition Commission of India) அறிவித்துள்ளது. கமல்ஹாஸன் தனது விஸ்வரூபம் படத்தை தியேட்டர்களில் வெளியாகும் முன்பு டிடிஎச்சில் வெளியிடப் போவதாக அறிவித்தார். இதனால் கோபமடைந்த திரையரங்கு உரிமையாளர்கள், அந்தப் படத்தை எந்தத் தியேட்டரிலும் வெளியாக அனுமதிக்க மாட்டோம். அரங்குகள் தரமாட்டோம் என்றனர். இது தனது வியாபாரம் செய்யும் உரிமையை தடுக்கும் செயல் என்று கமல்ஹாஸன் புகார் தெரிவித்தார். இந்திய போட்டி ஆணையத்திடம் எழுத்து மூலமாக புகாரும் கொடுத்தார். அத்துடன் திரையரங்க உரிமையாளர் சங்கம் வெளியிட்ட தீர்மான நகலையும் இணைத்திருந்தார். அதில் டிடிஎச் அல்லது வேறு தொழில்நுட்பத்தில் வெளியாகும் எந்தப் படங்களுக்கும் ஒத்துழைப்பில்லை என்று குறிப்பிட்டிருந்தது. இதுகுறித்து போட்டி ஆணையம் திரையரங்கு உரிமையாளர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.


அதிகமா கவர்ச்சி காட்டுறாங்க: அனுஷ்கா, ப்ரியாமணிக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு!
[Tuesday 2013-03-05 19:00]

படங்களில் ஏக கவர்ச்சி காட்டி நடிப்பதாகக் கூறி நடிகைகள் ப்ரியாமணி மற்றும் அனுஷ்கா மீது ஹைதராபாத் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் வந்த தெலுங்குப் படங்களில் அனுஷ்காவும், ப்ரியாமணியும் கிட்டத்தட்ட முக்கால் நிர்வாணம் எனும் அளவுக்கு நீச்சலுடைக் காட்சிகள் மற்றும் கவர்ச்சி உடைகளில் நடித்துள்ளார்களாம். இது சமூகத்தில் இளைஞர்களை தவறான திசைக்குத் திருப்பும் என்றும் பெண்களை தவறான கண்ணோட்டத்தில் பார்க்க வைக்கும் சமூக ஆர்வலர் சுபுத்தா கருத்து தெரிவித்திருந்தார். அத்துடன் நிற்காமல், தனது கருத்தை ஒரு வழக்காக மல்காஜ்கிரி நீதிமன்றத்தில் பதிவு செய்துள்ளார் சுபுத்தா. அனுஷ்கா நடிப்பில் சமீபத்தில் மிர்ச்சி என்ற படம் வெளியானது. ப்ரியாமணி நடித்த டிக்கா என்ற படம் சமீபத்தில் வெளிவந்தது.


ஆதிபகவன் தோல்வியடைந்ததால் இரண்டாம் பாகம் கேள்விக்குறி..
[Tuesday 2013-03-05 19:00]

ஆதிபகவன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் வகையில்தான் படத்தின் முடிவை வைத்தேன் என்று அமீர் தெ‌ரிவித்துள்ளார். அமீ‌ரின் ஆதிபகவன் வெளியாகி அமீர் என்ற பெயருக்காக சுமாரான வசூலுடன் ஓடிக் கொண்டிருக்கிறது. தயா‌ரிப்பாளரைப் பொறுத்தவரை நஷ்டம் என்று செய்திகள் வருகின்றன. விமர்சனங்களில் அமீரும், அவரது படமும் மிகக்கடுமையாக விமர்சிக்கப்பட்டன. மலேசியாவில் படத்தின் பிரமோஷனுக்காக சென்ற வாரம் அமீரும், ஜெயம் ரவியும் சென்றனர். அப்போது படத்தைக் குறித்து அமீ‌ரிடமும், ஜெயம் ரவியிடமும் கேள்விகள் கேட்கப்பட்டன. அமீ‌ரின் ஆதிபகவனில் வில்லன் பகவான் தப்பியோடுவது போல் முடிவு அமைக்கப்பட்டிருந்தது. அதனால் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்படுமா என்று அமீ‌ரிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்தவர், இரண்டாம் பாகம் எடுக்கும் நோக்கத்தில்தான் படத்தின் முடிவை வைத்தேன் என்று தெ‌ரிவித்தார். பாக்ஸ் ஆஃபிஸில் படம் தோல்வியடைந்ததால் இரண்டாம் பாகத்தை அமீர் இயக்குவரா என்பது இன்னும் சந்தேகமாகவே உள்ளது.


உதட்டு முத்தக்காட்சியில்கூட கன்னியமாகத்தான் நடிப்பேன் - ஹன்சிகா
[Tuesday 2013-03-05 19:00]

கவர்ச்சி என்பதை மூலதனமாக வைத்தே இன்றுவரை கோடம்பாக்கத்தில் வண்டியோட்டி வருபவர் ஹன்சிகா. ஆனால் அவரோ, தற்போது தான் பர்பாமென்ஸ் ஆர்ட்டிஸ்டாகி விட்டதாக அடிக்கடி ஞாபகப்படுத்தி வருகிறார். அதுமட்டுமின்றி, கதை சொல்லும் இயக்குனர்களிடமும், மொத்த கதையையும் கேட்டு விட்டு, தனது கேரக்டரை தனியாக பிரித்து, இதில் நான் நடிப்பதற்கு எந்தெந்த காட்சிகளில் வாய்ப்பு உள்ளது என்று விளக்கம் கேட்கிறாராம். அதையடுத்து டைரக்டர்கள் கொடுக்கும் விளக்கம் அவருக்கு திருப்தி கொடுத்தால் மட்டுமே அப்படத்தை ஏற்றுக்கொள்கிறாராம். அந்த அளவுக்கு தான் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல் காட்டிக்கொள்கிறார் ஹன்சிகா.


மோனிகாவை தேடிச்செல்லும் குளியல் காட்சிகள்..
[Tuesday 2013-03-05 19:00]

ஆதியின் இயக்கத்தில் மோனிகா நாயகியாக நடித்த படம் சிலந்தி. அதுவரை அழகி மோனிகாவாக இருந்த அவர், அப்படத்தில் படுகவர்ச்சியாக நடித்து தனது பளிங்கு தேசத்தை பளிச்சென காட்டினார். அதனால் படத்தின் கதையில் ஆயிரம் ஓட்டைகள் இருந்தபோதும், எந்த குற்றம் குறையும் சொல்லாமல், மோனிகாவின் புதுக்கவர்ச்சிக்காகவும், மிட்நைட்டில் அவர் போட்ட குளியலுக்காகவும் ஆசைதீர பார்த்து ரசித்தார்கள் ரசிகர்கள். அதனால் சத்தமில்லாமல் படமும் வெற்றி பெற்றது. ஆனால் அதையடுத்து, மோனிகாவை தேடிச்சென்ற கதைகள் எல்லாம் குளியல் காட்சிகளுடன்தான் சென்றது. அதனால் விட்டால் தன்னை ஷகீலா ரேஞ்சுக்கு மாற்றி விடுவார்கள் என்று இனிமேல் கிளாமராக நடிக்க மாட்டேன் என்று மறுத்து வந்தார் மோனிகா.


நான் பினாமி கிடையாது, சொந்தமாகவே படத்தை தயாரிக்கின்றேன் - கஞ்சா கருப்பு
[Tuesday 2013-03-05 19:00]

வேல்முருகன் போர்வெல்ஸ் படத்திற்கு நான் பினாமி கிடையாது, எனது சொந்த தயாரிப்பில் நானே படத்தை தயாரிக்கிறேன் என்று நடிகர் கஞ்சா கருப்பு கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு காமெடி டிராக்கை வைத்து கொண்டு அசத்தி வருபவர் நடிகர் கஞ்சா கருப்பு. சமீபகாலமாக காமெடி ஹீரோக்கள், ஹீரோவாக மாறி வருகின்றனர். அந்தவகையில் நடிகர் வடிவேலு, சந்தானம், கருணாஸ் ஆகியோரை தொடர்ந்து கஞ்சா கருப்புவும் மன்னார் வளைகுடா படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இதனைத்தொடர்ந்து இப்போது தயாரிப்பாளராகவும் அவதரித்து உள்ளார்.


சுந்தர்.சி படத்தில் சந்தானத்தை காதலிக்கும் ஹன்சிகா..
[Tuesday 2013-03-05 19:00]

பள்ளி மாணவர்களாக நடிப்பது இப்போது தமிழ் சினிமாவில் புதிய சீசன். "வாரணம் ஆயிரம்" படத்தில் சூர்யா நடித்தார். "நீதானே என் பொன்வசந்தம்" படத்தில் ஜீவா நடித்தார். "ஜில்லுன்னு ஒரு சந்திப்பு" படத்தில் விமல் நடித்தார். இப்போது சுந்தர்.சி இயக்கும் "தீயா வேலை செய்யணும் குமாரு" படத்தில் ஹன்சிகாவும், சந்தானமும் நடிக்கிறார்கள். இதில் சந்தானம் ஏற்கனவே பள்ளி மாணவனாக வல்லவன் படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தில் இருவருமே பள்ளியில் படிக்கும்போது சின்னபுள்ளை காதல் பண்ணுவாங்களாம். அப்புறம் ஹன்சிகா வளர்ந்து பெரிய பெண்ணானதும் சித்தார்த்தை காதலிப்பாராம். இதனால் கடுப்பாகும் சந்தானம் தன் பள்ளி பருவத்து காதலை ஹன்சிகாவுக்கு எடுத்துச் சொல்லி தன் காதல்தான் வலுவானது என்பாராம். இப்படி காமெடியாக கதையும் காட்சிகளும் இருக்கிறதாம். கும்பகோணம் ஏரியாவுலேயே இரண்டு ஷெட்யூல்களில் முக்கால்வாசி படத்தை முடிச்சிட்டாராம் சுந்தர்.சி. பாடல் காட்சிக்காக வெளிநாட்டுக்கு போகப்போறாங்களாம். ஹன்சிகா "சிங்கம்-2"விலும் பள்ளி மாணவியாக நடிக்கிறார் என்பது போனஸ் தகவல்.


சிம்புவின் லவ் ஆந்தம் பாணியில் டெரர் ஆந்தம் பாடிய பவர்ஸ்டார்!
[Monday 2013-03-04 19:00]

3 படத்தில் அனிருத் இசையில் தனுஷ் ஆங்கிலம் கலந்து எழுதி பாடிய ஒய்திஸ் கொலைவெறி என்ற பாடல் ஹிட்டானதைத் தொடர்ந்து சிம்பு, விஷால் உள்ளிட்ட பல இளவட்ட நடிகர்களும் ஆங்கிலம் கலந்த பாடல்களை தங்கள் படங்களில் இணைத்து தாங்களே பாடியும் வருகிறார்கள். அந்த வரிசையில் இப்போது பவர்ஸ்டாரும் சேர்ந்துள்ளார். ஏற்கனவே கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் என்னாலதான் சிம்புவுக்கு ஆனந்த தொல்லை என்று டயலாக் பேசிய பவர்ஸ்டார், அழகன் அழகி படத்தில், சிம்புவின் லவ் ஆந்தம் பாணியிலேயே கையில் சித்தார் வைத்தபடி ஒரு டெரர் ஆந்தம் பாடியிருக்கிறார். அது மட்டுமின்றி சிம்பு போன்றே காஸ்டியூம் அணிந்து அவரை கலாய்த்துள்ளாராம்.

SELVI-HOMES-09-02-17
Mahesan-Remax-169515-Seithy
Elankeeran-debt-solution-25-06-2016
Tharsi-home-15-10-2016
Easankulasekaram-Remax-300716
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b> 30-06-2017 அன்று கனடா-ரொரன்டோவில் நடைபெற்ற மின்னல் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b> 24-06-2017 அன்று கனடா-ரொரன்டோவில் பரதமைல் நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா